
ஹிந்து-हिंद பொதுவாக நம்மிடையே ஹிந்து எனும் சொல் அந்நியர் வைத்த பெயர். அது மதத்தை குறிக்காது சிந்துவெளியில் வாழ்ந்த மக்களைமட்டுமே குறிக்கும் எனும் கருத்துக்கள் நிலவுகிறது. ஆனால் இது உண்மையல்ல. வராலாற்று ரீதியாக சிந்து நதிக்கு அப்பால் இருந்த பிரதேசத்தையும் அங்கு வாழும் மக்களையும், அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் குறிக்க, அந்த பூகோளப் பிரதேசத்திற்கு வெளியே இருந்த பண்டைய சுமேரியர், பாரசீகர், கிரேக்கர் ஆகிய மக்களால் தான் ஹிந்து என்ற பதம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது அவர்கள் உருவாக்கிய பதமல்ல. ரிக்வேத ரிஷிகள் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஸப்த ஸிந்து என்றே அழைத்தனர். அந்தச் சொல்லே ஹப்த ஹிந்து என்று பாரசீக மொழியில் உருமாற்றம் அடைந்தது. சரஸ்வதி = ஹரஹ்வதி, அஸுர் = அஹுர் என்று பல சம்ஸ்கிருதச் சொற்கள் இதே ரீதியில் பண்டைய பாரசீக மொழியில் உருமாற்றம் பெற்றுள்ளன. இந்த ச...