புராண பேத தாத்பர்ய விளக்கம்

  வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.



மகாபுராணங்கள் பதினெட்டு.
அவை ஸாத்வீகம், ராஜஸம், தாமஸம் எனும் மூன்று வகைப்படுகிறது. அவ்ஸாத்வீக புராணங்களோடு விரோதிக்கும் புராணங்கள் தள்ளதக்கவை என்பதே தாத்பர்யம். அவ்ஸாத்வீக புராணங்களுணர்த்தும் பரதெய்வம் நாராயணன் ஒருவனே என்பது ப்ரத்யக்ஷம். அதற்கு அவைதீகமாய் சில சைவர்களின் பாஷாண்டவாதத்தை பரப்பி தம்புராணங்களை சிறப்பிக்க முயல்கின்றனர். அவை பகற்கனவே என்பதையும்   ஸாத்வீகதேவதை நாராயணன் ஒருவனே என்பதையும் அவர் மஹிமை கூறும் பகுதிகளையே அறிவுடையோர் அனுஸரித்து மற்றையவற்றை புறந்தள்ளளல் வேண்டும்  என்பதையும் நிலைநாட்டும் நீண்ட பதிவே இது.

[குறிப்பு- * இப்பதில் சமஸ்கிருத ஸ்லோகங்களில் எழுத்துப்பிழைகள் இருப்பின் பெரியோர் திருத்திகொள்க.
 * சில புராண வசனங்கள் நீண்டதாக இருப்பதால் அவை பட வடிவில் தரப்படுகிறது.
 *இக்கட்டுரைக்கு கையாண்ட நூல்கள்

*வைஷ்ணவ ஸுதர்சனம்
*விஷ்ணுசித்த விஜயம்
*பத்ம புராணம்-பூனாஆநந்தாஸ்ரமபதிப்பு
* 108 உபநிஷத் ஸாரம்-ராமகிருஷ்ண மடம்
*கம்பராமாயணம்
*ஆழ்வார் பாசுரங்கள்
*பரஹ்பிரம்ம விவேகம்
*History of civilization in Ancient India based on Sanskrit Literature" ]


"ஸத்வம் ரஜஸ தம இதிபரக்ருதோ குண" என்றபடியே ஸத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம் எனும் முக்குணமும் ப்ரக்ருதிக்கும் அதன் காயமான அசேதன பொருள்களுக்கு உள்ளதாக சாஸ்திரமே சொல்லும். இந்த குணம் பரமாத்மாவுக்கோ ஜீவனுக்கோ
ஸ்வரூபத்தில் கிடையாது. பரமபுருஷனின் அந்த கல்யாணகுணங்களில் ஸத்வகுணமும் ஒன்று. இது பகவானின் திவ்யாத்ம குணமன்று. பரமபுருஷனின் திருமேனியும் நித்யவிபூதியும் சுத்த ஸத்வமயமானது. ருத்ரன், பிரம்மன் முதலான ஜீவாத்மாகளுக்கும் தம் ஆத்மாவில் ஸத்வரஜோதமோ குணங்கள் இல்லாதபோதினும் அவர்களது சரீரரத்தில் இவை (தாமஸ, ராஜஸ) கலந்துள்ளன. இந்த ஸத்வரஜோதமோ குணங்களின் ஸ்வரூப ஸூபாவங்கள்

ஸத்த்வம் ரஜஸ் தம இதிகுணா:
ப்ரக்ருதி-ஸம்பவா |
 நிபத்னந்தி மஹா பாஹோதேஹே தேஹினம் அவ்யயம ||
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்
ப்ரகாஷகம் அனாமயம|
ஸுக-ஸங்கேன பத்னாதி
க்ஞான-ஸங்கேன சானக||
  ரஜோ ராகாத்மகம் வித்தி
த்ருஷ்ணா-ஸங்க ஸமுத்பவம்|
தன் நிபத்னாதி கௌந்தேய
கர்ம-ஸங்கேன தேஹினம்||
தமஸ் த்வக்ஞான-ஜம் வித்தி
மோஹனம் ஸர்வ-தேஸினாம்|
ப்ரமாதாலஸ்ய நித்ராபிஸ்
தன் நிபத்னாதி பாரத||
ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி
ரஜ: கர்மணி பாரத |
க்ஞானம் ஆவ்ருத்ய து தம:
ப்ரமாதே ஸஞ்ஜயத்-யுத||
ரஜஸ் தமஷ் சாபிபூய
ஸத்த்வம் பவதி பாரத|
ரஜ: ஸத்த்வம் தமஷ் சைவ
தம: ஸத்த்வம் ரஜஸ் ததா|
|ஸர்வ-த்வாரேஷு தேஹே (அ)ஸ்மின்
ப்ரகாஷ உபஜாயதே|
க்ஞானம் யதா ததா வித்யாத்
விவ்ருத்தம் ஸத்த்வம் இத்-யுத||
லோப: ப்ருவ்ருத்திர் ஆரம்ப:
கர்மணாம் அஷம: ஸ்ப்ருஹா|
ரஜஸ்-யேதானி ஜாயந்தே
விவ்ருத்தே பரதர்ஷப||
அப்ரகாஷோ (அ)ப்ரவ்ருத்திஷ் ச
ப்ரமாதோ மோஹ ஏவ ச|
தமஸ்-யேதானி ஜாயந்தே
விவ்ருத்தே குரு-நந்தன||
யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து
ப்ரலயம் யாதி தேஹ-ப்ருத்|
ததோத்தம-விதாம் லோகான்
அமலான் ப்ரதிபத்யதே||
ரஜஸி ப்ரலயம் கத்வா
கர்ம-ஸங்கிஷு ஜாயதே|
ததா ப்ரலீனஸ் தமஸி
மூட-யோனிஷு ஜாயதே||
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு:
ஸாத்த்விகம் நிர்மலம் பலம்|
ரஜஸஸ்து பலம் து:கம்
அக்ஞானம் தமஸ: பலம்||
ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே க்ஞானம்
ரஜஸோ லோப ஏவ ச|
ப்ரமாக-மோஹெள தமஸோ
பவதோ(அ)க்ஞானம் ஏவ ச||
ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வ-ஸ்தா
மத்யே திஷ்டந்தி ராஜஸா|
ஜகன்ய-குண-வ்ருத்தி-ஸ்தா
அதோ கச்சந்தி தாமஸா|| 

(கீதை14 5-18) 

 ஜட இயற்கை, ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய முக்குணங்களால் ஆனது. பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, நித்தியமான உயிர்வாழி, இயற்கையின் தொடர்பில் வரும்போது, இந்த குணங்களினால் கட்டுப்படுத்தப் படுகின்றான். பாவமற்றவனே, மற்றவற்றைவிட தூய்மையானதான ஸத்வ குணம், பிரகாசப்படுத்துவதாகவும் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிப்பதாகவும் அமைகின்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் இன்பத்தின் தொடர்பினாலும் ஞானத்தின் தொடர்பினாலும் பந்தப்பட்டுள்ளனர்.
 குந்தியின் மகனே, எல்லையற்ற ஆசையாலும் ஏக்கத்தாலும் பிறந்த ரஜோ குணத்தின் காரணத்தினால், உடலையுடைய உயிர்வாழி, பௌதிக பலன்நோக்குச் செயல்களால் பந்தப்படுகின்றான்.
 பரதனின் மைந்தனே, அறியாமையினால் பிறந்த தமோ குணம் உடலையுடைய எல்லா உயிர்வாழிகளையும் மயக்குகின்றது. கட்டுண்ண ஆத்மாவை பந்தப்படுத்தப்கூடிய, பைத்தியக்காரத்தனம், சோம்பல், உறக்கம் ஆகியவை இந்த குணத்தின் விளைவுகளாகும்.
பரதனின் மைந்தனே, ஸத்வ குணம் இன்பத்தினாலும், ரஜோ குணம் செயல்களின் பலன்களினாலும் கட்டுப்படுத்துகின்றன; ஞானத்தை மறைக்கும் தமோ குணம், பைத்தியக்காரத்தனத்தினால் பந்தப்படுத்துகின்றது.
பரதனின் மைந்தனோ, ஸத்வ குணம், சில சமயஙகளில் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடித்து மேலோங்குகின்றது. சில சமயங்களில் ரஜோ குணம், ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்றகடிக்கின்றது. மேலும் இதர சமயங்களில் தமோ குணம், ஸத்வ குணத்தையும் ரஜோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. இவ்வாறு உயர்நிலைக்கான போட்டி எப்போதும் நிலவுகின்றது.
உடலின் எல்லாக் கதவுகளும் ஞானத்தால் பிரகாசிக்கும்போது ஸத்வ குணத்தின் தோற்றத்தை அனுபவிக்க முடியும்.
 பரத குலத் தலைவனே, ரஜோ குணம் அதிகரிக்கும்போது, பெரும் பற்றுதல், பலன்நோக்குச் செயல்கள், தீவிர முயற்சி, கட்டுப்பாடற்ற ஆசை, மற்றும் ஏக்கத்தின் அறிகுறிகள் வளர்கின்றன.
குருவின் மைந்தனே, தமோ குணம் அதிகரிக்கும்போது, இருள், செயலற்ற தன்மை, பைத்தியக்காரத்தனம், மற்றும் மயக்கமும் தோன்றுகின்றன.
 ஸத்வ குணத்தில் மரணமடையும்போது, ஒருவன் உன்னத சாதுக்கள் வசிக்கும் தூய்மையான உயர் லோகங்களை அடைகின்றான்.
ரஜோ குணத்தில் மரணமடையும் போது, ஒருவன் பலன்நோக்குச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களின் மத்தியில் பிறக்கின்றான். தமோ குணத்தில் மரணமடையும் போதோ, அவன் மிருக இனத்தில் பிறவியெடுக்கின்றான்.
 புண்ணியச் செயல்களின் விளைவுகள் தூய்மையானவை, அவை ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ரஜோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் துக்கத்திலும், தமோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் முட்டாள்தனத்திலும் முடிகின்றன.
ஸத்வ குணத்திலிருந்து உண்மை ஞானம் விருத்தியாகின்றது; ரஜோ குணத்திலிருந்து பேராசை விருத்தியாகின்றது; மேலும் தமோ குணத்திருந்தோ முட்டாள்தனம், பைத்தியக்காரத் தனம், மற்றும் மயக்கமும் விருத்செல்கின்றனர் ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் படிப்படியாக உயர் லோகங்களுக்கு மேல்நோக்கிச் செல்கின்றனர்; ரஜோ குணத்தில் இருப்பவர்கள் பூவுலகங்களில் வாழ்கின்றனர்; மேலும், வெறுக்கத்தக்கதான தமோ குணத்தில் இருப்பவர்கள் நரக லோகங்களுக்குக் கீழ்நோக்கிச் செல்கின்றனர்.என்று கீதையில் ஸர்வேஷரனாலேயே உத்கோஷிக்கப்பட்டன.
                   
  பராக்ருதமான இம் முக்குணங்களற்றவன் பரமபுருஷன். சுத்தஸத்வமயமான திருமேனியையும் ஸ்தானத்தையுமுடையவன் என்று ச்மிருதிஸ்மிருதீதிஹாசபுராணங்கள் அனைத்தும் பறைசாற்றுகின்றன. இவ்விஷயத்தை மறைத்து பரமபுருஷன் தமோகுணமுடையவன் எந்த சாஸ்திரத்திலேயோ பேசியிருப்பதாக பிரசாரம் செய்கின்றனர் சிலர். அப்பேச்சு அவைதீகமானது என நிலை நாட்டி பகவத்பரத்வத்தை ஸ்தாபிப்போம். இதற்குஉபபருமஹ்ணாயிருப்பதாலேயே
இதிஹாச புராணங்களும் ப்ராமணமாகியது. அந்த வேதமே, பரமபுருஷனே ஸத்வபரவாததகன் என்றும் ருத்ரன் ரஜஸதமஸ ஸூககளாகிற பாபங்களைப் பிறக்கும்போதே பெற்றிருந்தவன் என்றும் உத்கோஷிக்கப்படுகின்றதை முதல்நோக்கி பின் ஸ்ம்ருதி இதிஹாசபுராணங்களிலும் இவ்விஷயம் விவரிக்கப்பட்டுள்ளதை காண்போம்.

இவ்விடத்தில் பராஸங்கிகமாக ஒன்று கூற வேண்டும். இன்று நூற்றெட்டு உபனிஷதுக்கள் என அச்சிடப்பட்டுள்ளவையில் பெரும்பாலானவை ஆச்சார்யர்களின் காலத்திற்கு பின்(சுமார் 500 வருஷங்களுக்குள் ) கலப்பிக்கப்பட்டவை. 
அவற்றுள் தரிமதஸதாகளான ஆச்சார்யர்களாள் கையாளப்பட்டனவோ அவற்றையே ப்ரமாணமாக கொள்ள முடியும்.த்ரிமதஸ்தா்களாள் கையாளப்படாத உபனிஷதங்கள் ப்ரமாணத் தகுதியற்றவை.நிற்க அவ்விசயத்தில் நூற்றெட்டுபனிஷத்துக்களில்
எழுந்தருளியிரு்ணும் விஷ்ணு தமோகுணமுடையவன் என்பதை காணமுடியாது. விபரீதமாய் ருத்ரனே தமோகுணத்தான் என்பதையே அறிய முடியும். 

   மைதாரணீய உபநிஷத நிர்ணயம்

(ஸ்ரீ வேதாந்த தேசிகர் முதலான 
பூர்வாச்சார்யர்களால் கையாளப்பட்டது)

ப்ரோக்தா அக்ர்யாஸ்தனவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரித்யத யோ ஹ கலு வாவாஸ்ய ராஜஸோம்ஶோ ஸௌ ஸ யோ யம் ப்ரஹ்மாத யோ ஹ கலு வாவாஸ்ய தாமஸோம்ஶோஸௌ ஸ யோயம் ருத்ரோ  (நாலாவது ப்ரபாடகம்) 


  பரமாத்வாக்கு பிரம்மன், ருத்ரன், விஷ்ணு எனும் மூன்று சரீரங்கள் உள்ளன. பரமபுருஷனானுடைய ராஜஸாமசம பிரம்மன், ஸாத்வீகாமசம விஷ்ணு, தாமஸாமசம ருத்ரன் 
                      
என ஓதப்பட்டுள்ளது ஸாத்வீகராஜஸதாமஸதேவதா நிர்ணயத்திற்கு இவ்வொரு வாக்யமே போதுமானது


 த்ரிபாதவிபூதிமஹாநாராயண உபனிஷத் நிர்ணயம்

 (ஹரிதாஸர் முதலான பராசீனரான ஸ்ரீ வைஷ்ணவர்களால் கையாளப்பட்டது)


 விஷ்ணு மஹேஸ்வராகயா நாராயணமனஸ்ஸ ஸத்வ தமோகுண பரதாநை (52)

  நாராயணமசபூதகளாய ஸத்வதமோகுணபரதாத்நரான விஷணு மஹேஸ்வரர்களாலே 


 என மறுபடியும் உத்கோஷிக்கிறது. 


யோகசூடாமணி உபனிஷத்நிர்ணயம்


 ஒருவராலும் கையாளப்படாததும் சைவர்களால் கற்பிக்கபட்டதுமான உபனிஷத்)


ராஜஸோ ப்ரஹ்மா ஸாத்வீகோ விஷ்ணு தாமஸோ ருத்ர (46)



என ஒப்புக்கொண்டது. 


 பாசுபதபிரம்மோபனிஷத் நிர்ணயம்


(பராசீநராரால் கையாளப்படாத உபநிஷத்)


தமோமாயாத்மகோ ருத்ர: ஸாத்விகமாயாத்மகோ விஷ்ணூ ராஜஸமாயாத்மகோ ப்ரஹ்மா



தமோகுணத்தானவன் ருத்ரன், ஸாத்விகவடிவானவன் விஷ்ணு, ராஜஸமானவன் ப்ரஹ்மா என அடித்துரைக்கிறது


ஸூபாலோபனிஷத நிர்ணயம்

(ஸ்ரீ பகவத் இராமனுஜர் போன்ற பல ஆச்சார்யர்களால் கையாளப்பட்டது)

இவ்வுபனிஷத்தில் இரண்டாம் கண்டத்தில் ருத்ரசிருஷ்டியை
விவரிக்கும்போது


லலாடாத கரோதஜோ ருத்ரோ ஜாயதே



பிரமனின் கோபத்தால் நெற்றியிலிருந்து  உருத்திரன் உண்டானான். 
 என்று ஓதப்பட்டது. கோபத்தால் உண்டானது என்றதனால் ரஜஸதமோகுணமுள்ளவன் ருத்ரன் என்பது ஸித்தம். 

ந்ருசிம்ஹதாபனீ உபனிஷத்

நிர்ணயம்



ஆதிசங்கரால் பாஷ்யம் செய்யப்பட்டும் பல ஆச்சார்யர்களாலும் கையாளப்பட்ட இவ்வுபநிஷத்தில் உத்தரதாபநீயத்தின் இரண்டாம் கண்ட இறுதியில் 


ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன: ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான: ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம் பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி


அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய், ஒருவராலும் அவமதிக்கவொண்ணாதவனாய், ஸர்வேஷ்வரனும், ஸர்வவியாபியாய, எப்போதும் பிரகாசிப்பவனாய், அஜ்ஞானமும் அதன் காரியமுமற்றவனாய் ஜீவாத்மாவின் ஸம்ஸாரபந்தத்தை போக்குபவனாய் எப்போதும் ஒப்பற்றவனாய், ஆநந்தரூபமாய், எல்லாவற்றிற்கும் இருப்பிடமாய், எப்போதுமுள்ளவனாய் அவித்யத்தையெனபடும் கருமம், தமோகுணம், மயக்கமற்றவனாய் இருப்பவனான இந்த வீரனே நரசிங்கன்"
என்பதன் மூலம் தமோகுணம் அணுவளவும் அண்டாதவன் அநந்தன் என்பது ஸித்தம். 

 புருஷ,விஷ்ணு  ஸூக்தவிநிர்ணயம்


 ஸாவவேதபடிதமாய், ஸாவவேதச்ரேஷ்டமாய், கபிலத்தவ ஸமபாவநாகநதரஹிதமான புருஷஸூக்தத்திலே லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில் 'தமஸஸ்து பாரே', 'தமஸ பரஸ தாத'என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது


 ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது  விஷ்ணுஸூக்த வாசகம்


'தம தவா கருணமி தவஸமவதவயாந         க்ஷயநதமஸ ரஜஸ பராகே'



 மிகவும் முதியவனான ராஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிருக்கும் அப்படிபட்ட உன்னை அதிபாலனாம யான் ஸங்கீர்தனம் செய்கிறேன் என உறைத்தது


       சதபதப்ரஹ்மான நிர்ணயம்



  பரமபுருஷன் ரஜஸதமோகநகரிஹதன பரமஸதவஸமாசர்யன் என்பதை பல வேதவாக்யங்களை கொண்டு நிருவப்பட்டது. இனி உருத்திரன் தமோ குணத்தை ப்ரதானமாக கொண்டவன் என்பதை வேதவாக்கியங்கள் உறுதிபடுத்தும். சுக்ல யஜூர் வேதத்தை சேர்ந்த சதபதப்ரஹ்மாணம்  எனும் வேதபாகத்திலே 


"பூதாநாம ச பரஜாபதிஸ ஸமவதஸராய தீக்ஷித உஷ பதநீ பூதாநாம பதீஸ ஸமவதஸேர உஷஸி ரேதோஸிஞசத ஸமவதஸரே குமாரோ ஜாயத ஸோராதீத தம ப்ரஜாபதிர பரவீதகுமார கிம ரோதிஷ யச்சரமாத தபஸோதி ஜாதோஸீதா ஸோபரவீத அநபஹதபாபமாவா  அஹமநாஹிதநாமா நாம மே ஹேதி பாபமநோ அபஹதயை தம புந ப்ரஜாபதிரபரவீத ருதரோஸீதி"[சதபதபரஹ்மானம்]


  பூதங்களின் பதியின் பிரமன்
ஒரு வருஷ தீக்ஷையுடனான பின் உருத்திரனை உண்டாக்கினான். அது பிறந்தவுடன் ஓயாது அழுக பிரம்மன் ஏன் அழுகிறாய் என வினவினார். அக்குழந்தை பெயரிடபடாதநான் பாபம் நீங்கபெறதவனாயுள்ளேன்;என் பாபம் நீங்கும்வகையில் நன்நாமம் தருவாயாக என்றது. அதற்கு மறுமொழியாக " ருத்ரன் எனும் நாமம் உண்டாவதாக"என்றார். (இம்மாதிரியே பவன், சாவன், ஈசானன், பசுபதி, பீமன், உகர்ன் எனும் நாமங்கள் கொடுக்கப்பட்டன) என்று ஓதப்பட்டுள்ளது. 

  இதன்மூலம் ருத்ரன் பிறக்கையிலே பாவம் நிறைந்திருந்ததால்
தமோ குணத்தின் ஆதிக்கமே இதன் காரணமாம். 


               ஸ்ம்ருதி நிர்ணயம்



   ஸ்ருதிகளுக்கு அடுத்தபடியாக  ஸ்ம்ருதிகளுக்கு ப்ராமாண்யம் உண்டு. அவற்றிள் பலவிடத்து பகவத்பரம் பேசப்பட்டுள்ளது. இங்கு பரமபுருஷன் தமஸை ஆட்டிவைப்பவனே ஒழிய அதற்கு வசப்படுபவனல்ல என்பதை கூறும் மனுஸ்மிருதியின் முதலத்யாய வசனத்தை மட்டும் நோக்கலாம். 


ஆஸீதிதமதமோபூதம............................................பகவாந பரா துரோஸீத தமோநுத



  "இது முதலில் தமஸாயிருந்தது என தொடங்கி தமஸை தூண்டுவனான பகவான் தோன்றினான்"
என்று  தமஸிற்கு வசப்படாமல் தமஸை ஆட்டி வைப்பவன் என உரைத்தது. 


              இதிஹாச நிர்ணயம்
           

           ஸ்ரீராமாயண நிர்ணயம்


 இதிஹாசங்களின் இருகண்களாக ஸ்ரீ ராமாயணமும் மஹாபாரதமும் திகழ்கிறது. அவ்விரண்டிலும் ராமாயணம் பலவிதங்களில் உயர்ந்தது. வேதத்தின் அவதாரமாக கீர்த்தி பெற்றது. வைதீகர்கள் அனைவராலும் கொண்டாடப்பெறுவது. அதிலே பரமபுருஷனின் அவதாரமான ராமலக்ஷமணர்கள் பற்றி பேசும்போது


'தவம் புத்தி ஸஸ்தவம் க்ஷமாதமா'(யுத்தகாண்டம் 120:16)'தீர்க்க பாஹூம்மஹாஸ்தவம்'(அயோத்யாகாண்டம் 3:28)'ஸத்வயுகதா ஹி புருஷாஸ த்விதா புருஷாஷப அவிமருஸ்ய ந ரோஷஸய ஸஹஸா யாநதி வஸ்யதாம்(கிஷ்கிந்தாகாண்டம்35:11)   

ஸத்வகுணமுள்ள முன்போன்றவர்களுக்கு விசாரியாமல் சடக்கென்று கோபவசப்படமாட்டார்கள்.   

"ஸாதுரோகவிநிர்மித"(அயோத்யாகாண்டம்1:18)ராமஸஸதபுருஷோலோகே"

 (அயோத்யாகாண்டம்2:29)


 'ஸ ச சர்வகுணோபேத
(பாலகாண்டம்1:7)
'ஸ்ரேஷ்டகுணாயுத
(அயோத்யாகாண்டம்1:31)
'பஹவோ நரூக கல்யாண குண புத்ரஸ்ய ஸநதிதே
(அயோத்யாகாண்டம்2:26)
'தாதூநாமிவ ஸைலேந்தரோகுணநாமாகரோமஹாந'
(கிஷ்கிந்தாகாண்டம்15:21)

  சிறந்த மலைத்தாதுகளுக்கு இருப்பிடம் போல நற்குணங்களுக்கு பெருநிதியாய் இருப்பவன் இராமன் என ஸத்வகுணத்திற்கு சான்று பகிர்கின்றது.


           மஹாபாரத நிர்ணயம்


  
   'பாரதம் பஞ்சமோ வேத' என புகழப்படும் ஐந்தாம் வேதமாகிய மஹாபாரதத்திலும் இவ்விஷயம் பேசப்பட்டுள்ளது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 'ஸத்வவாந ஸாத்விக' என்றும் 'ஸத்வஸ்த' என்றும் நிருநாமங்கள் படிக்கப்படுகின்றன. இவ்விடங்களுக்கு பாஷ்யமிட்ட ஆதிசங்கரரும், ஸத்வகுணத்தை ப்ரதானமாக அதிஷ்டித்து நிற்பவன் என்றார். 


      'ஸத்வம் வஹதி ஸூததாதமா தேவம் நாராயணம் ப்ரபும்' (சாந்திபர்வம்307-77)



 சுத்த ஸ்வரூபமான ஸத்வம் ஸர்வஸ்யாமிய் நிர்மலமானவனான நாராயணனை அடைவிக்கிறது என்று நாராயணனை ஸத்வநிஷ்ட பராபயனாக 
அநுஸநித்தது. 


'ஜாயமாநம ஹி புருஷம் யம பஸ்யேன மதுஸூதன;ஸாத்விக ஸ து விஜஞேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக பஸ்யத்யேநம ஜாயமாநம ப்ரஹ்மா ருத்ரோத்வா புந;ரஜஸா தமஸா சாஸ்ய மாநஸம் ஸம்பிபலுதம'(சாந்தி பர்வம் 358-73, 77)



 பிறக்கும்போது ஒரு குழந்தையை மதுஸூதனன் கடாக்ஷித்தானினால் அவனே ஸாத்வீகனானான். அவனே மோக்ஷபுருஷார்தத்தைப் பற்றி சிந்திப்பான்;பிறக்கும் போது இவனை பிரமனாவது உருத்திரனாவது பார்த்தாராகில் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் இவன் மனம் கலங்கி நிற்கும் என பகவான் ஸத்வபரவர்தகனாகிறபடியையும் ப்ரஹ்மருத்ரர்கள் ரஜஸதம பரவர்த்தகனாகிறபடியைைும் அதிஸ்பஷ்டமாக அறிவித்தருளினார் வியாசர். ஆக இதிஹாசங்களும் ஸாத்வீகதேவதை விஷ்ணுவே என்பதும் தாமஸதேவதை ருத்ரனே என்பதும் நிர்ணயிக்கப்பட்டது. 


                  புராணநிர்ணயம்


 ப்ராமாணயத்தின் இறுதியில் நிற்கும் புராணங்களுக்கு புகுவதற்குமுன்  ஒரு விஷயத்தை நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். புராணங்களெல்லாம் ஸத்வ ப்ரமாணமான வேதம்போல அபெளருஷங்களல்ல. ஸத்வரஜஸதமோ குணங்களுக்கு வசப்பட்டவனான ப்ரம்மனால் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவருக்கும் உபதேசிக்கப்பட்டு அவர்களால் ப்ரவாததிப்பிக்கப்பட்டவை. சொன்னவனான பிரமனின் குணத்திற்கு தக்கவாறு அவற்றில்உண்மையுமிருக்கும், பொய்யுமிருக்கும். கேட்டு எழுதியவர்களின் குணத்திற்கு தக்கவாறு
அதன் தன்மையிருக்கும். காலவிபாயஸத்தாலும் பரக்ஷேப உபதேக்ஷபங்களாலும்(இடைசெருகல்
எறிதல்களாலும்) அவற்றிள் நேர்ந்திருக்கும் மாறுதல்களுக்கு ஒரு கணக்கில்லை. 


'ஸங்கீர்ணாஸதாமஸாஸ சைவ ராஜஸாஸ ஸாத்விகாஸ ததா கல்பாஸசதுர்விதா ப்ரகோதா ப்ரஹ்மணோ தி வ்ஸாத்யயோ யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரேதேஷவேவ யோக ஸம்ஸிததா கமிக்ஷயந்தி பராம கதிம



பிரம்மனுக்கு ஒவ்வொருநாளும் ஸங்கீர்ணங்கள்,தாமஸங்கள், ராஜஸங்கள், ஸாத்வீகங்கள் என நான்கு விதமான கல்பங்கள் கூறப்படுகின்றன. ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது. அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது. ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது. ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிகபெருமை சொல்லப்படுகின்றன. 
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் என்று மாத்ஸயபுராணம் கூறிநிற்கிறது. இது கூர்மபுராணத்திலும் ஒப்புகொள்ளப்பட்டது.



      ஸ்ரீ விஷ்ணுபுராண நிர்ணயம்



'தத்வவிவேகோ விஷ்ணுபுராணாத்'என்பதால் விஷ்ணுபுராணத்திலிருந்து பராவரத்தத்வவிவேகம் உண்டாகிறது என்று ஆதிசங்கரராலும் புகழப்பட்டது இவ்விஷ்ணுபுராணம். சங்கர இராமானுஜர் போன்ற மதாசாரியார் இப்புராண வசனங்களை அதிகளவு கையாண்டிருப்பதை அவர்களது கிரந்தங்களில் காணலாம். இப்புராணத்தில் 


 'ஸத்வத்யோ ந ஸந்தீயோ யதர ஹி ப்ராக்ருதோ குண| ஸ ஸூத்த ஸாவஸூத தேபய புமாநாதய பரஸீதது||' (விஷ்ணுபுராணம்1-9-44)




 ஸத்வம், ராஜஸஸீக, தாமஸஸீ எனும் ப்ராக்ருதகுணங்கள் எந்த பகவானிடமில்லையோ  பரிசுத்தர்கள் அனைவரிலும் பரிசுத்தனான அந்த ஆதிபுருஷன் உகந்தருள்வானாகஎன பரமபுருஷனின் ஸ்வரூபத்திற்குஸாத்வீகரஜோதமோகுணங்கள் கிடையாது என்று நிலை நாட்டியது. 
ஜூஷந ரஜோகுணம் ததர ஸ்வயம் விஸ்வேஸ்வரா ஹரி|ப்ரஹ்மா பூதவாஸய ஜகதோ விஸருஷடெள ஸம்பரவாதத்தே||ஸ்ருஷ்டஞ்ச பாத்யநுகம் யாவத்கல்பவிகல்பநா|ஸத்வப்ருத பகவாந விஷ்ணுரபரமேயபராக்ரமம்|தமோதகீ ச கல்பாந்தே ருத்ரரூபீ  ஜனார்தனன|மைத்ரேயாகில பூதாநி பக்ஷயதயதிதாருண||பக்ஷயிதவா ச பூதாநி ஜகத்யேகாரணவீக்ருதே|நாகபாயங்கஸ்யநே ஸேதே ச பரமேஸ்வர||                          (விஷ்ணுபுராணம் 1-2)



ஜகத்பதியான பகவான் ஹரி பரஹமயோகியாகி ரஜோகுணம் தரித்து நின்று உலகத்தை ஸ்ருடிப்பதில் ஈடுபடுகிறார். கல்ப காலம் முடியும் வரை
யுகந்தோரும் ஸத்வகுணம் தரித்துநின்று அளவற்ற பராக்கிரமத்தை  உடைய விஷ்ணு படைக்கப்பட்ட உலகை ரக்ஷிக்கிறார். கல்ப முடிவில் ருத்ரரூபியாகி தமோகுணத்தை அதிகளவு கொண்டு அதிபயங்கரரான ஜனார்தனன் எல்லா ஜீவராசிகளையும் புசிக்கிறார். புசித்த பின் உலகம்முழுவதும் ஒரே ஜலமயமானவுடன் திருவன நதாழ்வானாகிற சயனத்தில் பரமேஸ்வரரான பகவான் சயனிக்கிறார். 

என்று ஸத்வகுணத்திருமேனியை உடையவன் விஷ்ணுவெனவும் தமோகுணமுடையசரீரத்தை உடையவன்
ருத்ரன் எனவும்   காட்டுகிறது. 


ஏகேநாமஸேந ப்ராஹ்மாஸெள வாதததேஸெளரரஜோகுண|ஏகாமஸேநாஸ்தி தோ விஷ்ணு கராதி ப்ரதிபாலநம||ஸத்வம் குணம் ஸமாஸரிதய ஜகத் புருஷோத்தம|ஆஸ்ரீதய தமஸோ வ்ருத்திமந்தாகாலே ததா புந||ருத்ரஸ்வரூபோ பகவாநேகாமஸேநபவத்யஜ||                                 (விஷ்ணுபுராணம் 1-22)



ஓரம்சத்தினால் பிரம்மனாகி ரஜோகுணமுடையவனாய் ஸ்ருஷ்டிக்கிறான் பகவான். ஓரம்சத்தில் விஷ்ணுவாயிருந்துகொண்டு  புருஷோத்தமன் ஸத்வகுணத்தை எடுத்துகொண்டு உலகத்தை ரக்ஷிக்கிறான். ப்ரளயகாலத்தில் ருத்ரரூபியாய் தமோகுணத்தைகொண்டு 
ஓரம்சத்தால் சம்ஹரிக்கிறான். என்று இவ்விஷயம் மற்றோர் இடத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வளவால் இவ்விஷ்ணு புராணத்தில் ஸாத்வீகதாமஸ தேவதா நிர்ணயம் செய்யப்பட்டது. 


           வராஹபுராண நிர்ணயம்



வராஹபெருமாளே பூதேவியை குறித்து அருளிசெய்ததான இப்புராணம் ஸாத்வீகபுராணத்துள் ஒன்று. அதிலே அகஸ்தியருத்ர ஸம்வாதத்தில் 


யத் ஸத்வம் ஸ ஹரிர தேவோ யோ ஹரிஸ தத பரம் பதம்|ஸத்வம் ரஜஸ தமஸசேதி த்ரியதம் சைததுசயதே ||ஸத்வேந முசயதே ஜந்துஸ ஸத்வம் நாராயணேதமகம|ரஜஸா ஸத்வயுகதேந பவேசரீரமாந யஸோதிக||தச்ச பைதாமஹம வ்ருத்தம் ஸாவஸாஸ்த்ரேஷூ படயதே|யத வேதபாஹ்யம் காம ஸயாந மாமுத்திஸயோபஸேவயதோ || தத ரெளதரமிதி விகயாதம கநிஷ்டகதிதம ந்ருணாம|யததீந்தபஸா யுக்தம் கேவலம் தாமஸம் து யத||தத துர்க்கதிபரதம் ந்ரூணாம இஹ லோகே பரதர ச|



தேவனான ஹரி ஸத்வகுணமானவன். ஹரியே பரமபராபயன். ஸத்வம், ராஜஸ, தாமஸம் என்று குணங்கள் மூன்றாக கூறப்படுகின்றன. ஸத்வகுணத்தால் ஜீவன் முக்தியடைகிறான். ஸத்வம் நாராயணஸ்வரூபமானது. ஸத்வகுணத்தோடு கூடிய ரஜோகுணத்தால் செல்வமுள்ளவனாகவும், பெரும்புகழாளனாகவுமாகிறன். அது பிதாமஹனுடைய குணமாக எல்லா சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது. வேதத்திற்கு புறம்பான (கபாலிகம் முதலான) எந்த தாமஸம் (ருத்ரனாகிய)என்னை குறித்து அனுஷ்டிக்கப்படுகிறதோ, அதுவே ரெளத்திரம் எனப்படுவதாய மனிதர்களுக்கு கீழான கதியை அளிக்கிறது. அது தாழ்ந்த ஆஸாரங்களையுடையது, கேவலம் தாமஸமானது. இவ்வுலகிலும், அவ்வுலகிலும் மனிதர்களுக்கு துர்கதியைய தருவதாகும். 
என ருத்ரனே ஒப்புகொண்டான். 


         லிங்கபுராண நிர்ணயம்



 இலிங்கதிட்ட புராணம் என ஆழ்வார்களாலும் பேசப்பட்ட சைவபுராணமே இவ்விஷயத்தை ஒப்புகொண்டதை காண்போம். 


ஹிரண்யகர்ப்போ  ரஜஸா  தமஸா  ஸங்கர | ஸ்வயம் ஸத்வேந  ஸர்வகோ  விஷ்ணு ஸர்வாத்மா ஸதஹந்மய||



பிரமன் ரஜோகுணத்தோடும், சங்கரன்  தமோகுணத்தோடும்,
ஸர்வாத்மாவும் சிதசித் ஸ்வரூபியும்ஆன விஷ்ணு ஸத்வத்தோடும் கூடியவர்... என்று 
பதினாலாவது அத்யாயத்திலும்,


த்வத்கோபஸம்பவோ  ருத்ரஸ்  தமஸா ச  ஸமாவ்ருத|த்வத்ப்ரஸாதாஜ்ஜகத்தாதா  ரஜஸா ச பிதாமஹ த்வத்ஸ்வரூபாத்  ஸ்வயம் விஷ்ணு ஸத்வேந புருஷோத்தம||



தமம் மூடியிருக்கும் உருத்திரன் உன்கோபத்தால் உண்டானவன்;
உன் உகப்பாலுண்டான பிரமன் ரஜோகுணமுடையவன்.
உன் ஸ்வரூபமாகவே இருக்கும் புருஷோத்தமனான விஷ்ணு
ஸத்வ குணமுடையவன் 
என்று இருபத்து நாலாவது அத்யாயத்திலும்


தமஸா ருத்ர ஸ்யாத ரஜஸா கந்காண்டஜ|ஸதவேந ஸாவகோ விஷ்ணு ஸர்வலோகநமஸ்கருத|| 



தமோகுணத்தோடு கூடியவன் ருத்ரன், ரஜோகுணத்தோடு கூடியவன் ஹிரண்யமயமான அண்டத்தில் பிறந்த 
பிரமன், ஸர்வ வியாபியாய் ஸர்வலோகநமஸ்கருதனன் விஷ்ணு ஸத்வகுணத்தோடு கூடியவன் எனவும் லிங்கபுராண வசனங்கள் ஒப்புதல் அளித்தது. 


           மத்யஸ்யபுராண நிர்ணயம்

   
சைவ புராணமாகிய மத்யஸ்ய புராணத்திலும் இவ்விஷயம்  நிர்ணயிக்கப்பட்டதை முதலிலேயே கண்டோம். மறுமுறை அதை நினைவில் நிறுத்திகொள்க. 


யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா |      தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே ||      அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் |      ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ||      ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே |      ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே|



ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது. அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது. ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது. ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிகபெருமை சொல்லப்படுகின்றன. 
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் . 


        ஸ்ரீமத் பாகவத புராணநிர்ணயம்



 அநேக திவ்ய சரித்திரங்கள், அநேக மதவிஷயங்களைப்பற்றிய ஆராய்வு, பகவானின் கல்யாண குணங்கள், பகவானில் பக்தி செலுத்த மனிதன் உண்மையான நிர்குண நிலையை அடைவதற்கும் பரமபதமெனும் முக்தியை அடையும் நோக்கு எனும் அரியவிஷயங்களைப்பற்றி இப்புராணம் அடிக்கடி வசனிக்கிறது. இதனாலேயே இதை "பரமஹம்ஸ ஸம்ஹிதை" என்று பெயர் பெற்றது. இதை வேதவியாஸர் இயற்றிய காரணம், இதை வெளியிட்டதனால் அவருக்குண்டான சாந்தியையும் இதை அப்யஸித்து ஆனந்தித்த சுகபிரம்மத்தின் பெருமையும், மரணவாயில் சிக்கிய பரிக்ஷித்தை இது கரையேற்றிய விதம் என்பவற்றை ஆராய்வோருக்கு இதன் மேன்மைவிளங்கும். இப்புராணத்தில் சரமாரியாய் பலவிடத்தும் ஸாத்வீகதாமஸ தேவதை பற்றி பேசுகிறது. 


ஸத்வம் ரஜஸ தம இதி ப்ராக்ருதோ குணஸ தைா யுகத பர புருஷ ஏக இஹாஸய தததே|ஸதிதயாதயே ஹரிவிரிஞ்சி ஹரேதி ஸமஜ்ஞாம ஸ்ரேயாமஸி ததர கலு ஸத்வதநோ நருணம ஸயு||



ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்பவை ப்ரக்ருதியின் குணங்கள். இந்த மூன்றுகுணங்களோடு கூடிய பரமபுருஷன் ஒருவனே. ரக்ஷணம், 
ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனும் காரியங்களுக்காக ஹரி, பிரமன், ஹரன் எனும் பெயர்களை அடைகிறான். அவர்களுள் ஸத்வகுணமுடைய ஹரியிடத்தே நன்மையுண்டாகும். என்று ஸத்வகுணமுள்ளவன் ஹரியே என காட்டப்பட்டுள்ளது. 


பேஜிரே முந்யோ தாகரே பகவந்தமதோக்ஷஜம|ஸத்வம் விஸுததம க்ஷேமாய கல்பந்தேயேநு தாஹிந||முமுக்ஷவோ கோரரூபாந ஹிதவா பூதபதீநத |நாராயணகலா ஸாந்தா பஜநதி ஹயநஸுயவ||ரஜஸ்தம ப்ரருக்தய ஸமஸீலாந பஜநதி வை|பித்ருபூதபரஜேஸாதீந ஸ்ரீயைஸவாயபரஜேபஸவ||



ஆதிகாலத்தில் முனிவாசர்கள் ஸத்வகுணதிருமேனியுடையவனும் பரிசுத்த பகவானுமான புருஷோத்தமனை பூஜித்தனர். அவர்களை அனுஸரித்து அவர்களை பூஜிப்பவர்கள் நன்மையடைபவர்கள், மோக்ஷத்தையடைவர். கோரமான உருவமுடைய பூதகணங்களுக்கு தலைவனாக இருக்கும் ருத்ராதிகளை விட்டு துவேஷமற்றவர்களாய் சாந்தியோடு கூடிய நாராயணரை உபாஸிக்கிறனர். ரஜோகுணம், தமோகுணமுடையவர்கள் அதே குணங்களையுடைய பித்ருக்களையும் பூதகணங்களுக்கு தலைவர்களான ருத்ராதிகள் பிரமன் முதலான ப்ரஜாபதிகள் வரையும் விரும்பி உபாஸிக்கின்றனர் . என்று ஸத்வகுண திருமேனியையுடைய நாராயணரையும்  தாமஸகுணமுடைய சிவனையும் காட்டித் தந்தது. 


சிவ ஸக்தியுகத ஸஸ்வத த்ரிலிங்கோ குணஸம்வருத|ஹரி ஹி நிர்க்குண ஸாக்ஷாத புருஷ ப்ரக்ருதே பர ||



பார்வதியேிடு கூடிய சிவன் எப்போதும் ஸாத்வீகராஜஸதாமஸ ஹங்காரத்திற்கு 
வசப்பட்டவன். தமோகுணமுடையவன். ஹரியோ எனில் முக்குணங்களுமற்றவன், ப்ரகருதிக்கு மேற்பட்ட புருஷன் அவனே. இவ்வாறு நூற்றுகணக்கான இடங்களில் பகவானின் திருமேனி ஸாத்வீகமயமானது, தமோகுணம் லேசமும் அற்றதென உத்கோஷிக்கின்றன. 


             பத்மபுராண நிர்ணயம்



 ப்ருகு மஹரிஷி ஸாத்வீகபரம்பொருள் யார் என்பதையறிய மூவுலகம் சென்றுமுடிவெடுத்த விஷயம் பாகவத, பத்ம, நாரதீய புராணங்களில் பேசப்படுகிறது. பத்மபுராண உத்தரகாண்டத்தில் இருநூற்று ஐம்பத்தைந்தாவது அதிகாரத்தில் இவ்விஷயம் விவரிக்கப்பட்டுள்ளதை  காண்போம். 
           



