வைஷ்ணவ ஆகார லக்ஷனம்

வைஷ்ணவர்கள் சதாசாபரர்களாக ஒழுக வேண்டியஆசாரம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும் வாக், பாத, பாணி, பாயு , உபஸ்தம் ஆகிய காமேந்திரியங்கள் ஐந்தும் மனம் ஒன்றுமாகிற பதினொரு இந்திரியங்களின் சுத்தியையும் சரீர, ஆத்ம சுத்தியையும் அனுஷ்டித்தலேயாம். இவ்வனுஷ்டானம் முற்றிலும் சீர்குழைந்து கிடப்பதுஆகாரத்தில்தான். வைஷ்ணவ அந்தணர்களில் கூட இன்று அதை கடைபிடிக்க தவறுகின்றனர். பகவானுக்கு படைக்காமல் உண்ணுகிற உணவு மலத்திற்கு சமம் என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன. இன்று சந்தையில் விற்கும் கண்ட கண்ட பண்டங்களை புசிக்கின்றனர். அவை அசைவ பதார்தங்கள் என அறிந்தபோதிலும் அலட்சியம். அதிலும் இன்று பிறந்தநாள் என்றால் கேக் வெட்டியும் உண்கின்றனர். இவையெல்லாவற்றையும் செய்துகொண்டு வைஷ்ணவன் என கூறிக்கொள்வது அபசாரத்திலும் அபசாரம். ஆகவே ஆகாரநியதிகளை வலியுறுத்தவே இப்பதிவாம். பதார்தங்களின் ஒவ்வொரு பதார்த்தமும் ஒவ்வொரு குணமுண்டு என வைத்ய சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு சாத்வீக, ராஜஸ, தாமஸமெனும் மூவகை உணவுகளுள் தாமஸஉணவை தவிர்த்து ராஜஸஉணவை சுருக்கி, சாத்வீக உணவை வ...