திலீபன் சொன்னான்- வஸிஷ்டமஹரிஷியே!  ஸாமாந்யதாகவும், விசிஷ்டதாமமாகவும் எல்லா தர்மங்களும்ஜீவாத்ம  பரமாத்ம ஸ்வரூபங்களும் ஸ்வர்கமோக்ஷங்களும் அவற்றின் ஸ்வரூபங்களும்  ஒன்றுவிடாமல் தேவரீரால் கூறப்பட்டன. ஆச்சார்யரான ப்ராமணோத்தமரே! நான் தன்யனானேன். அறிவதில் விருப்பத்தால் இன்னமும் ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன்,  உமக்கு  என்னிடமுள்ள வாத்சல்யப்பெருமையாலே உள்ளதை உள்ளபடியே சொல்லவேணும், முதல் பாகவதனும் திரிபுரம் எரித்தவனும் மனைவியோடு கூடிய ருத்ரன் எக்காரணத்தினால் தாழ்ந்ததொரு ரூபத்தையடைந்தான்? சிறந்தவனான அவனுக்கு லிங்கஸ்வரூபமான உருவம் எப்படி உருவாகும்? ஐந்துமுகத்தையும் முக்கண்களுமுடைய சூலபாணியாகிய அவனுக்கு இத்தாழ்ந்த உருவத்தை எப்படி அடைந்தான்? இதையெல்லாம் எனக்கு சொல்லவேணும். 
வசிஷ்டர் கூறினார்- நீ என்னை கேட்கும் விஷயத்தை வாத்சல்யத்தால் கூறுகிறேன். மந்தரமெனும் மலையில் ஸ்வயம்புவாமனு முன்னொரு காலத்தில் முனிவர்களை கொண்டு தீர்க்கஸ்தரயாகம் செய்தான். அங்கு கூடியிருந்த முனிவர்கள் விரதநிஷ்டையுடையவர்கள், பல சாஸ்திரமறிந்தவர்கள், வேதமறிந்த அந்தணர்களாவர். ஸத்ரயாகம் நடக்கும்போது பரம்பொருளை தேடுவதற்காக பின்வருமாறு பேசிகொண்டனர். "வேதமறிந்த விபரர்களுக்கு பூஜிக்கத்தக்க தகுந்த தெய்வம் யாது? ப்ரஹ்ம விஷ்ணு சிவனுள் யார் தன்னை துதிப்பவனுக்கு முக்தியையளிப்பான்? எவனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் அருந்ததக்கது? எவன் உண்டது மிகுந்த பரிசுத்தமானது? எவன் அழிவற்றவனும் பரஞ்சோதியாகவும் பழமையோனாக இருக்கிறான்? எவனுடைய தீர்த்த ப்ரஸாதங்கள் பித்ருக்களுக்கு திருப்தியை அளிக்கும்? "என்று இவ்வண்ணம் மஹரிஷிகளுள் விவாதமே உண்டாயிற்று. சில மஹரிஷிகள் ருத்ரனே பரம்பொருள் என்றனர். சில முனிஸ்ரேஷ்டர்கள் பிரமனே பூஜிக்கதக்கவன் என்றனர். சிலர் சூர்யனே பூஜயன் என்றனர். ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான அழிவற்ற தாமரைகண்ணணான வாஸுதேவனாய் ஆதியந்தமற்றவனாய் பரமேஸ்வரனான நாராயணரே பூஜிக்கதக்கவன் என சில அந்தணர்களும் உரைத்தனர். அவர்களின் விவாதம் தொடர்ந்தகொண்டிருக்கையில்ஸ்வயம்புவாமநு பின்வருமாறு கூறலானார்.  "சுத்தஸத்வனான கல்யாணகுணமுடைய ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான உபயவிபூதிசெல்வமுடைய அச்சுதனே அந்தணர்களுக்கு பூஜயன். ரஜஸ தமோ குணங்கள் கலந்த மற்றய தெய்வங்கள் அவர்களுக்கு பூஜயர்களல்ல." என்று அவர் கூறியதை கேட்ட மஹரிஷிகள் அனைவரும் ப்ருகுமஹரிஷியை வணங்கி கோரிக்கை விடுத்தனர். "எங்கள் ஐயத்தை போக்க நீரே வல்லவர்.ப்ரம்மவிஷ்ணுருத்ரர்களுக்கு அருகில் சென்று  ஸத்வகுண சரீரம் கொண்டு ப்ராஹ்மண பூஜைகுரியவர் யார்? என்பதை அறியும் லோகோபகாரத்தை செய்வீராக" . 
இப்படி சொல்லப்பட்ட அவர் எருதுகொடியோனிருக்கும் கைலாஸத்திற்கு வாமதேவரோடு சென்றார். சங்கரனுடைய ஆலயதுவாரத்திற்கு சென்று சூலத்தையேந்திய மஹாபயங்கரனாகிய நந்தியை கண்டு பின்வருமாறு சொன்னார். "தேவனான ஹரனை காண ப்ருகுவான நான் வந்துள்ளேன், நான் வந்ததை சங்கரனிடம் தெரிவிப்பாயாக". இதைகேட்ட நந்தி  கடுமையாக பின்வருமாறு கூறிற்று" எமது எஜமாமர் பார்வதிதேவியாரோடு தனிமையில் உள்ளார், எனவே அவரை நீர் பார்க்க இயலாது, திரும்பிசெல்". இவ்வாறு நிராகரிக்கப்பட்டும் ருத்ராலயத்தில் பலநாட்கள் காத்துகிடந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ப்ருகுரிஷி 'ஸ்த்ரீஸங்கமத்தில் மயங்கிய என்னை அவமதித்த இவன் லிங்கஸ்வரூபமாக ஆகுக. தாமஸத்தோடு கூடி அந்தணனான என்னைஅவமதித்ததால் ப்ராஹமண பூஜைக்கு அநாஹனாகி அந்தணரால் பூஜிக்கப்படாதவனாவான், ஆகையால் இவனுக்கு கொடுக்கும் அந்தம ஜலம், புஷ்பம், ஹவிஸ் முதலியன நிர்மாலயம் (உபயோகமில்லாதது) ஆகும். இதில் ஐயமில்லை. , பஸ்மத்தையும் லிங்கத்தையும் கபாளத்தை தரிக்கும் ருத்ரபக்தர்கள் பாஷாண்டிகளாக வேதத்திற்கு புறம்பானவராவார்"என கடுமையாக சபித்துவிட்டு ப்ரஹ்மலோகம் சென்றார். அங்கு ஸர்வலோக தேவர்களும் பிரமனை பார்த்து கைகூப்பி வணங்கி மெளனமானார். முனிவர் தலைவரான அவரை பார்த்தும் ரஜோகுணத்தால் மூடப்பட்டவனாகையால் ப்ரஹ்மா வந்திருந்த முனிவரை பூஜிக்கவில்லை, எதிர்கொண்டழைக்கவில்லை, இன்சொற் பேசவில்லை. இதனால் கோபமடைந்த ப்ருகு ரிஷி "அதிகமான ரஜோகுணமுடையவனாகிய நீ எவராலும் பூஜிக்கப்படாதவனாகுக" என்று இதுவரை லோஹபிதாவாக இருந்த பிரமனை சபித்துவிட்டு பகவானுடைய ஆலயத்திற்கு சென்றார். அங்கு ஆதிஷேஷனில் சயனித்து மலர்மகளின் மலர்கைகளால் திருவடி வருடப்பெற்றவனான கமலாபதியை கண்டார். இவனும் நம்மை அவமதிக்கும்வகையில் தூங்குகிறானே என்றெண்ணிய பிருகு விஷ்ணுவின் பரமமங்கள திருமார்பில் எட்டி உதைத்தார். (இவ்வாறு நடக்கவேண்டுமென்பதற்காகவே கள்ள நித்திரை செய்த)பகவான் உடனே எழுந்து 'தன்யனானேன்' என்று பேரானந்தத்தோடு அவர் பாதங்களை தன் திருகரங்களால் வருடி இன்சொல்லால் அத்திருவடிபட்டதால் பெற்ற பேற்றினை கூறி அபாக்ருதமான மாலை, சந்தனம் முதலானவற்றை கொடுத்து பூஜை செய்தார். உடனே முனிதலைவர் ஆனந்தகண்ணீர்விட்டு சிறந்த ஆஸனத்திலிருந்து எழுந்திருந்து தயாநிதியான பகவானை கைகூப்பி வணங்கி சொல்லலானார். அஹோ!  என்ன ரூபம்? என்ன சாந்தி? என்ன பொறுமை? ஹரியான உம் ஸத்வகுணத்தை என்னவென்பது? குணக்கடலான உன்னை தவிற பிறதேவர் எவருக்குமே ஸத்வகுணமில்லை. புருஷோத்தமனான நீயே ப்ராஹ்மண பூஜயன். உன்னை விடுத்து வேறெந்த தேவர்களை அர்சிக்கிறார்களோ அவர்கள் பாஷாண்டிகளாய் நல்லோர்களால் இகழப்படுவர். சுத்தஸத்வமுள்ள நீயே மறையவர்களால் பூஜிக்கதக்கவன். உன் ஸ்ரீ பாத தீர்தம் ஸேவிக்கதக்கது, முக்தியளிப்பது, மலத்தை நீக்குவது, நீ புசித்து மிகுந்தத தீர்த்தமே பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் ஸேவிக்கதக்கது, மற்றவர்களுடையவை நிர்மால்யம் எனப்படுவது. ஆகையால் அறிவுள்ள ப்ராஹ்மணன்  ஸனாதனனான உன்னை பூஜித்து உன் தீர்த்தத்தையும், ப்ரஸாதத்தையும் ஸேவிக்கக்கடவான். பித்ரு ஸிராத்தத்தில் உன்  தீர்த்தப்ரஸாதத்தை அந்தணன் அளிக்காவிடின் ஸிரார்தம் வீணாகிப்போய் பித்ருக்கள் நரகில் வீழ்வர். உன் ப்ரஸாதத்தை ஹோமம் செய்து பித்ருக்களுக்கு அளித்தால் தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் திருப்தியுண்டாகிறது. ஆகையால் மறையவர்கள் போற்றதகுந்தவன் நீயொருவனே!  தேவகீ புத்ரனே ப்ராஹ்மன்யன்(ப்ராஹ்மன பூஜயன்-ப்ராஹ்மனர்களால் பூஜிக்கப்படுபவன்), மதுஸுதனனே ப்ராஹ்மன்யன், புண்டரிகாக்ஷேனே ப்ராஹ்மன்யன்,அச்சுதனேப்ராஹ்மன்யன்,விஷ்ணுவே ப்ராஹ்மன்யன்,வாஸுதேவனும் அச்சுதனுமான கிருஷ்ணனே ப்ராஹ்மன்யன்,நரசிங்கனான ப்ராஹ்மன்யன்,அழிவற்ற நாராயணனேப்ராஹ்மன்யன்,ஸ்ரீ தரனே ப்ராஹ்மன்யன்,கோவிந்தனும் வாமனனானவனுமே ப்ராஹ்மன்யன்,யஜ்ஞவராஹனே ப்ராஹ்மன்யன், கேசவனான புருஷோத்தமனே ப்ராஹ்மன்யன்,திருமகளின் மணாளனும் தாமரைகண்ணனுமான ரகுகுலராமனேப்ராஹ்மன்யன், பத்மநாபனே ப்ராஹ்மன்யன்,மாதவனே ப்ராஹ்மன்யன்,தலைவனான திரிவிக்ரமனே ப்ராஹ்மன்யன்,இருடிகேசனே ப்ராஹ்மன்யன், ஜனார்தனனே ப்ராஹ்மன்யன்,ப்ராஹ்மன்யதேவனும், நாராயணனும் ஸ்ரீபதியுமான தாமரைகண்ணனான உனக்கு நமஸ்காரம், ப்ராஹ்மண்ய தேவனும் வாஸுதேவனும், விஷ்ணுவும், கல்யாணகுணபூர்ணனுமான  பரமாத்மாவுக்கு  உனக்கு நமஸ்காரம், ப்ராஹ்மண்யதேவனும் ஸர்வ தேவ ஸ்வரூபியும், வேதநாதனும், வராஹஸ்வரூபமான உனக்கு நமஸ்காரம்,ப்ராஹ்மன்யதேவனும் சேஷாசாயியும், தாமரைக்கண்ணனும், ராகவனுமான உனக்கு நமஸ்காரம். எல்லா தேவர்களும் ரிஷிகளும் உன்னுடைய பரத்வத்தை உணர்த்தும் ஸத்வத்தை அறிவதற்கே மஹரிஷிகளால் அனுப்பப்பட்டேன் கோவிந்தா! உன்னுடைய ஸெளசீல்யவாத்ஸல்ய காருண்யாதி குணங்களையறியவே உன் திருமார்பை காலால் உதைத்தேன் தயாநிதியே!  அப்பாதஹமான செயலைபொறுத்தருளவேண்டும் என மறுபடி, மறுபடியும் கைகூப்பி வணங்கிவிட்டு பூமியை அடைந்தார். வந்தடைந்த ரிஷி ருத்ர, ப்ரஹ்ம தேவர்களின் குணத்தையும் அவர்களுக்கிட்ட சாபத்தையும் கூறி பகவானின் கல்யாண குணத்தையுறைத்தார். ப்ரஹ்மமான நாராயணரே மறையறிந்தவர்களால் போற்றதகுந்தவன். கண்ணனை நினைப்பதால் பாவியும் மோக்ஷம்பெறுவான். அவனுடைய திருவடி நீரே அருந்ததக்கது, பகவத்நிவேதனமே பித்ருக்கள், அந்தணர்களுக்குரியவை. அவையே சுவர்க்கமோக்ஷமளிப்பவை. ஆகையால் மற்றயவர்களைவிட்டு பழையோனாகியவிஷ்ணுவையே உயிருள்ளவரையும் பூஜிப்பீர்களாக. என பத்மபுராணத்தில் சொல்லப்பட்டது 
மஹரிஷிசாபம் எவ்விதம் பலித்திருக்கிறது என்பதை ஆலயம்தோறும் லிங்கபூஜை நடப்பதிலிருந்தும் ப்ரஹ்மாவுக்கு தனிகோவிலில்லாதிருப்பதையும் ப்ரத்யக்ஷமாக காண்கிறோம். ருத்ரபக்தர்களான ஸ்மார்த்த ப்ராஹ்மணர்களும் ஹரிபூஜையை விடுவதில்லை என்பதையும் அறிகிறோம். தீவிர வைணர்கள் யாரும் இடிவிழ, காளை முட்ட வருகையிலும், ஸர்பம் துரத்துகையில் கூட வேறு தேவாலயங்களுள் நுழையாமல் "மறந்தும் புறம் தொழாதவர்களாய் வாழ்ந்தவர்கள்" என்பதையும் அறிகிறோம். எனவே பத்மபுராணமும் ஸத்வகுணஸ்வரூபன் நாரணனே என நிலை நாட்டியது.  
இதே புராணவாயிலாகவே புராணநிர்ணயமும் பார்வதி பரமேஸ்வரனின் சம்பாஷனையினூடே தெளிவுற விவரிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டத்திலே 263ம் அத்யாயத்தில்
"பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார். 
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார். 
இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர். 
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.
இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான். 
முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள். வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது. இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன. கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது. தேவகுருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது. திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது. 
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது. கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது. வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும். அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும். அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது. 
கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம் வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது. நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் ஸத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம் ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள் 1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம் 4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம் தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள் 1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம் இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை (+வாஷிஷ்டம்,ஹாரிதம்,  வ்யாஸம, பராசர, பரத்வாஜ, காஸ்யப ஸ்மிருதிகள்)  கொடுக்கும் மற்றையவை நரகத்தையளிப்பவை. அறிவாளிகள் அவற்றை ஒதுக்கக்கடவான்"என ஆணியடித்தாற்போல் நிலைநாட்டியது. 





           ஸ்கந்தபுராண நிர்ணயம்



சைவர்களால் சிவ, லிங்க புராணங்களுக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் புராணம் ஸ்கந்தபுராணமே;அப்புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராவது அத்யாயத்தில் ஒரு ருக்வேதமந்திரம் பின்வருமாறு உபப்ரும்ஹானம் செய்யப்பட்டுள்ளது. 



ஜைமினி சொன்னார்- இப்படி சொல்லிக்கொண்டிருக்குமவனிடம் ருக்வேதத்தில் கரைகண்டவனும் ராஜரிஷியும்,வேதறிவு பெற்ற ஒரு இருப்பிறப்பாளன் உகப்புடன் ஒரு வார்த்தை கூறினான். "உன்னுடைய பாக்யத்தை என்னவென்று கொண்டாடுவேன்? அந்த அர்சசாமூர்தியை உபாஸித்தாலே முக்தியுண்டென சுருதியே சொல்லிற்றன்றோ! புருஷனால் நிருமிக்கப்படாத யாதொரு மரம் கடற்கரையில் மிதக்கிறதோ ஆராதிக்க அரியவனான அப்பரமபுருஷனை அடையவுகரிய முக்தியை  முக்தியையடைகின்றனர்" என ப்ரஹ்மஞானநிதியான நாரதமஹரிஷி இதை சொன்னார். பரம புருஷனே வேதாந்த வாக்யங்களை விட எவை நன்கறியும்? வேதத்தையொட்டியன்றோ ஸ்ருஷ்டி, அவதாரம்  என்பவற்றை பகவான் செய்கிறார். ஸாமவேத கீதங்களில் பாடப்பட்டவனும் வேதாந்தங்களில் சொல்லப்பட்டவனுமான மனிதர்களுக்கு நன்மையளிப்பவனும் அவனே;அந்தபுருஷனை பிரதிமை என நினைக்காதே, மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும், இந்த அர்ச்சையை சொல்லும் வேதவாக்யங்கள் முற்காலத்திலிருந்தே வழங்கின". என தாமஸகுண பரிஹாரஸாத்வீக ஸ்வரூபமாக நாராயணன் விளங்குவதை வேதத்தை கொண்டே விளக்கியது. இதே புராணத்தில் சிவன், ஸ்கந்த சம்பாஷனையில் சிவன்
ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத் பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம் மோக்ஷ -ஸ்தானம் ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி



'சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி. அதுவே  எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது'.  என்கிறார். இவ்விதம் ஸ்கந்தபுராணமே ஸத்வரூபம் விஷ்ணுவுக்கே உரித்தது என்றது. 

ப்ராக்ருதமான ஸாத்வீகராஜஸதமோ குணங்களை கடந்தவனும் சுத்தஸத்வமயமான திருமேனியையும் ஸ்தானத்தையுமுடைய பரமபுருஷன் பகவான் ஹரி ஒருவனே என்பதை 
ஸ்ருதி, ஸ்மிருதிஇதிஹாசபுராணங்களை கொண்டு நிலைநாட்டி நிறுபவப்பட்டது. 
இவையொன்றிற்கு கூட பதில்கூற தெரியாத சில சிசுபாலர்கள் நமது பகவத்பரத்வசாக்ஷிகளை அசைக்கப்பார்த்தும், சில ஸ்ருதி, புராணவசனங்களைகொண்டு சைவாச்சார்யார்கள் எழுதிய புரட்டுக்ரந்தக்களை வைத்து பகவான் ஹரி தமோகுணத்தான், அவரது பெருமையுறைக்கும் புராணங்கள் தாமஸமானவை, சிவன் சுத்தஸாத்வீகி, சிவசம்மந்த புராணங்கள் ஸாத்வீகமானவை என பிதற்றுவர் . அவைகூட அவைதீகமானவை என்பதை நிரூபித்து மறுபடியும் விஷ்ணுசம்பந்தமுடையவை யாவும் ஸாத்வீகமானவை என்பதை கல்வெட்டுபோல நிலைநாட்டுவோம். 


ஸாத்வீகபுராண ஆக்ஷேப பரிஹாரம்



ஆக்ஷேபம்-  ஆ. ஈஸ்வரமூர்த்தி பிள்ளையின் சுலோக பஞ்சக விஷயமெனும் க்ரந்தம் பின்வருமாறு பிதற்றும். 

 "ஸாத்விகீ ருத்ரே பக்தே ப்ரஹ்மணீ ராஜஸீ |

தாமஸீ தைத்ய பக்ஷேஷு மாயாத்ரேதாஹ்யுதாஹ்ருதோ ||

என்ற க்ருஷ்ணஉபனிஷத் ருத்ரனை ஸாத்வீகி, எனவும் விஷ்ணுவை தாமஸி எனவும் கூறிற்று.இது மற்றைய உபனிஷதுகளோடு முரண்படும் என தோன்றலாம். ஆனால் இதற்கு விளக்கம்

ஸுதசம்ஹிதையில் உள்ளது. 

ரஜோ குணோநஸம்  சந்தோ ப்ரஹ்மாதிஷ்டாய தம் குணம் த்ரஷ்டாப்வதி ஸர்வஸ்ய ஜகத : பண்டிதோத்தமா : குணோர்ந தமஸாச் சந்தோ விஷ்ணுஸ்  ஸத்வகுணம்புதா : அதிஷ்டாய பவேத் ஸர்வ ஜகத : பாலக :ப்ரபு : ததாஸத்வகுணச் சந்தோ ருத்ரோ விப்ராஸ்தமோ குணம் அதிஷ்டாய பவேத்தக்தாஜகதஸ்ஸத்யவாதிந


இதன் பொருள் : ராஜஸ குணத்தால் மூடப்பட்ட பிரம்மா அந்த குணத்தையே அதிஷ்டித்து சர்வ ஜகத்துக்கும் சிருஷ்டி கர்த்தாவானார்.தாமச குணத்தால் மூடப்பட்ட விஷ்ணு சத்வ குணத்தை அதிஷ்டித்து சர்வ ஜகத்துக்கும் ரட்சக கர்த்தாவானார்.சத்வ குணத்தால் மூடப்பட்ட ருத்ரர் தாமஸ் குணத்தை அதிஷ்டித்து சர்வ ஜகத்துக்கும் சம்ஹார கர்த்தாவானார் 


ஆக,அந்த உபனிஷத்துக்களிடையே எந்த முரணும் இல்லை என்று அறியலாம்.ஆக திரிமூர்த்திகள் ஒவ்வொருவருக்கும் இருகுணம் உண்டு,ஒன்று சகஜம்(இயல்பு) மற்றொன்று அதிஷ்டானம்.ஆக,பிராம்மாவுக்கு இயல்பு மற்றும் அதிஷ்டானம் இரண்டுமே ராஜஸம்.விஷ்ணுவுக்கு இயல்பான குணம் தாமஸம்,அதிஷ்டானம் சாத்விகம்.ருத்ரருக்கு இயல்பான குணம் சாத்விகம்,அதிஷ்டானம் தாமசம்.


ஒருவன் உள்ளத்தின் குரோதமும் வெளியே நல்லவன் போல் நடித்தாலும்,அவனை குரோதி என்றே அழைப்போம்.அவனது இயல்பைக் கொண்டே அவன் குணத்தைக் கூறுவோம் அன்றி அவனது வெளி வேஷத்தை வைத்து அல்ல.அதுபோல்,விஷ்ணுவின் இயல் தாமசம்,ஆனாலும் அவருக்கு சாத்விக தொழிலான காத்தலுக்கு இறைவன் நியமித்துள்ளான்.ஆகையால்,இயற்கையாக தாமச குணம் உடைய விஷ்ணுவை அவரது தொழிலை வைத்து அவரை சாத்விகி என்பது மடைமை.அவரது சஹஜ குணத்தை வைத்தே அவர் குணத்தை குறிப்பிட வேண்டும்.அவர் சஹஜ குணம் தாமசம் ஆகையால்,விஷ்ணு தாமசியே.


ஆக,உண்மையான தாமஸி விஷ்ணு,தாமஸ புராணங்கள் வைணவப் புராணங்களாம்.சாத்விகி ருத்திரர்,சைவப்புராணங்கள் சாத்விக புராணங்களாம். 



நமது ஸமாதானம்- வேத,வேதாந்தங்களிலேயே புருஷஸூக்தத்தில் லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில் 'தமஸஸ்து பாரே', 'தமஸ பரஸ தாத'என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது
 ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது  விஷ்ணுஸூக்த வாசகம்
'தம தவா கருணமி தவஸமவதவயாந
         க்ஷயநதமஸய ரஜஸ பராகே'
மிகவும் முதியவனான ராஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிப்பவன் என நேரடியாகவே உறைத்தபோது அதை மறைபொருளாக பாவித்து இரட்டையர்த்தம் கற்பிப்பது அவைதீகமன்றோ. 


மற்றும் இங்கு கிருஷ்ணோபனிஷத் வாக்யத்தை கையாண்ட விதம் காண்கையில் இவருக்கு கண்ணில் கோளாறா அல்லது வடமொழி புலமை சூன்யமா எனும் ஐயம் எழக்கூடும்.
அவ்வாக்யத்தில் "மாயை எனும் வஞ்சகம் மூன்றுகுணங்களை கொண்டது
அவை ஸத்வம், ராஜஸம், தாமஸம். ஸத்வகுணம் சிவனிடமும் பிரம்மாவிடம் 
ராஜஸமும் வெளிப்படுகிறது" எனதான் கூறியதே தவிற விஷ்ணுவிற்கு தமோகுணமுண்டு என எவ்விடத்திலும் இல்லை. பகவானுடைய நாமத்திற்கு அங்கு எப்பதமுமில்லையே. 

மற்றும் அவ்வசனத்தில் சிவனை பரமஸாத்வீகி என கூறவில்லை, சிவனிடம் ஸாத்வீக குணம் வெளிப்படுத்தப்படுகிறது என்றே கூறியது. இதை நாம் ஆக்ஷேபிக்கவில்லையே. 

ஹஸ்தே(அ)க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி

”’ கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.”’ என்றல்லவோ பாகவதம் கூறிற்று. இவ்வாறு எம்பெருமாளின் பக்தபாகவதனுக்கு ஸாத்வீககுணம் ஆங்கேங்கே வெளிப்படதான் செய்யும். சிவன் தன் தமோகுணத்தை இப்படி பகவத்நிஷ்டையால் போக்கிக்கொள்கிறார் என்பதும் பொருந்தும்.

பகவான் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் ஸாத்வீகுணம் அவரை அறியும் எளியவழியென்பதாற்தான் ஸாத்வீகதிருமேனியை கொண்டருளுகின்றார் என்பதற்கும் மேலே பல ப்ரஹ்மானம் காட்டினோம். ஜட குணங்களால் மூடப்பட்டவன் எவ்விதம் ப்ரஹ்மமாக முடியும்? அங்கனம் மேற்காட்டிய ஸூதசம்ஹிதை வசனத்தால் ஜடகுணங்களுள் ஒன்றில் சிவன் மூடப்பட்டதாக உள்ளதே, ஆகையால் சிவன் சாதாரண ஜீவாத்மா என விளங்கும். ஆகையினால் மேற்காட்டிய ஸூதசம்ஹிதை வசனத்திற்கு எவ்வித ஸ்ருதி ப்ரமாணமுமில்லையென்பதால் அது நிராகரிக்கதக்கதே. 


ஆக்ஷேபம்-  கந்த புராணம்:ஸுத சம்ஹிதை:இரண்டாம் அத்யாயம்:

ருத்ரஸ்ய விக்ரஹம் ஸுகலம் க்ருஷ்ணம்

விஷ்ணோஸ்ச விக்ரஹம் |
ப்ரஹ்மணோதி விக்ரஹம் ரகதம சிந்தயேத பூதிமுகதயே||
ஸெளகலம் ஸத்வகுணஜ்ஜாதம ராகம ஜாதம ரஜோகுணத|
கார்ஷண்யம் தமோகுணஜ்ஜாதம இதி வித்யாத ஸ்மஸ்தத||

ருத்ரனுடைய சரீரத்தை வெளுப்பாகவும், விஷ்ணுவுடைய சரீரரத்தை கருப்பாகவும் பிரம்மனின் சரீரத்தை சிவப்பாகவும் பூதிமுக்தியின் பொருட்டு சிந்திக்கக்கடவான். வெளுப்பு ஸத்வகுணத்தாலுண்டாகும்; சிவப்பு ரஜோகுணத்தாலுண்டாகும்;கறுப்பு தமோகுணத்தாலுண்டானது என அறியகடவான். 


எனவே விஷ்ணுவுடைய மேனி தாமஸத்தாலுண்டானதுசிவனுடைய செம்மேனி ஸாத்வீகம். ஆகையால் சிவசம்பந்தபுராணம் ஸாத்வீகம்;விஷ்ணு சம்பந்தபுராணம் தாமஸமாகும். 


ஸமாதானம்:அப்புராண வசனத்தில் விஷ்ணுவுக்கு தமோகுணமுண்டு என சாபதமாக கூறப்படவில்லை. இதைக்கொண்டு நாம் வேதத்திலிருந்து எடுத்த மேற்கோள்களின் மூலம் பகவானுக்கு தமோகுண நாற்றமும் கிடையாது என்பதை அசைக்கவும் முடியாது என்பதை நடுநிலையாளர்க்கு புரியும். 
வெண்மை , செம்மை, கருமை ஆகிய நிறங்கள் ஸத்வ, ராஜஸ, தாமஸ குணங்களை காட்டுமென்பதெல்லாம் ப்ராக்ருதமான சரீரரங்களுக்கல்லவா? சொல்லப்படும். 

ந தஸ்ய ப்ராக்ருதா  மூர்த்திர் மாம்ஸமேதாஸ்தி ஸம்பவா (வராஹபுராணம்:14-41, வாயு புராணம் 34-40)

ந பூத ஸங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந
(பாரதம்-சாந்தி பர்வம் 206-60)

இந்த பரமாத்மாவின் தேஹம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அமைந்ததன்று. 

எனவே பரமபுருஷனின் அப்ராக்ருத திருமேனிக்கு இந்த நிற நியமம் ஏது? ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்திலே ஐந்தாமத்யாயத்தில் இருபதாம் ஸ்லோகத்தில்

க்ருதம் த்ரேதோ த்வாபரம் ச கலிரிதயேக்ஷ கேஸவ|
நாநாவாணபிதாகார நாநைவ விதிநேஜயதே ||

க்ரதம், த்ரேதா, துவாபாரம், கலி எனும் நான்கு யுகத்தில் பலவர்ணங்கள், நாமங்கள், உருவங்கள் ஆகியவற்றை உடையவனாய், பலவிதமான விதிகளால் உபாஸிக்கப்படுபவன் கேசவன் என்று கூறப்படுகிறது. 

பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்ப சும்புறம்
போலுநீர்மை பொற்புடைத்த டத்துவண்டு விண்டுலாம்
நீலநீர்மை யென்றிவைநி றைந்தகாலம் நான்குமாய்
மாலினீர்மை வையகம்ம றைத்ததென்ன நீர்மையே.

பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
இவ்வுலகத்திலுள்ளவர்கள் திரஸ்கரித்தது என்ன ஸ்வபாவம்!

என்ற திருச்சந்த விருத்தத்திலும்(44)

நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்
நான்கும்.... 

வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும்டையனாய்க் கொண்டு (நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய். 

என்ற நான்முக அந்தாதி(24) பாடலும் மாறிமாறி வரும் வர்ணங்களுடையவை பகவானின் திருமேனி என்றதே. 
எனவே பகவான் தாமஸகுணத்தைகொண்டவர் என்பதற்கு  கறுப்பு நிறத்தை காரணம் காட்டும் இக்கந்தபுராண வசனம் பொருந்தாது என்க. 

ஆக்ஷேபம்- 

சிவமஹிமை கூறும் புராணங்கள் எல்லாம் தாமஸமென தள்ளதக்கவை எனின் ஸ்கந்த, லிங்க, மத்யஸ்த புராணங்களை  தாமசம் கருதி விருத்தம் எனத் தள்ளிவிட வேண்டியதே.மற்றும் சிவனும், உமையும் தாமஸ தெய்வம், அவர்களின் சம்பாஷணையும் தாமஸபுத்தியுடன் கூடியதாய்த் தானிருக்கும் அது  எப்படி பிரமாணமாயிற்று?
 அன்றியும் பாத்மபுராணம் பிரமனுக்குரியது, ஆகலின் ராஜஸம், அதனைப் பிரமாணமாக எடுப்பது எப்படித் தகும்? அதனைச் செய்யாமல் அப்புராண வாக்கியத்தை தன்கொள்கைக்குப் பிரமாணமாகக் கொண்டது அஃதேன்? 

ஸமாதானம்- சிவமஹிமை புராணங்களையும், பிரம்ம மஹிமை புராணங்களை தாமஸம், ராஜஸம் என கூறிவிட்டு அவற்றிலிருந்து ப்ரமாணம் எடுத்தல் கூடுமோ என்பது நியாயமான கேள்வியே. இங்கு முக்யமாக கருதவேண்டியொன்று உள்ளது. எந்தப்புராணத்தையும் முழுவதுமாக வைதீகர்கள் தள்ளமாட்டார்கள். வேதவிருத்தமான விஷயங்கள் இருந்தால் அதை தள்ளியே தீரவேண்டும். 
வேதத்திற்கு விருத்தமில்லாத விஷயமிருந்தால் அது ஸ்ந்தபுராணமானாலும், லிங்க புராணமானாலும், மத்யஸ்தபுராணமானாலும், பத்மபுராணமானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். "அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம்"
எனும் மத்யஸ்த புராணவசனமும் அக்னி, சிவமஹாத்மியத்தை சொல்லும் புராணபகுதிகள் தாமஸங்கள் என்று சொல்லிற்றே ஒழிய முழுபுராணத்தையும் கழிக்கவில்லை. ஒரு புராணம் தாமஸம், இன்னொரு புராணம் ஸாத்வீகம் இன்னொன்று ராஜஸம் என்று சொல்வது பெரும்பான்மையான தாமஸ பகுதிகளையோ அல்லது ஸாத்வீக பகுதிகளையோ அல்லது ராஜஸபகுதிகளை உடையது என்பதாலேயே ஆகும். உதாரணமாக ஸ்கந்த புராணத்தில் 'கறுப்புநிறம் தாமஸம் என்பதால் விஷ்ணு தாமஸம்' என்ற வசனமும்  அதே புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராம் அத்யாயத்தில் " மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும்"என்ற வசனமும் முரண்பட்டுகொள்கிறது. இவற்றுள் விஷ்ணுவானவர் ஸாத்வீகவடிவானார், அவறுக்கு தமோகுணஸ்பரிசமும் கிடையாது என்ற வேதவசனங்களுக்கு ஒத்திருக்கும் வாக்யத்தையே அனுஸரிக்க வேண்டுமென பாலபருவ பிள்ளைக்கும் தெரிந்திருக்கும். ஆகவே எப்புராணமாயினும் அவை ஸாத்வீகபுராணத்திற்கு முரணில்லாமலும், வேதத்தை அனுஸரித்துமிருந்தால் அதை தாராளமாக ஏற்கலாம். பெரும்பகுதி விரோதிக்குமானால் அவை தள்ளதக்கவை என்பது முடிவு. 

ஆக்ஷேபம்- யாழ்பாணத்து நல்லூர் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர்

 ‘சிவபுராணம் பத்தும் சாத்துவிகங்களாம் சத்துவ

       குணம் வெண்ணிறமுடையதும் சுகத்துக்கும்
       ஞானத்துக்கும் இடமுமாம், யோகிகளுக்கு ஞானம்
       உபதேசிக்கும் சிவபெருமான் தெளிபளிங்கு வடிவி
       னராய் எங்குமுறங்காது பிராமணாதிபதியாயிருப்பர்’,

       ‘விட்டுணு புராணம் நான்கும் தாமசங்களாம், தமோ

       குணம் கருநிறமுடையதும் உதாசீனரூபமும், கூட கிருத்
       திய சமர்த்தமுமாம். நித்திரை, சோம்பு, பிரமாதம், வஞ்ச
       னம் முதலியவைகள் தாமசங்கள். விட்டுணு கரியரும்,
       சேஷசயனம் செய்வோரும் பக்தரை மோகிப்பிப்பவருமாயிருப்பர்,

       ‘பிரமபுராணம் இரண்டும் இராசசங்களாம். இரசோ

       குணம் சிவந்த நிறமுடையதும் துக்கத்துக்கிடமும்
       சஞ்சல ரூபமுமாம். பிரமாச் செந்நிறமுடையராய்ச்
       சஞ்சல ரூபியாயிருப்பர்.

       ‘அக்கினி புராணமும் சூரிய புராணமும் திரிகுணயுத்த

       மாம். அக்கினியுஞ் சூரியனும் முக்குண வடிவினராயிருப்பர்.
       ஆதலால், இப்பதினெட்டினுள்ளுஞ் சிவபுராணங்கள்
       பத்துமே உயர்ந்தனவாம். ஆகையாற் சிவனடியார்கள்
       சிவ புராணங்களையே விதிப்படி மெய்யன்போடு கேட்கக்கடவர்கள்’

என்றருளினார். 


ஸமாதானம்-சிவ புராணம் பத்து என எந்த ஸ்மிருதி, இதிஹாச, புராணமும் நிஷ்கரிகை செய்யவில்லை. பத்ம புராணமோ சிவபுராணம் ஆறு, விஷ்ணுபுராணம் ஆறு, பிரம்ம புராணம் ஆறு என நிஷ்கரிகை செய்துவிட்டது. ஆனால் சைவர்கள் பிரம்மபுராணத்தில் சில சிவமஹிமை சரிதத்தை எடுத்துகொண்டு அவையும் சிவபுராணமென பிதற்றுவர். ஆனால் பத்மபுராண நிஷ்கரிகை செய்ததை பார்கையில் பிரமபுராணங்களுள் சிவசரிதம் புகுத்தப்பட்டிருக்கும் புனைவென புரியும். குணம் நிறபேதத்தை அனுஸரிப்பது என்பது ப்ரமாணமற்ற பேச்சு என்பதை மேலே கண்டோம்

மோகிப்பது, கிருத்திய சமர்தமும் தாமஸமெனில் சிவன்  மோகிக்கப்பட்டாரெனும் புராணகதையின் மூலம் சிவன் சாதாரண ஜீவாத்மா என விளங்கவில்லையோ. நாராயணன் தூங்குகின்றதால் அவருக்கு தாமஸகுணமுடையது என்பது ப்ரமாண விருத்த பேச்சு. 

'யோவித யயாநுபஹதோபி தஸார்த்த வ்ருத்தத்யா நிதராமுவாஹ ஜடரீக்ருதலோகயாத்ர' (பாகவதம்-3-9-20)

பகவான் அஞ்ஞானம் தீண்டபெறாது
 நெடுங்காலம் லோகயாத்ரை பொருட்டு சிந்தித்து நித்திரையில் அமர்ந்தாரென்றும்

நயஸ்யேத  மாதமஜி  ஜகத விலயாமபுமதயே ஸேஷ தமநா நிஜஸுகாநுபவோ நிரீஹ|
யோகேந மீலித்தருகாதமநி வீதிநிதரஸ துர்யே ஸதிதோ ந து தமோ ந குணாமஸச யுங்ஷே|| (7-9-32)

இவ்வுலக்கனைத்தையும் தன் திருவயிற்றில் வைத்துகொண்டு ப்ரளய ஜலத்தில் தன் பெருமைகளில் நிலைநிற்பவனாய் தன் ஸ்வரூபஸுகாநுபவத்திலேயே ஈடுபட்டவனாய் கிரியையற்றவனாய் விழித்துகொண்டே கண்ணைமூடியிருப்பவனாய் தூக்பமற்றவனாய் ஜாகரத ஸ்வபநஸுஷுபதி ( விழிப்பு, கனவு, தூக்கம்) எனும் மூன்று நிலைக்கு அப்பாற்பட்டு நான்காம் நிலையில் நின்று 
தாமஸ ப்ராக்ருதமான மற்ற குணங்களும்
கூடியிருக்கப்பெறாதவனாய் ஆதிஷேனில் சயனித்திருக்கிறாய்

என்று ஆதிஷேஷ சயனம் யோகநித்திரை என்பதற்கு புராணம் சான்று. அது தாமஸம் என்பதற்கு புராண ப்ரமானமும் இல்லையென்பதாற் ஆறுமுகநாவலரின் பேச்சும் அபத்தமாய் முடிந்தது. 

ஆக்ஷேபம்- குமர குருதாஸரின்' சைவ சமய சரபம்' எனும் நூல்

விஷ்ணுபெருமை, புண்டரதாரனம் பற்றி பேசும் புராணங்கள் பெரூம்பாலானவை இடைசொருகல்கள், மதாபிமானத்தில் புனையப்பட்டதே. ஆதாரம் :History of civilization in Ancient India based on Sanskrit Literature" by Romesh Chander Dutt (ரோமேஷ் சந்தர் தத் என்பவர் இயற்றிய "சம்ஸ்க்ருத நூல்களின் ஆதாரத்தினால் எழுதப்பட்டதாகிய பூர்வீக இந்தியா" )




 "Padma Purana : The Uttara Khanda which is probably later than the other portions of the Purana,is intensely Vaishnava in its tone : the nature of Bhakti or faith in Vishnu,the use of Vaishnava marks on the body, the legends of Vishnu's incarnations and other construction of images of Vishnu are all explained by Siva to his consort Parvati and they both finish by adoring Vishnu !There can be no doubt much of this sectarian controversy has been added after the Moslem conquest of India.There is mention,even in the earlier books of this Purana,of Mlechchhas flourishing in India,while the last portions of the work Dr.Wilson gives the 15th or 16th century A.D. , as the probable date." (Page 664) 


மொழிபெயர்ப்பு : பத்மபுராணத்தின் உத்தரகாண்டமானது (இறுதி அத்யாயம்) அப்புராணத்தின் மற்றைய பாகங்கள் தோன்றிய நெடுங்காலத்திற்குப் பிறகு பெரும்பாலும் வைஷ்ணவ நடையில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது.விஷ்ணு பக்தியின் சொரூபமும் வைஷ்ணவச் சின்ன தாரண பிரயோஜனமும் விஷ்ணுவின் அவதார சரித்திரங்களும் விஷ்ணு விக்கிரகங்கள் செய்யும் விதிகளும் சிவனால் தன் தேவியாகிய பார்வதிக்கு கூறப்பட்டன என்பதும் அவ்விருவருவும் இறுதியில் விஷ்ணுவை வணங்கி நின்றனர் என்பதும் எழுதப்பட்டுள்ளன.  இந்தியாவில் முஹம்மதிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு தான் மதச்சண்டைகள் நடந்ததற்கு அறிகுறியாகிய இவ்விஷயங்கள் எல்லாம் புனையப்பட்டன என்பது சந்தேகமற்ற விஷயம்.இந்த உத்தரகண்டத்தின் சில பூர்வ பாகங்களில் இந்தியாவில் மிலேச்சர் (முஸ்லிம்கள்) பரவிகிடப்பதுவும் குறிக்கப்பட்டுள்ளது.வில்சன் எனும் பண்டிதரும் இந்த இறுதிப்பாகங்கள் பெரும்பான்மையும் கிபி 15-ம் ,16-ம் நூற்றாண்டுகளில் உண்டாயிருக்கலாம் என்று காலவரையறையும் குறித்தார். (பக்கம் 664) 



7."Skanda Purana:- The Utkala Khanda gives an account of the holiness of Orissa and of Jagannatha and is no doubt a later appendage by Vaishnava writers,who thus added an account of a Vsihnava Tirtha to an eminently Saiva Purana" (Page 668) 


மொழிபெயர்ப்பு : ஸ்காந்தப் புராணத்தில் உத்கலகண்டமானது ஒட்ரதேசத்தின்(ஒரிஸா) பரிசுத்தத்தையும் ஜகந்நாதத்தின் மகிமையையும் சொல்லும்.இது வைஷ்ணவ வித்வான்களால் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதென்பதற்குச் சந்தேகமில்லை.அவர்கள்,சிறந்த சைவப்புராணமாகிய இதில்,ஒரு வைஷ்ணவ தீர்த்த வைபவத்தையும் சேர்த்து வைத்தனர் (பக்கம் 668) 


எனவே வரலாற்றுரீதியாக  பத்ம, ஸ்கந்த பாகவத புராணங்கள் இடைகாலசொருகல் என்பதால் அறிவுடையார் அவற்றை தள்ளுவர். 



ஸமாதானம்-  வெள்ளையனின் வியூகமெல்லாம் வேதமதத்தை அசைக்கவியலாது என்பது நடுநிலையாளர்கு புரியும். ஆங்கில எழுத்தை கண்டதும் அசந்து போய் உண்மையென நம்பும் மந்தமதியர்காக உருவாக்கப்பட்ட கற்பனையாதாரமே இது. குமர குருதாஸன் குறிப்பிட்ட அவ்வாதரங்கள் அந்நூலில் இல்லை. அந்நூல் மூன்று பாகங்களை உடையது;அம்மூன்றிலுமே இவர்கூறியவிஷயமட்டுமல்ல பக்கமும் இல்லை என்பதை பின்வரும் அப்பக்க படங்களில் கண்கூடாக காண்க. 



மற்றும் அந்நூலில் மூன்றுபாகங்களிலும் இவர் கூறியபுனைவுகள் இல்லையென்பதை நடுநிலையாளர்கள் சரிபார்த்துகொள்க.

https://archive.org/details/afh5566.0002.001.umich.edu

https://archive.org/details/afh5566.0002.001.umich.edu

https://archive.org/details/historyofcivilis02dutt

மேலும் இது வைஷ்ணவ கற்பித புராணம் என சொல்லமுடியாதபடி எழுநூறு வருடங்களுக்கு முற்பட்டவர்களான மஹாகவி கம்பரும், பிள்ளைபெருமாளையங்காரும்

எல்லை வளையங்கள் நின்னுழையென்று அந்நாள்
 எரியோனைத் தீண்டிஎழுவரென நின்ற
தொல்லை முதன்முனிவர் சூளுற்ற போதே
தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ
எந்தாய்
(கம்பராமாயணம்-ஆரண்யகாண்டம்-சரபங்கர் படலம் 31)

எனவும்

பிருகோத மனமுன பெருஞ்சினங்கொண் டின்பம் ப்ருகு.....
(பரப்ஹ்மவிவேகம்-12)

என்றும் இவ்விதிஹாசத்தை  தம் பாடல்களை இசைத்துள்ளனர். எனவே பாம்பன் பரதேசியின் பகற்கனவும் பழிக்காமல் நிர்மூலமாகியது.




இவ்வகையில், ஸத்வ குண புராணங்கள் ஸ்ரீ விஷ்ணுவையும், தமோ குண புராணங்கள் ருத்ரனையும், ராஜஸகுண புராணங்கள் ப்ரஹ்மாவையும் பிரபலபடுத்தி புகழ்கின்றன. இவ்விதமான , ரஜோ மற்றும் தமோ குண புராணங்களில் பகார பேதங்கள் மலிந்து காணப்படும். எனவே சரியான இறைநிலையையும் , அதன் தத்துவத்தையும் புரிந்து கொள்ள ஸாதகர்கள் ஸத்வகுண புராணங்களை வழிகாட்டியாக கொண்டு ஸாதனை செய்து வர வேண்டும். அவ்வாறு செய்தால் ஒழிய மற்ற எந்த முறைகளினாலும் மோக்ஷ யோக்யர்களாக  தங்களை மேம்படுத்தி கொள்ள முடியாது என்பது முடிவு. எனினும், நாம் ஸத்வைஷ்ணவர்களாக இருந்தும் ஸத்வ புராணங்களில் தேர்ச்சியும், அதன் பயனாக நம் தெய்வமான ஸ்ரீ ஹரியானவன் ஸகல தேவோத்தமன் என்றும் அவனே அனைத்திற்கும் மூல காரணன் என அறுதியிட்டு கூற இயலாத துர்பாகியர்களாக இருக்கிறோம்.ஏனெனில் , ஸத்வ புராணங்களை கூறி அதன் தத்வ விளக்கங்களை பாமரன் முதல் பண்டிதர்கள் வரை புரிந்து கொள்ளும் வகையில் உரைப்பார் எவருமில்லை. எனவே, இனிவரும் கால கட்டங்களில் அவை அனைத்தையும் படித்து, பொருளுணர்ந்து  மற்றவர்களுக்கும் உணர்வித்து உய்ய சமய அவகாசம் முதலிய கிடைக்கா என்ற தீர்க நோக்கில், அதனை சரிபடுத்தும் பொருட்டு அப்புராணங்களின் ஸாரத்தை வழங்கி அதன் மூலமாக ஸ்ரீ ஹரியின் ஸர்வோத்தமத்தை நிலைநிறுத்திக்கொள்வோம்


Comments

  1. சிவபுராணங்களை மட்டும் ஏன் தாமஸமென நிந்திக்கவேண்டும்?அதனையும் வியாசர் தானே
    இயற்றினார்.சிவோத்கர்ஷங்களையும் விஷ்ணுஅபகர்ஷணங்களையும் விளக்கும் பத்து புராணங்களை வியாசர் இயற்றினார்.எண்ணிக்கையில் சிவபுராணங்களே அதிகம்.

    நீங்கள் சொல்வது படி பார்த்தால் "குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிகக் கொளல்" என்னும் குறளின் படி அதிக தாமஸ புராணங்களை இயற்றிய வியாசர் மிகுந்த தாமஸியாகி அவர் முழுத்தாமஸி என்று ஒதுக்கப்படுவார்.
    மேலும் "கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடையார்" என்னும் குறளின்படி அவர்
    இயற்றிய விஷ்ணு புராணங்களும் மற்ற புராணங்களும்
    தன்மதிப்பை இழக்குமே.அதனால் சிவபுராணங்களையே சாத்வீகம் எனக் கோடல் வேண்டும்

    பதினெட்டு புராணங்களையும் வேதமானது வந்தித்து இருக்கிறது.
    "கிம் தத்வம் ப்ரஹ்மவாதிநம் புராணேஷ் வஷ்டாதகஸூ ஸ்ம்ருதிஷ்வஷ்டாத சஸ்வபி"(பிரமவாதிகள் பதினெட்டுப் புராணங்களிலும் பதினெட்டு ஸ்ம்ருதிகளிலும் அறிதற்குரிய தத்வம் என்ன?) என்று ராமரஹஸ்ய உபநிடதம் சிவபுராணங்களையும் வந்தித்து இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சிவனுடைய‌‌ தாமஸ
      குணங்களேயொட்டி சிவபுராணங்கள் அமைந்தன.ஸத்வரஜஸ்தமஸாகிய முக்குண மனிதர்கள் அவற்றின் வழி உய்வடையும் பொருட்டு வியாஸரால் இயற்றப்பட்டது.ஆகலினால் அதை இயற்றியதால் வியாஸருக்கு அப்புராண குணங்கள் வந்திடுமோ என்ன? அதிகமாக இருப்பதனால் அதை ஸாத்வீகமாக கொள்ள வேண்டுமெனில் லோகத்தில் அதர்மிகள் அதிகமாக இருப்பதால் அவர்களை கொண்டாடலாமோ? இல்லை என்க.

      Delete
  2. சிவபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அப்புராணங்கள் அனைத்தும் தாமஸம் எனின்
    வேதங்களில் நடுப்பாகமாக உள்ள சதருத்ரீயத்தில் ருத்ரமூர்த்தியின் பெருமை பேசப்படுகிறது.அதுமட்டுமின்றி பஸ்மஜாபாலம்,ராமரஹஸ்யம்,
    பிருஹஜ்ஜாபாலம்,தேஜோபிந்து,ருத்ராட்ச ஜாபாலம்,அதர்வசிகை,பஞ்சபிரம்மம்,பாசுபதப் பிரம்மம்,சரபம்,நாராயண உபநிடதம் போன்ற உபநிடதங்டள் சங்கரனைப் புகழ்கிறதே அதனையும் நீங்கள் தாமஸம் என்று ஒதுக்குவீர்களோ?
    அப்படி ஒதுக்குவீர்களானால் அது வேத நிந்தனையாய் முடியுமே?இதுமட்டுமின்றி மகாபாரதம் அனுசாஸன பர்வம் சங்கரனுக்கு சமமான தெய்வமில்லை எனக் கூறுகிறதே! அந்த சங்கரன் தானே கண்ணனுக்கு பிள்ளை வரம் கொடுத்தது.அதனால் சங்கனனின் பெருமை கூறும் மகாபாரதத்தையும் தாமஸம் என நிந்திப்பீர்களா?

    ReplyDelete
    Replies
    1. சிவனது பெருமையை கூறும் புராணங்கள் வேதத்திற்கு முரணாக இல்லாதிருப்பின் அவை ஏற்கதக்கன இல்லேயேல் அது தாமஸமென தள்ளதக்கவை என் மேலே தெளிவாக கூறியதை பொறுமையுடன் கண்டுகொள்ள. இன்று நூற்றெட்டு உபனிஷதுக்கள் என அச்சிடப்பட்டுள்ளவையில் பெரும்பாலானவை ஆச்சார்யர்களின் காலத்திற்கு பின்(சுமார் 500 வருஷங்களுக்குள் ) கலப்பிக்கப்பட்டவை. 
      அவற்றுள் த்ரிமதஸதர்களான ஆச்சார்யர்களாள் கையாளப்பட்டனவோ அவற்றையே ப்ரமாணமாக கொள்ள முடியும்.த்ரிமதஸ்தா்களாள் கையாளப்படாத உபனிஷதங்கள் ப்ரமாணத் தகுதியற்றவை.
      அதன் படி அப்பையதீக்ஷிதர் ஹரதத்தர் முதலிய‌ சைவாசார்யர்கள் கஷ்டபட்டு சிவபுரம் ஸாதிக்க எழுதிய நூல்களில் ஒன்று கூட இன்று நீங்கள் பேசும் உபநிஷதங்கள் இடம்பெறவில்லையே.ஆகவே இவை பிற்கால புனைவென்பது தெள்ளத்தெளிவு.

      மஹாபாரதத்தில் சிலவிடங்கள் சிவபரமான விஷயங்களும் உள் விஷ்ணுபரமாகவும் உள்.மேலும் வராஹபுராணத்தில் சிவன் நாராயணர் தன்னை வணங்கி தனக்கு புகழுண்டாக்கும் வரத்தை பெற்றிருப்பதால் கண்ணன் சிவனை வணங்கியிருக்கிறான் என்று கொள்ளவேண்டுமே தவிற சிவன் பரம்பொருளாகார்.

      Delete
    2. உபநிடதங்கள் கற்பிதங்களென்றால் இராமபிரான் எதற்கு 108 உபநிடதங்கள் உள்ளது என்று எதற்குக் கூறவேண்டும்? அவை கற்பிதமென்றால் அவர் கூறிய உபநிடதங்களின் எண்ணிக்கை தப்பாய் முடியும். அதனால் 108 உபநிடதங்களையும் வந்திப்பதே வைதிகமாகும்

      Delete
    3. வேதங்கள் நான்கு வேதாகங்கள் ஆறு புராணங்கள் பதினெட்டு என காலங்காலமாக வழங்கப்படுகிறதே ஒழிய உபநிஷதங்கள் 108 என்று பண்டைய சான்றோர் எங்கும் நிறுவவில்லை. ஆகவே உபநிஷதங்கள் பல அழிந்தும் அழிக்கப்பட்டும் திரிந்தும் திரிக்கப்பட்டும் உள்ளதென்பதே உண்மை.இவற்றுள் எவை பண்டைய மதாசார்யர்களால் கையாளப்பட்டதோ அவற்றையே உபநிஷத் எனக்கருதி
      ப்ரமாணிக்கலாம். முக்திகோபநிஷத்தும் அந்நூற்றெற்றில் ஒன்று என்பதால் அக்கூற்றிலும் உண்மைத்தன்மை இல்லையென்க.அன்றியும்
      நூற்றெற்றையும் ப்ரமாணமாகக் கொள்வீரெனில்

      ஏதஸ்யைவ யஜனேன சந்த்ரத்வஜோ கதமோஹமாத்மானம்ʼ வேதயதி |
      ஓங்காராதிகம்ʼ மனுமாவர்தயேத் . ஸங்கரஹித |அப்யாநயத் தத்விஷ்ணோ꞉
      பரமம்ʼ பதம்ʼ ஸதா பஶ்யந்தி ஸூரய|

      கோபால மந்திரத்தை ஜபம் செய்து சந்திரனை தலையில் கொண்ட சிவன் மோஹம் நீங்கபெற்றதாகவும் இந்த ஜெபத்தால் பரமாத்மாவை ஸாக்ஷாத்கரித்து விஷ்ணுவுடைய பரமபதத்தை காணப்பெற்றான்
      என்கிற கோபாலதாபிநியுபநிஷத்தையும் கொண்டாடுவீராக!.
      மேற்காட்டிய உபநிஷத்தால்
      கோபாலமந்திரபெருமையும் சிவனுடைய சிறுமையும் வெளிப்படுமிடத்தும் பூர்வாச்சார்யர்களால் கையாளப்படாத இவ்வுபநிஷத்தை வைஷ்ணவர்கள் ப்ரமாணமாக கொள்ளார்.

      Delete
  3. வஞ்சனை சிவபிரானுக்கில்லாததால் அவர் சத்துவகுண மூர்த்தியே.மாயையும் சிவபிரானுக்கில்லை.
    விஷ்ணுவே சலந்தரனின் மனைவியைக் கற்பழித்தும்,வாலியை மறைந்திருந்து கொன்றும் தருமனைப் பொய் சொல்ல வைத்தும் பிருகு மனைவியை சக்கரத்தால் கொன்றும் ஜராசந்தனிடம் பதினெட்டு முறை போரில் தோற்று ஓடியும்
    பாரதப் போரில் தான் செய்த சத்தியத்தை மீறினார்.இதுவெல்லாம் சாத்வீக குணம் என்று எப்படி சொல்ல முடியும்?விஷ்ணுவை மாயை மயக்காது என்றால் மாயாசீதையையும் மாயாவசுதேவனையும் மாயமானையும் கண்டு ஏன் மயங்கவேண்டும்? சிவபிரான் காமத்தை வென்றவன்றோ? அவரை மாயையும் மயக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. மேலே காட்டிய வேதப்பிரமாணங்கள் முன் உங்களுடைய குதர்க்க வாதங்கள் நிற்குமா என்ன?."
      பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
      நன்மை பயக்கும் எனின். என்கிற அதே திருக்குறளே விஷ்ணு பொய் சொன்னவிடம் கபடநாடகமாடிய இடத்திற்குகந்த நியாயம். ஜராசந்தனுக்கு பயந்தோடினான் முதலிய புராண கதைகள் எல்லாம் விஷ்ணுவுடைய பராக்ரமங்கள் வேதத்தில் சொல்லப்படுமிடத்து அக்கதைகள் நிரஸிக்கப்படும். மேலகாட்டிய வேதவாக்யங்களுக்கு பதில் கொடுக்காமல் புராணங்களை வைத்து சிவனை ஸாத்வீகியாக்க முயன்றால் அது தோல்வியிலேயே முடியும்.

      Delete
  4. சைவாகமங்களை திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேழலகரே தன் உரையில் மேற்கோள் காட்டியிருக்க அதனை மோகன நூலென்றும் தாமஸ சாஸ்திரமென்றும் எப்படி சொல்ல முடியும்?இறைவனுக்கு எட்டுகுணங்கள் உண்டு என சைவாகமங்கள் கூறும்.அதனையே திருவள்ளுவரும் " கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என்று கூறியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அக்குறளுக்கு பரிமேலழகர் சைவசார்பாய் பொருளுரைத்தமை ஒருபுறமிருக்க திருக்குறள் சங்கமருவிய நூல் வரிசைகளில் ஒன்றென்பதை நினைவில் கொள்க சங்கநூல்கள் தொட்டுபின் வந்த சங்கமருவிய நூல்கள் யாவிலும் பரமாத்மா இலக்கணத்தைஸ்ரீமந் நாராயணருக்கே வழங்கி தமிழ்சான்றோர் பாடியிருக்க ஒருகுறளுக்கு சைவாகமசார்பாய்பரிமேழகர் எழுதிய உரை கடலில் கலந்த சக்கரையாம்.

      Delete
  5. பஸ்ம பூசுதலைக் கூறுவதாலும் ருத்ராட்ச தாரணத்தைக் கூறுவதால் சைவாகமங்கள் தாமஸமெனின்.பஸ்ம ஜாபாலம்,ருத்ராட்ச ஜாபாலம்,பிருஷஜ்ஜாபாலம், முதலான வேத உபநிடதங்கள் பஸ்மத்தின் பெருமையைக் கூறுவதால் அதுவும் தாமஸம் தானோ?

    ReplyDelete
  6. சிவ சம்பந்தமான அனைத்தும் வைணவர்களுக்கு தாமஸமாக
    இருப்பதால் சிவபிரானின் பிள்ளையான விநாயகரால் எழுதப்பட்ட பாரதத்தை ஏன் தனக்குரியது என்றும் பகவத் கீதையயும் தனக்குரியது என எதற்கு கூத்தாட வேண்டும்?அதனையும் தாமஸமென ஒதுக்கிவிட வேண்டியது தானே?

    ReplyDelete
    Replies
    1. மஹாபாரதத்தை வியாஸர் சொல்ல விநாயகர் எழுதியதால் விநாயகருடைய தாமஸகுணம் எப்படி பாரததுக்கு புகும்? சிவன் தாமஸி அவனுடைய பெருமை கூறுவதாலும் வேதவிருத்தமான கதைகள் இருப்பதாலேயே அவை தாமஸமென தள்ளதகும்.மேலும் விநாயகர் பாரதத்தை எழுதியதாக வியாஸபாரதத்தில் இல்லையே..அதற்கென்ன பதில்

      Delete
    2. வியாச பாரதத்தில் இல்லாமலிருந்தாலும் வில்லிபாரதக் காப்புச் செய்யுள் விநாயகர் ஐந்தாம் வேதமாகிய பாரதத்தை மேருமலையையே ஏடாகவும் தனது கொம்பை ஒடித்து ஏகதந்தனாகி வியாசர் சொல்லும் வேகத்திற்கு அவர் எழுதினார் என்பதைத் தெரிவிக்கிறது.
      பாரதம் 1 அத்தியாயம் விநாயகரை வியாச முனிவர் பூசித்தார் என்பதையும் தெரிவிக்கிறது.அதனால் ஐந்தாம் வேதம் விக்நேஸ்வரராலேயே எழுதப்பட்டதாகும்

      Delete
    3. வியாசபாரதத்தில் இல்லாத அவ்விநாயகப் பிரசங்கத்தை வில்லிபுத்தூரார் பாடவில்லை.
      ' நீடாழி உலகத்து.......'என்றச்‌ செய்யுள் அவர்மகன் வரந்தருவான் என்பவரால் பாடப்பட்டது.அபிதானகோஷத்திற் கண்டுகொள்க.நிற்க!
      விநாயகர் தாமஸியாகினும்
      வியாஸர் சொல்லையே கேட்டெழுதினாராகையால் தோஷமில்லை.

      Delete
    4. விநாயகரை தாமஸி எனக் நிந்தித்தாய் அவர் எதனால் தாமஸியானார்.?அவர் விஷ்ணுவைப் போல எப்போதும் சோம்பலாகப் படுத்துக் கிடந்தாரா? யாரையாவது வஞ்சித்தாரா?யாரையாவது மறைந்திருந்து கொன்றாரா?யாரையாவது பொய் சொல்ல வைத்தாரா? இல்லை போரில் புறமுதுகிட்டாரா? என்ன காரணத்தால் தாமஸி என்றாய்.?

      அவரை கணபதி உபநிஷத் ஓங்காரஸ்ரூபம் எனப் புகழ்ந்துரைத்ததே.
      சரி நீ கூறுவது உண்மையானால் விநாயகரை தாமஸி என்பதற்கு ஆதாரம் காட்டு பார்ப்போம்.

      தாமஸி என்பதால் அவரை ஏன் வியாஸர் நாட வேண்டும்? அவரை ஏன் வியாஸர் பூசிக்க வேண்டும்? சாத்வகிக்கு தாமஸியிடம் என்ன வேலை?

      Delete
    5. அட சைவ சிகாமணியே.சிவனுடைய மகன் தாமஸி என கூறியது நானல்ல நீதான் புரியுதா? விஷ்ணு சோம்பலாக படுத்துகிடந்தாராம் ப்ரளமுடிவில் சிவனுள்ளபட்ட அனைவரையும் தன் வயிற்றினுள் அடக்கி ப்ரளயஜலத்தில் படுத்துகொண்டு ஒவ்வொரு கல்பத்திலும் மறுபடி அவர்களை படைக்கிறார்.'ஓங்காரத்துக்கு உள்ளர்த்தம் ஸ்ரீமந் நாராயணரே என பரம உபநிஷத் உபதேசிக்க அந்த கணவத அதர்வஸிரசும் ப்ரஹ்ம நிர்வாகத்துக்குதவுமா? வேதத்தின் பூர்வத்தில் கூறப்பட்ட எம்பிரானுடைய பரதேவதா பராம்யத்தை அசைக்க கூடவியலாது அவ்வுபநிஷத்தால்.உம் போலிவாதங்கள் எல்லாம் பொடிபொடியான பின்னும் புளுகலுக்கு பஞ்சமில்லை

      Delete
    6. ஓங்காரத்தின் பொருள் விஷ்ணுமூர்த்தியே எனக் கதறினாய்.

      ஓங்காரமானது அகரம்,உகரம்,மகரம் என்று வியஷ்டியாக மும்மூர்த்திகளுக்கும் அந்த அகர உகர மகரங்களின் சமட்டியாகிய பிரணவம் சிவபிரானுக்கும் உரியது.

      "அகார...ப்ரஹ்மா....உகார.....விஷ்ணு.....மகார....
      ருத்ரா.....ஓங்கார.....
      ஸம்வர்தகோக்னி..." என்று அதர்வசிரஸ் உகாரப் பொருளை மட்டுமே விஷ்ணு எனக் கூறியது முழுப்பிரணவத்தையும் விஷ்ணு எனக் கூறவில்லை.

      "பூர்வா மாத்ரா....ப்ரஹ்மா.....த்விதீயா ......விஷ்ணு....த்ருதீய....ருத்ரா....சதுர்த்யா ஸம்வர்தகோக்னி" என்று நரசிம்ம பூர்வதாபினி உபநிஷத் மேலும் அதனையே கூறியது

      "அகாரஸம்ஸ்திதோ ப்ரஹ்மா உகாரே விஷ்ணுராஸ்தித மகாரே ஸம்ஸ்திதோ ருத்ராஸ் ததோஸ்யாந்த பராத்பர" என்று பிரம்ம வித்யா உபநிஷத்தும் கூறியது.

      "அகாரம் ப்ராஹ்மாணம்.....உகாரம் விஷ்ணும்.....மகாரம் ருத்ரம்....ஓங்காரம் ஸர்வேஸ்வரம்" என்று நரசிம்ம ஹோத்தரதாபிநி உபநிஷத் ஓங்காரத்தை ஸர்வேஸ்வரனாகக் கூறியது.

      இதில் அதர்விசிரஸும் நரசிம்ம பூர்வதாபிநியும் ஸம்வர்தகோக்னி என்று எந்த இடத்தில் கூறியதோ அதே இடத்தில் தான் நரசிம்ம ஹோத்தரதாபிநியும் ஸர்வேஸ்வரம் எனக் கூறியது.

      இந்த ஸர்வேஸ்வர பதம் சிவபிரானுக்கே சொந்தமானது என்பது
      "ஸர்வைஸ்வர்யஸ் சம்பந்தச் சர்வேஸ்வர சம்பு"(அனைத்து ஐஸ்வர்யங்களின் சம்பந்தரும் சர்வேஸ்வரருமான சிவன்) என்று அதர்வசிகை கூற்றால் வெளியாகும்

      இந்த கூற்றைத் தான் சுவேதாசுவரமும் "தமீச்வராணாம் பரமம் மஹேஸ்வரம்"(ஈஸ்வரர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் மேலாகிய மஹேஸ்வரர்)என்று எடுத்து ஓதியது.

      இதனால் சிவபிரானே ஓங்காரப்பொருளுக்கு சொந்தமானவர் என்பது வெளியாகிறது.
      இன்னொரு ஆதாரத்தையும் மாண்டூக்ய உபநிடதத்தில் இருந்து காட்டுகிறேன்
      "அமாத்ரஸ் சதுர்த்தோ வ்யவஹார்ய ப்ரபஞ்சோப சமச் சிவோத்வைத ஏவமோங்கார" என்றது மாண்டூக்யம்

      இதன் பொருள் "மாத்திரை அளவில்லாதவனாயும் வாக்கு மனங்களுக்கு எட்டாதவனாயும் பிரபஞ்சங்களுக்கு எல்லாம் லயஸ்தானமானவனாயும் இரண்டற்றவனாயும் நான்காம் தெய்வமாயும் பரமாத்மாவாகவுமுள்ள சிவபிரானே ஓங்காரமாகிறான்"

      நீ மும்மூர்த்திகள் மட்டுமே உள்ளனர் நான்காம் வஸ்து இல்லையென்றாய்.
      ஆனால் மாண்டூக்யமோ
      மூவருக்குமேலான
      நான்காம் வஸ்துவைக் கூறி அது சிவபிரானே எனவும் கூறியது.

      "ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே"( பிரபஞ்ச லயஸ்தானமாய் சாந்தமாயிருக்கின்ற சிவமெனும் அத்வைத வஸ்துவை நான்காம் தெய்வமாக நினைக்கின்றனர்) என்றும் மாண்டூக்யம் கூறியது

      சிவத்தை சதுர்த்தம் என்று உபநிடதங்கள் கூறுகிறது .மேலே எடுத்துக்காட்டப்பட்ட
      "பூர்வா மாத்ரா....ப்ரஹ்மா.....த்விதீயா ......விஷ்ணு....த்ருதீய....ருத்ரா....சதுர்த்யா ஸம்வர்தகோக்னி" என்ற நரசிம்ம பூர்வதாபினி உபநிஷத் வாக்கியத்தில் வரும் சதுர்த்தம் என்னும் பதத்திற்கும் சிவபிரானென்றே பொருள் கொள்ள வேண்டும். சதுர்த்தத்தை சிவமென்று வெளிப்படையாகக் கூறியது மாண்டூக்ய உபநிஷத்.அதனால்
      நரசிம்ம பூர்வதாபினி உபநிஷத் வாக்கியத்தில் வரும் சதுர்த்த பதத்திற்கும் சிவபிரானென்றே பொருள் கொள்ள வேண்டும்.

      இதனைக் கருத்தில் கொண்டுதான் "ஓங்காரஸ்வரூபிணம் மஹாதேவம்" என்றது பஸ்மஜாபாலம். விநாயகமூர்த்தியையும் இதே நோக்கில் தான் "ஓம் ப்ரணவா நந தேவாய நமஹ " என்றது கணபதி உபநிஷத்.

      "சிவோமே அஸ்து ஸதாசிவோம்" என்றது நாராயணம்.
      "த்யாயே தோங்கார மீச்வரம்" என்றது தியாகபிந்து உபநிஷத்

      "ஸூப்ரம்மண்யோம்
      ஸூப்ரம்மண்யோம்
      ஸூப்ரம்மண்யோம்" என்றது தைத்திரிய ஆரண்யகம்.

      இப்படி எங்காவது விஷ்ணுவைக் கூறியிருக்கிறதா உபநிடதங்கள்?

      வியஷ்டிப் பிரணவமான அகார உகார மகாரங்களின் சேர்க்கையே சமஷ்டிப் பிரணவமான ஓங்காரமாகும் அகார உகார மகாரங்களை மும்மூர்த்திகளுக்கும் அதன் சேர்க்கையான ஓங்காரத்தை சிவபிரானுக்கும் வேதம் கூறியதால் சிவபிரானுக்குள் மூவரும் அடங்குவர் என்பது வெளிப்பட்டது.

      "ஹரி ஓம்" என்று தான் வேதம் தொடஙகுகிறது அதனால் ஹரியே பிரணவமந்திரத்திற்குரியவர் என்று நீ கூறலாம்

      ஆனால் அப்படி ஹரி பிரணவமானால் ஓம் என்பதை மட்டுமே சொல்லியிருக்கலாம். ஹரியையும் ஓங்காரத்தையும் தனித்தனியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை.

      "சிவோம்" என்றும் "ஸூப்ரம்மண்யோம் "என்றும் வேதங்கள் கூறியதைப் போல
      "நாராயணோம்" என்று வேதம் கூறவில்லை
      ஹரி ஓம் என்னும் பதத்தை உச்சரிக்கும் போதும் எழுதும் போதும் கூட தனித்தனியாகவே உச்சரிப்பர் தனியாகவே எழுதுவர். ஹரியோம் என்றோ நாராயணயோம் என்றோ சேர்த்து எழுதுவதில்லை.
      இதனால் ஓங்காரம் வேறு விஷ்ணு வேறு என்று பெறப்பட்டது

      சிவோம் என்றும் ஸதாசிவோம் என்றும் ஸூப்ரம்மண்யோம் என்றும் ஓங்காரத்தையும் சிவத்தையும் பிரிக்காமலேயே வேதம் கூறியது.இதனால் உனது பொய் வாதம் கண்டிக்கப்பட்டது

      Delete
    7. கணபதியை நான் தாமஸி எனக் கூறவில்லை. நீங்கள் சிவசம்பந்தமான அனைத்தையும் தாமஸம் என்று தள்ளியதைக் கருத்தில் கொண்டு விநாயகரால் எழுதப்பட்ட பாரதமும் தாமஸமோ எனக் கேட்டேன்.
      அதற்கு நான் விநாயகரைத் தாமஸி எனக் கூறியதாக நீர் கற்பனை செய்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

      Delete

    8. 😂 இன்னும் எங்கே இந்த விஷயம் வரவில்லையே என்று பார்த்தேன்.பரவியில்லை இப்போதாவது ப்ரமாணத்துக்கு தகுந்த உபநிஷத்தை கைகொள்ள வேண்டுமென்கிற புத்தி வந்ததே.மேற்காட்டிய உபநிஷத்துக்களுள் மாண்டூக்யமும்,அதர்வசிரஸும், நரசிம்மபூர்வோத்தர தாபனியுமே பண்டைய சான்றோர் கையாண்ட உபநிஷத் ஏனையவை கற்பிதமே...

      சிவ,ருத்ர நாமங்கள் வாஸுதேவனுக்கே உரியதென்பதை மேலே பல வாக்யாதிகளில் எடுத்துகாட்டியாயிற்று .
      சிவம் அத்வைதம் என்பது அநிருத்ரன்,ப்ரத்யும்னன்,ஸங்கர்ஷணன் ஆகவுள்ள வியூகவாசுதேவனை ( 4பாதங்களைகொண்ட பரவாசுதேவன்) குறித்தது.ஆகவே மாண்டூக்ய உபநிஷத்தில் உத்கோஷிக்கப்படுபவன் இவனே.

      நரசிம்ம பூர்வ,உத்தரதாபினியில் வரும்‌ சதுர்த்த பதமும் சிவனை குறிக்கமாட்டா. ஏனெனில் ' க்ஷீரோதார்வர்ணவஸாயிநம் ந்ருகேஸரிவிச்ரஹம் யோகித்யேயம் பரமம்பதம் ஜாம் ஜாநீயாத்| யோ ஜாநீதேஸோம்ஸம்ருத தத்வஞ்ச கச்சதி|

      பாற்கடலில் பள்ளி கொள்ளும் நரசிங்கவுருவையுடையவனும் யோகிகளால் தியானிக்கதக்கவனும் பரமப்ராப்யமாயிருப்பவனும் ஸாமவேதப்ரதிபாத்யனுமான பரமபுருஷனை அறியவேண்டும்.அறிகிறவன் மோக்ஷம் அடைவான்‌ என்று பரப்பிரம்மம் இவனே என்று காட்டிற்கு அப்படியிருக்க ஓங்காரம் சிவனை குறிக்கும் என்பது பொருந்தாது.

      எனில் உகாரபொருளான விஷ்ணுவை கூறிவிட்டு ஓங்காரமான சதுர்த பதத்திற்கு அதே விஷ்ணுவை கூறல் பொருந்தாது என்றால் பொருந்தும் எங்கனமெனில் 'ஏகோ ஹ வை நாராயண ஆஸிந் ந ப்ரஹ்மா ந சஸங்கர|......விச்வே ஹிரண்ய கர்ப்போக்நிர் வ்ருணவிஷ்ருத்ரேந்த்ரா||

      நாராயணன் ஒருவனே ஆதிகாலத்தில் இருந்தான்.பிரமனும்,சங்கரனும் இல்லை. அதன் பின் ஹிரண்யகர்ப்பன்,அக்னி,யமன் ,வருணன்,விஷ்ணு,ருத்ரன்,இந்திரன் ஆகியவர்கள் உண்டானார்கள் என்று கூறப்பட்டது. ஆக இந்தவிஷ்ணு அவதாரவிஷ்ணுவை குறிக்கும்.

      'யஸ்ய ப்ரஸாதாத தஹமச்யுதஸ்ய
      பூத: ப்ரஜாஸர்க்க கரோஸந்தகாரீ|
      க்ரோதாச்சா ருத்ர: ஸ்திதிஹேதுபூதோ
      மத்யே ச யஸ்மாத் புருஷ: பரஸ்மாத்||

      எந்த அச்சயுதனுடைய அருளாலே ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்கும் பிரமானாகிற நானும் ஸம்ஹரிக்கும் ருத்ரனும் உண்டானோமோ எந்தபுருஷன் எங்களுக்கு நடுவில்,ரக்ஷிக்கும் புருஷனாய் அவதரித்திருக்கிறானே...... என்று விஷ்ணுபுராணத்தில் இவ்வாக்யம் நாராயணபரமாக உபப்ரும்ஹணம் செய்யப்பட்டது.

      ஆகவே உகாரமானது விஷ்ணுவை குறித்து ஓங்காரமானது நாராயணனை குறிக்க தட்டில்லை.

      ''ஈஸாநஸ் ஸர்வித்யாநாம் ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் பரஹ்மாதிபதிர் பர்ஹ்மணோதிபதிர் பரஹ்மா ஸிவோ மே அஸ்து ஸதாஸிவோம்'

      எல்லா வித்யைகளுக்கும் ஈசனாய் ஸர்வபூதங்களுக்கும் ஈச்வரனாய்,வேதத்தில் அதிபதாய்,பர்ஹ்மாவுக்கு அதிபதியாய் ப்ரஜ்மாவுக்கு அந்தர்யாமியாய் சிவனுக்கு அந்தர்மியாய் ஓங்காரவாச்யனானவன் எனக்கு எப்போதும் மங்களத்தை தரக்கடவன் என்று ந்ருஸிம்ஹதாபநீய உபனிஷத்தில் நாற்பத்து நாலாவது அநுவாகமந்திரத்திரத்தில் எடுத்தோதியது. இதில் ஓங்கார வாச்யனானவன் ஹரி என ஸ்பஷ்டமாக உறைத்து சைவவாதங்கள் அனைத்தையும் நிரஸிக்கப்பட்டுள்ளது.

      அனைத்திற்கும் மேலாக பகவத்கீதை 8 – 13 "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." என்று கிருஷ்ணர் மாக்மா வாக்காலயே பிரணவார்த்தம் நாராயணனே என்று அசைக்கவியலாதபடி நிர்தாரணம் ஆயிற்று. ஸிவ,ருத்ர,மஹாதேவ,பசுபதி முதலிய பதங்கள் யாவும் நாராயணனை குறிக்குமென்பதும் நாராயண பதம் சிவனை குறிக்காததாகையாலும் அதர்வசிரஸில் வருகிற சிவசப்தம் அவனுக்கு அந்தர்மியான நாராயணனே என்பது வேதப்பரமாணங்களாலும். சாஸ்திரங்களாலும் வெளி.

      இப்படி பலசாஸ்திராதிகளில் ஓங்காரத்துட்பொருள் இவனே என்று ஒருமுகமாககூற கணபதியுபநிஷத்து கைகுடுக்குமோ? பரஹ்பிரம்ம நிர்ணயத்துக்கு. இதில் இப்படி எங்காவது விஷ்ணுவை கூறியுள்ளதா என்று எகத்தாளம் வேறு.

      அக்னிமீளே புரோஹிதம்... முதலிய அக்கினி காரியங்களில் சர்வபுரோகிதர்களும் ஹரி ஓம் என்று தொடங்கி ஹரி ஓம் என்றுமுடிக்கிறார்களே அன்றி சிவோம்,ஸுப்ரமண்யோம் என்று வழங்குவதில்லையே. ஹரி ஓம் என்பது புணர்ந்து 'ஹரோம்' என்று ஹரனான சிவனுக்கு ப்ரணவார்த்தம் வந்துவிடின் அது வேதவிருத்தம் ஆகையாலேயே வேதம் ஹரி ஓம் ( ஹரியே அகார உகார மகாரமாகிய ஓங்கார ப்ரஹ்மம்) என்று தெளிவாக கூறிற்று

      ஹரி பிரணவமானால் ஓம் மட்டும் சொல்லியிருக்கவேண்டுமாம்.எனில் சிவன் பிரணவமானால் அவனை சிவோமீ என்றழைப்பதென்ன? எதையாவது பேசவேண்டுமென்று பேச வருவதும் வாயை குடுத்து புண்ணாக்கி கொள்வதும் சைவர் தம் கொள்கை போலும்

      Delete
    9. வியாசர் சொல்ல விநாயகர் எழுதினாரைகயால் தாமஸம் ஆகாது என்று‌பதில் கூறினேன்.அப்படியிருத்த நான் விநாயகரை தாமஸி என்றேனாம்.
      ஆனால் பொய்சொல்லி கைவிலங்காமல் வியாசர் அரூளிய புராணங்களும் மஹாபாரதம் மட்டும் எப்படி சைவர்க்கு பொருந்துமோ?.பொய்யர் எழுதிய நூல் மட்டும் மெய்யோ?

      Delete
    10. நீ கூறினாய் ஹரி ஓம் என்று வேதங்கள் தொடங்குவதாக அதன் இறுதியிலும் முடிவதாகக் கூறினாய்.

      சிவோம் என்பதைப் போலவோ ஸதாசிவோம் என்பதைப் போலவோ சிவத்தையும் ஓங்காரத்தையும் சேர்த்துக் கூறாமல் ஹரியையத் தனியாகவும் ஓங்காரத்தைத் தனியாகவும் வேதம் சொன்னதே ஏன்?
      உகாரப் பொருளுக்கு மட்டும் சொந்தமான விஷ்ணுமூர்த்தியை அதன் முழுப்பொருளுக்கும் சொந்தமாக எப்படிக் கொண்டாடுவாய்

      உண்மையில் அந்த ஓங்காரத்தால் தான் ஹரி நாமத்திற்கு பெருமை .அந்த ஹரிநாமத்தால் தான் ஓங்காரத்திற்குப் பெருமை எனக் கூறினால் அது பிரணவ நிந்தையாகும்.

      நீ கூறினாய் உகாரத்திற்கு ஹரி சொந்தக்காரர் என்பதால் முழுப்பொருளாகிய ஓங்காரத்திற்கு அவர் பொருளாவது தடையில்லை என்றாய்.

      அப்படி எனில் அகாரமகாரங்களுக்கு சொந்தமான பிரம்மனையும் ருத்ரனையும் கூட ஓங்காரம் என்று கொள்ளாமல் விஷ்ணுவை மட்டும் ஓங்காரப் பொருளாகக் கொண்டது என்னை?

      ஹரோம் என்று ஏன் கூறவில்லை என்று குதர்க்கவாதம் பேசினாய்
      ஓங்காரமே சிவமாக இருக்க அதற்கு அந்த ஹர நாமம் தேவையில்லை என்பதாலும் ஏற்கனவே ஓங்காரப் பொருள் சிவமே என்பதை சிவோம் என்றும் ஸதாசிவோம் என்றும் ஸூப்ரஹம்மண்யோம் என்றும் கூறியதால் அவ்வாறு அதனைக் கூறாமல் விட்டது

      நீ சிவபிரானே ஓங்காரமென்றால் சிவோம் என்று ஏன் கூறவேண்டும்? எனக் கேட்டாய்.

      அதுஏனெனில் சிவபிரானே ஓங்காரப்பொருள் என்று காட்ட சிவத்தையும் ஓங்காரத்தையும் பிரிவின்றிச் சிவமும் ஓங்காரமும் ஒன்றே என்றது.

      மாண்டூக்யம் சிவபிரானே ஓங்காரம் எனக் கூறியதை அறியாமல் பிதற்றினாய்.நான்காம் வஸ்துவையும் சிவமெனவே விளம்பியது.

      ஸர்வேஸ்வர பதமும் ஸாதாசிவ பதமும் சிவபிரானுக்குரியது என்பதை அறியாமல் அதனை எப்படி விஷ்ணுமூர்த்திக்கு பெயராகக் கூறுவாய்

      ஸர்வேஸ்வர பதம் சிவபிரானுக்குரியது என்பதை தெளிவாக அதர்வசிரஸே விளம்பியிருக்க அதற்கு மேலும் நீ சிவநாமங்களை விஷ்ணுவின் மேல் ஏற்றிக் கூறியது ஏன்?

      வியாஸர் வேதங்களை படைக்கவில்லை தொகுக்கவே செய்தார். அவ்வாறு அவர் தொகுத்த காரணத்தாலேயே வேத
      வியாஸர் என்று அழைக்கப்பட்டார்.அதனால் வியாஸர் வேதங்களை தொகுத்ததற்கும் நாம் வேதங்களை அனுசரிப்பதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? வேதங்களை முற்காலத்தில் சொன்னவர் சிவபிரான் அதனை ஹிரண்யகர்பனுக்கு உபதேசித்ததாக சுவேதாஸ்வரம் விளம்பும்
      சொன்னவர் தான் சர்வஞ்ஞர் வகுத்தவருமா சர்வஞ்ஞர்?

      Delete
    11. சிவபிரானே வேதமுதல்வன் என்று எட்டுத்தொகைப் பாடல் கூறியதே அதனை அறியாயோ

      "மாநிலம் சேவடி யாகத் தூநீர்
      வளைநரல் பௌவம் உடுக்கை யாக
      விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
      பசங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
      இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
      வேத முதல்வன் என்ப
      தீதற விளங்கிய திகிரி யோனே.’

      என்பது அச்செய்யுள். இதன்கண், ‘இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கிய வேதமுதல்வன் என்ப’ என்பதே இங்கு வேண்டுவது. இயன்ற - உலகத்தில் தோன்றியுள்ள, எல்லாம் பயின்று - எல்லாப் பொருள்களினுள்ளும் (உயிர் உயிரல் பொருளாகிய எல்லாப்பொருள்களினுள்ளும்) அந்தரியாமியாய் நின்று, அகத்தடக்கிய - அவ்வெல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ள (வியாபகமாகவுள்ள), வேதமுதல்வன் என்ப - வேதத்தாலுணர்த்தப்படும் முதற் பொருள் என்று மெய்யுணர்ந்தோர் கூறுவர் என்பது அப்பகுதியின் கருத்தாகும். (விரிவு கருதிச் செய்யுள் முழுவதுக்கும் பொருள்

      இவ்வாறு சிவபிரானுக்கு சந்திரன்,சூரியன்,அக்னி என்பது முக்கண்களாக இருப்பதை அச்செய்யுள் தெரிவித்தது.

      Delete
    12. அரைத்தமாவை பலமுறை அரைக்கும் செயல்‌.ஓங்காரம் சிவனெனில் சிவோம்,ஸுப்ரமண்யோம் என்று வரதேவையில்லை.ஓம் என்றாலே சிவன் என்றால் ஏன் சிவோம் என்று ஸதாசிவோம் என்று வரவேண்டும்?.

      மேலும் சிவருத்ர சமகநமகங்களில் சிவோம் என்று கூறுவது இயைபு.ஆனால்
      அக்னிகாரியங்களின் போது சைவவைணவஸ்மார்த்த பாகுபாடன்றி அனைவருமே ஹரி ஓம் என்றே தொடங்கி முடிப்பர் இதிலிருந்தே ஓங்காரவச்யன் இவனென் சொல்லாமல் தெரியும்.

      மும்மூர்த்திகளை படைத்த அவனே மும்மூர்திகளுள் ஒருவனாயும் நான்காவது பரபிம்மமாகவும் இருக்கிறானென்பதற்கு மேலே பல ப்ரமாணங்கள் காட்டியும் அதை கண்நோக்காது அகாரமகாரங்களுக்கு சொந்தமான பிரம்மனையும் ருத்ரனையும் கூட ஓங்காரம் என்று கொள்ளாமல் விஷ்ணுவை மட்டும் ஓங்காரப் பொருளாகக் கொண்டது எவ்வாறு என்பதை நகைப்புக்குள்ளாக்குகிறது.


      சிவ,ருத்ர பதங்கள் நாராயணனால் சிவனுக்கு வழங்கப்பட்டதையும் விஷ்ணுசஹஸ்ராதி நாமங்களில் சிவ,ருத்ர நாமங்களிலும் அது நாராயணன் குறித்து பேசப்பட்டிருப்பதை மறுக்க ‌முடியாமல் மறுபடி மறுபடி மாண்டூக்யத்தை இழுப்பது உம் வாதத்திற்கு வழு சேர்க்காது.இதிலிருந்தே சைவர்களுடைய இயலாமை தெள்ளதெளிவாகிறது.

      மேலும் நீர்காட்டி நரசிம்ஹபூர்வதாபினி உபநிஷத்தே ஹரியே ஓங்கார வச்யனென்றும் சொல்வதால் இன்னபிற உபநிஷத்தாலும் சிவாதி நாமங்ஙளால் கூறப்படுபவன் ஹரியே என்று வெட்டவெளி.ஆனால் உன்னால் இதை மறுக்கமுடியாது.ஏனென்றால் சைவசூளாமணி என்கிற நூலில் இதை பற்றி இருக்காது.அதை பார்த்து ஒப்பிக்கும் உனக்கு வேதசாஸ்திரத்தில் அறிவும் இல்லை.

      Delete
    13. வியாஸர் இயற்றிய புராணங்களுள் தாமஸபுராணங்களும் உள்ள என்று கூறியதற்கு தாமஸநூலை இயற்றிய வியாசரையும் அவர்தொகுத்த வேதங்களையும் வைணவர்கள் தாமஸம் என்றே கொள்ள வேண்டும். ஆகையால் வைணவர்கள் அவைதிகர்கள் என்று சொன்னது நீ; எனில் அவரே நாராயணரே பரபிரம்மம் என்று சத்தியம் செய்த போது பொய்சொன்னதால் அவர் கை விளங்காமல் போய்விட்டது என்று எழுதி வைத்துகொண்ட சைவர்களுக்கு எப்படி பொய்யரான வியாசர் வகுத்த வேதமும் புராணமும் பிரமாணமானது என்பதே கேள்வி.

      Delete
    14. சைவர்களுடைய அறிவின்மையை இப்பாடலே காட்டித்தரும்.இந்தபாடலில் எங்குமே சிவனைச்சொல்லவே இல்லை.
      'மாநிலம் சேவடியாக' என்று மூவுலகத்தையும் தன் அடியாள் அளந்த திருமாலே இவனென அப்பாடல் காட்டியதோடு இறுதியில் திகிரியான் என்று சக்கரத்தையுடைய திருமாலையே வேதமுதல்வன் என்று பாடிற்றே ஒழிய விஷ்ணுவுக்கு சக்கரம் கொடுத்தாக சைவர்கள் கூறும் சிவனை கூறவில்லையே..

      Delete
  7. சிவபுராண பிரஸ்தாபங்களனைத்தையும் வேதங்களே
    அங்கீகரித்திருக்கிறது.
    சிவபிரானுடைய திருவடிகளை அரிபிரமர்கள் தேடினர் என்பதை
    "யந் தாம் போருஹத்வந்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநாஸ"(பிரமனோடுகூட விஷ்ணுவினால் அவரது இருதிருவடித் தாமரைகளும் தேடப்படுகின்றன) என்று சரபோபநிடதம் கூறுகிறது.
    இதனால் சிவபுராணக் கதைகளனைத்தும் வேதத்திற்கு மாறுபாடானவை அல்ல என்பதால் அது கொளுளத்தக்கதேயாகும்

    ReplyDelete
    Replies
    1. மேலே காட்டியபடி சரப முதலிய உபநிஷத்துக்கள் சிவபரத்துவம் சாதிக்க எழுந்த எந்த பழமையான ஆச்சார்யர்களாலும் கையாளப்படவில்லை .ஆகவே இது பிற்கால புனைவே

      Delete
    2. இராமபிரான் 108 உபநிடதங்கள் உள்ளதாக அனுமனுக்குக் கூறியதை
      அறியாமல் பேசக்கூடாது.
      அதில் பஸ்மஜாபாலம்,பிருஹஜ்ஜாபாலம்,தோஜோபிந்து, ராமரஹஸ்யம்,
      முதலான உபநிடதஙாகள் உங்கள் ஆச்சாரியாரால் கையாளப்படவில்லை என்பதற்காக அதனை புனைவு என்று எப்படி சொல்ல முடியும்?

      அதில் சிவபரமான செய்திகள் சொல்லப்பட்டுள்ளது .அதற்கு நாணியே உங்கள் ராமானுசர் அதனைக் கையாளவில்லை.

      அவர் மகாபாரதத்தில்' மூலம் க்ருஷ்ணோ ப்ரஹ்மச ப்ராஹ்மணச்ச'
      என்பதற்கு தவறுதலாக மொழிபெயர்த்ததில் இருந்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதும் தேவையில்லாததை இயற்றியவர் என்பதும் தெரிகிறது.

      அவைதிகமான அதிசூர்ணத்தை அவர் அறிமுகப்படுத்துவதற்கு முன்
      வைணவர்கள் பஸ்மாதிதாரணராய் இருந்ததை உடையவர் சூர்ண விளக்கமே ஒப்புக்கொண்டுள்ளது.

      மகாபாரதத்தில் சைவர்கள் இடைச்செருகல் செய்தார்களா வைணவர்கள் இடைச்செருகல் செய்தார்களா என்பதற்கு இராமானுசரின் மொழிபெபர்ப்பே பதில் கூறும்

      Delete
    3. சிவபிரானின் அடிமுடியை அரிபிரமர்கள் தேடினர் என்பதை ருக் வேதம் கூறுகிறதே.

      ப்ரஹ்மாவை ஹம்ஸோபூத்வா சிரேந் வேஷ்டவ்ய: ஸஹஸ்ரம் ஸமா ஆஸந் ப்ரஹ்மா, அஹம் சிரோ ஜாநே, த்வமேவ மாதாஸி, த்வமேவ பிதாஸி, த்வமேவ ப்ராதாஸி, த்வமேவ த்ருஷ்டாஸி, ச்ரோதாஸி, கர்த்தாஸி, காரயிதாஸி, ஜ்யேஷ்டோஸி, ச்ரேஷ்டோஸி, ய ஏவம்வேதா, சிவஸாயுஜ்யமாப்நோதி சிவஸாயுஜ்ய மாப்நோதி' (பிரம்ஹாவானவர் ஹம்ஸரூபமாகிச் சிவனுடைய சிரசைத்தேடுகையில் ஆயிரம்வருஷம் ஆச்சுது. அப்போதுபிரம்ஹ தேவர்நான் தேவரீருடையசிரஸை அறியவில்லை, தாயும் நீர், தந்தையும் நீர், உடன் பிறந்தவரும் நீர், பார்க்கின்றவரும் நீர், கேட்கின்றவரும் நீர், கர்த்தாவாயுள்ளவரும் நீர், காரியங்களைச் செய்விக்கின்றவரும் நீர், மூத்தவரும் நீர், உயர்ந்தவரும் நீர் என்று துதித்தனர். இந்த வுண்மையை யாவன் அறிவானோ அவன் சிவஸாயுஜ்யத்தை யடைகிறான். சிவஸாயுஜ்யத்தை யடைகிறான்), 'விஷ்ணுர்வை வாராஹம் ரூபமாஸ்தாய பூமிந் விதாரயந் ஸஹஸ்ரம் ஸமா ஆஸந், பாதாந் வேஷண பரோபூத்வா, த்வமேவ மாதாஸி, த்வமேவ பிதாஸி, த்வமேவப்ரதஸி, த்வமேவ ஜ்யேஷ்டோஸி, த்வமேவச்ரேஷ்டோஸி, யஏவம் மஹிமாநம் வேதாத்ருஷ்டாபவதி, விஜ்ஞாதாபவதி, கர்த்தாபவதி, காரயிதாபவதி, யஏவம் வேதா, சிவஸாயுஜ்யமாப்நோதி சிவஸாயுஜ்ப மாப்நோதி' (விஷ்ணுவானவர் பன்றி வடிவமாகிப் பூமியைப் பிளந்து செல்லுகையில் ஆயிரம் வருஷம் ஆச்சுது. சிவனுடைய பாதத்தைத் தேடுவதில் விருப்பமுடையவராகிய விஷ்ணுவானவர் தாயும் நீர், தந்தையும் நீர், உடன்பிறந்தவரும் நீர், மூத்தவரும் நீர், உயர்ந்தவரும்நீர் என்று துதித்தனர். இந்த மகிமையை யாவனறிவானோ அவனே காண்கின்றவனாகிறான், அவனே அறிந்தவனாகிறான், அவனே கர்த்தாவாகிறான், அவனே காரியங்க்ளைச் செய்விக்கின்றவனாகிறான். இப்படி யாவனறிவானோ அவன் சிவஸாயுஜ்யத்தை யடைகிறான், சிவஸாயுஜ்யத்தை யடைகிறான்)

      இது ஒரு சான்றே போதும் சிவபுராணக் கதைகளனைத்தும் உண்மை என்பதும் அவை தாமஸங்களல்ல என்பதையும் வேதங்களே அதனை நிரூபித்துள்ளன

      இதனைப் போல நீங்கள் கற்பிதமாக இயற்றிய புராணங்களிலிருந்து வேதங்களில் ஸ்லோகமிருக்கிறதா? இருக்க நியாயமில்லை

      வேதங்கள் புராணக் கதைகளை குறிப்பாகவாவது சொல்லும். அப்படியும் உங்கள் அவைதிகக் கதைகளை வேதம் சொல்லவில்லை.

      இதில் சைவர்கள் இடைச்செருகல் செய்தார்களாம்.அவர்களுக்கு எதற்கு அந்த வீண் வேலை.
      இதனால் சரப உபநிடதம் பிற்காலப் புனைவல்ல என்பதற்கு ருக் வேமே சாட்சிய

      Delete
    4. முக்திகோபநிஷத்தும் கற்பனேயே என முன்னே காட்டியவிடத்து கண்டுகொள்க.
      இராமானுசர் கையாண்ட உபநிஷத்தே ப்ரமாணமென எங்கேயும் கூறோம்.அப்பையதீக்ஷதர்;ஹரதத்தர் முதலிய பண்டையசைவாசார்யார்கள் பலநூல்களை இயற்றி சிவபரம் சாதிக்க தத்தித் தடுமாறியதேனோ?.பக்த்யாநாம் விஷ்ணு ப்ரஸாத மகரோச்சிவ" முதலிய சரபோநிஷத்தை கொண்டே வைணவர்கள் வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காததென்னை? சரபக்கதை அடிமுடிகதை ;சக்கரதானம் முதலிய விருத்தாந்தங்களை நிர்ணயிக்க முயன்ற அவர்கள் எங்குமே இவ்வுபநிஷத்தை கையாளவில்லை ஆகையால் பஸ்மஜாபாலம்,பிருஹஜ்ஜாபாலம், தேஜபிந்து, ராமரஹஸ்யம்,சரபோநிஷத் முதலிய யாவும் நவீன கற்பிதேமே.

      குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
      மிகைநாடி மிக்க கொளல் என்ற வள்ளுவர் வாசகத்தை கண்பாராது ஈஸ்வரமூர்த்தியியற்றிய 'சுலோகபஞ்சக விஷயம்' என்கிற நூலை படித்துவிட்டு அதை அப்பிடியே இங்கு ஒப்பிப்பது ஹாஸ்யக்கதக்கது. ஏனெனில் மஹாபாரதத்தே உடையவர் மொழிபெயர்க்கவில்லை.கணபதி சாஸ்திரி;கிருஷ்சாஸ்திரி முதலிய சைவ வைணவ பண்டிதர்களால் மொழிபெயர்கப்பட்டு ம.வீ.இராமாமானுஜாசாரியாரால் 1918 ஆண்டுமுதலாக பதிக்கப்பட்டது அந்நூல்.

      உடையவர் சூர்ணவிளக்கம் என்றுமொரு அநாதை நூலைகொண்டு வைணவர்கள் பஸ்மதாரிகளாய் இருந்தென்பது விலவறசிரிக்கதக்கது.‌

      த்ருதோர்த்வ புண்டர பரமேஸிதாரம்
      நாராயணம் ஸாங்கயோகாதிகமயம்
      ஜ்ஞாதவா விமுசயேத நரஸ ஸம்ஸதை:
      ஸமஸாரபாஸைரிஹ சைவம் விஷ்ணும்..." என்கிற மஹோபநிஷத்தும் வராஹ;காத்யாயன முதலிய வைஷ்ணபரமாச்சார்யார்களால் பண்டு தொட்டு கையாளப்பட்ட உபநிஷதங்களும்
      "வேத ம்ருத்திகயை வார்யைச்யாமயா பீதயாபி வா ஊர்த்வபுண்ட்ரம் த்விஜை: கார்யம் வைஷ்ணவைச விசேஷத"எனும் நாரதீய முதலிய ஸாத்வீக புராண வசனங்களும் பராசரவிஷிஷ்ட பரமதர்ம ;பாரக்கவ; மரீசி ஆகிய தர்மசாஸ்திரங்களும் ஊர்த்தவபுண்டரத்தின் வைபவத்தை எடுத்தோதுங்கால் அதை அவைதீகமென்பது சைவர்களின் காழ்ப்புணர்வே.

      ஸ்ரீ ராமானுஜருக்கு பல நூறு ஆண்டுகள் முந்திய நம்மாழ்வாரின் "ஏறிய பித்தினோடு எல்லா வுலகும் கண்ணன் படைப்பென்னும் நீறு செவ்வே யிடக் கானில் நெடுமா லடியா ரென்றோடும்...”என்ற பாடலும் "சிந்துரமிலங்கத்தான் திருநெற்றிமேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும்‌....மற்றும் சிந்துரப்பொடிக்கொண்டு சென்னியப்பித் திருநாமமிட்டங் கோரிலையந்தன்னால்...முதலிய நம்மாழ்வார் பாடல்களால் இராமானுஜருக்கு முன் வைணவர்கள் பஸ்மதாரிகளாய் இருந்தார்களெனும் குதர்க்கவாதம் முடக்கப்படும்.

      இராமானுஜாசார்யார் மஹாபாரத்தை தவறாக மொழிபெயர்த்தாரென்பதற்கு ஆதாரமில்லை.மேலே அநுஸாஸனபர்வத்து இடைச்சொருகலுக்கு ஆதாரம் காட்டியாயிற்று .அவ்விதம் வைணவர்கள் இடைச்செருகினாரென்பதற்கு ஆதாரம் காட்டின் இது பற்றி வாதிக்கலாம்.


      சைவர்களின் குறுக்குப்புத்திக்கு இதுவே சான்றாம்.ருக்வேதத்தில் உள்ளது என்று ஏதோ சில ஸ்லோகங்களை கீறிவிட்டு அதில் சிவபரம் சாதிக்கமுயன்றுள்ளார் ஈஸ்வரமூர்த்திப்பிள்ளை.ருக் வேதத்தில் எந்த இடத்தில் அச்சுலோகம் உள்ளதோ? அப்பையதீக்ஷர் ;ஹரதத்தர்,ஸ்ரீகண்டர் முதலிய சைவச்சான்றோர்கட்கெல்லாம் புலப்பாடத அவ்வாக்கியம் ருக்வேதத்தில் ஈஸ்வரமூர்த்திக்கு கட்புலனானதென்ன விந்தை? இதுமட்டுமல்ல விஷ்ணுவை தாழ்வு படுத்தியெழுதிய தாமஸகதைகள் ஒன்றேனுங்கூட சதுர்வேதங்களிலோ உபநிஷத்துக்களிலோ சல்லடையிடினும் கிடைக்காது.ஆகவே பொய்யுமாயித்தனை.வைஷ்ணவ புராணங்களில் எம்பெருமானுடைய பரத்வமும் அவதார வைபவமுமே வேதத்தில் வெளி.ஆகையால் வைணவ புராணங்களே பரமஸாத்வீகமாம்.

      Delete
    5. அடிமுடி தேடிய சரிதைக்கு ஈஸ்வர மூர்த்தி எடுத்துக் காட்டிய ஸ்லோகம் கற்பனையானது அது அவருடைய கற்பனா சக்தியால் உருவானதென்று
      கூறுகிறீர்.

      சரி அப்படி அது அவரின் கற்பனையாய் இருக்குமானால் சைவசூளாமணி ஆசிரியரும் அதனை எடுத்துக் காட்டி உள்ளாரே.இருவருக்கும் ஒரே மாதிரியான கற்பனை உதிக்குமோ ?
      இதற்கு பதில் சொல்லும். இல்லையெனில் ஈஸ்வர மூர்த்தி அதனை அப்படியே சைவ சூளாமணி ஆசிரியரைப் பார்த்துக் காப்பி அடித்தார் என்று நீர் முன்பு கூறியதற்கு முரணாகக் கூறுவீர்.
      என்ன செய்வது? பித்தலாட்டம் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.

      ஆனால் பாஸ்கர ஸம்ஹிதை
      "ப்ரஹ்மா விஷ்ணுரஜஸாபத்தவைரௌதமத்யே தயோந்த்ருச்சயதி ஜாதவேதா: ஸ்தாணூ ருத்ரஸ்திஷ்டத் புவனஸ்ய கோப்தா1 த்ருஷ்ட்வா ஸ்தாணூ முபரம்ய யுத்தம் ப்ரதஸ்ததுர் தூரமஸௌதித்ருக்ஷு:1 வராஹௌ விஷ்ணுர்ணிம மஜ்ஜபூமௌ ப்ரஹ்மாத்பாத் பூமேர்த்தி வமாசுக் ருத்ர:"(பிரம விஷ்ணுக்கள் இராஜஸ மேலிட்டு சண்டையிடுகையில் இருவருக்கும் நடுவில் ஸ்ரீ ருத்ரபகவான் அக்னிஸ்தம்பமாகப் புவனங்களை இரஷிக்கும்படித் தோன்றினார்.அதைப் பார்த்த பிரம்மவிஷ்ணுக்கள் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு தூரமாய் விலகிவிட்டனர்.பின்பு விஷ்ணுவானவர் வராகருபமாகிப் பூமியிலிருந்து கீழே தேடிக் கொண்டு போனார்.ப்ரஹ்மாவானவர் பட்சியாகிப் பூமியிலிருந்து மேலே தேடிக் கொண்டு போனார்) என்று விளம்பியது.

      இதுவும் ஈஸ்வர மூர்த்தியாரின் கற்பனா சக்தி தானோ. ஆனால் சைவசூளாமணி ஆசிரியரும் இதை ஆண்டிருப்பதால் அதனையும் கற்பனை என்று கூறுவீரா?வேதங்களில் ஆதாரம் தேடினாலும் அதனையும் கற்பனை என மறுக்கும் நீங்கள் உண்மையில் அவைதிகர்கள் என்பதில் சம்சயமுண்டோ?


      பிரமனுக்கு பூசையும் கோவிலும் இல்லாமல் போனதும் தாழம்பூ சிவார்ச்சனைக்கு தகுதியில்லாமல் போனதும் இப்போதும் கண்கூடாகத் தெரிகிறதே.அப்படி இருக்க அதனைப் பொய் என்று எப்படி விளம்புவீர்?

      சிவதத்துவஞானத்தால் மார்க்கண்டேய முனிவர் சிரஞ்சீவித்துவமடைந்தார் என்பது வேத சம்மதமாகும். தக்ஷிணாமூர்த்தி உபநிடதமும் அதனை விளம்பும்.
      பாரதத்திலும் விஷ்ணுவுக்கும் மார்க்கண்டேயர் சிரஞ்சீவித்துவமடைந்ததற்கும் சம்பந்தமிருப்பதாகச் சொல்லவில்லை.

      சிவமுத்தி,சிவஞானம்,சிவானுபவம்,சிவானுபூதி ,சிவபோகம் ,சிவயோகம், போன்ற சொற்களைப் போல

      விஷ்ணுமுத்தி,விஷ்ணுஞானம்,
      விஷ்ணுஅனுபவம்,விஷ்ணு அனுபூதி,விஷ்ணுபோகம்,விஷ்ணுயோகம் போன்ற சொற்களை இதுவரை யாரும் கூறியதுமில்லை.

      முத்தி,ஞானம்,அனுபூதி,போகம்,
      யோகம் முதலானவை சிவசம்பந்தமானவையே.
      அந்த சொற்கள் சிவ என்னும் பதத்தோடு எவ்வளவு அழகாய்ப் பொருந்துகின்றன!!!

      இதிலிருந்தே சங்கரர் முதல்வர் என்பது நன்கு விளங்கும்.

      Delete
    6. நாராயணம் பரம் நாராயணம் ப்ரஹமம் என்பதைப் போன்று அன்னம் ப்ரஹ்மம்,ப்ருத்வி ப்ரம்மம், ப்ராணன் ப்ரஹ்மம் ,அஹம் ப்ரஹ்மம் ,போன்ற சுருதி வசனங்கள் கூறும்

      ஸ்தூலாருந்ததி நியாயமாக அவ்வாறு அனைத்தையும் பிரமம் எனக் கூறியது வேதம்.

      இதில் யோசிக்க வேண்டியது என்ன என்றால் மற்ற பொருள்களை எப்படி வேதம் வந்தித்ததோ அதனைப் போலவே கேசவனையும் அது வந்தித்தது.

      உண்மையில் மாதவன் பரம்பொருளென்றால் அவரை மற்ற பொருள்களைப் போல் வந்திக்காமல் சிறப்பாக வந்தித்து இருக்கும்.

      பிரமமே சிவமாகையால் அதனையும் பிரமத்தையும் பிரிக்காமல் பிரமம் என்றே நவிலும்.

      ப்ரஹ்மம் சிவம் என்று மற்ற பொருள்களைப் போல் சிவபிரானைச் சொல்லாமல் ப்ரஹ்மம் என்றே சுருதி கூறும்.

      இதற்காதாரம் பாரதம் ஆதி பருவம் முதலத்தியாயம் "மூலம் க்ருஷ்ணோ ப்ரஹ்மச ப்ராஹ்மணச்ச" என்னும் ஸ்லோகம்
      இதில் நடுநாயகமாக உள்ள ப்ரஹ்ம பதம் சிவபிரானையை சுட்டும் என்று சில ஆதாரங்களையும் காட்டினோம் சுலோக பஞ்சக விஷயத்திலிருந்து.

      மதுசூதனனையும் பிரமத்தையும் தனித்தனியாக அது கூறியதால் அவர் பிரமமல்ல என்பது பாரத சம்மதமாகும்.
      பாரதம் வேதத்திற்கு சமமானது என்பதால் அதற்கு எப்படிப் பொருள் கொண்டோமோ அதனைப் போலவே வேதங்களிலும் பொருள் கொள்ள வேண்டும்.

      நீங்கள் சிவபிரானை தாமஸி என நிந்திக்கிறீர்கள். அவர் தாமஸி எனில் சனகாதி முனிவர்களுக்கு யோக தக்ஷிணாமூர்த்தியாய் எழுந்தருளி ஆல நீழலில் கீழமர்ந்து அறம்,பொருளின்பம்,வீடு முதலான புருஷார்த்தங்களை எதற்கு உபதேசிக்க வேண்டும்? அவர்கள் சத்துவ விஷ்ணுவினிடமே சென்று அதைக் கேட்டிருக்கலாமே . அவர் இராமனுக்கும் குருமூர்த்தியாய் எழுந்தருளி சிவகீதை உபதேசம் செய்ததை பத்ம புராணம் விளம்புமே.

      கிருஷ்ணன் கீதை உபதேசித்த காலத்தும் அவர் தானே உபதேசம் செய்யாது சிவோகம் பாவனையில் நின்றே பல்குணனுக்கு உபதேசஞ்செய்தார்.
      "எல்லாம் வல்ல ஈஸ்வரனை வணங்கு அவரையே நானும் வணங்குகிறேன் என்னும் கிருஷ்ணர் வாக்கால் அது வெளி.

      பிரமதேவருக்கு இரண்டு குணமுமே ராசசம்,விஷ்ணுவிற்கு உள்ளே தமோ குணமும் வெளியே சத்துவ குணமும் உடையவர்,ருத்ரமூர்த்தியோ உள்ளே சத்துவ குணமும் வெளியே தமோ குணமும் உடையவர்.

      ஆனால் மூவரையும் கடந்த ஸ்படிக நிறத்தவராகிய சிவபிரானுக்கு இம்முக்குணங்களுமில்லை ஆதலாலேயே சுருதியால் நிர்க்குணர் என்றழைக்கப்பட்டார். இதனை உணராது கிருஷ்ணோபநிடதத்தை கற்பிதமெனக் கூறுவது வெறுங் கையில் முழம் போடுவது போன்றதாகும்.

      நீங்கள் விஷ்ணுவே சாத்துவகி எனக் கதறி
      அழுதமைக்கு
      சைவ சூளாமணி ஆசிரியர் நல்ல பதில் சொல்லியிருப்பார் அதில் கண்டு கொள்க.

      Delete
    7. இராமர் இராவணனை போர் தொடுத்தே அழித்திருக்கலாம்.அதற்கு சீதை கவரப்படவேண்டுமென்கின்ற அவசியமில்லை.
      சீதை கவரப்பட்ட காரணம் பிருந்தை என்னும் சலந்தரன் மனைவி இட்ட சாபமேயாகும். சாபமானது பரம்பொருளை ஒன்றும் செய்யாது.ஆனால் விஷ்ணு பலரிடமும் சாபம் பெற்றது புராணங்களில் பிரசித்தம்.

      புராணங்களை தாமஸம் என்று ஒதுக்கி தள்ளாமல் அதனையும் ஒருநிமிடம் யோசித்து அதில் என்ன தான் இருக்கிறது எதற்காக அதனை தாமஸமென்று கூறுகிறோம் ? என்று பகுத்தறிவோடு சிந்தித்துப்பார்க்க வேண்டும்.சிவபுராணங்களில் சிவதீக்ஷை,சிவபூசாவிதி,சிவ விரதங்கள்,மகாசிவராத்திரி மகிமை ,போன்றவைகள் பேசப்படுகின்றன.
      இவைகளெல்லாம் தாமஸம் தானா என்பதை நடுவுநிலையோடு யோசித்துப் பாருங்கள்.

      சிவாராதனையை விஷ்ணு முதலான தேவர்கள் செய்ததையும் பிரம்ம விஷ்ணுக்கள் அடிமுடி தேடியதும் ருக் வேதத்தில் இருப்பதைக் காட்டினோம்.ஆனால் நீங்கள் அதனையும் ஈஸ்வர மூர்த்தியின் கற்பனை எனக் கூறுவது உங்கள் மனச்சான்றுக்கு உறுத்தவில்லையா?
      வேதங்களில் யாரும் கற்பிதம் செய்ய முடியாது.நீர் உண்மையில் ருக்வேத மந்திரங்களை ஆராய்ச்சி செய்து பாரும்.எதனைப் பிராமணமாகக் காட்டினாலும் அவை அனைத்தும் கற்பனை புரட்டு என மறுத்தால் அது சரியான வாதமாகாது.


      ஆறுமுக நாவலர் அனைத்தையும் அப்படியே தான் பதிப்பித்தார். வில்லிபாரதப் பாடல்களில் சிவபரமான செய்திகளைத் திணித்தார் எனக் கூறுவது அபத்தமாகும்.அப்படியெனில் விஷ்ணுவின் பெருமையும் அதில் அப்படியே பதிப்பித்து இருக்கிறாரே.அதனை அவர் நீக்கவில்லையே. கிருஷ்ணன் தூதுச் சருக்கத்திலும் கிருஷ்ணன் பெருமையை அப்படியே பேசப்படுகிறதே.

      தாங்கள் கூறுகிறீர் மாயமானைப் பார்த்து மயங்கவில்லை என்றால் இராவணன் வதம் செய்யப்பட்டிருக்க மாட்டான் என்று. எந்த ஒருவனாவது தனது மனைவியை வேண்டுமென்றே மாற்றானிடம் ஒப்படைப்பானா தனது மனைவி ஆபத்திலிருக்கிறாள் என்பது தெரிந்தும் ஒருவன் அஜாக்கிரதையாக இருப்பானா? சாதாரண மனிதனிடத்திலேயே அப்படிப் பட்ட செய்கை இருக்காது. அப்படி இருக்க இராமனிடம் அது இருக்குமா? அவர் மாயமானைக் கண்டுமயங்காமல் இருந்திருந்தால் சென்றிருக்கவே மாட்டார்.நிற்க அவர் இந்திரசித் ஏவிய நாகாஸ்திரம் கண்டு மயங்கியது ஏன்? இதற்கு என்ன சமாதானம் சொல்ல போகிறீர்?இலட்சுமணன் எதற்கு பிரம்மாஸ்திரத்தால் மூர்ச்சையடைய வேண்டும்?

      பரசுராமனுக்கு தனது இன்னொரு அவதாரமே இராமன் என்பது கூடத் தெரியாமல் அவரோடு சண்டையிட்டார்.இவைகளை எல்லாம் லீலை எனில் நடுநிலைமை உடையோர் ஏற்றுக்கொள்ளார்.

      சிவபிரானுக்கு சிவதனுஸை முறிக்கும்போது மயக்கமேற்பட்டது எனக் கூறுவது கற்பிதமேயாம்.

      அருச்சுனனும் சிவதனுஸை முறித்தான் .அப்போது அவன் சிவதனுஸை மும்முறை வலம் வந்து பணிந்து பின் அதனை நாணேற்றினான்.அப்போது ஏன் சிவபிரானுக்கு மயக்கமேற்படவில்லை?

      சரி இருக்கட்டும் . சகல தேவர்களும் விபூதி ருத்ராக்ஷமணிபவர்களே என்பதை பஸ்ம மஹாத்மியம் ,சைவ பூஷண சந்திரிகை போன்ற நூல்கள் தெளிவாக எடுத்துரைக்கும்.அதனில் பல சான்றுகளும் காட்டப்பட்டுள்ளன.சிவலிங்கத்தின் பெருமையை நாராயணமே கூறுவதால் அதனைப் பற்றி இழிவாகப் பேச இடமில்லை.சிவபிரானின் இலிங்கம் அறுந்தது என்பதை சைவ சூளாமணி என்னும் நூல் மறுத்துள்ளது.அங்கு கண்டு கொள்க.

      ருத்ர ஹ்ருதய உபநிடதம் ஆண்பாலரெல்லாம் ஈசான சொரூபம் பெண்பாலரெல்லாம் பகவதியாகிய உமா சொரூபம் எனக் கூறும் .

      இன்னொரு விஷயம் பஸ்மம் மும்மூர்த்தி ஸ்வரூபம் திரிமூர்த்திகளுள் விஷ்ணுவும் அடங்குவர்.அதுமட்டுமின்றி ருத்ராக்ஷத்திலும் பன்னிரண்டு முக மணிக்கு அதிபதி விஷ்ணுவாகவே சொல்லப்படுகிறது. இவ்வாறு அனைத்திலும் விஷ்ணு துவேஷம் சிறிதுமின்றியே சைவம் இருக்கிறது.
      ஆனால் வைணவர்கள் அதனை மறுத்தும் தூஷித்தும் இருப்பது அவர்களின் தீவினைப் பயன் என்பதில் சந்தேக மில்லை.

      முக்கண்ணரின் புராணங்கள் மற்ற புராணங்களை விடவும் மிகச் சிறந்தது. அதனைப் படிப்போருக்கே அதன் மேன்மை புரியும்.

      விஷ்ணுவை மட்டுமா வேதம் பரமெனக் கூறுகிறது.அன்னம்,சூரிய மூர்த்தி,வாயு,இந்திரன்,பிரம்மா முதலானோரையும் பரம் என்று கூறுகிறதே அதனால் அதனை எப்படி நாம் ஏற்க முடியாதோ அதனைப் போலவே விஷ்ணுமூர்த்தி பரமென்பதையும் ஏற்க வியலா.

      ஸ்தூலாருந்ததி நியாயத்தால் அனைத்தையும் வேதம் வந்திக்கவே செய்வது உயிர்களின் பக்குவநிலை வேறுபாட்டால் . அது குற்றமல்ல.

      Delete
    8. சிவநாமங்களை விஷ்ணுவின் மேல் ஏற்றிக் கூறுவது தவறானது.சிவனெனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி எம்மான் என்னும் வாக்கால் அது விஷ்ணு நாமங்கள் என்பது அடிபட்டது.சிவபிரான் விஷ்ணு அருளால் யமவதை செயாதாரென்றும் விஷமருந்தினாரென்றும் திரிபுரமெரித்தார் என்றும் அவர் மயக்கமுடையவர் என்றும் நீங்கள் கூறுவதற்கு வேதப் பிராமணம் காட்ட முடியாததலிருந்தே அது பொய் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.அதிசூர்ணம்,மண் முதலான வற்றுக்கும் வேதப் பிராமணமில்லை ஆதலால் அதுவும் கற்பனை என்க.

      நாங்கள் காட்டும் உபநிடதங்கள் கற்பிதமென்றால் நீங்கள் கூறும் அதிசூர்ணத்திற்கும் மண்ணுக்கும் கூட தனியே உபநிடதங்கள் இருக்கவேண்டும் அதில்லை.

      பொய் பொய் என்று மறுப்பதனால் உண்மை ஒருகாலும் பொய்யாகாது.அதுமட்டுமின்றி அது பொய் எனில் நீங்கள் கூறும் அவைதிகக் கதைகளுக்கும் மண்ணுக்குமாவது உபநிடதங்கள் இருந்திருக்க வேண்டும் அது ஏன் இல்லை?

      வடகலை தென்கலையையும் தென்கலை வடகலையையும் அவைதிகம் என மறுப்பதிலிருந்தே அது பொய் என்பதை ஊகிக்கலாம்.

      Delete
    9. அவருடைய அச்சுலோகம் உண்மை எனின் ஏன் சைவ உலகம் போற்றும் பரமசைவாசார்யர்கள் வேதத்தில் இருப்பதாக தனது பரத்துவ நூல்களில் கூறவில்லை.காரணம் அதற்கு பின்னர் உருவான நூலே இது.

      பதிலை நீரே கூறிவிட்டீரே.மேற்காட்டிய ஸ்லோகம் சைவசமயசரபம் என்கிற நூலிலும் உள்ளது.அதை பார்த்து அப்படியே ஈஸ்வர் மூர்த்தி பிள்ளை காப்பி அடித்து கீறினன்.நீர் அதை இங்கு ஒப்பிக்கிறாய்.ஒரு பொய்யை பலதடவை சொன்னால் உண்மையாக்கி விடலாம் என்கிற மனோகற்பனையே இது.நீர் இவருடைய நூலை படித்து உளறுகிறாயே அன்றி சாஸ்திர அறிவு இல்லை.இருப்பின் வேதத்தில் எந்த சம்ஹிதை என்று குறிப்பிட்டு வாதத்தை நிறுத்த வக்கின்று வெறும் கையில் முழம் போட்டால் வேலைக்காது குழந்தாய்

      மறுபடி மறுபடி சைவர்கள் தலைகீழாக தண்ணி குடித்தாலும் அடிமுடிதேடிய விருத்தாந்தத்தை வேதத்திலிருப்பதாக காட்ட முடியாது.இப்போது கேள்வி அடிமுடிபுராணம் வேதத்தில் உள்ளதா என்பதே.அதற்கு வேதத்தில் இருந்து வரும் பாஷ்கல சம்ஹிதையிலிருந்து ப்ரமாணம் தரவேண்டுமே தவிற பாஸ்கர சம்ஹிதை எப்படி ப்ரமாணமாகும்? இராமானுசரை இராமானுஜாசார்யாராக நினைத்த மயக்கமே பாஸ்கர சம்ஹிதையே வேத்மென்றெண்ணி கலங்கினன் போலும்.

      நிற்க! சைவபூஜாவிதியில் தாழம்பூ மட்டுமன்றி இன்னும் பலபூக்கள் ஒதுக்கப்படுகின்றன.அதற்கென்ன சமாதானம்?ப்ரம்மனுக்கு கோவில் இல்லாமல் போனதும் சிவனுக்கு லிங்க பூஜையும் பிருகு முனி சாபத்தாலே என்று பரமசாத்வீக புராணம் கூறுகிறது.இதுவே உமக்கு பதில்.

      Delete
    10. தக்ஷிணாமூர்த்தி உபநிடதமும் சரபம் மாதிரி கற்பனையே.அன்றியும் அதில் சிரஞ்சீவிதுவம் பற்றி பேசுகிறதே ஒழிய மோக்ஷம் பற்றியில்லை.அவன் நாராயணபரத்துவத்தை அறிந்த மாத்திரம் மேலே பாரதத்தில் ப்ரஸித்தமென எடுத்துக்காட்டிய பின் அது மறுக்கவழியற்று இல்லை இல்லை இல்லை என்று சொன்னால் உண்மை இல்லாமல் ஆகிவிடுமோ?

      Delete
    11. இவையாவும் சைவர்கள் சொற்றொடர்கள் இதை வைணவர்கள் சொல்லவேண்டுமென்று கூறும் உம் அறிவை என்னவென்பது? 'தத் விஷ்ணோ பரமம் பதம்' என்பதே வைதிகம்

      மேலே பற்பல வேதவாக்யங்களில் முக்கண்ணன்‌ என்று ஸ்பஷ்டமாக சிவனுடைய பிறப்பு கூறப்பட்ட பின்பும் சைவர்கள் கம்புசுத்துவதற்கு வேத ஆதாரம் இல்லை.ஐயகோ! இதனால் தான் வெற்றுரை பேசித்திருகின்றனர் போலும்.
      'மூலம் க்ருஷ்ணோ ப்ரஹ்மச ப்ராஹ்மணச்ச' என்கிறதில் பரம்ம‌பதம் வேதத்தை சுட்டுமென்று ப்ரமாணத்தோடு எடுத்துக்காட்டியும் அச்சுலோகபஞ்சகத்தின் உளறல்களை மறுபடி மறுபடி கிளிபிள்ளை சொன்னால் அது உண்மையாகிவிடாது.

      Delete
    12. அது சைவபுராண கதை.சிவனுக்கு தாமஸ குணம் மேலோங்கி‌ இருப்பதால் அவனை தாமஸி என்கிறோம்.அன்றியும் அடிக்கடி எம்பிரானால் ப்ரஸாசிக்கப்பட்ட அவருக்கு கொஞ்சம் சாஸ்வீகமும் இருக்கலாம்.இதை கட்டுரையில் முதலிலேய..சங்கரர் கூட பகவத்கீதைக்கு பாஷ்யமிட்டனரே அன்றி சிவகீதைக்கல்ல.அதனால் அதற்கு எப்பெருமையும் அல்ல.மேலும் பத்மபுராண உத்தரகாண்டம் பிற்காலத்தில் எழுதப்பட்ட தாம் எனில் உத்தரகாண்ட சிவகீதை மட்டும் எப்படி ப்ரமாணமோ?

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. இராமாயணத்துக்கு வால்மீகி இட்டபெயரே 'ஸீதையின் மஹாசரித்திரம்'என்பதே அப்படியிருக்க அவர் சீதையை கடத்தாமலயே போர்தொடத்திருக்கலாம் என்ற புத்திஸ்வாதினம் இல்லாத பேச்சை என்னவென்பது? அப்படி நடந்திருந்தால் ஆரண்ய,சுந்தர, கிஷ்கிந்தா முதலிய காண்டங்கள் பிறந்திருக்காவே.இந்த ஜலந்தரா சூரவதம் என்பதே சைவதாமஸ கதை அன்றி வேறென்ன? வேதத்தில் விஷ்ணுவுக்கும் கூறப்பட்ட பரத்துவத்திற்கு முரணான‌ இக்கதைகள் வேதவிருத்தமே.

      Delete
    15. கலிலோகத்தில் தாமஸிகளே அதிகமானோர் இருப்பதனால் அவர்களுடைய தகுதிக்குந்த‌ இஷ்டதேவதா வழிபாடு உபதேசிக்கப்பட்டமை.அவர்கள் அதில் உய்வடைந்து எம்பிராணுடைய மார்கத்தில் வந்து பரமபதம் அடைகின்றனர்.சைவனான மார்கண்டேயரும் ,கொக்கட சோழனும் இதற்குதாரணங்கள்.

      Delete
    16. இப்படித்தான் கிறிஸ்தவர்களும் இயேசு பற்றி வேத்ததில் இருப்பதாக வாய்கூசாமல் பிதற்றி மந்திரங்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டனர்.
      பின் அதை ஆராய்ந்து உண்மை வெளியாயிற்று அதே பாணியில் பரத்வநிர்ணயஞ் செய்ய பண்டு‌பயன்படாத பற்பல வாக்யங்களை எழுதி அது வேத்ததிலிருப்பதாக கூற சைவர்களுக்கு நா கூசவில்லையா?
      வேதத்தில் இருப்பதாக கூறிய அறிஜீவரக்ள் அது எந்த ஸுக்தம் எந்த சம்ஹிதை/ எத்தனையாம் ஸூத்ரம்/மந்திரம் என்று எண்ணோடு கூற வக்கில்லை.இதிலிருந்தே இப்படி வேதத்திலிருப்பதாக கூறிவிட்டால் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்று குருட்டு நம்பிக்கை.

      Delete
    17. வில்லிபாரதம் வைணவர் இயற்றிய நூல் அதில் கிருஷ்ண‌பெருமையை நீக்கவேண்டுமானால் பாதிபாரதமே இருக்காது.அதற்கஞ்சி அவர் பதிப்பித்தார்.அவர் திரிக்க வில்லை ஆனால் திரிக்கப்படட்தை அவர் உணரவில்லை/ உணரவிரும்பவில்லை.
      அரக்க வேஷம் போட்டவன் அரக்கனாக நடிக்க வேண்டும் சிவன் வேஷம் போட்டனவன் சிவனாக நடிக்க‌வேண்டும்‌
      அதேபோல் மனிதவதாரம் எடுத்த இராமர் அவ்வாறு நடித்தார்.சைவநாயன்மார்களும் இதை ஏற்று சிவபக்த இராவணனை நிந்திக்கிறார்கள் அப்படி இருக்கு இந்த சைவவெறியாரகள் இராமனை கேவளபடுத்த கொச்சையாக பேசுவதால் இராமவைபத்தை குறைக்க‌ முடியாது.

      தேவாஸ்திரங்களுக்குரிய சக்தியை மதித்து அவர் அதுக்கு கண்டுண்டார் அன்றேல் தேவர்களின் வாக்கு பொய்யாகும்.ஆனால் சிவதனுஸை முறித்து சிவன் மயங்கமுற்றதை இராமாயணம் எடுத்தோத அதை கற்கால மந்தமதியர் பொய்யென்று உளறுவது சைவர்களின் குறுக்குபுத்தியை காட்டிற்று.

      அர்ஜுனன் மனுஷ்யனாகையால் சிவனுக்கு மயக்கமில்லை.இராமனோ சிவதறுசை முறித்து உடைத்த தேஜஸ்ஸை தாங்கமுடியாத சிவன் மயங்கிப்போய் மூர்ச்சை ஆனான்.
      வேதவேதாந்த புண்டர விசார தீபமென்கிற நூலில் அத்துனை சைவர்களுடைய பொய்யுரைகளுக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது அதை படித்தறிக.

      ருத்ரஹ்ருதய தக்ஷிணாமூர்த்தி சரபம் முதலிய பல உபநிஷ் அப்பையதீகஷதர் ஹரதத்த்ர் காலத்துக்கு பிற்பட்டவை.இதர பஸ்மவிருத்தாங்கள் எல்லாம் நாம் புராணத்தில் வருவதால் தள்ளதக்கனவே

      ஸூர்ய,வாயு முதலியவற்றின் பெருமை கூறப்படுகிறதே அன்றி அவர்களை‌ 'பரஹ்ம'சப்தத்தால கூறவில்லை.நாராயணரையே கூறிற்று.

      Delete
    18. பாரதத்துல் வரும் ப்ரஸித்த விஷ்ணுசஹஸ்ர நாமத்துக்கெதிரான அத்தேவராமும் அவைதிகமாய் போயிற்றே.இதிலிருந்தே நாயன்மார்கள் சாஸ்திர ஞாறங்குன்றியோர் என்று வெளிப்படும்.புராண விஷயங்களுக்கு வேதத்தில் ப்ரமாணங்கள் காட்டவேண்டுமெனும் அவஸ்மில்லை.அப்படி நினைத்தெழுதிய கற்பித உபநிஷத்தை சைவாச்சார்யார்களே தொடாததிலிருந்து அவை புனைவென்று நன்று விளங்கும்

      புண்டரங்களுக்கு தனியே உபநிடதம் இருக்கவேண்டுமென்று சட்டமில்லை.அப்படி குறுக்குப்பட்டைக்கு தனி உபநிடதம் இருப்பின் பஸ்மருத்ராக்ஷ வைபம் பேசிய ஹரதத்தரோ,அப்பயைரோ அதை காட்டியிருப்பார்கள்.

      உண்மை உண்மை என்று இல்லாதவற்றை‌பேசிவரும் பொய் மட்டும் உணமையாகிவிடுமோ? மேலே ஊர்தத்வ புண்ரத்திற்கு மஹோபநிஷத்திலிருந்தே ப்ரமாணம் காட்டி சைவபதடிகள் வாயில் மண் போடப்பட்டது.பங்காளிச்சண்டை அது.பாசுபத,வீரசைவ குழப்பங்களும் உள.

      Delete
    19. பிணச்சாம்பல் என்று திருநீற்றை நான் எங்கு அவமதித்தேன்.சிவன் காடுடைய சுடலை பூசி ஆடுகிறார் என்றுதான் சொன்னேன்.பிணசாம்பல் அமங்கலம் என்றேன்.சாஸ்திரமும் கூறிற்று.
      அது தாமஸமென சொல்லாமலேயே விளங்கும்.திருமூலர் சைவர்கள் அவருக்கு குறுக்குப்பட்டை பிரியமாக இருக்க அதை அவர் விநத்துரைப்பதில் ஆச்சர்யபடலாம். வைணவர்கள் 'திருமண் காப்பு' என்றே அழைப்பர். நிற்க! ஒளவை பாடலிலும் சைவர்கள் கைவரிசை‌ உண்டு.
      முதலில் நீறு என்பதற்க்கு திருநீறு என்பதுதான் பொருளென யார் கூறியது?.
      நீறு‌ என்பதற்கு பஸ்மம்,புழுதி,பொடி‌யாகிய பல
      பொருள் இருப்பதாகவே அகராதி சொல்கிறது.இது கூட புரியாத நீயெல்லாம் விவாதத்திற்கு வந்துவிட்டீர்.

      பொடி என்பதற்கு பல்பொருள் இருக்கிறபடி அதை சொல்ல ஆழ்வாருக்கு வாய் கூசவில்லை.ஆனால் விவரிக்க வந்த அண்ணங்கராச்சாரியாருக்கு அவ்விடம் கூசியிருக்கலாம்.இறுதியில் பஸ்மம் என்றும் எழுதினார் அப்படியிருக்க அவர் வஞ்சகரென்பது வீண்பழியே.
      பிண்சாம்பலை எந்த ஒரு வைதிக காரியத்திலும் உடலில் பூசிக்கொண்டு திங்கு திங்கு என ஆடச்சொல்லவில்லை. பிணச்சாம்பலான வைதிகம் மங்கலமென்றால் சைவர்கள் தனது ஆச்சாராயர்களுடைய பிணச்சாம்பலை பூசிக்கொள்ளட்டும். சாஸ்திரங்களை அஸ்தியை ஜலத்தில் கரைக்கசொல்லி உள்ளது. அதை தொடச்சொல்லவில்லை.

      திருநீற்றின் மகிமையை திரியககதிக்கு செல்வோர் கொண்டாட்டும். சைவர்களை போல வெறும்சொல்லில் முழம் போடமுடியாது.மேலே நான் காட்டிய ஏதாவது ஒரு விஷயத்தில் ஆதாரம் இல்லாமல் பேசினதை
      காட்டமுடியாது.ஆனால் நீர் உமக்கு சாஸ்திர அறிவில்லை இலக்கண அறிவில்லை என்று ஒப்புகொண்டு வெறும் copy/paste செய்கிறீர்.தூங்கிக் கொண்டுள்ளபோது செய்த திருட்டுதனத்தை முழித்துகொண்டபோது கண்டறிந்து கண்டித்தனர்.

      வாமனனை கங்காள மூர்த்தி கொன்றானென எழுதி வைத்த சைவபதடிகள் இப்படி எழுதி வைக்கவும் தட்டில்லை. அச்சு லோகம் வாமன புராணத்தில் எந்த காண்டம் எந்த ஸ்லோகம் என்பதையும் குறிப்பிட்டின் அர்த்த விசாரம் செய்யலாம். அவ்வாமனனுடைய பாததீர்த்தை சிவன் ஜடாமுடியில் தரித்கானென்பதும் புராண பிரஸித்தம்

      Delete
    20. லலிதா சஹஸ்ரநாமம் வேதவிருத்தம் என்பது மேலகாட்டிய ஸ்ரீ ஸூக்த வாக்யத்தில் வெளி.அதை மறுக்க வக்கற்ற நீர் லலிதாவை புகழும்‌ ஆனால் அது ப்ரமாணிக்கதக்கதன்று.எனில் அந்நடுநிலை உணக்குள்ளது என்றால் நீர் சைவன் அல்ல ஸ்மார்தன்.என்னை? இரண்டுமே சிவவிஷ்ணு ஐக்கிய வாதம் பேசும்.இது நாயன்மார்கள் வாக்கிற்கும் விரோதம் .ஆழ்வார்கள் வாக்கிற்கும் அநியாயம்.


      ஊர்த்தவாய நமஹ- என்று வருவது பரதேவதா நிர்ணயத்திற்கு எப்படி பொருந்தும்?. நாராயணப் பரோத்யாதா.என்று அங்கு ஸுசகமுமில்லை.இவை நாம்காட்டிய வேதவாக்கியங்கள் முன்‌நிறாகதென்க

      தாம் மூர்த்தியான அவன் எம்பிரானிடத்தே பக்திசெய்யும்போது ஊர்த்தவபுண்டரம் தனித்தும் மற்றநேரங்களிலும் பட்டையும் சாத்திகொள்கிறார்.காரணம்‌ பாத்மோத்தரங்கூறும்.பஸ்ம மஹாத்மியமும் தாமஸமாகையால் தாமஸிகளுக்கு அப்புண்டரம் பொருந்தும்

      Delete
    21. நீ கூறினாய் கங்காசலமானது சிவன் திருமுடியில் பட்டது அது விஷ்ணு பாதத் தீர்த்தம் என்றாய்.அப்படி எனில் ஹரியோ தனது அவதார காரியத்தின் போதும்; மூல மூர்த்தியான திருமாலாகவே இருக்கும்போதும் சாதாரண ஜலப்பெருக்கில் புரண்டவனாக இருந்தவர். ஆனால் வைணவர்களோ அவர்களது புரட்டு நூல்களில் யாதொரு பிரமாணமும் இல்லாது சிவபெருமான் தனது ஜடாமகுடத்தில் தாங்கியுள்ள கங்கைக்கு களங்கம் கற்பிக்க, அது நாராயணன் கால் அலம்பிய ஜலம் என்று பெருமை பட்டிருக்கின்றார்கள். பூர்வத்தில் இல்லாதவற்றை உத்தரபாடம் என்பதாக ஏதேதோ கிறுக்கி மனச்சமாதானம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். (இவ்வாறு இவர்கள் சொல்வதிலிருந்து, விஷ்ணுவின் உடலில் சிரசு எனும் உறுப்பு உயர்ந்தது என்றும்; அவரது பாதம் தாழ்ந்த உறுப்பென்றும் பொருள் ஏற்ப்பட்டுவிடுகிறது. இவ்வாறு உயர்வு தாழ்வான அங்கங்களை உடைய விஷ்ணுவினுடைய திருமேனி இலட்சணத்தை என்னென்பது?.)
      கங்கையைப் பற்றி பூர்வ நூலான பாரதமும், வாமன புராணமும் சொல்வது என்னவென்றால் பகீரதன் என்பவனது பித்ருக்களின் கடன் தீர கங்கையை பூமிக்கு வரவழைத்தபோது கங்கையானவள் மிகுந்த கர்வம் கொண்டு தன் வீறடக்க யாரிருக்கின்றார்கள் என்று மிகுந்த கர்வத்துடன் பிரவகித்துவர அவளுடைய கர்வமடக்க சிவபெருமான் தன் ஜடாமகுடத்தில் தாங்கிப் பின் பகீரதனின் வேண்டுதலுக்கு அவளை மூன்று சொட்டு மாத்திரம் பூமியில் விழச்செய்தார் என்றே வருகின்றது. பகீரதனின் பித்ருக்களின் நன்மைக்காக பூமிக்கு வரவழைக்கப்பட்ட இக்கங்கையானவள் திருமாலின் கால் அலம்பிய நீர் என்றால் அப்பகீரதன் திருமாலையே வணங்கிப் பணிந்து, 'கங்கையை வரவழைக்கப் போகிறான்?!!!
      தவிர, ஹிமவானின் மூத்த புதல்வியான குடிலை என்பவள் பிரும்ம லோகத்திற்கு (தாருகாசுரனின் வதைக்காக ஸ்கந்தன் அவதரிக்க) ஆயத்தமாக சென்று, தான் சிவவீர்யம் தாங்கும் சக்தியுள்ளவள் என்ற அவளது கர்வமடங்க, அந்த குடிலையின் அகம்பாவத்திற்கு மிகவும் கோபித்த பிரும்மா, அவளை தண்ணீர் உருவில் இருக்குமாறு சபித்ததும், பிறகு அவள் அவ்விதமே அநேக வருடங்கள் பிரும்ம லோகத்தில் இருந்தவிவரமும், பின் பகீரதனின் பித்ரு கார்யத்திற்காக ஹிமாச்சல மார்கமாக பூலோகம் வந்ததும், அவளின் வீறடக்க சிவபெருமான் தன் சடாமகுடத்தில் தாங்கிய வாமனபுராண வசனமும் (53வது அத்தியாயம்) உண்டு.
      இக்கங்கையின் மற்றொரு சரிதமும் உண்டு. அதாவது ஸ்ரீ பரமேச்வரரின் கண்களை உமை விளையாட்டாக பொத்திய போது அவர் லோகநன்மைக்காக தம் நெற்றிக்கண்ணைத் திறக்க, அதன் வெப்பம் தாங்காது இமயம் உருகிப் பெருகி மூன்று கிளை நதியாய் பிரவகித்து ஓடிற்று என்றும்; அதில் ஒன்று இந்த கங்கை என்பதும் புராணமே!
      இராமாயணத்தில், ஸ்ரீ விச்வாமித்திரர் இராம- இலட்சுமணர்களை அழைத்துக் கொண்டு செல்லும் போது வழியில் சரயு நதியைக் கடக்கும் போது, “ஓ! ராமா!! கைலாஸ மலையில் ப்ரும்ம தேவர் மனதால் ஒரு ஸரஸ்ஸை உண்டு பண்ணினார். அந்த ஸரஸ்ஸிலிருந்து பெருகிவரும் இந்த ஸரயூ நதியானது மிகுந்த புண்யத்தை அளிக்கக்கூடியது. ஸ்ரீ சிவபெருமானின் வாஸஸ்தலமான கைலாஸ கிரியில் இருந்து சரயூ நதியும், ஸ்ரீ பரமேச்வரரது ஜடாமகுடத்தில் இருந்து கங்கா நதியும் பெருகி வருவதால் அவைகள் மிக்க புண்ணியமானவையாகும். நீ இவ்விரு நதிகளையும் ஒருமைப்பட்ட மனதுடன் நமஸ்காரம் செய்!” என்று சொன்ன பகுதியும், ஸ்ரீ விச்வாமித்திரரது ஆணைக்கு இராம-இலக்குமணர்கள் அவ்விரு நதிகளுக்கும் நமஸ்காரம் செய்ததாகவும் வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. இவ்விதம் கங்கையின் மஹிமை உணர்ந்த இராமன் கங்கையை பணிந்த விவரம் பூர்வ இதிஹாசமான 'இராமாயணத்தில்' இருக்கிறபோது, பிற்பாடு இவ்வைணவர்கள் கங்கைக்கு களங்கம் கற்பிப்பதாக நினைத்துக் கொண்டு அதில் மூழ்கி நமஸ்காரம் செய்த இராம-இலட்சுமணர்களையும் இழிவுபடுத்தும் இவர்களது செய்கைக்கு இவர்கள் தேடும் ப்ராயச்சித்தம் என்ன?!. இவ்விதமான இவர்களது இழிசெயலுக்கு ப்ராயச்சித்தம் உண்டா?!!
      இச்சம்பவம் தவிர்த்து இராமாயணத்தில் கங்கையைப் பற்றி நிறைய இடத்திலும் அதன் புனிதத்தன்மை பற்றி வருகிறது. (ஓ இராமா! ஆகாயத்தில் இருந்து கங்கை கீழே விழும்போது மங்களகரமான ஸ்ரீ பரமசிவன் தலையில் அது விழுந்தது! - என்னும் பொருள் தரும் 'ஆகாசாதபதத்ராம சிவே சிவசிரஸ்யுத' வசனம் உள்ளது!) .




      Delete
    22. திரிவிக்கரம அவதாரதமெடுத்த காலத்து பிரமன் விஷ்ணுவின் திருவடிகளைக் கழுவினார். அப்படி அவர் கழுவிய நீரானது கீழே இருந்த விஷ்ணுவின் தலையிலோ இல்லை கீழே இருக்கும் மாவலியின் தலையிலும் தான் விழுந்திருக்கும் திருக்கைலாசத்தில் இருந்த சிவபிரானின் சிவபிரானின் தலையில் எப்படி விழும்?

      இவை தவிரவும், பாரதம்/அநுஸாசந பர்வம்/65வது அத்தியாயத்தில், அம்புப்படுக்கையில் இருந்த பீஷ்மரை ஜமதக்நி, அத்ரி, புலஸ்தியர், வியாஸர், காச்யபர், விச்வாமித்ரர், நாரதர் முதலிய பல மஹரிஷிகள் வந்து பார்த்துச் சென்றதும், அவர்களைப் பற்றின எண்ண அலைகளிலே அங்கு நிலவிய அத்தருணத்தில் ரிஷிகள், சித்தர்களுடைய மஹத்துவத்தை யுணர்ந்த பாண்டவ துரியோதனாதிகள் அவர்கள் அந்தர்த்தானம் ஆன பிற்பாடும் அம்மஹரிஷிகள் சென்ற திசையை நமஸ்கரித்த வண்ணம் இருந்ததையும், அதன் பிறகு தருமர் பீஷ்மரிடம், ‘எந்த தேசங்கள், எந்த கிராமங்கள், எந்த ஆச்ரமங்கள், எந்த மலைகள், எந்த நதிகள் புண்யமானவற்றுள் சிறந்தது?’ என்று கேட்கும் பகுதியில், ஒர் உஞ்சவ்ருத்தி பிராமணருக்கு ஒரு ஸித்தர் சொன்னதாக சொல்லியதாக பீஷ்மர் சொல்லுவதாக வரும் இப்பகுதியில்;

      “நதிகளில் சிறந்ததும், பகீரதனால் கொண்டுவரப்பட்டதுமான கங்கை நதி எவற்றின் வழியாகப் பெருகுகின்றதோ அந்த தேசங்களும், கிராமங்களும், அந்த ஆச்ரமங்களும், அந்த மக்களும் புண்ணியமான வற்றுள் சிறந்தவை”

      “ஒரு மனிதன் கங்கையை அடைந்து சம்பாதிக்கும் நற்கதியைத் தவத்தினாலும், பிரம்மச்சர்ய விரதத்தினாலும், யாகங்களாலும், தியாகங்களாலும் அடைய முடியாது”

      “எந்த மனிதர்களின் தேகங்கள் கங்கை நீர் மேலே பட்டவுடன் விடப்படுகிறதோ, அவர்களுக்கு முக்தி வருவதனால் மறுபடியும் தேகம் விடுவது சொல்லப் படவில்லை”

      “பாவமுள்ளவர்களும் கங்கை-யமுனைகளின் சங்கமத்தில் தேகங்களை விட்டாராயின் அதனால் பரிசுத்தர்களாகி முக்தி பெறுவர்.”

      “கங்கை இல்லாமற் போனால் உலகம், தர்மமும் ஞானமும் இல்லாத வர்ணாச் ரமங்கள் போலவும், ஸோமலதையில்லாத யாகம் போலவும் ஆகிவிடும்!. சூரியனில் லாத ஆகாயமும், மலைகளில்லாத பூமியும், காற்றில்லாத இடைவெளியும் எப்படியோ, அப்படியே கங்கையில்லாத தேசமும்-திசைகளும் ஆகும்!”

      “இவ்வுலகத்தில் நிலையும் (இருப்பும்), கவசமும் (பாதுகாப்பும்), ஆதரவுமற்றவர்கள் எவரோ, அவர்களுக்கு நிலையாகவும், கவசமாகவும், ஆதரவாகவும், ஸுகமாகவும் இருக்கிறது!”

      “கல்வியும் ஆச்சாரமுமில்லாமல் அயோக்கியர்களான ஈனமனிதர்களும் கங்கையை அடைந்தபின் பரிசுத்தர்களாகிறார்கள்!”

      “கங்கைக்கரையில் உண்டான மண்ணைச் சிரசில் வகிப்பவன், இருளைப் போக்கும் ஒளியுள்ள சூர்யனுடைய காந்தியை அடைகிறான்!”

      என்றும், மேலும் பலவிதமாகவும் அந்த ஸித்தர் உஞ்சவிருத்தி பிராமணருக்கு சொல்லும் பகுதியில் வருகிறது.

      (கடவுளை ஊர் ஊராக சென்று வணங்குவதாக பாரதத்தில் ஒரு இடத்திலும் வரவில்லை. ஊர் ஊராகச் சென்று தீர்த்த யாத்திரை செய்தே “புண்ணிய”த்தையும், “புண்ணிய உலகையும்” அடைந்தார்கள் என்றும்; மண்ணில் லிங்கம் செய்து வழிபட்டதாகவும்தான் கூறப்பட்டிருக்கிறது. பாரதத்தில் வைணவர்கள் கொண்டாடும் பலரும் கங்கையிலும், மற்றும் பல நதிதீரத்தில் குளித்து பேறு பெற்றவர்களே!. கங்கைக்கு மதிப்பில் குறைந்த மற்ற நதிகளின் பயன் மகத்தானதாக சொல்லப்பட்டிருக்கும்போது, இறைவனால் தன் ஜடாமகுடத்தில் தாங்கும் பேறுபெற்ற கங்கையின் மஹாமகத்துவம் பற்றி மேலும் விவரிக்க வேண்டியதில்லையல்லவா?

      Delete
    23. நான் ருக் வேத ஸ்லோகத்தை ஆதாரம் காட்டினேன். அவ்வாறு காட்டியபோது அது அவரின் கற்பனை என்று ஆராயாது கூறினாய்.அதற்காக அது உண்மை தானா என்று உறுதிப்படுத்த சைவசூளாமணி என்னும் நூலில் அச்சுலோகம் ருக்வேதத்தில் இருப்பதாகக் கூறியதைக் கண்டு உன்னிடம் இருவருக்கும் ஒரே மாதிரியான கற்பனை உண்டாகுமோ எனக் கேட்டேன்? ஈஸ்வர மூர்த்தி காப்பி அடித்தாரா அடிக்கவில்லையா என்பது எனக்குத் தெரியாது.
      சைவசூளாமணி வேறு சைவசமயசரபம் வேறு
      வாமனமூர்த்தி பஸ்மமணிந்ததை பிரம்மாண்டபுராணத்தில் இருந்து ஆதாரம் காட்டினேன் அதற்கு நீர் வாமன புராணத்தில் இருந்தால் தான் ஒத்துக் கொள்வேன் என்றீர்.
      அது உமது இஷ்டம். அதற்கு வாமன புராணத்தில் இருந்து தான் ஆதாரங் காட்ட வேண்டும் என்று என்ன அவசியம் வந்ததோ?

      நீ கூறினாய் பஸ்மத்தை பிணச்சாம்பலென்று .சைவர்கள் பிணத்தின் சாம்பலை அணியவேண்டியது தானே என்று எகத்தாளாமாக யோசிக்காமல் இகழ்ந்தாய்

      சிவபுராணங்கள் சிவபிரான் பஸ்மமணிந்ததை பின்வருமாறு கூறும்.
      அவர் பிரம்ம விஷ்ணு ருத்ரர் முதலான சகல தேவர்களையும் தகித்து அவர்கள் சாம்பலை பூசிக்கொண்டு அவர்களுடைய எழும்புகளை மாலையாக அணிந்து கொண்டு தான் ஒருவனே நித்தயப் பொருள் என்பதைக் காட்டுவார்.
      தேவாரம் அவைதிகமாம் அவர் காடுடைய சுடலை என்று உண்மையைத் தானே கூறினார்
      சைவர்களுக்கோ இல்லை மற்றவர்களுக்கோ பிணச் சாம்பல் தான் அணியவேண்டுமென்று கூறவில்லை.
      சுத்தபசுஞ்சாணத்தை
      ஹோமத்தில் இட்டு
      பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் சொல்லி மூலிகைக் கட்டைகளை போட்டு அவற்றினின்றும் கிடைத்த அக்கினி ஸ்வரூபமான திருநீற்றையே அணிய வேண்டும் என்று பஸ்மசாபாலம்,பிருஹஜ்ஜாபாலம் போன்ற வேதாபநிடதங்கள் கூறும்.

      சரி இவ்வளவு கூறுகிறாயே பஸ்மத்தை வேதங்கள் பிணச்சாம்பல் என்று எப்போது கூறியது?அதற்கு நீ ஆதாரம் காட்டு பார்ப்போம்.

      அத்யாத்ம ராமாயணம் பிராமண கோடிகளில் வராது என்று கதறி அழுதனை

      ஆதிகாவியமான வான்மீகிஇராமாயணமே பிராமணம் எனக் கொள்வையானால் அதன் வழிநூலான
      கம்பராமாயணத்தை நீ பிராமணமாகக் கொண்டது என்னை?

      முதல் நூலில் சொல்லாததை வழி நூல் சொன்னால் அது எப்படிக் குற்றமாகும்? வான்மீகம் முதல் நூல் அதன் வழிநூல்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று அத்யாத்மம்.

      விபூதி அணிந்ததைக் கூறியதால் அத்யாத்மத்தை அப்பிராமணமாகக் கொண்டாய் அல்லவா? அப்படி எனில் அதன் முதல் நூலான வான்மீகமும் இராமன் விபூதி அணிந்ததைக் கூறியதை ஆதாரமாக எடுத்துக் காட்டினேன். அப்போது வான்மீகத்தையும் பிராமணல்ல அது பிராமண கோடிகளில் வராது என்று சொல்ல உனக்கு துணிச்சல் இருக்கிறதா?

      அப்படிக் வான்மீகம் பிரமணமல்ல எனக் கூறுவாயானால் சிவதனுஸை இராமன் முரித்து சிவபிரானின் கர்வமடக்கினார் என்று நீ பிதற்றுவது இல்லாமல் போகுமே.

      அருச்சுனன் மனிதனாம் அதனால் அவன் சிவதனுஸை முரித்த போது சிவபிரான் மயங்கவில்லையாம்.

      அப்படிஎனில் இராமனும் மனிதன் தானே .மனிதனாகத் தானே விஷ்ணு தோன்றினார்.

      அருச்சுனன் இந்திரனின் அம்சமாகத் தோன்றினானே.அவன் மட்டும் மனிதனாகத் தோன்றிய உனக்கு விஷ்ணு அம்சமான இராமன் மட்டும் மனிதனாகத் தோன்றாதது வியப்பாக இருக்கிறது.

      அருச்சுனனும் தாயின் வயிற்றில் கருப்பமாக இருந்து தான் தோன்றினான் அதனைப் போலவே இராமனும் கோசலை வயிற்றில் தங்கினார்.அப்படி இருக்க அவன் மனிதன் இராமன்
      மனிதனல்ல என்று எப்படிக் கூறுவாய்?

      நீ கூறினாய் பிரமதேவனுக்கு கோவில்கள் இல்லாமல் போகுமாறு பிருகு சாபமளித்தார் என்று .
      இதற்கு நீ எதனை பிராமணகக் கொண்டாயோ தெரியவில்லை.? பிருகு முனிவர் கயிலையில் சென்று சிவபிரானைக் கண்டபோது அவரை வணங்காத காரணத்தால் அவரை தாமஸி என்றும் லிங்கமறுந்து கீழே விழட்டுமென்றும் பிரமதேவன் சிறிது மரியாதை காட்டியதால் அவரை ராஜஸி என்றும் கோவில்கள் இல்லாது போமாறும் சபித்தார் என்றும் விஷ்ணு அந்த முனிவரை வணங்கி உபசரித்து அவன் காலைத் தொட்டு வணங்கியதால் சாத்வகி என்றும் கூறியதாக ஒரு பரிகாசமான கதையைக் கட்டிவிட்டனர் மூடர்கள்.
      பிரம்மலோகத்தையும் சிவலோகத்தையும் வைகுண்டத்தையும் காணச் செல்லும் போது பிரமன்,சிவன்,விஷ்ணு ஆகிய மூவரும் உபசரித்து வரவேற்க வேண்டுமென்று ஏதாவது சம்பிரதாயம் இருக்கிறதா?

      கடவுளை உயிர்கள் வணங்கவேண்டுமா இல்லை உயிர்களை கடவுள் வணங்கவேண்டுமா? என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத விவஸ்தை கெட்டவன் எழுதிய கதை இது.இதன் விரிந்த கண்டனத்தை நடுநிலையார் சைவ சூளாமணி என்னும் நூலில் கண்டுகளிக்கலாம்

      தாழம்பூ சிவாரச்சனைக்கு ஏற்காது போகட்டும் என்று சிவபிரான் சபித்தார். அதற்கு முன் அது சிவபூசைக்கு உகந்ததாக இருந்தது. சிலபூக்கள் சிவார்ச்சனைக்கு தகுதி இல்லாமல் இருப்பது பற்றி நீ தாழம்பூவை சிவபிரான் சபித்ததைப் போல் அதனை ஏன் சபிக்கவில்லை என்று குதர்க்க வாதம் செய்தாய்.அது எப்படி பொருந்தும்?


      Delete
    24. பிரம்மன் கழுவிய எம்பிரானுடைய பாததீர்தத்தை சிவன் தன் ஜடாமுடியில் தரித்தனன் என்பது வாதம் அதை மறுக்க வழியில்லாமல் கங்கையின் புனிதம் பற்றி எழுதிவிட்டால் பதில் கூறிவிட்டதாகி விடுமோ? சிவன் இவ்விதம் ஸ்ரீ ஹரியின் பாததீர்தத்தை தாங்கினான் என்பது பாகவத ப்ரஸித்தம்.அப்படியிருக்க அது மஹாபாரத இராமாயண வாமன புராணத்தில் இல்லையாதலால் வைணவர் கற்பிதமென்பது விலவறசிரிக்கதக்கது.என்னை? நரசிம்ம வைபவங்கூறும் இப்பாரத ,புராணங்களில் சரப விருத்தாந்தம் இல்லை.சைவபுராணங்களிலுண்டு எனில் அவற்றையும் ஒதுக்கவிடவேண்டியதுதானே.விஷ்ணுவ் ஸ்ரீ பாததீர்த்தத்தை சிவன் தாங்கினன் என்பது எப்படி அந்நதிக்கிழிவு உண்டாக்குமோ?

      Delete
    25. இதிலிருந்தே உமக்கு சுய அறிவு இல்லையென்பது தெரிகிறது. சுலோக பஞ்சகம்,சைவ சரபம், சைவ சூளாமணி,சைவபூஷண சந்திரிகை இவற்றை படித்துவிட்டு அதை இங்கு ஒப்பிக்கமட்டுமே தெரியும் அதில் அவர்கள் உளறியவை வேதத்தில் உள்ளதா இல்லையா என்பது கூட உமக்கு தெரியாது.ஆக நீயெல்லாம் விவாதம் பன்ன வந்துவிட்டீர். அவை வேறாக இருந்தாலும் மூன்றும் ஒரே பொய்யை தான் மறுபடி மறுபடி கூறும் யாதெனில் ஊர்த்தவபுண்டரம் வேதத்தில் இல்லை,அடிமுடி தேடிய கதை வேதத்தில் உள்ளது.என்பது.பாவம் அது வேதத்தில் இருப்பதாக எழுத தெரிந்த அவர்களுக்கு எந்த இடமென்று காட்டதெரிவில்லை.காட்டினால் உண்மைபாடத்தை பார்த்து பொய்யென்று கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயம்தான்.

      சரி நீர் காட்டிய அச்சுலோகம் எந்த‌புராணத்தில் எந்த காண்டத்தில்| சம்ஹிதையில் எந்த அத்யாயத்தில் எத்தனையாவது ஸ்லோகத்தில் என காட்டினால் அதை பற்றி விசாரம் செய்யலாம். பஸ்மத்தை பிணச்சாம்பல் என்று‌நான் கூறியவில்லை.
      பிணச்சாம்பல் அமங்கலம் என்றே கூறினேன்.வேதவேதாதங்களில் சிவாதிகளின் பிறப்பும் எம்பிரானுடைய பரத்துவமுங் கூறப்பட்டிருக்க அப்பகவானுடைய எலும்பை சிவன் தரித்துகொண்டு ஆடுவார் முதலிய அநாசார கதைகளை சைவர்கள் கொண்டாடுவரே ஒழிய வேதவிருத்தமான அதை வைதிகர்கள் கைகொள்ளார்.

      பஸ்மம் பசுபதி விரதத்திற்கு அதர்வசிரஸ் உபனிஷத்தில் கூறப்பட்டதே அன்றி மோக்ஷ்சின்னமாக கூறவில்லை.இதர பொய்யாபநிஷதங்ளை பண்டைய சைவர்களே கைகொள்ளவில்லை.
      வைஷ்ணவ காரியங்களில் கூட யாகபஸ்மத்தை அணியக்கூறியுள்ளது.அதை மறுப்பாரில்லை.திரிபுண்டரம் திரியகலோகமான கைலைக்கும் ஊர்த்தவபுண்டரம் ஊர்த்தவ லோகமான வைகுண்டம் தத் விஷ்ணோ பரமம் பதம் என்று வேதத்தில் கூறப்பட்ட மோக்ஷஸ்தானத்தை தரும்.

      கம்பராமாயணத்தை நான் ப்ரமாணமாக கொண்டேனாம்.ஹா ஹா பொய் கூறினாலும் பொருந்தக்கூற வேண்டும்.மூல காவியத்துக்கு முரணாக கம்பராமாயணம் வருமிடத்து அதையும் தள்ளதக்கதே என்றுகூறினேன ஒழிய சைவர்கள் போல பிராமாணமாக புராண இதிகாசங்களை ப்ரமாணிக்கவில்லையே

      வால்மீகி ராமாயாண காவ்ய‌காலத்தில் வாழ்ந்த தபோநிஷ்டர் தன் ஞானத்தால் நடந்தவற்றை உணர்ந்து அதை படைத்தார்.அதற்கு‌ பின் வந்தவர்கள் அதை தழுவி தம் இஷ்டத்துக்கு எழுதினர்‌.ஆகவே அத்யாத்ம இராமாயணத்தை ப்ரமாணமாக கொண்டால் பொளத்த ஜைன முதலிய பலராமாயணங்களையும் ப்ரமாணமாக கொள்ளும் அபசாரமே நிகழும்

      வால்மீகியில் நீறணிந்ததாக ஆதாரம் காட்டினீரா? நீர் மேல் எழுதி காட்டினீர் போலும். இராமாயணத்தில் இருப்பதாக ஒரு ஸ்லோகம் வரைந்து.அதை வைணவர்கள் எடுத்து விட்டனர் என்று கதறினீர். சரி எந்த பழைய பதிப்பில் அவ்வாறு ஊள்ளது என்பதை காட்டும் ஒப்புகொள்கிறோம் என்றதற்கு பல்லை காட்டினீர்.இது ஒரு ஆதாரமாம். பாவம் இராமாயணம் படித்தால் தெரியும் ‌ சைவசூளாமணி படித்தால் இப்படிதான் இல்லாதது இருப்பதாகவும் சொல்லாததை சொன்னதாகவும் பசப்புவீர்.

      மனிதனாக பிறந்த இராமனை ருத்ராதி தேவர்கள் பணித்தார்கள் மேலும் ஜடாயு,சபரி மோக்ஷத்தில் அவருடைய பரத்துவமும் அறியலாம். தந்தை நாய் மனைவி சகோதரர்களோடு மனுஷ்யபாவனையில் நடந்தாரே ஒழிய அதனால் அவர் பர்ததுவமில்லாதாராகார்
      பரமாத்மாவான விஷ்ணுவுடைய அவதாரத்தையும் அர்ஜுனன் பிறப்பையும் ஒன்று படுத்தும் மந்தமதியை என்னவென்று சொல்ல. அன்றியும் இராமர் சிவதனுஸை முறித்து சிவனை மயக்கமுற செய்தார் என்பது வான்மீகம்.
      இப்போ என்ன சொல்வீர்‌.அதை‌ வைணவர்கள் கீறிவிட்டார்‌ என்பீரோ?

      தாம் வணங்கும் தெய்வத்துக்கு குறை சொல்லும் கதையை சைவர்கள் இப்படி மழுப்புவது அவர்கட்கியல்பே. ஆகையால் புராணப்ரஸித்தமான‌ இக்கதையை விவஸ்தை கெட்ட‌கதை என்று சொல்வதை தவிற வேதசாஸ்திரங்கள் வைத்து அதை மறுக்க தெரியவில்லை.
      சைவமும் வைதிகர் கொள் மதமோ? சைவ சூளாமணியின் பொய்மை‌ எல்லாம் இங்கு சூறையாடப்படுங்கால் அந்த பெயரை சொல்லி பயமுடுத்துவது போலாம்.செத்த பாம்பை கண்டு எவன் சிலிர்ப்பான்.

      Delete
    26. அடிமுடிக்கு வேதம் பிரமாணம் காட்ட வெகுண்டெழுந்த நீர் அப்பொய்மையை உடைத்தெறிந்த பின் செய்வதறியாமல் வாய்சொல்லில் வீரம் காட்டுகிறீர்
      தாழம்பூ பூசைக்குதவாதாம்.அதனால் அடிமுடி கதை உண்மை‌ என்றால் மற்ற பூக்கள் உதவாதே அதற்கென்ன கதை கட்டியுள்ளீர்கள் என்று கேட்பது நியாயமே

      Delete
    27. நீ கூறினாய் விஷ்ணுபாதத்தீர்த்த கங்காசலத்தை சடையில் சிவபிரான் தாங்கினார் என்பது பாகவதப் பிரசித்தம் என்று.சரி அது இருக்கட்டும் நான் பலவிடங்களிலும் கங்கை எப்படித் தோன்றியது என்பதை விளக்கி அதன் புனிதத்தையும் விளக்கினேன்.அதற்கு பல ஆதாரங்களையும் காட்டினேன் அதற்கு எதிராக நீ காட்டிய பாகவத புராணம் எரியும் நெருப்பில் பஞ்சு போன்ற நிலைமையை அடைந்தது

      அடிமுடி தேடிய கதையை சாதிக்க சக்தியற்றவன் என்றாய்

      நான் எதனை பிராமணமாகக் காட்டினாலும் பொய் என்று மறுத்தரைத்தாய் நடுவுநிலைமை தவறாத நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று கூறிய திருமூலரின் வாக்கிற்காவது உன்னிடம் மதிப்பிருக்கும் என்று நினைத்து அதனை ஆதாரமாகக் காட்டினேன். அப்போது அதனையும் நீ சங்கப்பாடல்களில் இல்லாததால் தள்ளத்தக்கவை என்று ஆராயாமல் கூறினாய்.

      சங்கப்பாடல்களில் சங்கரனின் பெருமை பேசப்பட்டதை ஆராயாமல் மதுசூதனனின் பெருமையை மட்டும் கொண்டாடி விஷ்ணுவே பரம் என்று தனக்கு அனூகூலமான பாடலை வைத்துக் கூத்தாடுவது எப்படிப் பொருந்தும்?

      பரிபாடல் ஒருவர் மட்டுமா இயற்றினார் பலரும் இயற்றினார்.அவற்றில் ஒருவர் இயற்றிய பாடலைக் கொண்டு நீ பரத்துவம் சாதிக்கப் புகுந்தது சிரிப்பை உண்டாக்கும்.

      "திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்

      தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
      வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

      செய்யபரி பாடற் றிறம்".

      பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன.
      பரிபாடலில் முருகனுக்கே அதிக பாடல்கள் கூறப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி நீ அடிமுடி தேடிய சரிதை சக்கர தானம் போன்றவை சங்ககாலத்தில் இல்லையென்றாய் அதனால் தள்ளத்தக்கவை என்றாய்

      அப்படி எனில் பிருகு பிரமனுக்கும் சிவனுக்கும் சாபமளித்ததையும் சிவன்
      விஷ்ணு பாத தீர்த்த கங்காசலத்தை தலையில்
      தரித்தார் என்றும் நீ கூறும் பொய்க்கதையையும் ஏன்
      சங்கபாடல்கள் கூறவில்லை?

      நீ கூறினாய் எனக்கு பிருகு சாப விருத்தாந்தம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்று.அதனை ஏற்கமுடியாமல் தடுமாறி விவஸ்தை கெட்டவன் கதை என்றேன் என்றும் கூறினாய்.

      பிருகுவை மும்மூர்த்திகளும் ஏன் வணங்கவேண்டும்.? அந்த பிருகு என்ன பரம்பொருளா? அவனை வணங்கி விஷ்ணு சாத்வகி எனப் பேர் பெற்றான் என்று கூறி விஷ்ணுவின் பெருமையைக் குலைத்தீர்கள். அவன் வரும்போது முறையே பிரம்மனும் விஷ்ணுவும் சங்கரனும் வாருங்கள் பிரபு வாருங்கள் என்று உபசரிக்கவேண்டுமோ?
      அப்படி எனில் இவ்வுலகத்தில் இருந்து செல்லும் உயிர்கள் பிரம்மவைகுண்டசிவலோகமடையும் போது பிருகுவைப் போல் அந்த உயிர்களுக்கும் மூவரும் வரவேற்று உபசரிக்க வேண்டுமோ?

      இப்படி அக்கதையை வைணவர்கள் கட்டி அழுது முறையே மும்மூர்த்திளுக்கும் நிந்தனை செய்து பாவத்தை சம்பாதித்துக் கொண்டதை இவ்வுலகம் நன்கறியும்

      பிரமனிடமிருந்து தான் அனைத்து முனிவர்களும் தோன்றினர் அவற்றுள் ஒருவனாகிய பிருகுவை பிரமன் வணங்கவேண்டுமோ? பிரமனே வணங்காத போது அவன் தந்தையாகிய விஷ்ணு வணங்கினார் என்று நீ கூறுவது எப்படிப் பொருந்தும்?

      முனிவர்களுக்கு எல்லாம் தலைவராகிய சிவபிரான் அந்த பிருகுவை எதற்கு வணங்கவேண்டும்.சிவபிரானுக்கு சடைமுடி இருத்தலானும் நாகத்தை
      பூணூலாக அணிந்த காரணத்தாலும் வேதங்களை உபதேசித்த காரணத்தாலும் அவரே முதல் இருஷியாவார்
      "விஸ்வாதிகோ ருத்ரமகரிஷி" என்று கூறியது வேதம்.

      இப்படி அக்கதையை நடுநிலையோடு ஆராயாமல் அக்கதையைக் கட்டி அழுகிறாய்

      சங்கப்பாடல்களில் சிவபிரானையும் முதல்வன் என்று கூறியுள்ளதை அறியாமல் போனாய்.

      "நீலமேனி வாலிழை பாகத்து
      ஒருவன் இருதாள் நிழற்கீழ்
      மூவகை உலகும் முகிழ்த்தன முறையே." என்று சிவபிரானை சாகாதவன் எனக் கூறியது.

      "ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
      வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
      நாக நாணா மலைவில் லாக
      மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
      மாதிரம் அழலவெய் " என்றது பரிபாடல் இவற்றில் சிவபிரான் விஷ்ணுவை வணங்கி திரிபுரமெரித்தார் என்று சொல்லாமல் சுயமாகவே திரிபுரமெரித்தார் என்றது

      Delete
    28. நான் ராமோதாசரித் சைவ என்பதற்கு தவறாக பொருள் கொண்டதற்கும்
      இராமானுசருக்கும் இராமானுச ஆச்சாரியாருக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றியதற்கு மன்னிக்கவும்

      கம்பராமாயணத்தை வைணவர்கள் பிராமணமாகக் கொண்டாடுவர் என்பதைக் கருத்தில் கொண்டு நீரும் அதனைப் பிராமணமாகக் கொள்வீர் என நினைத்தேன்
      அதற்கு மன்னிக்கவும்

      Delete
    29. நான் வான்மீகத்தில் வைணவர்களுக்கு இடையே பிரசித்தமான ஸ்லோகமான "க்ருதாபிஷேகஸ் ஸரராஜராமாஸ்
      ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷமணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநிவேச: " என்பதை எடுத்துக்காட்டினேன்.

      இதன் பொருள் பகவானும் ஈசனுமான உருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணுமூர்த்தியோடு விளங்கியதைப் போல இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார்

      இவற்றில் இராமன் சிவனைப் போல இருந்தார் எனக் கூறப்படுகிறது.
      அவர் சங்கரனைப் போல் இருக்கவேண்டுமாயின்
      திருநீறு ருத்ராக்ஷம் தரித்திருக்க வேண்டும்.
      இல்லையெனில் சிவபிரான் போலிருக்கமுடியாது.

      சிவன் போல் இருக்கவேண்டுமானால் அவருடைய அணிகலன்களையோ இல்லை கொன்றை மலரையோ ஏன் இராமன் தரிக்கவில்லை என்று நீ கேட்கலாம்.

      அதற்கு பதில் என்ன எனில் சிவபிரானுடைய அணிகலன்களையும் அவர் தரிக்கும் மான்,மழு முதலானவற்றை வேறு யாரும் தரிப்பதில்லை.அவர் அணியும் விபூதிருத்திராக்கத்தைத் தான் அனைவராலும் அணிய இயலும் அப்படி விபூதி ருத்திராக்கம் தரித்தவரை சிவமெனவே உபசரித்துக் கூறும் பஸ்மஜாபாலம்.அதனால் இராமன் சிவனைப் போல் இருந்தார் என்பதற்கு அவர் விபூதிருத்திராக்கம் தரித்தவர் என்றே பொருள் கொள்ளவேண்டும்

      ஆனால் ஸ்லோகத்தின் தாத்பர்யப் படி நீராடி சிவன் போல் விளங்கியதாக கூறினார் வான்மீகி. அப்படி எனில் அவர் நீராடி முடித்து சந்தியாவந்தம் செய்யும் காலத்து சைவாசாரத்தைக் கடைபிடித்து திருநீறணிந்தார்
      என்பதும் குறிப்பாகப் பெறப்பட்டது.

      இதனை கருத்தில் கொண்டு தான் அத்யாத்மமும் ஸவர்ணவர்ண ஜடாபாரம் என்று முதல் நூலான வான்மீகத்தை
      அனுசரித்துக் கூறியது.

      இதனைத் தான் உனக்கு நான் காட்டியதாகக் கூறினேன்.அதற்கு நீ நீர் மேல் எழுதினேன் என்றாய்

      முதல் நூல் கூறியதை வழிநூலும் கூறுமாயின் வழிநூல் இயற்றியதற்கு எந்தப் பயனுமில்லை.
      கருவை மாற்றாது சொல்லும் விதத்தை மாற்றி மற்றவர்களுக்கு முதல்நூல் கூறியதைத் தெளிவாக எடுத்துரைப்பதேற்கே வழிநூல் தோன்றியது.

      அகத்தியமே தமிழின் முதல் இலக்கண நூல். ஆயினும் அவை நமக்கு கிடைக்காமல் குறிப்பு மட்டுமே கிடைத்திருக்கிறது.
      அதுவே தமிழ் இலக்கணத்தின் முதல்நூல்.தொல்காப்பியம் அதன் வழிநூல் .முதல் நூலான அகத்தியம் மிகவும் விரிவாகக் கூறியதை தொல்காப்பியனார் சுருக்கமாகக் கூறினார்.

      அதற்காக நான் அகத்தியத்தை ஏற்றுக்கொள்வேன் தொல்காப்பியமும் அதன் வழிநூலான நன்னூலும் எனக்குத் தேவையில்லை எனக் கூறுவாயா?

      அத்யாத்மமும் தனது முதல் நூலை அனுசரித்தே இயற்றப்பட்டது.சொல்லும் முறையில் வேண்டுமானால் மாற்றம் நிகழலாம். அது தவறில்லை.கரு தான் மாறக்கூடாது.

      கம்பரும் சில இடங்களில் வான்மீகத்தோடு முரணும் பாடலை இயற்றியுள்ளார்.அதனை மறுக்கவில்லை. அப்போது அதனை விலக்கி வான்மீகத்தை ஆராய்வது சரிதான்.

      அதற்காக முதல்நூல் வான்மீகம் கூறியதை அனுசரித்து வழிநூலான அத்யாத்மமானது சொல்லும் விதத்தை மாற்றிக் கூறியுள்ளது.

      அதனால் நீ அத்யாத்மத்தை பிராமணகோடிகளில் வராது என்று எவ்வாறு கூறுவாய்?

      Delete
    30. பிருகு சாபவிருத்தாந்தம் பொய் என்பது உறுதியானது.
      அதனால் பிரமனுக்கு கோவில் இல்லாமல் போனதற்குக் காரணம் சிவபிரானின் சாபமே என்பது பெறப்பட்டது.தாழம்பூவிற்கும் அதே நிலைதான்.

      தாழம்பூவிற்கு சாபம் இருப்பதைப் போல் மற்ற பூக்களும் சிவார்ச்சனை இல்லாது போனதற்குக் காரணமென்ன எனக் கேட்டாய்?

      இவ்வுலகில் ஒவ்வொரு தெய்வதற்கும் ஒவ்வொன்று ஆகாது எனக் கூறப்பட்டுள்ளது.

      விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளை அட்சதையால் பூஜிப்பதும் தவறுதான். திருமகளுக்கு தும்பை மலர் விலக்கானது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உரியவை அல்ல.

      இதனைப் போலவே சிவபிரானுக்கு தாழம்பூ ஏன் கூடாது என்பதற்கு சிவபுராணங்கள் காரணம் கூறின.

      சிவாகமவிதிப்படி சிலபூக்கள் சிவபிரானுக்கு விலக்கப்பட்டது. அதில் தாழ்ம்பூ முற்காலத்தில் சிவார்ச்சனைக்கு உகந்ததாகக் கூறப்பட்டு பின் சங்கரன் சாபத்தால் அது சிவார்ச்சனைக்கு விலக்கப்பட்டது.

      எப்படி திருமாலுக்கு அட்சதையும் இலக்குமிக்கு தும்பையும் விலக்கானதோ அதனைப் போலவே மற்ற பூக்களும்
      சிவாரச்சனைக்கு விலக்கானது.

      இதனால் நீ செய்த குதர்க்க வாதம் அடிபட்டுப் போனது.
      லிங்கம் அறுந்து கீழே விழுந்த பொய்யும் அடிபட்டது.

      இவ்வுண்மையால் அடிமுடி தேடிய சரிதை உண்மை என்பதும் பெறப்பட்டது.
      அவைகளுக்கு ஆதாரமாகக் காட்டிய அனைத்தும் உண்மையே என்பதையும் ஊகித்தறியலாம்.

      Delete
    31. நீர் காட்டிய அப்பிரமாணங்கள் உண்மையே. அவை ஆகாய கங்கையின் தோற்றத்தை கூறியது.பாகவத புராணப்படி மாபலியின் திருப்பாத கட்டைவிரல் பட்டு அண்டகாரம் பிளவுண்டு கங்கை தோன்றியது.ஆகையால் இது முரண் என்பது நும் வாதம்.ஆனால் இவை கல்ப்ப பேதத்தால் நிகழ்ந்தவை. ஒரு கல்பத்தில் அவ்வாறு தோன்றிய நதி இன்னோர் கல்பத்தில் இவ்விதம் தோன்றியதென்பது கொள்ளல் கூடும். இம்மாதிரி புராணாங்களில் ஒரே விஷயம் கல்ப்ப பேதத்தால் வேறுபடுவது சகஜம்.

      சிவனுடைய நெற்றிக்கண் தீயினை வாயு பகவான் ஆற்றில் விட அது ஆறுதுண்டாகி ஆறுமுகன் பிறந்தான் என்றும் அவ்விடம் சரவணப்பொய்கை என்று சில புராணங்களும் நூறுதேவ ஆண்டுகள் சிவன் உமையை புணர்ந்து அவ்வீர்யத்தில் பிறந்தவன் ஸ்கந்தன் என்று மகாபாரத இராமாயண இன்னும் பல நூல்கள் கூறும். மேலும் சிவன் எமனை உதைத்து மார்கண்டேயருக்கு அருளிய இடம் காசிஸ்தலம் என்று ஸ்காந்தம் கூற சைவர்கள் திருக்கண்டியூரை காலசம்ஹாரஸ்தலம் என்கின்றனர்
      அதனால் அதிலொன்றை பொய் என்றண்ணலாமோ?

      நீர் காட்டிய பிராமணங்களுள் சில வேதங்களில் இல்லை என்றும் அப்படி இருப்பின் அது எந்த இடம் என்று காட்டும் என்று கேட்டேன்.ஆனால் வேத சாஸ்திர அறிவின்மையால் அதை காட்ட வக்கில்லாமல் நான் பொய்யென்று கூறிவிட்டேன் என்று அழுகிறாய். இயேசு பற்றி இந்து வேதங்கள் கூறுகின்றது என்று எழுதிய கிறிஸ்தவர்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

      திருமூலர் சைவர் என்பது உலகறிந்த உண்மை.அவர் சங்ககாலசான்றோர் என்றால் அதை ஏற்கலாம்‌ அன்றி மதாபிமானத்தால் தன் மதத்துக்கு சாதகமாக எழுதியதை பொதுப்ரமாணமாக வைக்கிறீர்.? பாலுக்கு காவல் பூனையா?

      Delete
    32. சங்கச் சான்றோர் வேதமுதல்வனாக‌ பரமான்மா இலக்கணத்தோடு பிரம்மன் ருத்ரனாகிய யாவரும் நாராயணனுக்கு மற்றும் அடக்கம் என்று காட்டி பாடிவைத்தனர். அக்காலத்தில் இவ்வைணவ சிந்தாந்தத்துக்கு
      எதிரம்பு கோர்த்தவர்கள் இல்லை.அப்படியிருந்திருந்தால்வேத புராணங்களிலிருந்து சிவனுடைய தாழ்வை சொல்லி எம்பிரானுடைய உயர்வை பாடியிருப்பர்.ஆகவே அதன் பிற்பட்டே சைவம் தலைத்தோங்கி சிவபரம் பேச அதற்கெதிராக ஆழ்வார்கள் பரந்தாமனுடைய பெருமையை எடுத்தியம்பினர்.

      பக்தனுடைய பக்திக்கு இறைவன் கட்டுப்படுவது பரமாத்மாவின் பரமகாருண்யம். சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட மாமிசத்தை சிவன் ஏற்றது கண்ணப்பனின் பக்திக்கே. பிறந்தவுயிர்கள் இறப்பது விதி.அதை மீறி பக்தனை காக்க கடமையைசெய்த காலனை உதைத்தது பக்திக்கு கட்டுப்பட்டே.

      'மாநிலஞ்சேவடியாக...வேத முதல்வ என்பே தீதற விளங்கிய திகிரியானே..' என்ற நற்றிணை சக்கரத்தானையே வேத முதல்வன் என்றது‌ . 'மா அயோ ! மறு பிறப்பறுக்கும் மாசு இல் சேவடி!..என்ன பரிபாடலும் மறுபிறப்பை அழித்து இப்பிறவியிலேயே முக்தியை தரும் வேத முதல்வன் மாயோனே என்று பாடிற்று.
      மேலும் சிவனும்,பிரம்மனும் தன்னுள் அட்க்கம் என்பதை ஸ்பஷ்டமாக ' 'ஐந்தலை உயிரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும்....' என்ற பரிபாடல் ஐந்தலையுடைய சிவனும் நீ என்று பாடிற்று‌. ஆகவே சிவனுக்கும் பிரம்மனும் சகல தேவர்களுக்கும் சர்வந்நர்மியான நாராயணனே படமென்று சங்கபாடலும் வைதிவைணவ கருத்தை கூறிற்று. இம்மாதிரி பெருமையை சங்க பாடல்களில் சிவனுக்கும் பாடவில்லை.முருகனுக்கும் பாடவில்லை.

      நீலமேனி வாலிழை பாகத்து 
      ஒருவன் இருதாள் நிழற்கீழ்
      மூவகை உலகும் முகிழ்த்தன முறையே...
      என்று சிவனுடைய மாதத்திற்கு கீழ் மூவுலகம் இருப்பதாக கூறியதே அன்றி திருமாலுக்கு கூரிய பரம்பொருள் தன்மை பற்றி கூறவேயில்லை..... ஆக அம்மூவுலகத்தையும் தம் காலடியால் அளந்து நின்ற பரந்தாமன் பரமசிவனை காட்டிலும் உயரந்தவனென்றே சங்கப்பாடல்கள் யாவும் கூறிற்று

      சைவர்களுடைய பசப்பு வேலையை பரிபாடல் நிர்மூலமாக்கியது.மேலே நீர் சிவன் தன் சிரிப்பாலேயே முப்புரத்தை எரித்தார் என்று சைவநூல்கள் கருத்தை கூறினீர்.ஆனால் ருத்ரன் தானே பசுபதியாகிற வரத்தை தேவர்களிடம் பெற்றானென்பது 'ஸோப்ரவீத் வரம்வ்ருணா அஹமேவ பஸூநாமதி பதிரஸாநீதி| தஸ்மாத் ருத்ர பஸூநா மதிபதி| ( இதைக்கேட்ட ருத்ரன்
      தேவர்களே! நான் உங்களிடம் ஒருவரத்தை கேட்கிறேன்.நானே பசுக்களுக்கு அதிபதியாக வேண்டும்" என்று உரைத்தனன்.தேவர்களும் அவ்வரத்தை அருளினர்.) என்னும் கிருஷ்ணயஜுர் வேதத்து (6:2) வாக்யத்தால் வெளி.

      'விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமிததேஜஸ| தஸ்மாத்தநுர்ஜ்யா ஸம்ஸர்க்கம்ஸ விஷேஹே மஹேஸ்வர||

      அளவற்ற தேஜஸ்ஸையுடையவரான பகவான் சிவனுக்கு விஷ்ணுவானவர் ஆத்மாவாயிருந்ததனாலேயே வில்லை நாணேற்றுவதை மஹேஸ்வரரான அவருக்கு பொறுக்கமுடிந்தது என்னும் கர்ணபர்வம் (35-50)

      இவையாவும் சிவபெருமான் அம்பை வைத்தே அசுரர்களை அழித்தார் என்பது 'ஓரழல் அம்பின் முளிய....' என்ற நீர் காட்டிய அதே வரியினாலும் வெளி.இதே பரிபாடல்

      '......பணிவில் சீர்ச்
      செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
      கல் உயர் வென்னி இமயவில் நாணாகித்
      தொல் புகழ் தந்தாரும் தாம்...

      என்று நாணாகித் தொல்புகழ் தந்தாரும் தாம் என்று ஸ்பஷ்டமாக விஷ்ணுவே சிவனுக்கு அந்தர்மியாய் இருந்து சிவனை திரிபுரம் எரிக்கசெய்து திரிபுராந்தகனென புகழ்தேடிக் கொடுத்தான் என்று கூறிற்றே.பாவம் இப்போது என்ன செய்ய போகிறாய்? பரிபாடலை வைணவர் மாற்றிவிட்டனர் என்று கூறுவீரோ.

      Delete
    33. க்ருதாபிஷேகஸ் ஸரராஜராமாஸ்
      ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷமணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநிவேச: " 

      என்பது வான்மீகத்துள் உள்ளதா என்பது கேள்விபடவில்லை.அந்த இடத்தை காட்டவும்.அப்படியே இருப்பினும் அவர்கள் சிவசின்னமணிந்து இருந்தாக பொருள் கொள்ளுதல் சைவர்களுடைய கற்பனைதிறனே. என்னை சிவனுடைய பாதி சரீரத்தில் உமை இருப்பதைபோல ராமனும் சீதையும் பார்த்தாபத்தினியாக விளங்கினர் என்று பொருளுகோடல் தகும். இச்சுலோகத்தை இங்குதான் காட்டினீர்.இதற்கு‌முன் காட்டவில்லை.

      அகத்தியத்தையும் தொல்காப்பியத்தையும் வைத்து மடக்கபார்கிறீர்.
      அகத்தியரின் மாணவரே
      தொல்காப்பியர்‌ என்பது மரபு.அதன்படிதான் தொல்காப்பியம் வழிநூலாக கருதப்படுகிறது. அப்படியிருக்க வால்மீகிக்கு மிகபிற்பட்டவரான இராமசர்மா எழுதிய அத்யாத்ம இராமாயணம் எப்படி வழிநூலாகும்‌‌ என்று விளங்கவில்லை.
      தனது ராமாயணத்தில் சகல ராம்சரிதத்தையும் அடக்கிய அவருக்கு வழிநூலே தேவையில்லை. மூல ராமாயணத்தில் சந்தேகமான இடங்கள் வருமிடத்து அதாயாத்ம இராமாயணத்தை கைகொள்ளலாம் என்றாலும்கூட அத்தேவைக்கு வான்மீகத்தில் இடமில்லை.

      அப்படி வழிநூல்‌ என்றால் ஏன் அத்யாத்ம இராமாயணம் மட்டும் ஏற்கவேண்டும்? கம்பராமாயணத்தையும் ஏற்கலாமா? சீதை இராமனின் தங்கை என்று கூறும் பொளத்த இராமாயணத்தையும்‌ வழிநூலாகிக்கொள்ள வேண்டிவருமே.
      அப்படி நூற்றுகணக்கான இராமாயணத்தை கைகொள்ள வேண்டிவரும். ஆகவே அத்யாத்ம இராமாயணம் ப்ரமாணக்கோடியில் வராது.எந்த பரமாச்சார்யார்களும் அதை தொட்டுக்கூட பார்க்கவில்லை.

      தும்பை மலர் இலக்குமிக்கு விலக்கானது என்று எந்த ப்ரமாணத்தை வைத்துகூறுகிறீர்?.அவ்வடிமுடி கதை தாமஸமாகையால் அநாதாரணியம்‌
      தாழம்பூவை வைத்து அதை உண்மை படுத்த என்னப்படுத்துவது சிறுபிள்ளை தனமன்றி வேறில்லை

      Delete
    34. மன்னிப்பு என்றால் இதற்கு மட்டுமல்ல.
      பலவற்றிற்கு மன்னிப்பு கேட்க வரும்.ஏனென்றால் சைவர்கள் எழுதிய நூலை படித்துவிட்டு பலவிடம் அனர்த்த வாதம் செய்தீர்.

      1.புராணத்திலிருந்து லலிதா சஹஸ்ர நாமத்தில் விஷ்ணு தேவியைத் தொழுவதாக காட்டினீர்.ஆனால் நான் வேத்திலிருந்து ஸ்ரீ ஸூக்தத்திலிருந்து திருமகளை தொழுதே சிவன் உயர்வடைந்தான் என்று காட்டினேன்.அதற்கு பதில் கூறவில்லை

      2.வேதத்தில் ஊர்த்தவபுண்டரம் இல்லை என்றீர்.மேலே சகல ஆச்சார்யர்களும் ஒப்புக்கொண்ட மஹோபனிஷத்திலிருந்தே ஊர்த்தவ புண்டரத்துக்கு ப்ரமாணம் காட்டினேன்.
      அதை மறுக்கவியலாமல் சொன்ன பொய்யையே பலதடவை சொன்னீர்.

      3.இராமானுஜருக்கு முன் வைணவர்களும் அவருடைய கடவுளான திருமாலும் பஸ்மமே தரித்தனர் என்றீர்.
      ஆனால் இராமானுஜருக்கு‌ முற்பட்ட ஆழ்வார் பாடல்களிலிருந்தே ஊர்த்தவபுண்டரத்துக்கு ஆதாரம் காட்டினேன்.அதன் பின் மொளனம் காத்தீர்

      4‌.பாஞ்சாராத்ர ஆகமத்தில் இராவணன் பார்வதியை அபகரித்தாள் என்று வைணவர்கள் எழுதிவைத்தனர் என்று அடாப்பழி சுமத்தினீர். எந்த இடத்தில் என்று காட்டச்சொன்னேன் காட்டவில்லை.

      5.லக்ஷமி சிவனை தவமியற்றி பாஞ்சாலியாக பிறந்து ஐவரை கணவனாக கொண்டாள் என்று எழுதினீர்.ஆனால் பாரதத்தில் நாளாயினியே சிவனை வேண்டி பாஞ்சாலியாக பிறந்தாள் என்று காட்டியபின் வாய்திறக்கவில்லை.

      6.கும்பகோண பதிப்பில் இராமானுஜாசார்யர் 'பரஹ்ம' பதத்தை தவறாக மொழிபெயர்த்தார் என்றும் அதற்கு பிரம்மம் என்று பொருள்.வேதமல்ல என்றீர். அதே பாரதத்தில் மூன்று இடத்தில் பிரம்ம சப்தம் வேதத்தை குறித்தாக காட்டினேன்.அதையும் மறுக்க முடியாமல் அதே வாதத்தை நாகூசாது மறுபடி சொன்னீர்.

      7. இராமயணத்திலும்,ஆழ்வார் பாடலிலும் பலபாடல்களை வைணவர்கள் பாதிப்பிலிருந்து நீக்கிவிட்டனர் என்று சொன்னீர்.சரி உங்களுக்கு எப்படி தெரியும் பழைய பதிப்பில் இவ்விதம் இருந்தால் அதை காட்டவும்.பதிலுறைக்க தயாராக உள்ளேன் என்றேன்.ஆதாரம் காட்டத்தெரியாத நீர் அமைதிகாத்தீர்.

      9.சிவதனுஸை முறித்து சிவனை மயக்கமடைய செய்தமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இராமாயணத்திலும் உள்ளது.ஆனால் அதை வாய்கூசாமல் பொய்யென்று வாதாடினீர்.

      10.மார்கண்டேயர் விஷயத்தில் மஹாபாரத்தை காட்டி அதில் சிவனே சிரஞ்சீவிதுவம் தந்ததாக சொன்னீர்.ஆனால் அதே மகாபாரத்ததில் ஜனார்தனனுடைய அருளே அவனுக்கு ஞாபகசக்தியையும் தன்னிஷ்டபடி மரணமும் சித்திக்க பெற்றது என்று அவன் வாயாலேயே கூறிய கூற்றிற்கும் திருமாலுடைய வயிற்றினுள் புகுந்து யாவையும் கண்டு இவனே சம்ஹார கர்த்தா என்று அவன் நிர்ணயித்தமையை எடுத்து காட்டினபின்னும் அடங்காமல் சொன்னதை சொன்னீர்.

      Delete
    35. 11.பாத்மபுராண உத்திர காண்டத்தில் சிவனுக்கு இழிவு சொல்வதால் அதை இராமனுஜர் திருந்தி விட்டார் என்று கூறினீர்.எனில் அந்த பாத்மபுராண உத்தரகாண்டத்தில் வரும் சிவகீதை மட்டும் எப்படி பிரமாணமானது‌ என்றேன் அதற்க்கும் பதிலில்லை.

      12. சிவனுடைய நாமத்தை விஷ்ணு மீது ஏறிட்டு கூறுவது தவறு என்று அடம்பிடித்தீர்.அப்படி எனில் நாராயண நாமத்தை மட்டும் சிவனுடைய நாமமாக அப்பயைதீக்ஷதர் முதலிய சைவர்கள் பலர் ( சைவசமய சரபத்தில் உண்டு) எழுதுவது மட்டும் எப்படி பொருந்தும் என்று கேட்டேன்.அதற்கு பதில் வரவில்லை.

      13.சிவலிங்கத்தை விஷ்ணு வணங்கியதாகவும், அடிமுடி தேடியதாகவும் வேதத்திலுள்ளதாக பச்சைப்பொய்யை கூறினீர்.எனில் அதை எந்த இடத்தில் என்று காட்டச்சொன்னேன்.அதை காட்டமுடியாமல் சிறுபிள்ளை போல நான் சொல்வதை எல்லாம் பொய் என்கிறாயென சிறுபிள்ளைதனம் செய்தீர்.

      14.சிவன் தானே சிரிப்பால் முப்புரம் எரித்தாரென்று கர்ணபர்வம் கூறுவதாக கூறினீர். ஆனால் வேதத்திலும் மகாபாரதத்திலும் சாத்வீகபுராணங்களிலும் சங்கபாடலிலும் திருமாலாலேயே இது சாத்யமானது என்று பிரமாணம் காட்டியும் அதை ஏற்க‌மனமில்லாது மறுக்கவும் முடியாது சொன்னதையே சொல்லிக்கொண்டுள்ளீர்.

      15.உபநிடதங்கள் 108 என்றீர்.எந்த பண்டைய ஆச்சார்யர்களும் உபநிஷத் 108 என்று நிர்ணயித்துள்ளாரா என்ற கேள்விக்கும் 108உபநிஷத்தும் பிரமாணமெனில் கோபாலதாபினியும் பிரமாணம் அன்றோ? சிவன் மோகம் நீங்கபெறாதவனாய் கோபலமந்திரத்தை உச்சரித்து விஷ்ணுவை துதித்தான் என்பதை ஏற்கிறீரா என்று கேட்டேன்.அதற்கும் பதில் கூறமுடியவில்லை.

      16. நரசிம்மதாபினியில் ஒருபதம் சிவனை குறிக்கும் எனவே அவனே ஓங்கார உட்பொருள் என்றீர். அதே உபநிஷத் ஓங்காரவாச்யன் நாராயணனே என்று தெளிவாக கூறியது என்று ப்ரமாணத்தோடு கூறியதை மறுக்க முடியாமல் மொளனம் சாதித்தீர்.

      17. பகவத்கீதை சிவஹொம்பாவன யோகத்தில் கிருஷ்ணர் சொன்னாராம் அதனால் அது சிவபரமாம்.எனில் ஏன் சைவசாஸ்திரமான சிவஞானசித்தியார் பகவத்கீதையை கொலைநூல் என வஞ்சித்தது என்று கேட்டதுக்கும் பதிலுறைக்க முடியவில்லை.

      18.பிரம்மன் வைசியன் என்றோர் குண்டை போட்டீர்.எனில் அவருடைய புத்திர வழியில் வந்த இராவணன் எப்படி பிராமணன் ஆனான் ,அவனைக்கொன்ற இராமருக்கு பிரம்மஹத்தி பீடிக்கும் என்று. கேட்டேன் அதற்கும் பயந்து பதில் வரவில்லை.

      19.அனந்தபத்மஸ்வாமி அஷ்டோத்திரம் என்று ஒன்றை காட்டி அதில் சிவலிங்கபிரதிஷ்டையை உண்மையாக்க பார்த்தீர்.சரி.அது எப்புராணத்தில் எக்காணடத்திலுள்ளது என்று கேட்டேன்.ஹும்....ஹும்.

      20.விஷ்ணுபக்தர்களை யமன் தீண்டமாட்டான் என்றும் யமன் இந்திராதி தேவதைகள் யாவரும் விஷ்ணுவால் படைக்கப்பட்டவர்கள் என்று சாஸ்திராதிகளில் கூறிவைக்க யமசமையில் இராமலக்ஷமணர்கள் அவனை வணங்கியதால் விஷ்ணு யமனைக்காட்டிலும் கீழானவன் என்று கொச்சையாய் கூறினீர்.

      21.தேவிபாகதம் தான் புராணமாம் கிருஷ்ணபாகவதம் பொய்யாம்.இந்தகருத்துக்கும் ஆதாரம் காட்டவில்லை

      22.இராமானுஜர் உபநிஷத்துக்கு தவறான அர்த்தம் கற்பித்தாரென்று வீண்பழி சொன்னதற்கும் உன்னிடமிருந்து ஆதாரம் வரவில்லை.


      இப்படி இதுவரை நடந்த சம்வாதங்கள் ஒன்றில் கூட பதிலுறைக்கமுடியாதும் பெரியோர் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பொய்யை பேசிபேசி‌‌ உண்மையாக்கவிடலாம் என்ற கற்பனையில் ஆதாரமில்லாமல் வெறும் கையில் முழம்போடுகிறீர். இந்த கேள்விகளுக்கு எல்லாம் உமக்கு பதிலுறைக்கும் திறம் வேண்டுமென்றால் உங்கள் சைவாச்சார்யார்கள் எழுதிய நூலை படித்தால் போதாது.வேதசாஸ்திரத்தை ஒன்றுக்கு பலமுறை படித்துவிட்டு‌ உம்சைவாச்சார்யார்களின் வாக்கு உண்மையா என்று சரிபார்த்துவிட்டு விவாதிக்க வரவேண்டும்.அதைவிட்டு தலைகணம் மிகுந்து சரக்கிலலாமல் பேசிதிரிந்தால் நேரவிரயமே.

      ( உமக்கு 19 வயது என்று கூறினீர். உன்னைவிட ஒரு வயது பெரியவன்‌ என்கிற முறையில் இதை சொல்கிறேன்.ஒருவேளை நான் இவ்விவாதத்தில் தோற்றுவிட்டேன் என்று ஒப்புக்கொண்டால் நீர் இந்தவிவாதத்தை முடித்துவிட்டு உண்மையான சாஸ்திர ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் இரங்குவாய் என்றால் சொல்.நான் தோற்றுவிட்டேன் என்று ஒத்துக்கொள்கிறேன். எம்பிரான் தன்னுடைய பக்தனான குசேலனுக்கே பாதசேவை செய்தவன்.அப்படியிருக்க நான் தோற்றுவிட்டேன் என்று சொன்னால் எனக்கோ என் அப்பன் நாராயணருக்கோ குறைவு ஏற்படாது)

      Delete
    36. அண்ணங்கராசாரியார் செய்த தவறை நியாயப்படுத்துவது போன்று இராமனுஜ ஆச்சாரியர் செய்த தவறான மொழிபெயர்ப்பை நியாயப் படுத்தும் முயற்சி பலிக்காது என்பதை விளக்குறேன்.

      நீ ப்ரஹ்ம பதத்திற்கு வேதமென மொழிபெயர்க்கப்பட்டது சரி என்றாய்.பிரம்ம பதம்
      சேதனமான வஸ்து. வேதமோ அசேதன வஸ்துவாகும். அதனை எப்படி வேதமென்று அசேதன வஸ்துவாக மொழிபெயர்க்கலாம்.?

      பாரதம் கிருஷ்ணனை பரமாத்மா எனக் கூறியதாகக் கூறினாய்.
      அப்படிக் கூறிய பாரதம் பிரம பதத்தையும் கிருஷ்ணனையும் தனித்தனியாகக் கூறியது ஏன்?

      நீ கூறினாய் வேதம் பிரம்மதிற்கு சமமான ஒன்று என்று.

      பிரம்மம் எது என்று விளக்கவந்ததே வேதமாகும். அப்படி விளக்க வந்த வேதம் தன்னைத் தானே பிரமம் என்று ஏன் கூறாமல் போனது?

      "தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றலரிது" என்றார் திருவள்ளுவர்.

      பிரமத்திற்கு உவமானமாகவோ அதற்கு சமமாகவோ எதனையும் கூற முடியாது.

      நீ பிரமத்திற்கு சமமான இடம் என்று ஒன்று இருப்பதாகக் கூறினாய்.அவ்விடத்தை வேதம் அளிக்கும் என்றும் கூறினாய்
      பிரமத்திற்கு சமமான இடம் எது என்பதைக் கூறாமல் விட்டாய்

      வேதங்கள் அசேதனமானது.அது தானாகவே எந்தப் பயனையும் கொடுக்காது.அதனை உள்நின்று இயக்குபவன் ஒருவன் இருக்க வேண்டும்.அவனே அதனைப் படைத்தவனாவான்.

      சோமுகாசுரன் வேதங்களைத் திருடிக் கொண்டுபோய் கடலினுள் மறைத்துவைத்தான்.அதனை திருமால் மச்சவுருக் கொண்டு மீட்டார்.இப்படி அசுரன் மறைத்துவைத்தபோது தன்னைத் தானே விடுவிக்காமல் வேதம் அப்படியே இருந்தது .அவ்வாறு இருந்த காலத்தில் பிரமனால் சிருஷ்டியும் செய்யமுடியவில்லை.உலகில் அறமும் இல்லாமல் போனது.

      இப்படி அந்த அசுரனால் சிறைவைக்கபட்ட வேதம் பிரமத்திற்கு சமமானது என்று உனது கூற்று எப்படிப் பொருந்தும்.?

      பிரமம் என்று வேதம் தன்னிலும் வேறுபட்ட ஒருபொருளையே கூறியது.

      வேதமே பிரமம் என்றால் நீயும் உனது ஆச்சாரியாரும் திருமாலை பிரமமாக் கொண்டது என்னை?

      வேதத்தை தந்தவன் என்று நீயே ஒப்புக் கொண்டபோது அவ்வாறு தந்தவன் யார் அவன் தான் பிரமம் என்று அறியாமல் அந்த வேதமே பிரமமென்று நீ கூறுவது பொருந்தாது.

      அவ்விடத்தில் கிருஷ்ணபதம் ஒருவேளை இல்லாமலிருந்து பிரம்மபதம் மட்டும் இருந்து கிருஷ்ணபதத்திற்கு வேறாக வேறு யாரையாவது சொல்லி இருந்தால் நீ அந்த பிரம்ம பதத்திற்கு கிருஷ்ணன் என்றே மொழிபெயர்த்திருப்பாய்.

      ஒருவேளை மூலம் க்ருஷ்ணோ பிரஹ்மச ப்ராஹமணச்ச என்பதில் உனது ஆச்சாரியார் க்ருஷ்ண பதம் இல்லாமல் அதற்கு பதில் வேறு சொல் இருந்திருந்தால் அப்போதும் பிரம பதத்திற்கு வேதம் என்று தான் மொழிப்பெயர்த்திருப்பாரா?

      அப்போது பல்லைக் காட்டிக் கொண்டு நீ பிரம பதம் வேதத்திற்கே உரியது எனக் கூறாமல் கிருஷ்ணணனுக்கே உரியது என்று கொண்டாடிஇருப்பாய்.

      அதற்கு பாரதம் இசையவில்லையென்பதால் பிரம பதம் சிவபிரானைச் சுட்டும் என்னும் உண்மையை மறைத்து உனது ஆச்சாரியார் வேதம் என்று வஞ்சகமாக மொழிபெயர்த்தார்.

      பிரமமே தருமத்தின் ஆணிவேர்.
      சிவபிரானைத் தாங்கும் ஊர்தி தருமமே வடிவமானது.அவர் மனைவி சங்கரி காஞ்சிபுரத்தில் 32 அறங்களையும் வளர்த்து தர்மசம்வர்த்தினி என்று புகழப் பட்டாள்.

      இவாவாறிருக்க அந்த பிரம பதம் சிவபிரானைச் சுட்டாமல் வேறு யாரைச் சுட்டும்?





      Delete
    37. பரமாத்மா இலக்கணம் கிருஷ்ணணனுக்கு உரியது எனக் கூறினாய்.

      பரமாத்மா இலக்கணம் என்ன எனில் பிறவாமையே ஆகும்.
      கிருஷ்ணனும் இராமனும் பிறந்தனர்.
      பந்தபாசங்களில் உழன்றனர். மீண்டும் யமன் அவர்கள் உயிரை சரயு நதியிலும் கிருஷ்ணன் உயிரை வேடன் மூலமாகவும் பறித்தான்.

      கிருஷ்ணன் பந்தபாசங்களில் உழன்றார் என்பதற்கு மாயாவசுதேவன் கொல்லப்பட்ட போது மூர்ச்சையானதும்
      பாண்டவர்கள் அடைந்த துயரத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் அழுததுமே சாட்சியாகும்

      பாரதம் வனபர்வம் 110 ஆவது அத்தியாயம் "பலராமரும் ஜனார்த்தனரும் பாண்டு புத்திரர்களைப் பார்த்தும்....திரௌபதியைப் பார்த்தும் மிக்க துயரமுற்றவர்களாகத் துன்பக் குரல்களை வெயிட்டுக் கொண்டு அழுதனர் என்று கூறியது.

      அந்த கிருஷ்ணன் இறந்தகாலத்தில் அருச்சுனன் அவன் உடலுக்கு தீ மூட்டி ஈமக் கிரியை செய்தான்.

      பிறப்பு,இறப்பு ஈமச்சடங்கு,மயக்கம்,பந்தபாசங்கள்,முதலானவை
      பரமாத்மா இலக்கணம் என்று நீ எப்படிக் கூறுவாய்?

      சாதாரண மனிதருக்கும் அவை இருக்கிறதே.

      அந்த இராமனும் மாயமானைக் கண்டு மயங்கி சீதையைப் பிரிந்து வருந்தினாரே.
      மாயாசீதையைக் கண்டும்
      நாகாஸ்திரத்தால் மயங்கினாரே.இறுதியில் அவர் உயிரையும் எமன் பறித்தானே
      இப்போதும் இராம இலட்சுமணர்கள் யமனை சேவிக்கின்றனர் என்பதற்கு நான் பாரதம் சபாபருவம் எட்டாவது அத்தியாயத்தில் ஆதாரம் காட்டினேன்.

      இவை எல்லாம் பரமாத்ம இலக்கணமல்ல என்று உணர்வாயாக.

      சிவபிரான் பிறப்பே இல்லாதவன் என்பதால் தான் பிறவாயாக்கைப் பெரியோன் என்று சிலப்பதிகாரமும் கூறியது.

      பிறப்புண்டேல் இறப்புமுண்டு என்பது உனக்கு சம்மதமான விஷயம் தான்.

      பிறப்பில்லாதவனுக்கு இறப்புமில்லை. அதனால் தான் திருமூலரும் "பிறப்பிலி பிஞ்ஞசகன் பேரருளாளன்" என்று சிவபிரானைக் கூறினார்.

      சிவபிரான் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை.நீ கூறும்படி அவ்வாறு சிவபிரான் பிரளய காலத்தில் விஷ்ணுவுக்குள் ஒடுங்குவார் எனில் அது உண்மையில் சிவபிரானல்ல அது அந்த விஷ்ணுவிடமிருந்து தோன்றிய குணருத்ரரே ஆவார்.

      சதுர்த்த ருத்ரர் ஆகிய சிவபிரானனுக்குப் பிறப்பே இல்லை என்று வேதம் கூறியது
      "ஸர்வேசம் அஜம் சிவம்" என்றது மண்டலப்பிராமண உபநிஷத்.
      அஜம்-பிறப்பால்லாதவன்

      அதர்வசிகையும்
      "ஸர்வமிதம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்தார்ஸ்தே ஸம்ப்ரஸூயந்தே ஸர்வாணி சேந்திரியாணி ஸஹபூதர் நகாரணம் காரணனாம்
      தாத்யாதா காரணந்துத்யேயஸ் ஸர்வைஸ்ர்ய ஸம்பந்தச் சர்வேஸ்வர சம்பு ராகாச மத்யே...சிவ ஏகோத்யேய சிவம் கரஸ் ஸர்வ மந்யந் பரித்யஜ்ய ஸமாப்தாதர்வ சிகோ" கூறியது

      இதன் பொருள்
      "அந்தப் பிரம,விஷ்ணு,ருத்ரர்,இந்திரர்கள் முதலியவர்கள் எல்லாம் உற்பத்தியாகின்றனர். எல்லா இந்திரியங்களும் பூதங்களுடனே கூட உற்பத்தி ஆகின்றனர்.
      காரணமும் காரணங்களைப் படைத்தோரும் உற்பவித்தல் இல்லை. காரணரும் ஸர்வைஸ்வர்ய சம்பந்தரும் சர்வேஸ்வரருமான சம்புவுமாகியவரே ஆகாயமத்தியில் தியானிக்கற்பாலர்.....
      மற்றலெல்லாம் விடுத்து இன்பஞ் செய்பவராகிய சிவபிரானொருவரே
      தியானிக்கற்பாலர் அதர்வசிகை முற்றிற்று"

      இதனால் விஷ்ணு மற்ற தேவர்களோடு உற்பத்தியாகிறவர் என்பது வெளி .

      இதனால் பரமாத்ம பதம் உபசாரமாக கிருஷ்ணனுக்கு சொல்லப்பட்டதை உண்மை என்று எண்ணுவாயாயின் அவை நடுவுநிலை நிற்போருக்கு பொருந்தாது.

      பரமாத்ம பதம் சிவபிரானுக்கே வாஸ்தவமானது.


      Delete
    38. இதற்கு மேல் நான் வாதம் செய்யவும் விரும்பவில்லை

      Delete
    39. அண்ணங்கராச்சாரியார் தனுறையில் இறுதியில் பஸ்மம் அணிந்த என்றே கூறுலுற்றார் ஆகவே அவர் வஞ்சகன் என்ற உன் கூற்று பொய்யானது.அசேதன வஸ்துவான கிருஷ்ணரை கூறி வேதத்தை சேதனவஸ்துவாக கூறுவது பாரத சம்மதம் என்றும் அதே மகாபாரதத்தில் சிலவிடங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதை காட்டினேன்.நீர் அதற்கு பதில் சொல்லவேண்டுமே அன்றி கிளிப்பிள்ளை போல சொன்ன புளுகலை வர்ணித்து வார்த்தைகளால் நிறப்பி சொன்னால் அது‌ உண்மையாகாது.

      கிருஷ்ணரும் ராமரும் முருகணை போல பிராக்ருத பிறப்பில் பிறக்கவில்லை.
      பிதா புத்ரணே பித்ருமாந்
      யோநியோநௌ நாவே
      தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்"
      [யஜூர் வேதம் - காடகசம்ஹிதை -3-9-55]
      (அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

      "ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந"
      [யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
      (அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

      "தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்"
      [புருஷ ஸூக்தம்]
      (அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

      "அஜாயமாநோ பஹுதா விஜாயதே"
      [புருஷஸூக்தம் 2-3]
      (பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

      முதலிய பிரமாணங்களால் தன்னிஷ்டபடியே பரமாத்மா பிறப்பெடுப்பதாக கூறுகிறது அதன்படி நாராயணரே இப்பரமான்மா என்பது சொல்லாமலேயே விளங்கும்.

      மேலும் சொன்னதை மறுபடி சொன்னால் அது உண்மையாகாது.ஸீதா சரித்திரத்தில் சீதை கடத்தப்படவேண்டும்.சிவனால் வரங்கொடுத்து கொளுக்க வைக்கப்பட்டிருந்த இராவணன் ராமபத்தால் செத்தொழிய வேண்டுமென்ற ப்ரகரணப்படி நடந்ததே அன்றி அது மாயை அல்ல.பகவான் மாயையை தூண்டுவிப்பவர் என்று வேதம் கூற ராமர் மாயைக்குற்பட்டவர் என்று‌ கூறுல் பொருந்தாது.

      தேவாஸ்திரத்துக்கு கட்டுபடவில்லையாகின் தேவர்களின் வாக்கு பொய்யாகும் என்பதற்காக‌ அவர் கண்டுண்டார்.சிவதனுஸை உடைத்து சிவனை மயக்கமுற செய்யும் அளவு பயமுறுத்தினார் ராமர்.சரயூநதியில் மூழ்கி தன்னுடல் விடுத்து வைகுந்தம் போனாரே அன்றி யமன் உயிரெடுத்தாரென்பது ராமாயணத்தில் இல்லை. யமனை வணங்கியதால் ராமனுக்கு கீழ்பட்டவன் ராமர் விஷ்ணு என்பது வேதவிருத்தம்.

      சிவனுக்கும் பிறப்பு உண்டு என்று‌ வேதமும் மஹாபாரதமும் கூறுகிறதே.பாவம் அதற்கென்ன செய்வீர்?.சிவபதங்கள் யாவும் நாராயணரையே சுட்டுமாகையால் அவையாவும் விஷ்ணுவுக்கே உரித்து என்ற‌ வாதத்தை மறுக்கவியலாமல் சொன்னதையே சொல்வது உம் இயலாமையையே காட்டிற்று

      மனசாட்சியோடும்‌ நேர்மையோடும் விவாதம் செய்யவேண்டுமே அன்றி பிடிவாதத்தில் அல்ல

      Delete
  8. பாம்பன் சுவாமிகளை பரதேசி என்று நிந்திக்கிறாயே நீ வணங்கும் பிள்ளைப்பெருமாள் பதினெண் புராணங்களில் இல்லதவற்றையெல்லாம் பரபிரம்ம தத்வவிவேகத்தில் இயற்றியிருக்கிறானே அவனையும் பரதேசி என்று சொல்லலாமல்லவா?அதோடு கூட உன் இராமானுசன் வேதத்தில் சொல்லப்படாத யோனி புண்டரத்தை அறிமுகப்படுத்தி வைணவர்களைப் பாஷாண்டர்களாக மாற்றினானே அவனையும் பரதேசி என்று சொல்லலாமல்லவா?

    ReplyDelete
    Replies
    1. பிள்ளை பெருமாளைய்யங்கார் புராணத்திலில்லாத விஷயங்களை எழுதினார் என்று எகுறும் உனக்கு அதை காட்ட யோக்யதை உண்டா? லிங்க பஸ்ம முதலிய கீழ்மையான சைவபுண்டரதாரணங்கள் தாமஸிகளுக்குரியது எனவும் ஊர்தவபுண்டரமே வைதிகம் எனவும் வேதமே விளம்பிற்று

      Delete
    2. அந்த பிள்ளைப் பெருமாள் அம்பிகை வேண்ட சிவனுக்கு விஷ்ணு உயிர்ப்பிச்சை அளித்ததாக கூறுகிறார்.

      இது பதினெட்டு புராணங்களில் எங்கிருக்கிறதோ தெரியவில்லை

      அந்த உமையானவளை
      லலிதா சகஸ்ரநாமம் "ஹரிப்ப்ரஹ்மேந்த்ர ஸேவிதா"( பிரம்ம விஷ்ணு இந்திரர்களால் ஆராதனை செய்யப்படுபவள்) என்று கூறுகிறதே . ஸர்வமங்களையான பார்வதியை நிந்திக்கும் முடனை பரதேசி என்று சொல்வதில் என்ன தவறிருக்கிறது?

      "எவள் மஞ்சள் ,மை,புஷ்பம்,,முதலிய சுமங்கலி இலட்சணங்கணங்களோடு கூடியவளாயிருந்து பர்த்தாவின் பாதங்களைப் மனம் வைத்து அவன் கொடுத்த தர்ப்பண ஜலத்தால் கணவன் முன்னிலையில் உயிர் விடுகிறாளோ அவள் பார்வதீலோகமடைகிறாள்.
      பார்வதிக்குத் தோழியாயிருந்து அப்பரத்வாஜ கன்னிகையுடன் கூட மகிழ்ந்திருக்கிறாள்" என்ற பாரதம் ஆதி 172 ஆவது அத்தியாயத்தால் பார்வதி சர்வமங்களை என்பது விளங்கவில்லையா?

      Delete
    3. விஷ்ணுவைப் பரம்பொருளென்று அதர்வசிகை விஷ்ணு நாமங்களாலேயே பரத்துவம் சொல்லியிருக்கலாம்.

      சிவநாமங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.அது அவ்விடத்தில் சகல பாவனைகளையும் சகல தேவர்களையும் தள்ளி முக்திக்காக சிவபிரான் ஒருவரையே தியானிக்க வேண்டுமென்பதால் சிவபிரானே முக்திக்கு நாயகன் என்பதும் அவனே பரமென்பதும் வெள்ளிடை போல் விளங்கும்.


      சைவர்கள் உபநிடதங்களிலும் பாரத ராமயணங்களிலும் எந்த ஒரு இடைச்செருகலும் செய்யவில்லை.
      வைணவர்கள் தான் விஷ்ணுவுக்கு
      இழிவு தரும் புராணங்களை மிகவும் பிரயாசையெடுத்து மறைக்கும்.
      பார்வதியை இராவணனபகரித்தான் என்றும் அவளே திரௌபதியாகப் பிறந்தாளென்றும் பொய்க்கதைகளைக் கட்டிவிட்டது சைவர்களா வைணவர்களா?
      பஞ்சராத்திர நூலில் இவ்வாறு எழுதப்பட்டது எதற்காக ? வான்மீகி இராமயணத்திலும் மகாபாரதத்திலும் இதற்கு எங்கு ஆதாரம் உளது?

      இராவணன் சிவபக்தன் அவன் லோகமாதாவான பார்வதியை அபகரித்தான் என்று சொல்வதற்கு வைணவர்களுக்கு வெட்கமாக இல்லை!!!

      Delete
    4. ஊர்த்வய நம: ஊர்த்வ லிங்காய நம: ஹிரண்யாய நம: ஹிரண்யலிங்காய நம: ஸ¤வர்ணாய நம: ஸ¤வர்ணலிங்காய நம: திவ்யாய நம: திவ்யலிங்காய நம: பவாய நம: பவலிங்காய நம: சர்வாய நம: சர்வலிங்காய நம: சிவாய நம: சிவலிங்காய நம: ஜ்வலாய நம: ஜ்வலலிங்காய நம: ஆத்மாய நம: ஆதமலிங்காய நம: பரமாய நம: பரமலிங்காய நம: எதத்ஸோமஸ்ய ஸ¤ர்யஸ்ய ஸர்வலிங்கம் ஸ்தாபயதி பாணி மந்திரம் பவித்ரம்' என்று சிவலிங்கத்தை நாராயணமே வாயாரத் துதிக்கின்றது.

      ருக்வேத ஸம்ஹிதா 'தவச்ரியே மருதோ மர்ஜயந்தே ருத்ரயத்தே ஜநிம சாரு சித்ரம் பதம்யத் விஷ்ணோ ருபமந்ய தாயிதே ந பாஸி குஹ்யம் நாமகோநாம்' என்றது. தேவர் யாவரும் சிவலிங்காராதனையால் எல்லா ஐசுவரியமுமெய்தினர். இலக்குமியோடு கூடிய விஷ்ணுவும் பரமபதவாழ்வடைந்தன னென்பது அதன் பொருள்.

      இன்னும் சிவலிங்காராதனத்தைப் பகலிங்காராதனமெனக் கொண்டும் அநுசாஸனம் 45-வது அத்தியாயம் 'ஈசுவரர் காரணங்களுக்குங் காரணமென்பதற்கு வேறு நியாயங்களால் ஆவதென்ன? மற்றொருவருடைய லிங்கத்தைத் தேவர்கள் அர்ச்சித்ததாக நாம் கேட்கவில்லையன்றோ? மகேச்வரரைவிட வேறு யாருடைய லிங்கமாவது எல்லாத் தேவர்களாலும் இப்போதாவது முன்னேயாவது பூஜிக்கப்பட்டிருக்கிறது?....ப்ரம்மாவும் விஷ்ணுவும்....யாருடைய லிங்கத்தை எப்போதும் பூஜிக்கிறீரோ அவர் அந்தக் காரணத்தினாலேயே மிகச் சிறந்தவரல்லரோ? தாமரை மலரையாவது சக்கரத்தைய்வாவது வச்சிராயுதத்தையாவது அடையாளமாகக் கொண்டு பிரஜைகள் பிறப்பதில்லை; லிங்கத்தையும் பகத்தையும் அடையாளமாகவுடையவைகளாகப் பிறக்கின்றன. ஆதலால் பிரஜைகள் ஈச்வரருடையவை. பெண்களெல்லாரும் உமாதேவியின் காரண ரூபத்திலிருந்து உண்டாக்கப் பட்டதனால் பகம் அடையாளமாகப் பிறந்திருக்கின்றனர். புருஷர்களனைவரும் சிவனுடைய லிங்கத்தினால் அடையாளம் செய்யப்பட்டிருப்பது பிரத்தியக்ஷமாயிருக்கிறது. சரசரங்களடங்கிய இம்மூவுலகங்களிலும் ஈசுவரரைவிட வேறு காரணம் உளதென்றும் தேவியின் அடையாளம் இல்லையென்றும் சொல்லும்கெடுமதியுள்ள மனிதன் நாஸ்திகனாவான். ஆண்குறியுள்ளவை யனைத்தும் ஈசுவரரென்றும் பெண்குறியுள்ளவை யனைத்தும் உமையென்றும் அறி. சராசரங்களாகிய இவ்வுலகமனைத்தும் இவ்விரண்டு ரூபங்களினாலும் வியாபிக்கப்பட்டது' என்று பிரசங்கித்துச் சிவலிங்க நிந்தகர்வாயில் மண்போடுகிறது. அப்பிரசங்கம் அப்பர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வாக்காகப் பிரகாசிப்பதும் அறியத்தக்கது. 'புல்லிங்கம் ஸர்வமீசாநம் ஸ்த்ரீலிங்கம் பகவத் யுமா' (ஆண் பாலாரெல்லாம் ஈசான சொரூபம். பெண்பாலாரெல்லாம் பகவதியாகிய உமாசொரூபம்) என்ற ருத்ர ஹ்ருதயத்தின் உபப்பிரும்மணமாக அப்பாரதப் பகுதி விளங்குகிறது. சிவலிங்கம் என்பதற்குச் சிவபிரானது பிரபாவம் என்பதே பொருள்.

      இதனால் வைணவர்களின் சிவநிந்தக பொய் வாதம் வேதங்களாலேயே புறக்கணிக்கப்பட்டது.

      Delete
    5. இராமானுசர் மகாபாரதத்தை மொழிப்பெயர்த்தது மிகப் பெரிய விஷயம் தான் ஆனால் அது மறுபடியும் மூலத்திற்கே கொண்டு செல்கிறது.

      பாரதம் ஆதி 1 ஆவது அத்தியாயம் "யுதிஷ்டிரராகிய தருமத்தின் மரத்துக்கு கிருஷ்ணனும் வேதமும்
      பிராமணர்களும் வேர்கள் "என்பது அவரின் மொழிப்பெயர்ப்பு

      இதன் வடமொழி மூலம் "முலம் க்ருஷ்ணோ ப்ரஹ்மச ப்ராஹ்மணச்ச" என்பது.

      இதிலுள்ள ப்ரஹ்ம பதத்திற்கு வேதமென மொழிபெயர்க்கப்பட்டது.
      அப்பெயர்ப்புத் தப்பு,கிருஷ்ணனையும் பிராமணர்களையும் சல்லிவேர்கள் போல் பக்கத்தில் நிறுத்தி ப்ரஹ்ம பதத்தை நடுநாயகமாக வைத்துள்ளது அந்த பர்வம்.

      கிருஷ்ணரும் பிராமணரும் சேதனர்களாக இருக்க ஆணிவேரான பிரமம் அவரினுஞ் சிறந்த சேதனராகத் தானே இருக்க வேண்டும்? அப்படியிருக்க அவர் அப்பிரமத்தை வேதமென அசேதன வஸ்துவாக மொழிபெயர்க்கலாமா?

      கிருஷ்ணனையும் பிரமத்தையும் தனித்தனியாக சொல்வதால் கிரூஷ்ணன் பரப்பிரமம் அல்ல என்பது பாரத சம்மதமாகும்.

      இராமானுசர் அந்த பிரமத்திற்கு சிவபிரான் என்று பொருள் சொல்ல நாணி அவர் வேதமென தவறாக மொழிபெயர்த்துள்ளார்.

      இதுவொன்றே அவர் பலவிடங்களிலும் தவறுதலாக மொழிபெயர்த்துள்ளார் என்பது சான்றாகும்.

      ஜந்து இந்திரர்கள் பாண்டவர்களாக பிறந்தது சிவபிரானின் சாபத்தால்!
      இலக்குமி தேவியின் அவதாரமான திரௌபதி அவர்களை மணந்தது சிவபிரான் கொடுத்த வரத்தினால்!
      அவர்கள் அவமானம், மோகம், மூர்ச்சை, அடி, ஜயம்,மரணம் அநந்தரகதி கிடைத்தது சிவபிரானாலேயே ஆகும். கிருஷ்ணர் அவர்களுக்கு நாடு கிடைக்க மட்டுமே சார்பாக இருந்தார்.பிராமணர்கள் அவர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று ஆசி கூறினர் அவ்விருவர் சார்பும் அவ்வளவே. இதனால் சிவபிரானையே அந்தபிரம்ம பதம் சுட்டும்.

      அந்த இராமானுசர் பலவிடங்களிலும் இதனைப் போன்றே மாறுதல் செய்து
      உபநிடத வாக்கியத்திற்கும் தவறாக பொருள் கூறியுள்ளார்.அவர் விசிட்டாத்வைதத்தை பரப்பியவர்.
      ஆனால் விசிட்டாத்வைதம் என்ற பதம் கூட வேதங்களிலில்லை. சைவர் கூறும் சுத்தாத்வைதமே வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

      கோபீசந்தனம் தவிர அதிசூர்ணம்,மண் போன்ற வேறுஎதுவும் வேதத்தில் சொல்லப்படவில்லை.
      அது அந்த கோபீசந்தனத்தைத் தரித்தாலும் அதற்கு மேல் பஸ்மமணிய வேண்டும் என்று வாசுதேவோபநிடதம் கூறுகிறது.

      சைவர்கள் வாசுதேவ உபநிடதத்தை மறுக்கவில்லை .ஆனால் பெரும்பாலான உபநிடதங்கள் பஸ்மத்தின் பெருமையைப் பேசுவதால் திரிபுண்டர தாரணமே மேன்மையானது.

      ஆனால் வைணவர்கள் உபநிடதங்களையே மறுத்துப் பேசுவதால் அவர்களே அவைதிகர்கள் என்பது புராணங்களை திருத்தியும் நீக்கியும் எழுதியிருப்பதிலிருந்தே வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

      இராமானுசர் பாரதத்தை மொழிபெயர்ப்பதில் முதல் அத்தியாயத்திலேயே தவறியதால் அவரின் மொழிபெயர்ப்பு எப்படிப்பட்டது என்பதும் சிவபிரான் உத்கிருஷ்டங்களை நிக்கிருஷ்டங்களாக்கியதில் இருந்துமே வெளி. அவர் இப்படித் தான் பல இடங்களில் பத்ம புராணத்தையும் திருத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை

      Delete
    6. தற்போது நமக்கு கிடைத்த புராணங்கள் பலவும் சிதைந்தும் திருத்தியும் எழுதப்பெற்றனவே.அவ்வாச்சார்யர் காலத்தில் அப்புராணங்கள்
      இருந்ததாலேயே அதையொட்டி நூல்கள் படைத்தனர்.சைவாபிமானிகளால் பதிப்பிக்கபட்ட புராணநூற்களில் இவ்விஷயங்கள் இல்லாமை ஆச்சர்யதக்கதில்லை.

      மின்னுவயாவும் பொன்னல்ல என்னுங் கூற்றின் கண் பலசஹஸ்ரநாமங்கள் இருப்பினும் அவை த்ரிமதஸ்தர்களும் கொண்டாடிய விஷ்ணுசஹஸ்ர நாமத்திற்கீடாகுமோ? இல்லையென்க.
      வேத புராண இதிஹாச சாஸ்திரங்களால் சிவன் முதலிய சகல தேவதாந்தரங்களால்
      தொழப்பட்ட எம்பிரானோ உமையைத்தொழுவான்? வெட்கம்.வெட்கம்..

      ஶ்ரீமந்மந்தகடாக்ஷலப்த விபவ ப்ரஹ்மேந்த்ரகங்காதராம் ।
      த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம் ॥

      யாருடைய கடைக்கண் பார்வை பெற்றதனால் பிரம்மா;இந்திரன்;சிவன் பெருமைப்பெற்றனரோ அவளும்,மூவுலகையும் கொண்டவளும் தாமரைக்குளத்தில் வசிப்பவளும் மஹாவிஷ்ணுவுக்கு பிரியனாவளுமான உன்னை வணங்குகிறேன் என்கிற யஜுர் வேத ஸ்ரீ ஸுக்தம் சிவனும் விஷ்ணுபத்தினியை தொழுதே உயர்வடைந்தான் என்றுரைத்தமை காண்க.விஷ்ணுபத்தினியை தொழுதுயர்வெய்திய சிவனுடைய பத்தினியாம் பார்வதியை ஸ்ரீமந்நாராயணன் தொழுதானென்கிற லலிதாசஹஸ்ரநாமம் முதலிய தேவிபரத்வ விருத்தாந்தங்கள் விருத்தாகோஷமே.

      Delete
    7. நாராயணருக்கு சிவநாமஞ் சொல்லி பரத்துவங்கூறல் கூடாதெனில் அந்நியாயம் வைணவர்க்கு மட்டுமோ? நாராயண,விஷ்ணு ஸுக்தங்களுக்கும் நாராயணோபநிஷத்துக்களிலும் படிக்கப்படும் நாராயண பதம் யெளகீக பொருள்கொண்டு சிவனையே குறிக்குமென்னும் குருட்டுவாதத்தை சைவர்கள் கைவிடுவரோ?.

      வேதத்தின் பூர்வபாகத்தில்
      "நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயணபர: நாராயணம் பரம்
      ப்ரஹ்ம தத்வம் நாராயண பர:
      நாராயண பரோ த்யாதா த்யானம்
      நாராயண: பர:"‌என்று எம்பிரானுடைய நாராயண நாமத்தை வைத்து பரத்துவங்கூறி உத்தரபாகமாகிய உபநிஷதங்களில் சிவ,ருத்ர பதங்களால் பரத்துவங்கூற ஹாநியில்லை
      .விஷ்ணுசஹ்ஸர நாமங்களில் அவை வருவதாலும் சதபதப்ரஹ்மானங்களில்
      பிரம்மன் ருத்திரனெனும் பெயரை வழங்கிய சேதியும்புராணங்களிலும் சிவன்,பசுவதி முதலிய நாமங்களை வழங்கியதாக உபப்ரஹ்மானங்கள் உத்கோஷித்தலும் அந்நாமங்களுக்குரிய உயர்வெல்லாம் உலகளந்த உத்தமனையே சாருமென நடுநிலையாளர் கண்டுகொள்வர்.

      நிற்க! 'அதர்வஸிரஸா சைவ நித்யமாதர்வணா த்விஜா:|ஸ்துவந்தி ஸததம் யே மாம் தேபி பாகவதா:ஸ்ம்ருதா||

      எந்த அதர்வணத்விஜர்கள் தினந்தோறும் இடைவிடாமல் என்னை அதர்வசிரஸ்ஸால் துதிக்கிறார்களோ அவர்களும் பாகவதர்கள் என்றே எண்ணத்தகுந்தவர்கள் என்னும் மஹாபாரத ஆஸ்வமேதிகபர்வத்தில் பகவான் வாக்காகவே இவ்வுபநிஷத் தன்னேயே சொல்லுகிறதாகையால் சைவர்கள் வாதம் நீர்த்துப்போனது.

      மஹாபாரதத்தில் அநுஸாஸன பர்வத்தில் சைவர்கள் இடைசெருகல் செய்தமை மேலே வெளியாகியமைக்கு பதிலென்ன?மேலும் இன்று சாம்பல் பூசிய சாஸ்திரிகளால் அச்சிடப்பட்டிருக்கும் பல உபநிஷதங்கள் மாற்றப்பட்டும் ஏற்றப்பட்டும் இருப்பதை இதர உபநிஷத் வெளியீட்டில் கண்டுகொள்ளலாம் .இதை சைவசாதனத்திற்கும் வைஷ்ணவ ஸுதர்சனத்திற்கும் நடந்த உபநிஷத்விசார விவாதத்தில் சுதர்சனர் ஈஸ்வரமூர்த்திப்பிள்ளை வாய்திறக்கமுடியாதபடி நிரூபித்தார்.

      இராவணன் பார்வதியை நோக்கி தவமிருந்ததாக பாரதத்தில் சேதி உண்டு.பலரும் இதை இடைசெருகலென்பார்களே தவிற மகாபாரதத்தில் இல்லை,வைணவர் கட்டிவிட்ட கதையென வாய்கூசாமல் பொய்யுரைக்கமாட்டார்.பாஞ்சாராத்ர ஆகமத்தில் இவ்விதம் எழுதியதாக சொல்வது அண்டபுளுகு.வைணவர்கள் எந்நூலில் அவ்விதம் கூறினார்கள் என்று ஆதாரத்தோடு குறிப்பிடவேண்டுமே ஒழிய அநர்த்தவாதம் எடுபடாதென்க

      Delete
    8. ப்ருகு முனிவர் சாபத்தால் சிவனுக்கு லிங்கபூஜை பிரபல்யமானது.
      அவ்வாக்யத்தால் சிவலிங்கம் துதிக்கப்படுகிறதே ஒழிய பரம்பொருளொடொக்கும் தன்மையால் துதிக்கப்படவில்லை. எம்பிரானால் படைக்கப்பட்ட தேவர்களுக்கு புகழ்வழங்குவது பகவானுடைய கருணாகடாக்ஷமாகையால் அத்துதியால் விஷ்ணுபரத்துவத்தை அசைக்கவியலா.

      ருக்வேத சம்ஹிதாவிலுள்ளதாக கூறி மேலே எழுதப்பட்ட அச்சுலோகம் ஈஸ்வரமூர்த்தியின் கல்பனா சக்தியால் உதித்ததாக இருக்குமேயொழிய சதுர்வேதங்களிலும் சல்லடை இடினும் இல்லை.சைவர்கள் தம்மதத்தை காக்க இம்மாதிராயான வசனங்களை கீறிக்கொண்டு அது வேதத்தில் உள்ளதாக கூறி பாஷாண்டவாதம் செய்யும் வழக்குடையவராகையால் வைதிகர்கள் அது கண்டு மயங்கார்.

      அநுஸாஸன பர்வத்தில் வரும் இப்பகுதி ப்ரதிபக்ஷம் என்பதே மேலே காட்டப்பட்டது.மேற்கூறிப்போந்த வாக்யங்கள் "நாராயண பரோ த்யாதா த்யானம்நாராயண: பர" முதலிய ஸ்ருதிவாக்யங்களுக்கு விரோதமாகையால் தள்ளதக்கதே



      இந்திராணியின் அம்சமான த்ரொளபதி முற்பிறவியில் நாளாயினியாக இருந்து சிவனிடம் தவமியற்றி கிருஷ்ணையாக பிறந்தாளென்பது பாரதம்.அவளை ராஜ்ய லக்ஷ்மி , லக்ஷ்மி என்ற குறிப்பிடுவது மங்கள சப்தத்திலேயாம்
      சிவனே லக்ஷ்மியைப் பணிந்துயர்வெய்தியமை வேதத்தில் ப்ரஸித்தம்.


      "விருஷ்ணிகுலத்தை காப்பவரே!யுதிஷ்டர்
      உன்னுடைய அணுக்கிரகத்தால் பகைவர்களை கொன்று பகைவரற்ற ராஜ்யத்தை அடைந்தார்,மதுஸுதனரே! பாண்டவர்கள் உன்னால் நாதனுள்ளவர்கள் ஆனார்கள் நாங்கள் உங்களை தெப்பமாக கொண்டு கொளரவர்களாகிய ஸமுத்திரத்தை கடந்தோம்" என்கிற ஆஸ்வமேதிக 52வது அத்யாய வாக்யத்தால் பாரதவெற்றி கிருஷ்ணனுடைய பாதாரண்யத்தை பணிந்ததால் என்று பகர்ந்துரைக்கும்.

      அப்பெருமை சிவனுக்குரித்தென்பது குருடன் கண்ட யானைக்கதையாம்.
      நிற்க! பாரதத்தில் பலவிடம் கிருஷ்ணரை பரமாத்மாலக்ஷணத்தோடு படிக்கப்பட்டிருப்பதால் கீதாசார்யணான கண்ணனே பரம். இவ்வுண்மையை உபநிஷத்துக்களும் உடன்பட்டு உத்கோஷிக்கும்.

      எனினும் அவ்விடத்தில் பரஹ்மபதம் வேதத்தையே குறிக்கும் .எங்கனமெனில் ஆஸ்மமேதிக பர்வத்தின் 107வது அத்யாயத்தில் "ப்ரஹ்மஸாம்யதாம்। ஸர்வேஷாமேவ தாநானாம்ʼ ப்ரஹ்மதாநம்ʼ விஶிஷ்யதே॥ "என்கிற வாக்கியத்தை காண்க.இதன் பொருள் வேதத்தை+ கொடுப்பவன் ( பரஹ்ம+ ஸாம்யதாம்) பரஹ்மத்திற்கு சமமான இடத்தை அடைகிறான் எல்லாதானங்களிலும் ப்ரஹ்ம்ம தானம் ( பரஹ்ம உபதேசம்) மேலானது. மேலும் அதே பர்வத்தில் 102வது அத்யாயத்தில்
      "ப்ரஹ்மதேயோ "என்கிற ப்ரஹ்ம சப்தம் வேதத்தை கொடுத்தவன் என்று அர்த்தமாக சொல்லப்பட்டது.

      ஆகவே இவையாவற்றையும் அணுஸரித்தே கும்பகோண பதிப்பில் மூலம் க்ருஷ்ணோ ப்ரஹ்மச ப்ராஹ்மணச்ச" என்கிற ஸ்லோகத்திற்கு வேதமென மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
      இலக்கணமறியா சைவர்கள் வைணவர்களின் வடமொழிபுலமையில் குற்றங்காண்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைபடுமளவாம்.

      இராமானுசர் யார் இராமானுஜாசார்யர் யாரெனக்கூட தெறியாத மந்தமதிகள் உபநிஷத்தை‌உடையவர் தவறாக மொழிபெயர்த்தாரென உளறுவது கதிரவனை கண்டு தெருநாய் குலைப்பது போலாம்.

      Delete
    9. ஊர்த்தவபுண்டரமே உயர்கதியளிக்குமென் மேலே வேதப்பரஹ்மானங்களை கண்டாவது சைவர்களின் இந்தப்புரளியை இதோடு நிறுத்தட்டும். பல உபநிஷதங்களை திருத்தி எழுதி அச்சிட்டதோடு பல பகுதிகளை புகுத்தி புராண இதிஹாசங்களில் இடைச்செருகல் செய்தவர்கள் சைவர்களே என்பது வேதத்தில் வருகிறதென சொல்லி கல்பனா வரிகளை எழுதிவிட்டு பெருமைபேசித்திரியும் லக்ஷணத்தில் கண்டுகொள்ளலாம்.

      சுலோக பஞ்சக விஷயத்தின் உளறல்களை படித்துவிட்டு மகாபாரதத்தை மொழிபெயர்தவர் இராமானுசர் என்று உளறிதிரிகிற பதர்கள் பாத்மோத்தரத்தை படித்து பயந்து அதை பொய்யெனப் பிதற்றுவதை பைத்தியகாரர்கள் ஏற்கலாம்.வைதிகர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்.

      Delete
    10. பாத்மோத்தரத்தைப் பயந்து யாரும் பின்வாங்கவில்லை. பஞ்சராத்திர நூலை முழுமையாகப் படிக்காமல் சுலோக பஞ்சகத்தைக் குறை கூறுவது பொருந்துமா? சரி நாங்கள் திருத்தி எழுதியதாகக் கூறியது ஒருபக்கம் இருக்கட்டும் அதனைப் பிறகு விசாரிப்போம்.

      வைணவர்கள் உபநிடதங்களையும் அனுசாஸன பர்வத்தையும் கற்பிதமென கதறி அழுவது அவற்றைப் பார்த்து பயந்துதான் என்று நடவுநிலையோர் அறிவர்

      சரி அது ஒருபுருபுறமிருக்க வைணவர்கள் எப்படியோ வான்மீகி இராமாயணத்தில் இராமர் விபூதி அணிந்ததைக் கூறும் "த்யாத்வா ரகுபதிம் " எனத் தொடங்கும் ஸ்லோகத்தை கஷ்டப்பட்டு நீக்கிவிட்டனர்.

      கேட்டதற்கு அது அத்யாத்ம இராமயண ஸ்லோகமென பொய்யுரைத்தனர்.

      அத்யாத்மம் "ஸ்வரணவர்ண ஜடாபாரம் "எனத் தொடங்கும் ஸ்லோகத்தில் இராமன் விபூதிருத்ராக்ஷ தாரணரே என்பதை ஆணியறைந்தால் போலத் தெரிவித்தது.

      அதுமட்டுமின்றி "க்ருதாபிஷேகஸ்" எனத் தொடங்கும் வான்மீகி இராமாயண ஸ்லோகத்தாலும் அது மேலும் உறுதியானது.

      இராமனை சைவன் என்று பாரதம் சபாபருவம் எட்டாவது அத்தியாயத்தில் இராமன் யமனை வணங்கிய காலத்து "ராமோதாசரதிச் சைவ" என விளம்பியது.

      அனந்த பத்மநாபஸ்வாமி அஷ்டோத்திரமும் "தக்ஷ ஹஸ்த ஸதா பூஜ்ய சிவலிங்க நிவிஷ்டதீ" என்று கூறியதால் வைணவர்களின் சிவலிங்க நிந்தனைக்கு இடிவிழுந்தது.

      இதுமட்டுமின்றி திருமால் சிவபிரானிடம் சக்கரம் பெற்றதைத் தெரிவிக்கும் குறுங்குடி வாய்மொழியான "செக்கர்வானச் சடையோன்" எனத் தொடங்கும் பாடல் முன்னாளில் அச்சப்பிரதிகளில் வெளிவந்ததையும் அதனை அக்காலத்து வைணவர்கள் தன்கண்ணால் கணடிருக்கின்றனர் என்பதையும் சைவபூடண சந்திரிகை தெளிவாக எடுத்துரைத்தது

      இதனால் வில்லிபாரதச் செய்யுளை கலப்படம் செய்ததாக ஆறுமுக நாவலரைக் குறை கூற வைணவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

      Delete
    11. வில்லிபுத்தூரார் கண்ணனை ஒரு வாழ்த்துப் பாடலில் மிகவும் உயர்வாக அருமறை முதல்வன் எனக் கூறியதை அவர் அப்படியே பதிப்பித்ததையும் அருச்சுனன் தனியாக வனவாசம் மேற்கொண்ட காலத்து அருணாசலம்,சிதம்பரம் போன்ற சிவ சேத்திரங்களையும் திருவரங்கம், திருவகீந்திரபுரம் போன்ற
      விஷ்ணு சேத்திரங்களை தரிசித்ததையும் அவர் அவ்வாறே பதிப்பித்தையும் காண முடிகிறது.
      இதுமட்டுமின்றி திருமுனைப்பாடி நாட்டைச் சிறப்பிக்க வந்த வில்லியார் அது அப்பர்,சுந்தரர் அவதாரம் செய்த நாடெனவும் பொய்கையார் ,இன்னொரு ஆழ்வார் அவதரித்த நாடெனவும் கூறும் பாடலைப் பாரபட்சமில்லாமல் பதிப்பித்ததை யாரும் மறுக்க முடியாது.

      ஆனால் ஓரேனந் தனைத் தேட என்னும் பாடலை வைணவர்கள் நீக்கியதிலிருந்தே அவர்கள் தனக்கு அனுகூலம் போல் தோன்றும் நூல்களையும் சுருதிகளையும் கொண்டாடவும் பிரதிகூலம் போல்தோன்றும் சுருதிகளையும் பாடல்களையும் கலப்படம்,அவைதிகம், தாமஸம்,இடைச்செருகல் என சமாதானம் கூறி நீக்குவதும் அவர்களின் பாரபட்சத்தைக் காட்டுகிறது.

      இதுமட்டுமின்றி முக்கியமா
      வைணவர்களின் மற்றொரு வஞ்சகச் செயலை
      அம்பலப்படுத்தவேண்டியுள்ளது.

      அதாவது அம்பிகை தவமிருந்து சங்கரனை அடைந்ததைத் தெரிவிக்கும் பெரியாழ்வார் பாடலான "மன்னுகரதலங்கள் மட்டித்து "எனத் தொடங்கும் பாடலில்
      "கூத்தன் பொடியாடி "என்னும் தொடருக்கு வியாக்கியானம் செய்த அண்ணங்கராசாரியார் என்பவர் கூத்தன் என்பதற்கு மட்டும் "கூத்தாடி "எனப் பொருள் கூறி "பொடியாடி "என்பதற்கு வஞ்சகமாகப் பொருள்கூறாமல் விட்டார்.

      "பொடியாடி" என்பதற்கு "திருநீறணிந்தவன்" என்பதற்கு பொருள் கூற அஞ்சி அவர் அவ்வாறு விட்டாலும் இன்னொரு ஆழ்வார் பாடலான "நீற்றான் நிழல்மணிவண்ணத்தான் "
      என்பதற்கு வேறு எவ்வகையால் அவர் பொருள் கூறுவாரோ?

      அவ்வாறு பொருள் கூறாமல் விட்டதற்குக் காரணமென்னவோ?திருநீற்றின் மேலுள்ள துவேஷம் தான் காரணமோ?

      பசுவின் வெண்ணையைத் திருடி உண்ட கண்ணனைப் பரமாகக் கொண்ட அரநிந்தை வைணவர்களுக்கு சுத்த பசுஞ்சாணத்தால் உண்டான திருநீற்றை மாட்டுச்சாம்பலென நிந்திப்பது கலிகால விந்தையே.

      இதில் இவர்கள் ஈஸ்வரமூர்த்தி கற்பிதமாக ஸ்லோகங்களை ஆதாரங்காட்டினாரெனவும் ஆறுமுக நாவலரவர்கள் வில்லிபாரதத்தில் விநோத திருத்தங்கள் செய்தனரெனவும் பொய் புகன்று சமாதானம் செய்கின்றனர்.

      இதிலிருந்தே யார் கலப்படம் செய்தனர் என்பது அனைவருக்கும் தெளிவாகப் புரியும்

      Delete
    12. இராமானுசருக்கும் இராமானுஜாசார்யாருக்கும் பேதம் தெரியாத நீர் இன்னும் அச்சுலோக பஞ்சகத்தை படித்து அதை இங்கு ஒப்பிப்பது கீழே விழூந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலாம்.
      மேலே அச்சுலோகபஞ்சகத்தின் குதர்க்க வாதம் எல்லாம் நிரஸிக்கப்பட்டன.
      பாஞ்சாராத்ர ஆகமத்தில் இராவணன் தவமிருந்து எப்படி இருக்கும்? இதிலிருந்தே சைவர்களின் பொய்யுரை தெரிந்துவிடுகிறதே?

      அவ்வுபநிஷதங்களை பாவம்! சைவ உலகம் போற்றும் சிவபரத்வஞ்சாதிக்க வெழுந்த ஆச்சார்களுக்கே தெரியவில்லை என்பதிலிருந்து இவை அக்காலத்துக்கு‌ பின் எழுந்ததே என்பது நடுநிலையோர் நன்குணர்வர்

      வைணவர்கள் அச்சுலோகத்தை நீக்கிவிட்டனர் என்று பிதற்றும் பேர்வழிகளுக்கு அதற்கு ஆதாரம் காட்டத்தெரியாததிலிருந்தே அவர்களுடைய பொய்யுரை புலனாகிறது.

      அத்யாத்ம இராமாயணம் ப்ரமாணகோடியிலே வராது .அப்படியிருக்க அந்த இராமாயணத்தை எந்த மதியுடையோர் கொள்வர்? ஒருவேலை சிவரகசியம் என்கிற ஒன்றை கிறுக்கி விட்டு அதை இதிகாசத்துள் நுழைக்கப்பார்த்து தோல்விகண்டவர்களுக்கு அது ப்ரமாணிக்க தக்கது போலும். எனில் பொளத்த இராமாயணமும் ராவண காவியமும் இவர்கட்கு ப்ரமாணம் போலும்.இதனாலன்றோ சைவர்கள் அவைதிகர்கள் என்கிறோம்.

      'ராமோ தாஸரதி சைவ லக்ஷ்மணோ' என்றுவரும் அச்சோலகத்தில் தசரத புத்திரர்களான ராமலக்ஷமணனை சொல்லியதன்றி அவர்களை சைவ என்று சொல்லவில்லை.சைவ என்கிற மதத்தை கண்டு மயங்கினர் போலும்...ராமாயண காவ்யத்தில் சிவப்பரஹ்மாதிகளுக்கு தலைவனாக படிக்கப்பட்ட இராமனோ சைவன்? பதிதம்! பதிதம்!

      அநந்த பத்மஸ்வாமி அஷ்டோத்திரமாம்.
      அது யாரெழுதியதோ? எப்புராணமோ?
      'செக்கர் வானச்சடையோன்' என்னும் பாடல் முன்னாளிருந்ததாம்.அப்படி எந்த அச்சில் இருந்தது என்று குறிப்பிட்டு ஆதாரம் காட்டினால் அது வாதத்திறுகுதவுமன்றி வெற்றுரைகள் வேலைக்காகதென்க.என்னை?வைணவர்களும் இப்படியொரு பாட்டையெழுதி சைவர்கள் பா
      திப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள் எனபழிபோடுந் திறன் உள்ளது.ஆனாலும் அது செய்யார்கள்.அப்போது சைவர்கள் பல்லைக்காட்டிப் பசபசவென விழிப்பர் போலும். மேற்கூறியது உண்மையெனில் அப்பதிப்பு எவ்வாண்டில் எவ்வச்சுகூடத்தில் என்பதையும் கூறினால் அதற்கு பதில் கூற ஸித்கமாயுள்ளோம்

      சைவத்திருடர்கள் எப்படி வில்லிபாரத்ததை புரட்டிகீறி அச்சிப்பதித்தார்கள் என்பது மேலே காட்டியபின்னும் வாயடங்கவில்லை போலும்.இவ்வுண்மையை சைவர்கள் வாயாலேயே ஒத்துக்கொள்ள வைக்கமுடியும்‌.அவசியம் இருப்பின் எழுதுவோம்.

      அவ்விதம் பதிப்பித்த அக்குணத்தை வைணவர்கள் பாராட்டுகிறோம் அதேவேளை அவருடைய வில்லிபாரத பதிப்பும் வெளியுலகத்திற்கு வந்ததுண்மையே.யாரேனுந் தனைத்தேடித் தருளுமிரு ஒரு பாதத்திறைவன்....
      "என்பதற்கு‌ பதிலாக 'ஓரேனந்தனைத்தேட ஒளித்தருளிமிரு பாதத்திறைவன்...'என்று மாற்றிக்கீறியதிலிருந்து சைவர்கள் இவ்வழியே இல்லாத உபநிஷத் தையும் உருவாக்கிவிட்டனர் என்பது சொல்லாமலேயே விளங்குகிறதல்லவா?

      'காடுடைய சுடலைப்பொடி பூசி..' என்றபடிக்கு பிணச்சுடலை பொடியை பூசுகின்ற என்று அர்த்தம்வந்த அப்பாடலுக்கு பொருள்கூறின் ஆழ்வாருடைய அவ் ஈரச்சொல்லுக்கு அமங்கலமாகிய பிணசாம்பலென்று வர்ணிக்க வாய்கூசி அவர் அவ்விதம் விட்டிருக்கலாமேயன்றி வஞ்சகமன்று. அதனுரையில் 'இப்படியாக கூத்தாடின சூலபாணியும் பஸ்மதாரியுமான சிவனது மார்போடே அணையப்பெறுதற்காகப் பார்வதி தவம்புரிந்தபடியை மஹாபாரத்தில் பரக்கக் காண்மின் என்று தலைக்கட்டிற்றாயிற்று' என்று‌ முடித்த‌‌ முடிபில் கண்டு தெளிக.

      வேதத்திலில்லாத சுலகோங்களை‌ வேதசம்ஹிதாவிலுள்ளதாக கூறியும் எழுதியும் அந்த அவ்வீஸ்வரமூர்த்திப்பிள்ளை பொய்யரில்லாமல் வேறென்ன? ஆறுமுகநாவலர் பதிப்பும் அநர்தத்மே என்று ஆதாரம் காட்டிய பின்னும் முட்டுக்கொடுப்பது முட்டாள்தனமே.

      இந்நாள் ஈஸ்வரமூர்த்திப்பிள்ளையினது உளறல்களை அடிப்படையாக கொண்ட உமது எல்லா வாதங்களும் தும்சம் செய்யப்பட்டது என்பது சர்வநிச்சயமானது.

      Delete
    13. நான் சரியான இலக்கண அறிவில்லாமல் உம்மிடம் வாதாடியது தவறு தான்.
      நானோ சாதாரண பத்தொன்பது வயது சிறுவன் எனக்கு அவ்வளாக ஒன்றும் தெரியாது எனது அறிவுக்கு எட்டியவரை நான் போராடினேன் .
      திருநீற்றின் மேன்மையும் உருத்திராக்கத்தின் பெருமையும் அறியாத உம்மோடு நான் வாதாடியது முதல் குற்றம்

      Delete
    14. இலக்கண அறிவில்லாவிடினும் ' குணம் நாடி குற்றம் நாடி...' எனும் கூற்று தெரிந்திருந்தாலும் வாதம் செய்ய வந்திருக்கமாட்டீர்?. பொய்யுரைகளை எல்லாம் மெய்யுரைகளென்றெண்ணி மயங்கி வந்த விளைவு.எனக்கு வயது வெறும் இருபதே.இன்றும் நான் சைவனே..எம்பெருமானுடைய கடைக்கண் கதிர் அடியேன் மீது விழுந்து பகவத்சாஸ்திரங்களை கற்று உய்ய ஒருவழி!அது உடையவர் திருவடி! என்கிற உண்மையை உணர்ந்து வாழ்கிறேன்.ஊர்த்தவபுண்டரத்தை அவைதிகமென உளறிதிரிகிற மண்டூகங்களுக்கு இப்படித்தான் பதில் சொல்ல முடியும்

      Delete
    15. பிணச் சாம்பல் என நீ திருநீற்றை நிந்தினை செய்தாய்

      ஐயகோ இது என்ன கொடுமை பிருந்தையின் பிணத்தைக் கட்டி அழுது அவளின் சாம்பலைத் தன்உடல் முழுதும்பூசிக் கொண்டு கதறி அழுத விஷ்ணுவின் அடியவர்களுக்கு பிணச்சாம்பல் என திருநீற்றை நிந்திக்க என்ன தகுதி இருக்கிறதோ தெரியவில்லை.? சரி அதிருக்கட்டும் அக்கதை உமக்கு தாமஸமென்பதால் அதனை விசாரிக்கவேண்டாம்

      திருநீற்றின் மேன்மையைக் குறிக்குமிடத்து திருமூல தேவ நாயனார் கங்காளன் பூசும் கவசத் திருநீறு என்று கூறினார்.
      திருநீறே கவசமென்றார்.

      திருமண்ணை எவனும் கூறவில்லை.
      ஔவையும் நீறில்லா நெற்றி பாழ் என்று கூறினார்.

      இதில் ஊர்தவ புண்டரம் சொல்லியிருப்பதாக நீர் புழுகலாம். நீறு என்பதற்கு உம்மிஷ்டப்படி சூர்ணம்,மண்,சந்தனம் என்றும் முட்டாள்தனமாக நீர் பொருள் கூறலாம்.

      அப்படி சூர்ணமோ மண்ணோ மேன்மையானது என்றால் மண்ணில்லா நெற்றி பாழ் சூர்ணமில்லா நெற்றி பாழ் என்று கூறியிருக்கலாமே.

      ஆழ்வாருக்கு அமங்கலமாகத் தெரியாத பொடியாடி என்னும் பதத்திற்கு அதற்கு உரை செய்யவந்தவருக்கு அமங்கலமென்று எப்படித் தெரிந்ததோ இது விந்தையிலும் விந்தையாக இருக்கிறதே. அவர் செய்த வஞ்சகச் செயலை எப்படி நியாயப் படுத்தினாலும் அது தவறன்றோ? உள்ளதை உள்ளவாறன்றோ கூற வேண்டும்?

      திருநீற்றை அமங்கலமென்று வைணவர்கள் கதறி அழுதனர். அப்படியெனில் அவர் வீடுகளில் இறந்தவருடைய சாம்பலைப் பத்திரப்படுத்தி அதனை கங்கை போன்ற புனித நதிகளில் கரைப்பது ஏனோ? சாம்பலைக் கண்ட வைணவருக்கு அமங்கலம் உண்டாகாதோ? அதனை அவர் வீட்டில் வைத்திருக்கும்போதோஇல்லை நதிகளில் கரைக்கும்போதோ அவருக்கு அமங்கலமுண்டாகாதோ? ஒருவேளை சாம்பலை நதிகளில் கரைப்பதால் அந்த நதிக்கு தோஷமுண்டாகுமென்று அதனை வைணவர்கள் கரைக்காமல் வைத்திருப்பார்களோ?

      திருநீற்றின் தத்துவமறியாத மூடர்கள் எப்படிவேண்டுமானாலும் பேசலாம் யார் வேண்டாமென்றது?

      அவை பந்தபாசங்கள் அறுப்பதற்கும் சகல சௌபாக்கியங்களையும் தருவது என்பது வேத சம்மதமாகும். விஷ்ணுவை சூர்ணமணிந்தவன் மண்ணணிந்தவன் என்று வேதம் சொல்லுவதாக ஒரு ஆதாரம் கூடக் காட்டத் தெரியாத நீர் எல்லாம்
      நான் சுலோக பஞ்சகத்தை அடிப்படையாகக் கொண்டு பேசுவது பற்றி பேசுகிறீர் . ஆதித்ய புராணம்,பராசர ஸ்மிருதி,ஜாபாலஸ்ருதி
      பாரதம் சாந்தி பர்வம்,கருட புராணம், மாநவ புராணம், கூர்ம புராணம், கந்த புராணம்,அத்யாத்மம்,வான்மீகம்,வேத உபநிடதமான பஸ்மஜாபாலம்,பிருஹஜ்ஜாபாலம்,அவிமுக்த சாபாலம்,சுவேதாசுவரம்,அதர்வசிரஸ்,ஸாமவேதம்,காலாக்நிருத்ரம், போன்ற உபநிடதங்களும் பவிஷ்ய புராணம்,ப்ரம்மாண்ட புராணம் ,காளிகாகாண்டம்,
      உத்தரராமசரிதம் போன்றவைகளில் திருநீறு பேசப்பட்டிருப்பது போல உங்கள் மண்ணோ,சூர்ணமோ பேசப்படவில்லையே

      கேட்டால் சைவர்கள் புரட்டு செய்தனர் என்று ஒரே ஒரு அற்பத் தொடரால் ஏமாற்றுவீர்கள்.உங்கள் கூற்றுப்படியே நாங்கள் புரட்டு செய்தாலும் அந்த நேரத்தில் நீங்கள் என்ன தூங்கிக் கொண்டிருந்தீர்களா?
      அப்படியே புரட்டு செய்தாலும் இவ்வளவு நூல்களிலுமா புரட்டு செய்ய முடியும்?

      வாமனமூர்த்தி திருநீறணிந்ததாக பிரம்மாண்ட புராணம் கூறும்
      "க்ருஷ்ணாஜிநோத்தரீயாம்ஸோததத்ருத்ராக்ஷமாலிகாம் தண்டவாந்ஜடீலோவேதாநுத்திரந்பஸ்மகுண்டித:" எனக் கூறும்.


      Delete
    16. லலிதா சஹஸ்ரநாமம் மேன்மையானது என்பது அதனை அகஸ்தியருக்கு ஹயக்ரீவர் உபதேசித்ததில் இருந்து வெளி.
      சிவபரமான செய்திகள் சொல்லப்பட்டுள்ள
      அனுசாஸன பர்வத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லப்பட்டுள்ளதால் அவைகளைக் கற்பிதமெனத் தள்ளாமல் அதனைத் தனக்குரியது எனக் கொண்டாடும் மனப்போக்கு நடுநிலையார்க்குக் கிடையாது. இதிலிருந்தே உமது லட்சணம் என்ன என்பது தெரிகிறது?

      Delete
    17. சிவலிங்கத்தைப் புகழும் ஊர்த்வாய நமஹ எனத் தொடங்கும் ஸ்லோகத்தை நாராயண உபநிஷத்தில் கண்டுகொள் ஆராயாமல்
      அதனைக் கற்பிதமெனக் கூறாதே.
      நாராயணப் பரோத்யாதா( நாராயணன் மேலான தியானிக்கின்றவர்) என்பதே பொருள் அவ்வாறு அவர் தியானித்த பொருள் சிவபரம்பொருளென்பது ஊகித்துக்கொள்ளலாம்

      Delete
    18. த்யாதா என்பதற்கு தியானிக்கின்றவர் என்பது பொருள் த்யேயர் என்பதற்கு தியானிக்கப்படும் பொருள் என்பது அதன் பொருள்

      ருத்ரா த்யாதா என்றும் நாராயணப் பரோத்யாயதா என்றும் கூறும் சுருதி வசனங்கள் சிவபிரானை" சிவ ஏகோத்யேய" எனக் கூறியது

      ருத்ரனையும் நாராயணனையும் த்யாதா(தியானிக்கின்றவர்) எனக் கூறி சிவபிரானை த்யேயர் (தியானிக்கப்படும் பொருள்)எனக் கூறியதால் சிவபிரானே அனைவராலும் தியானிக்கத்தக்கவர் என்பது வெளி இந்த சுருதிக்கு ஏற்பவே அனுசாஸன பர்வமும் இருப்பதால் அவை கற்பிதம் என்பது அடிபட்டது

      Delete
    19. சிவபிரான் விஷ்ணுவின் அடியவரென்றால் அவரும் நீங்கள் கூறும் அவைதிகத்தைத் நெற்றியில் தரித்து இருக்கலாம்.அவர் ஏன் அதனைத் தரிக்க வில்லை?.இதுமட்டுமின்றி
      சகல தேவர்களும் விபூதி ருத்ராக்ஷமணிபவர்களே என்பதற்கு பஸ்ம மஹாத்மியம் என்னும் நூல் தெரிவிக்கும்.அதில் பல நூல்களில் இருந்தும் ஸ்லோகங்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளன.
      அவைதிகத்தை
      விஷ்ணுமூர்த்தியே தரிக்காத போது அதனை மற்ற தேவர்கள் அணியவும் வாய்ப்பில்லை.

      Delete
    20. ஓரேனந் தனைத் தேட என்னும் பாடம் தவறானது என்று கதறி அழுதனை

      யாரேனுந் தனைத்தேடித் தருளுமிரு ஒரு பாதத்திறைவன்... இவ்வரிக்கு நீ எப்படிப் பொருள் கொள்வாய்

      ஓரேனந் தனைத் தேட என்பதற்கு இயையபாக அடுத்த வரியில் போரேனம் தனைத்தேடி என்பது வரிகிறது.

      அதனைப் போல நீ எடுத்துக் காட்டிய வரி அதனோடு பொருந்தவில்லையே

      கடைசியில் ஒருபாதத் திறைவன் என்று நீ கூறினாய் இறைவனுக்கு ஒற்றைக் கால் இருப்பது அது ஏகபாத மூர்த்தி என்று அழைக்கப்படும்.
      அதிருக்கட்டும்

      முற்காலத்தில் வராகமூர்த்தி தேடிய இருபாதத்தை உடைய இறைவன் அருச்சுனனைக் கொல்ல முயன்ற பன்றியை அழிக்க தனது கணங்களுடன் வந்தான் என்பது அதன் பொருள்

      ஆனால் நீ கூறிய யாரேனுந்தனைத் தேடித் தருளுமிரு ஒரு இவ்வரியில்
      இறைவனுக்கு ஒரு பாதமா இல்லை இரு பாதமா என்பது விளங்காமல் இருக்கிறது.
      இரு பாதங்கள் என்றோ இல்லை ஒரு பாதமென்றோ இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தான் கூறியிருக்கவேண்டும்.
      இரண்டுயும் ஒன்றாகக் கூற வாய்ப்பில்லை
      இரு ஒரு என்னும் சொற்களை இலக்கண அறிவுடைய வில்லியார் இயற்றியதாகக் கூறினை.
      அவற்றை ஒன்றாக சேர்த்து எப்படிப் பொருள் கொள்வது ?
      பாடலானது யதுகை மோனை இவற்றால் மட்டும் இயற்றிவிட முடியுமா?
      சொற்களோடு இயைபு இருக்கவேண்டுமே.
      இரு ஒரு என்பதை எதனோடு சேர்த்துப் பொருள் கொள்வாய்
      இதனிலிருந்தே அவை கற்பிதமென்று தெரிகிறது இரு ஒரு என்னும் சொற்களை விடுவோம்.

      யாரேனுந் தனைத்தேடித் தருளும் எனக் கூறினாய்
      இதற்கு எப்படி பொருள் கொள்வாய் ? சிவபிரானை யாராவது தேடுவார்களா? இல்லை தேடுவதற்கு அவர் அருள்வார் என்பது இதன் பொருளா?
      தனைத்தேடித் தருளும் என்பதை தனைத்தேட அருளும் எனக் கொண்டாலாவது ஏதாவது விளங்கும் அப்போதும் அங்கு சுரபங்கமோ இல்லை இலக்கணப் பிழையோ ஏற்படும்.

      இந்த இலக்கணப் பிழையுள்ள பாடலை வில்லியாழ்வார் இயற்றினார் என்பது மடமையிலும் மடமை.

      ஓரேனம் என்று முதல் வரியிலும் போரேனம் என இரண்டாம் வரியிலும் சீரேனல் விளைகிரி என மூன்றாம் வரியிலும் பாரேனை உலகனைத்தும் என நான்காம் வரியிலும் வந்து இயைபோடு பொருந்தியது.

      வேதங்களிலோ புராணங்களிலோ சிவபிரானைத் தவிர
      எந்தத் தெய்வத்தையும் தேடினதாகச் சொல்லவில்லை.சிவபிரானை அரிபிரமர்கள் தேடினர் என்பது வேத சம்மதம் அதனை தான் வில்லியும் கூறினார்.சரி இதனை விடுங்கள் இன்னொரு வில்லியார் பாடலை உமக்குக் காட்டலாம் என நினைக்கிறேன்

      "இன்னம் பலபல யோனியில் எய்தா நெறி பெறவே
      முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா
      அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும்
      பொன் அம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்" என்று அருச்சனன் தில்லைப்பதிக்குத் செல்லுகையில் அடிமுடி அறியா அண்ணலாகிய நடராச மூர்த்தியைப் பணிந்தான் எனக் கூறினார். ஓரேனந் தனைத்தேட என்பதற்கு பொய்ப்பாடம் கற்பித்தைப் போல் இதற்கும் பொய்யான பாடம் கற்பிப்பீரா?

      Delete
    21. அடிமுடி தேடிய சரிதையைப் பொய்யென்றாய் அதற்காதாரமாகக் காட்டிய அனைத்தையும் பொய் என்னும் அற்பமாக விலக்கினாய்.

      ஆறுமுக நாவலர் பதிப்பித்த போதே அதனைக் கண்டிக்க வலியின்றி இப்போது அவரில்லாத இக்காலத்தில் அவர் மேல் பழிபோடுவது பொருந்தாது.

      நீ கூறும் பொய்யான பாடத்தை ஆறுமுக நாவலர் மகாபாரதம் பதிப்பித்த போதே அதற்கு எதிராக ஏன் வைணவர்கள் பதிப்பிக்கவில்லை?

      சரி இப்போதாவது அந்த பொய்யான பாடத்தை வைணவர்கள் பதிப்பித்து இதுதான் உண்மை என பகிரங்கமாக வெளியிடலாமே? எதற்கு ஆறுமுக நாவலர் திருத்தினார் என்று வஞ்சப்பிரசங்கம் செய்ய வேண்டும்

      இப்போது தான் வைணவர்களுக்கு ஞான உதயம் பிறந்ததோ? சரிவிடு உங்கள் கிருஷ்ணமாச்சாரியாரே ஓரேனந் தனைத்தேட எனும் பாடலுக்கு உரையெழுதி வெளியிட்டுள்ளாரே அதற்கு என்ன பதில்?

      ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திற்கு முந்தைய நாயன்மாரான திருமூலரும் இலிங்க புராணம்,சக்கரதானம் முதலானவற்றை இயற்றினாரே. அடிமுடி தேடிய சரிதையும் காணப்படுகிறதே

      "அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி அடிகண்டிலேனென்றச்சதன் சொல்ல முடிகண்டேனென்றயன் பொய் மொழிந்தானே" எனக் கூறி அவைதிகர்கள் வாயில் மண்ணைப் போட்டார்.

      சக்கரப்பேறு பொய்யென்றாய் .அதற்காதாரமாகக் காட்டிய ஆழ்வார் பாடலையும் பொய்யென்றாய்

      ஆனால் திருமூலரோ தனது இரண்டாம் தந்திரத்தில்

      "மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
      கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
      மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
      பார்போக மேழும் படைத்துடை யானே " எனக்கூறினார்

      சக்சரம் பெற்ற திருமாலுக்கு அதனைத் தாங்க வலியின்றி மீண்டும் சிவபிரானைப் பூசித்து சக்கரந்தாங்கும் வலிமையடைந்தார் எனவும் கூறினார்
      .
      "சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
      சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
      மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
      தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே"

      இதனைத் தான் கந்த புராண ஈசானஸம்ஹிதையும் கூறியது

      அனைவருக்கும் முந்தைய காலம் திருமூலர் வாழ்ந்த காலம் அப்போது வேதமோ புராணமோ திருத்தி எழுதியிருக்க வாய்ப்பில்லை அதனால் சிவபுராண பிரஸ்தாபங்களெல்லாம் கூறும் சரபம் ,பஸ்மஜாபாலத்தின் கூற்று சலியாத உண்மையே என்க

      அனந்தபத்ம நாப ஸ்வாமி அஸ்டோத்திரத்தை நன்கு ஆராய்ந்து தான் உனக்கு கூறினேன் . ஈஸ்வர மூர்த்தி கூறினார் என்றோ பாம்பன் சுவாமிகள் கூறினார் என்றோ நான் உனக்குக் கூறவில்லை. அதனைத் தேடிப் பிடித்து சரி அவர்கள் கூற்று உண்மைதான் என நிச்சயித்தே உனக்குக் கூறினேன்.
      அஷ்டோத்திரத்தை ஆராயாத உனது கூற்று பொய்யாய் முடிந்தது

      Delete
    22. கோமாமாளபுரம் இராசகோபாலபிள்ளையவர்கள் பழைய ஏட்டுக்குறிப்பையும் புதுப்பதிப்பின் மாற்றத்தையும் காண்பித்தே பதிப்பித்துள்ளார்.மூலபாரதத்துள் வராத ஒன்றை வைணவர் பாடுவார் என்கிறதே யூகிக்ககூடிய பொய்.வில்லிபாரதம் படகத்தரிருந்தால் உனக்கு தெரிந்திருக்கும் ஆனால் நீர்படித்தது சாம்பல் பூசிய சாஸ்திரிகளின் நூலல்லவா?

      ஓரேனந்தனைத்தேடவொளித்தருளுமிருபாதத் தொருவனந்தப்,
      போரேனந்தனைத்தேடிக்கணங்களுடன் புறப்பட்டான்...என்பது சைவபதிப்பு- இதனர்த்தம்- ஒரு பன்றி தன்னைத்தேட ‌இரு திருவடிகளை மறைத்த ஒரு(ஒப்பற்ற) இறைவன். ( இரு பாதத்தொருவன்) என்று கூறிற்று.இது ஏகபாத மூர்த்தமல்ல.

      ஊண்மை பாடம்- யாரேனுந் தனைத்தேடனளித்தரு மிருபாதத்திறைவன் ( தீய எண்ணமுடையோர் கூட தவத்தால் தன்னை தேடின் அவர்கள் எண்ணத்தை கருதாமல் அவர்கள் வெளிக்குங் காட்டும் ஒருமிகுமாக அருள் செய்யும் இறைவன்)
      என்பதே அப்பொருள்.விருகாசூரன் இரண்யன் கதையில் விளங்கும்.
      இதுவே உண்மை என்று சைவபதிப்பும் கூறுகிறதே.

      வேதத்திலும் சாத்வீக‌ புராண இதிகாசத்திலும் அடிமுடி தேடிய தாமஸகதை இல்லாததால் பரமவைதிக வைணவர் அதை பாடவுமில்லை.வருந்தேவர் பாடிய நீடாழி உலகத்து என்ற பாடல் எப்படி வில்லியில் புகுந்ததோ அப்படியே சைவதிரிபும் புகுந்தது.

      அப்படிபொய் பதிப்பை நிரூபிக்க சைவர்கள் எத்துனை பாடு படுகிறார்கள்.
      இவ்வரிக்கும் உண்மை பாடம் மேலே சொல்லியாயிற்று‌..

      'முன்னம் பலர் நறுமாமலர் முறை தூய்மைப்படுத்தும் மகிழ்வெய்தா..என்ற அடியைதிரித்து அப்படி புரட்டி கீறினர் புண்மதியோர்.அதுமட்டுமா?

      8ம் போர்சுருக்க முதற்கவியில் '
      பூத்த நாபியும் தாமரைப்பூவில் வந்து
      பல்பூதமும் சேர்த்த நான்முகப் புனிதனும், சிவனும் யாவரும், தேவரும்.....' என்று வருமிடத்து சிவனும் எனச்சொல்லவஞ்சி சிவனும் என்பதை முனிவர் என்றல்லவோ பதிப்பித்தனர் லகடபாண்டிகள்

      Delete
    23. அற்பமாக விளக்கவில்லை.அவை வேதநிந்தா அநர்த்தம்.என்பதால் வைதிகர்கள் அதை விலக்க கடவது.
      ஆறுமுகநாவலர் பதிப்பித்த பிறகுதான் உண்மைபாடம் இராசகோபாள பிள்ளையவர்களால் தேடிகண்டு பதிக்கப்பட்டது. ஏன் இதை கண்டித்து உம்போலவே பாம்பனும்,தொழுவூர் வேலாயுத முதலியும் கதறினார்களேயன்றி உண்மையை‌ மறுக்க இயலவில்லை. இப்போது? வெளியிடவில்லையா? அப்போ எதை வைத்து வைணவர்கள் திருத்தி விட்டனர் என்று கூறுகிறீர். சுய அறிவில்தானா? அல்லது சைவபுத்தகம் படித்து கலக்கம் மிகுந்து பேசுகிறீர் போலும்‌.

      கிருஷ்ணமாச்சாரியாரின் உரையை நான் படித்தது இல்லை.நீர் படித்தீரென்றால் ஆதாரத்தோடு அதை வெளிப்படுத்தின் அதற்கு பதிலுறைப்போம். சைவநாயன்மான்ர்கள் தாமஸபுராணங்களை படித்து பாடினார்களே ஒழிய வேதத்திலுள்ளதாக பாடவில்லை.பாவம் அவர்களூக்கு வேறு வழியுமில்லை.புராண இதிகாசங்களை படித்தறிந்த சங்கசான்றோர்கள் கூட திருமாலை இழிவு படுத்துங்‌கதையை பாடவே இல்லை.

      ஆதாரம் இல்லாத புரளியை கட்டவிழ்த்து விட்டால் அதை பொய்யென்றெண்ணாம்ல வேறென்ன? அப்படி பதிப்பிலிருந்தது உண்மை எனில் அது எந்தபதிப்பு என்று காட்ட சொன்னேன்.அது செய்ய‌முடியாமல் பதறுவதாலுங் கதறுவதாலும் அப்பொய்மை உண்மையாகா. சைவர்களுடைய நம்பிக்கையை ஒரு சைவர் பாடுவது ஒரு ஆதாரமோ? திருமூலர் சங்ககாலத்து சான்றோர் என்றால் வேறுபேச்சேயின்றி அதை ஏற்கலாம் அதுவுமில்லை....ஆகவே தாமஸபுராணத்தை அணுஸந்தித்து அதை பாடினர். சைவபுராணதாமஸ விருத்நாந்தத்தை பல புராணங்களிலும் திரித்து விட்டனர் என்பதே வழக்கு.அன்றியும் அக்கதை மறுக்கதக்கதே என்னையெனில் நரசிம்ஹதாபனீயுபநிஷத்து சுதர்சன மஹிமையை கூறுங்கால் கண்டுகொள்க

      முதலில் அனந்த பத்மஸ்வாமி அஷ்டோத்திரம் ப்ராமணிக்கதக்கதா என்பதே கேள்வி. நீர் ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அஷ்டோத்திரம் அல்லது பாம்பன் சதோஷ்டத்திர நாமாவளி என்று எழுதி வைத்துவிட்டு பிற்கால சந்ததியினரை ஏமாற்றலாம்.ஆகலினால் அது எந்த புராணம் என்பதை காட்டுக

      Delete
  9. மூடர்களே!சிவபிரான் ஒருவனே முக்திக்காக தியானிக்கப் படவேண்டும் ("சிவ ஏகோத்யேய:") என்று அதர்வசிகை அறுதியிட்டுக் கூறுகிறதே இதனை அறியாத நீ
    எல்லாம் பேசவந்துவிட்டாய்.

    புராணங்களில் நீங்கள் இடைச்செருகல்களும் திரிதல்களும் நீக்கலும் செய்யவில்லை என்பது சத்தியமானால் நீங்கள் உண்மையாகவே புருஷோத்தமர்களென்றால் ஏன்
    வில்லிபாரதச் செய்யுளான "ஓர்ஏனம் தனைத்தேட ஒளித்தருளும்" என்னும் அரி சிவனின் திருவடியைத் தேடிய செய்தியை தெரிவிக்கும் பாடலை நீக்கிப் பதிப்பிக்க வேண்டும்?

    அதுமட்டுமின்றி சிவபிரானைப் பூசித்து திருமால் சக்கரம் பெற்றதைத் தெரிவிக்கும் நம்மாழ்வாரின் குறுங்குடி திருவாயாமொழியான
    "செக்கர் வானச்சடையோன் சேவடிக் கீழ்ந்நாளின் சக்கரம் நீ பெற்ற விளையாட்டே போல்" என்பதையும் பதிப்புகளில் நீக்கியிருப்பது ஏன்?

    அதுமட்டுமின்றி வான்மீகி ராமாயணத்தில் இராமன் வீபூதி அணிந்ததைக் கூறும் "த்யாத்வா ரகுபதிம் க்ருத்தம் காலாநலமிவாபாரம் பீதக்ருஷ்ணாஜிநதரம் பஸ்மோ தூளித விகரஹம்" என்னும் ஸ்லோகத்தையும் நீக்கியிருப்பதிலிருந்தே வைணவர்கள் ஸ்மிருதி புராண இதிகாசங்களில் பல திருத்தங்களை செய்து எழுதியிருக்கிறார்கள் என்பதை நன்குணரலாம்.

    இன்னும் பாத்மோத்தரம், லாந்தோத்தரம்,காந்தோத்தரம் முதலானவற்றை வஞ்சகமாக புகுத்தியிருப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

    அவற்றில் சொல்லப்பட்ட எந்த செய்திகளைப் பற்றி வேதங்களில் ஒருசிறுகுறிப்புக் கூட இல்லாததால் அவை அனைத்தும் கற்பனைகளேயாம்

    ReplyDelete
    Replies
    1. அதர்வசிரஸ் முதலிய உண்மை உபநிடதங்களில் சிவ ருத்ர நாமங்கள் யாவும் நாராயணனுக்கே பரத்துவம் என்பதை அறிக.

      காலங்காலமாக‌ கற்பிதங்கள் செய்தது சைவர்களே அன்றி வைணவரகள் இல்லை.வில்லிபாரதத்தில் இல்லாதவற்றை திணித்து பதிப்பித்து சைவர்களே...இதை வில்லிபாரத விநோத திருத்தங்கள் என்கிற நூலில் காணலாம்.
      மூலபாரதத்தில் இல்லாத அடிமுடி தேடிய கதை வில்லிபாரதத்தில் இடம்பெறல் எங்கணம்?இதிலிருந்தே சைவர்களின் திருட்டுத்தனம் தெரியவில்லையா?
      ஓர் வாதம் வைப்பின் அதற்கு ஆதாரம்‌வைக்க வேண்டும்‌ என்கிற அடிப்படை இல்லாமல் நம்மாழ்வார் பாடியதாக ஒரு செய்யுளை புகுத்தின் அதை ஏற்கமுடியுமா?


      வான்மீகி ராமாயணத்தில் எப்புண்டரம் பற்றியும் பேச்சில்லை மேல் நீர் குறிப்பிட்ட ஸ்லோகம் பின்னாளில் எழுந்த அத்யாத்ம ராமாயணத்தில் வரக்கூடுமே ஒழிய வால்மீகியில் இல்லை.பாத்மோத்தர காந்தோத்தர புராண கதைகள் எல்லாமே வேதத்தில் வரவேண்டுமென்கிற அவசியமில்லை........

      Delete
    2. த்யாத்வா ரகுபதிம் க்ருத்தம் காலாநலமிவாபாரம் பீதக்ருஷ்ணாஜிநதரம் பஸ்மோ தூளித விகரஹம்" என்ற ஸ்லோகமானது வான்மீகத்தில் தான் உண்டு.
      அத்யாதமத்தில் ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் என்னும் ஸ்லோகம் தானிருக்கிறது

      Delete
    3. மார்க்கண்டேய முனிவர் எதனால் சிரஞ்சீவித்துவம் அடைந்தார் என்று உங்களுக்கு கூறுகிறேன் .

      தக்ஷிணாமூர்த்தி உபநிடதம் 'ப்ரஹ்மாவர்த்தே மஹாபாண்டீர வடமூலே மஹாஸத்ராய ஸமேதா மஹர்ஷயச் செளநகாதயஸ் தேஹ ஸமித்ராணய ஸதத்வஜ்ஞ் ஞாஸவோமார்க்கண்டேயம்சிரஜீவி நமுபஸமேத்ய பப்ரச்சு:, கேநத்வம்சிரஜீவ்யஸிகேந வாநந்த மநுபவஸீதி, பரமரஹஸ்ய சிவதத்வஜ்ஞாநம். ஸஹோவாசயேந தக்ஷ¢ணாமுகச் சிவோபரோக்ஷ¢ க்ருதோபவதி தத்பரம ரஹஸ்ய சிவதத்வஜ்ஞாநம்' (பிரஹ்மா வர்த்தத்தில் மஹா பாண்டீர மென்னுமால மரத்தடியில், மஹா ஸத்திர மென்கிற யாகத்தின் பொருட்டுக் கூடிய செளநகர் முதலான மஹரிஷிகள் க்ருசிச்ருஷார்த்தமாக ஸமித்துக் களைக்கையில் தரித்தவர்களும், தத்துவத்தை யறியவேண்டு மென்கிற விச்சையுள்ளவர்களுமாகிச் சிரஞ்சீவியான மார்க்கண்டேயரை யடைந்து பிரச்னஞ் செய்தார்கள். எதனால் நீர் சிரஞ்சீவியாக விருக்கின்றீர்? எதனாலானந்தத்தை யனுபவிக்கின்றீர்? என்று கேட்டவளவில் மார்க்கண்டேயர் சொல்லுகிறார். அது பரமரஹஸ்ய சிவதத்வஞான ஸித்தியாலென்ற வளவில் பின்னும் அந்தப் பரமரஹஸ்ய சிவதத்வஜ்ஞானமெது வென்று பிரசினித்தவர்களுக்குத் திரும்பவுஞ் சொல்லுகிறார். எதனால் தக்ஷ¢ணாமுகரான சிவபெருமான் அபரோக்ஷமாகப் பவிப்பாரோ, அதுவே பரம ரஹஸ்யமான சிவதத்வஞானமென்றறிவீர்கள்) என்கிறது. சிவதத்வஞானமே மார்க்கண்டேயர்க்குச் சிரஞ்சீவித்வத்தைத் தந்ததென்பது அவ்வுபநிஷத்தில் ஸ்பஷ்டம். அச்சுருதியை விரோதிக்கும். அச்சடகோபர் பாட்டு ஸத்துக்கள் சந்நிதியிற் கனம்பெறுதல் யாங்ஙனம்? "மஹேச்வரர் எதிரில் தோன்றினார். சிவனைப் பார்த்து மார்க்கண்டேய முனிவர் நமஸ்கரித்தார். பலவித ஸ்தோத்திரங்களால் துதித்தார். மஹாதேவர் அந்த மஹாமுனிவரை, 'முனியே! உனக்கு மங்களம். வரத்தைக் கேள்?' என்று சொன்னார். பரமாத்மாவான அந்தச் சிவனால் இவ்வண்ணம் தெரிவிக்கப்பட்ட அவர் பரமேச்வரரைப்பார்த்து, 'சம்புவே! ஸ்வாமி! உம்முடைய சரணாவிந்தத்தில் மற்றவர்களால் எளிதில் அடையமுடியாததும் வேறிடத்துச் செல்லாததுமான பக்தியைத் தவிர வேறு வரத்தை நான் வேண்டவில்லை' என்று சொன்னார். பகவான் முனிவரைப் பார்த்து 'உன்னுடைய பிதாவினால் புத்திரன் உண்டாவ்தற்காக ஆராதிக்கப்பட்டேன். என்னால் நீண்ட ஆயுளானது உனக்குக் கொடுக்கப்பட்டது' என்கிற வாக்கியத்தைச் சொன்னார். ஈச்வரர் இவ்வண்ணம் சொல்லிவிட்டு அவ்விடத்திலேயே மறைந்தார்" என்ற வனம் 130வது அத்தியாயம்.

      இதனால் விஷ்ணு சிவனுக்கு எமனை அழிக்கும் வல்லமை தந்ததாக பாரதத்தில் இல்லாததால் நம்மாழ்வார் பாட்டு அவைதிகமாய் முடிந்தது.

      Delete
    4. வில்லிப்புத்தூரார் இயற்றிய பாடல் வடமொழி பாரதத்தில் இல்லை எனில் அவர் பல இடங்களில் கண்ணனை உயர்வாகக் கூறியதும் வடமொழி பாரதத்தில் இல்லையே? கிருஷ்ணார்ச்சுனர்கள் கயிலை செல்லும் நேரத்தில் சிவன் கண்ணனை வரவேற்றதாகவும் புகழ்நததாகவும் வில்லிபுத்தூரார் கூறியிருப்பதற்கு வடமொழியில் மூலமில்லையே! அவர் பாரதத்தை அப்படியே மொழிபெயர்கவில்லை தனது கருத்துகளையும் சேர்த்து தான் இயற்றி இருக்கிறார்.

      கம்பரும் வான்மீகத்தில் உள்ள சீதையை இராவணன் மடிமேல் வைத்துக் கொண்டு போனான் என்று சொல்லதற்கு அஞ்சி
      பர்ணசாலையோடு தூக்கிக் கொண்டு போனான் என்று கூறியிருக்கிறார்.வடமொழி மூலத்தில் இல்லாததை ஏற்றுக் கொள்ளும் நீர் ஓர்ஏனம் தனைத்தேட என்னும் பாடல் வடமொழி மூலத்தில் இல்லை அதை ஏற்கமுடியாதெனக் கூறுவது சிரிப்பை விளைவிக்கிறது

      Delete
    5. ருத்ரமூர்த்தியை தாமஸி என்று நிந்தித்தும் அவருக்கு திரிபுராந்தகன் என்னும் பெயரை பிச்சையாக விஷ்ணு கொடுத்தது என்று நிந்தித்து விட்டு இப்போது அதர்வசிகை ருத்ர நாமங்களைக் கொண்டு பரத்துவம் சாதிப்பதால் அந்த சிவநாமங்கள் விஷ்ணுவுக்குரியது என்று சொல்வதற்கு நாக்கு கூசவில்லையா? கொஞ்சம் கூட வெட்கமென்மபதே இல்லையா?

      சர்வேஸ்வரன் ஈஸ்வரன் முதலான பதங்கள் சிவபிரானைத் தான் குறிக்கும். அதனைத் விஷ்ணுவுக்குரியது என்று வைணவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?

      Delete
    6. மார்க்கண்டேயன் தான்‌ சிரஞ்ஜீவியாய் வாழவேண்டுமென சிவனைத்தொழுதானன்றி
      பரமபுருஷார்த்த மோக்ஷத்தை விரும்பி தொழுதிலன். ஆதலினால் மோக்ஷத்தை கொடுக்க வல்லவன் நாராயணனே என்றுண்மையை அவனறிந்து
      'ஸ்ரீ பித்ருபத்தோஸி விப்ரர்ஷே மாஞ்சைவ சரணம் கத' என்றுவருமிடத்து மார்கண்டேயன் ஸ்ரீமந்நாராயணனை சரணம் புகுந்தான் என நன்கு விளங்கும்.
      "ஈஸ்வராத் ஜ்ஞாநமந்விச்சேத் மோக்ஷமிச்சேத் ஜநார்த்தநாத்' சிவனிடமிருந்து மோக்ஷமளிக்கவல்லவன் யார் என்ற அறிவைப் பெறலாம்.
      ஜனார்த்தனனிடமிருந்து மோக்ஷத்தை பெறலாம் என்கிற ஸ்மிருதியும் உபப்பரஹ்மானம்.

      அவ்வாரண்ய பர்வத்து 192வது அத்யாயத்தில் ப்ரளமுடிவில் ஆலிலையில் துயில் கொண்ட கிருஷ்ணுடைய வயிற்றுள்புகுந்த மார்கண்டேயன் அவனே ஸ்ருஷ்டிஸ்திதிஸம்ஹார கர்த்தாவென்பதை கண்டுணர்ந்து‌‌ யுதிஷ்டரிடம் உரைக்குமாற்றை கபாலம்கலங்கிய நீவீர் கண்டுகொள்க

      "அஸ்யைவ வரதாநாத்தி ஸ்ம்ருதிர்ன ப்ரஜஹாதி மாம்। தீர்கமாயுஸ்ச கௌந்தேய ஸ்வச்சந்த மரணம் மம" என்று ஜனார்த்தனுடைய‌ வரத்தாலேயே எனக்கு ஞாபகசக்தியானது விட்டகலுவதில்லை; எனக்கு தீர்க்கமான ஆயுளும் என்னிஷ்டபடி மரணமும் ஸித்தித்துள்ளது என்பது அவ்வத்தியாயத்தில் மார்க்கண்டேயர் வாக்கு.ஸ்ரீமத் பாகவதத்திலும் 12ம் ஸ்கந்தத்தின் எட்டாம் அத்தியாயத்தில்
      'ஆராதயந் ஹ்ருஷீகேசம்
      ஜிக்யே ம்ருத்யும் ஸூதுர் ஜயம்'
      ஸ்ரீ‌ மந்நாராயணனை ஆராதித்து வெல்லவொண்ணாத யமனை வென்றொழிந்தான் என்று சொல்லப்பட்டது.இத்யாதி ப்ரமாணங்களால் சைவ விதண்டாவாதிகள் வாய்களணைத்தும் மண்ணைக் கவ்வியது.

      Delete
    7. வில்லிபாரதத்தில் சைவர்கள் மூலபாரதத்தினின்று பலமாறுதல்களை செய்துவிட்டனர்.அச்சியந்திரம் வருமுன்னரே இவ்வாறு திருத்திவிட்டதாலும் அச்சியந்திரம் வந்தபின்னரும் அவர்களே அதை பதிப்பிட்டதாலும் உண்மைபாடம் சமான்யர்களால் அறியப்படவில்லை.
      பின்பல ஏடுகளை சோதித்து உண்மைபாடத்தை கண்டு கோமாளபுரம் இராசகோபாளபிள்ளை வில்லிபாரதத்தை பதிப்பித்தார்.

      "யாரேனுந் தனைத்தேடித் தருளுமிரு ஒரு பாதத்திறைவன்....
      "என்பதற்கு‌ பதிலாக 'ஓரேனந்தனைத்தேட ஒளித்தருளிமிரு பாதத்திறைவன்...'என்று புரட்டி கீறிவிட்டனர்.

      மேலும் 'முன்னம் பலர் நறுமாமலர் முறைதூய் மகிழ்வெய்தா..?'என்றடியை மாற்றி 'முன்னம் பலரடி தேடவுமுடிவுமெட்டா .....
      பொண்ணம்பலநாதன்' என்றேற்றிவிட்டனர்.

      அம்மட்டோ? பற்பலவிடம்.விரிவஞ்சி விடுகிறோம். 'அறனை‌ மறவேல்' என்பதை அரனை மறவேல்' என்றும் 'சினத்தை பேணில் தவத்திற்கிழிவு' என்பதை சிவத்தை பேணில் தவத்திற்கழகு' என்றமாற்றிய சைவசிகாமணிகள் வில்லிபாரதத்தை விட்டுவைக்காததில் விந்தையில்லை.

      தவிற கம்பராமாயணங்களில் சிலவிடம் மூலத்தினிற் வேறுபடுவது கம்பரின் கவித்திறத்தை காட்டுவதே.அப்பகுதிகள் படித்துவச் சுவைக்க வேண்டியவிடம் படித்தும் மூலத்தினின்று வேறுபட்டு முரண்படுங்கால் மூலராமாயணத்தையே முடிபாகக் கருதல் வைதிகர் கொள்கை

      Delete
    8. ருத்ர,சிவ முதலிய நாமங்கள் நாராயணருக்குரித்தானதே என்பதும் அப்பதத்திற்குரித்தான பரத்வம் அவனே என்பதை மேலே காட்டினோம்.ஆனால் புருஷஸுக்தாதாகளில் லக்ஷ்மிபதி என வேறுதேவர்களை காட்டவொண்ணாதபடி அப்பதத்திற்குரியவன் பரந்தாமனென வேதம் விளம்பியதை மாற்றி அதில் சிவபரத்வம் சாதிக்கமுயன்றுத்திணறும் சைவர்களுக்கு கூசாத நாக்கு ஏன் ஸத்ஸம்பரதாய வைணவர்களுக்கு கூசவேண்டும்? திரிபுராந்தகனெனும்‌ பெயர் விஷ்ணுபிரசாதத்தினால் விளைந்ததாக கூறினேனே ஒழிய சிவனை நிந்திக்கவில்லை.
      இம்மாதிராயான அடையாளப்பெயர் கொண்டும் சிவனுக்கு பரத்துவம் கூறவில்லை.

      Delete
    9. நீ எதனால் விஷ்ணு சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் இருந்து
      திரிபுரமெரித்தார் என்று கூறினாய் என்பதை நன்கு அறிவேன்

      "விஷ்ணுராத்மா பகவத:-பவஸ்யா மிததேஜஸ:1 தஸ்மாத் தநுர்ஜ்யாஸம்ஸ்பர்சம் ஸஸவிஷேஹே மஹேச்வர" என்றது கர்ணபர்வ மூலம்

      இதற்கு உனது ஆச்சாரியாரின் மொழிபெயர்ப்பு

      "ஷாட்குண்ய பரிபூரணரும் அளவற்ற தேஜஸை உடையவருமான ஈசுவரருக்கு மஹாவிஷ்ணுவானவர் ஆத்மா"

      இம்மொழிபெயர்ப்பு பாரபட்சமானது.
      ஏனெனில் 'மஹத் 'என்ற அடை 'ஈச்வர 'என்ற பதத்தோடு சேர்ந்தது அதனால் சிவபிரானை மஹேஸ்வர என்றது கர்ண பர்வ மூலம்.

      ஆனால் உனது ஆச்சாரியார் அதற்கு
      விஷ்ணுவை மஹத் சப்தம் குறிக்கவே இல்லை. ஆனால் சிவபிரானை ஈசுவர என்று சொல்லி மஹேஸ்வர என்னும் பதத்திலிலுள்ள மஹத் பதத்தை விஷ்ணு என்னும் பதத்தோடு சேர்த்து மஹாவிஷ்ணு என்றாக்கியது சிறுதும் நியாயமாகாது.

      இம்மொழிபெயர்ப்பில்
      இன்னொரு குற்றம் என்ன எனில் மூலத்தில் பகவன் என்ற சொல் இருப்பதை விட்டு அளவற்ற தேஜஸை உடையவர் என்பதை மட்டும் மொழிபெயர்த்து பகவத் சொல்லை விட்டதும் நியாயமாகாது.

      வடமொழியில் ஆத்மா என்று இருப்பதை அந்தாரத்மா என்று பொருள்கொள்வது
      சிறிதும் பொருந்தாது.

      மேல்காட்டப்பட்ட மூலத்தில் சிவபிரானையே பகவன்,அளவற்ற தேஜஸை உடையவன்,
      மஹேஸ்வரன் என்று சிறப்பித்து விஷ்ணுவை ஒரு விசேஷண பதத்தாலும் மதிக்கவில்லை.

      அதனால் அது எந்த நிலையில் விஷ்ணுவை ஆன்மா எனக் கூறியது என்பது நடுநிலையாளருக்கு ஆனந்தமாகவே இருக்கும்.

      வன பருவத்தில் 49 ஆவது அத்தியாயத்தில் "கிருஷ்ணருடைய ஆத்மாவான அருச்சுனன் மஹாத்மாவான அவரைக் குறித்து......"

      ஆத்மா என்பதற்கு சரீரம் என்றும் உயிர் என்றும் பொருள் உண்டு

      இதில் அர்ஜூனன் சரீரமும் கிருஷ்ணன் உயிருமாவார்.

      இவ்வாக்கியத்தை உனது ஆச்சாரியார் மஹாத்மா என்பதை அப்படியே மொழிப்பெயர்த்தார்.

      அதனைப் போலவே கர்ணபர்வ ஸ்லோகத்தையும் மொழிபெயர்த்து இருக்கவேண்டும்.

      வனபருவத்தில் அருச்சுனனை கிருஷ்ணனுக்கு ஆன்மா என்றதால் அந்த மதுஸூதனனுக்கு அருச்சுனன் அந்தர்யாமி ஆவானா?

      அதனைப் போலவே கங்காதரனுக்குக் கேசவன் அந்தர்யாமியாக இருக்கமாட்டார்.

      அதன் உண்மையான மொழிப்பெயர்ப்பு

      "அளவில் தேஜஸை உடையவனும் பகவானுமாகிய மஹேஸ்வரர்க்கு
      அச்சுதன் ஆன்மா"

      இவ்வாறு கிருஷ்ணனை மஹாத்மா என்றும்
      அருச்சுனனை அவருக்கு ஆன்மா என்றதற்குக் காரணம் அவ்விருவருக்கும் அபேதம் சொல்லும் பொருட்டு உபசரித்துக் கூறியது.

      அதவாது
      இதனைப் போலவே மஹேஸ்வரனான சிவனுக்கு அச்சுதன் ஆன்மா என்பதற்கும் அவ்விருவருக்கும் பேதமில்லாததைச் சொல்லுவதற்கு அவ்வாறு உபசரித்தது அக்கர்ணபர்வ மூலம்.

      ஆத்மா என்பதற்கு அந்தர்யாமி எனப் பொருள் கொள்வாயானால் அளவில் பேரொளிப் பகவன் என்று சிவபிரானை உயர்த்திக் கூறியதோடு முரணுமாறறிக

      சரீரியை விட அவனுடைய அந்தர்யாமியாய் விளங்குபவனையே சிறப்பிக்கவேண்டும்.
      ஆனால் அந்த ஸ்லோகம் விஷ்ணுவை அவ்வாறு சிறப்பிக்காததால் அந்த விஷ்ணுவின் நிலை ஸப்ஷடமாயிற்று.

      இதில் இன்னொரு தாத்பரியம் என்ன என்றால் சரீரியாகிய
      அருச்சனனுக்கு கிருஷ்ணன் உயிரானார்.
      அதனைப் போல சரீரியாகிய கேசவனுக்கு கங்காதரன் உயிரானார்.

      அருச்சுனனும் கிருஷ்ணனும்
      உடலும் உயிரும் போல் பிரிவற்று இருப்பதுபோல்

      மாயவனும் மணிகண்டனும் உடலும் உயிரும் போல் பிரிவற்று இருக்கின்றனர் என்று தான் பொருளே தவிர அதற்கு சிவனுக்கு விஷ்ணு அந்தர்யாமி என்று பொருள்கொள்வது தவறாகும்.

      விஷ்ணுபாணமே திரிபுரங்களை எரித்தது என்றாய்

      அதனை பாரதமே ஏற்றுக்கொள்ளவில்லை
      "பிறகு,ருத்திரர் வில்லில் நாணேறிட்டு அவ்விதமான பாணத்தைப் பூட்டி பாசுபதாஸ்திரத்தோடு சேர்த்துத் திரிபுரங்களை அழிக்கவேண்டுமென்று எண்ணினார்," என்ற கர்ண பர்வ அத்தியாயம் 27 இன் படி விஷ்ணுபாணம் தன்னளவில் முப்புரமழிக்க வலியின்றி பாசுபதாஸ்திரத்தின் ஸாநித்தியம் பெற்றே திரிபுரம் எரித்தது பெறப்படுவதால் அவ்விஷ்ணுபாணத்தின் சாமானியத்துவம் பாரதசம்மதாமாகும்.

      நளாயினியை இலக்குமி என்றதற்குக் காரணம்
      ஸ்வர்க் கரோஹபர்வம் 4 ஆவது அத்தியாயம்

      "இந்திரன்....யுதிஷ்டிரரே! இவள் ,கர்ப்பத்தில் பிறவாதவளும் உலங்களுக்குப் பிரியமானவளும் புண்ணியசம்பந்தமுள்ளவளான இலக்குமி உமக்காக திரௌபதி வடிவெடுத்தக் கொண்டு மானிடத் தன்மையை அடைந்தாள் .இவள் உங்களுடைய போகத்திற்காக பரமசிவனால் படைக்கப்பட்டுத் துருபதனுடைய குலத்தில் பிறந்தாள்.உங்களாலும் அடுக்கப்பட்டாள்...என்று
      கூறினான்" என்பதால்
      இலக்குமியே திரௌபதி என்பது வெளி

      ஆதி 215 அத்தியாயமும்
      திரௌபதியும் ,லக்ஷ்மி முன் செய்த தவத்தாலுண்டான சங்கரருடைய அனுக்கிரகத்தினால் பாண்டவர்களனைவர்க்கும் மனைவியானாள் என்றது.

      இதனைத் தான் உனக்குக் கூறியதே தவிர நான் இலக்குமியை நித்திக்கவில்லை

      Delete
    10. இதற்குமேல் விவாதிக்க மாட்டேன் என்று ஓடிவிட்டது மறுபடி பலநாள் கழித்து பதிவிட்டு உன்னுடைய குறுக்குபுத்தியை காட்டிவிட்டாய். அவ்வாக்யத்தில் விஷ்ணுராத்தமா என்று விஷ்ணுஆத்மாவாக... பகவதோ பவஸ்யாமிதேஜஸ.... பகவான் சிவனுக்கு இருந்ததை காட்டிற்று. தஸ்மாத் தநுர்யாஸம்ஸர்க்கம் அதனாலேயு வில்லை நாணேற்றமுடிந்தது என்பது அதனர்த்தம்.இதை கங்குலியின் மொழிபெயர்ப்பும் ஆதரித்துள்ளது.

      இதிஹாசத்திலும் உயர்ந்தது வேதமாகையால் வேதத்தில் வரும் வாகாம்ப்ருணீ ஸூக்தத்தின் 6வது அநாவாகத்தில் 'அஹம் ருத்ராய தநுராதநோமி... என்று நானே ருத்ரனுக்கு நாண் பூட்டினேன்‌ என்று இருப்பதால் அதை அநுஸரித்து மொழிபெயர்த்த வேதசம்பந்தமான மொழிபெயர்ப்பு எப்படி தவறாகும்? ஆக வேதமே சிவனுக்கு விஷ்ணு அந்தர்மியாய் இருப்பதை ஒப்புகொண்டதோடு சங்கச்சான்றோரும் இதை எழுதிவைத்திருக்க ஈஸ்வரமூர்த்தி பிள்ளையின் விதண்டாவாதம் சான்றோர் வாக்கின்முன் பரிதிகண்டபனியாம்

      விஷ்ணுபானமே திரிபுரம் அழிக்க வல்லது என்று எங்குமே கூறவில்லை.சுலோகபஞ்சகத்தை படித்துவிட்டு தலைகால் புரியாமல் உளறுகிறீர் போலும்😂😂😂

      நாளாயினியே திரொளபதியாக தவமிருந்து பிறந்ததாக பாரதம் கூற 'லக்ஷமி' என்கிற பதம் மங்களசப்தமாக பலவிடம் பாரதத்தில் படிக்கபட்டிருக்கையில் சிற்றரிவால் விஷ்ணுபத்தினியை அங்கனம் பிறந்ததாக கூறியதிலிருந்து சைவர்களின் அறிவின்மை வெளி.

      Delete
  10. கேட்க ஆளிலில்லை என்பதற்காக எதனை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா? கொஞ்சமாவது
    யோசிக்கவேண்டும்.

    விஷ்ணுவை சத்துவ குணமுடையவர் என்று கூறுகிறாயே !அப்படியெனில் அவர் ஏன் பஸ்மாசூரனை அழிக்க மோகினி வடிவமெடுக்க வேண்டும்? சங்கு,சக்கரம்,கதை,சாரங்கம் முதலிய ஆயுதங்களிருக்க ஏன் பேடி வடிவம் கொண்டார்?
    நேருக்கு நேராக போர் புரிந்து அவனை அழித்திருக்கலாமே.
    அவனை நேரில் அழிக்க வலிமையின்றி வஞ்சகமாக கொன்றாளே அந்த மோகினி.


    அது மட்டுமா திரிபுராசூரர்களை அழிக்க வல்லமையின்றி அவர்களிடத்தே புத்தனாக தோன்றி வஞ்சித்து அவர்களைத் தீயவழியில் செல்லுவிதாதாரே.அவர்கள் மனைவியின் கற்பையும் அழித்தாரே.

    அவர் ஜராசந்தனிடம் போரில் தோற்றோடிய செய்தி பாரதப் பிரசித்தமன்றோ?

    ஆனால் சிவபிரான் போரில் தோற்றோடியதாக எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?அந்தகாசூரனைத் தன்சூலத்தில் குத்தியும் சலந்தரனைத் சக்கரத்தால் அழித்தும் தக்கனின் தலையைத் துண்டித்தும் முயலகனை தன் காலில் மிதித்தும் பிரம்மவிஷ்ணுக்கள் முதலான தேவர்களை அச்சுறுத்திய ஆலால விடத்தை லோக ஹிதத்திற்காக
    கண்டத்தில் அடக்கியும் தாருகவன ரிஷிகள் ஏவிய புலி,மான்,நாகம்,யானை முதலானவற்றை விளையாட்டாகவே அழித்தும்
    கயிலை மலையெடுத்த இராவணனை தன் கால் நுனிலிரலால் அடர்த்து அவனை அலறவைத்து அவனுக்கு வாள் ,நாள் முதலியவை கொடுத்து அருள்புரிந்தும் விஷ்ணுவின் புதல்வனான மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்தும் அதே விஷ்ணுவின் புதல்வனான பிரமன் தலையைக் கிள்ளியும் தாம் ஒருவரே பரம் என்பதை நிரூபித்திருக்கிறார்.

    சிவபிரான் கண்ணனிடம் தோற்று ஓடினாரென பிதற்றுவீர்கள்.ஆனால் உண்மை
    என்னவெனின் சிவபிரான் கண்ணனுக்கு "எனதருளால் யுத்தத்தில் இனி உம்மை எவனும் ஹிம்ஸிக்கமாட்டான்.யுத்தத்தை நீர் அடைவீராயின் என்னைக்காட்டிலும் மேம்பட்டவராவீர்" என்று வரமளித்ததை பாரதம் அநுசாஸன பர்வம் 45 ஆவது அத்தியாயம் கூறுகிறது. சிவபிரான் அவ்வாறு
    தோற்றோடுவது போல் நடித்தது தான் கொடுத்த சத்தியத்தை காப்பதற்காகவும் பாணாசூரனின் ஆணவத்தை அடக்கவேயாகும் என்று நல்லோர் துணிவர்.

    சிவபிரான் தான் கொடுத்த வரத்திற்காக அவ்வாறு போரில் மறைந்தார்.ஆனால் கிருஷ்ணனோ தான் செய்த சத்தியத்தை மீறி போரில் ஆயுதம் ஏந்தினாரே.இதுதான்
    தர்மத்தைக் காக்கும் வழியோ?

    "போரில் வெல்லப்பட முடியாதவன் சிவபிரான்"என்று பாரதம் அனுஸாசன பருவத்தில் உபமன்னிய மகரிஷி கிருஷ்ணருக்கு உபதேசம் செய்கிறார்

    "தஸ்யாம் ராஜர்ஷ்ய: பண்யஸ்த்கதாதேவர்ஷயா மலா:
    யமம் வைவஸ்தம் காதப்ரஹ் ஷ்டா:பர்யுபாஸதே யயாதிர் நஹூஷ பூரூர் மாந்தாதா ஸோம கோந்ருக: ராமோதாசரதிச்வை லக்ஷ்மணச்ச ப்ரதர்தந:"என்பது வான்மீகம் ஸயா 8ஆவது அத்தியாயம் .

    அதன் மொழிப்பெயர்ப்பு:

    'அந்த யம சபையில் புண்ணியஞ் செய்த மகரிஷிகளும் பரிசுத்தர்களான பிரம்ம ரிஷிகளும் மகிழ்ச்சியுடன் ஸூர்யப் புத்ரனான யமனை ஸேவிக்கின்றனர்.யயாதி,
    நகுஷன்,பூரு,மாந்தாதா,
    ஸோமகன், நிருகன், தசரத புத்திரர்களான இராம இலக்குமணர்கள் யமலோகத்தில் யமதர்மனைப் பணிந்து ஸேவிக்கின்றனர்
    என்று கூறுகிறது.யமதர்மனைப் பணியும் அவதாரபுருஷனான இராமனை யமனைத் தன் காலால்
    உதைத்து மார்க்கண்டேய முனிவருக்கு என்றும் 16 வயதுடன் இருக்கும் சிரஞ்சீவித்துவத்தை வழங்கிய சிவபிரானா வணங்குவார்?வெட்கம்!வெட்கம்!

    யமனை வணங்கிய இராமன் யமனுக்கும் கீழ் .யமனை யுதைத்து அவன் உயிரை வாங்கிய சிவபிரான் யமனுக்கும் மேல் .
    இதனாலும் சிவபிரானின் பரமான்ம இலக்கணம் நன்கு விளங்கும்

    ReplyDelete
    Replies
    1. அசுரர்கள் யாவரும் தன் வினைபயனை தானே அணுபவிக்கும்பொருட்டே அந்தந்த அசுரர்கள் கேட்கும் வரத்தை பொருட்டு அழிகிறார்கள் என்பது புராண பிரஸித்தம். ஹிரண்ய கசிபு மனிதனால் மிருகத்தால் அழிவு வரகூடாது என்று வரம் வாங்க மனிதனும் மிருகமும் சாராத நரசிம்மர் அவனை அழித்தான் அது போலவே தான்வாங்கிய‌ வரத்தாலே அவனை அழிக்கவேண்டுமென்று மோகினி வடிவமெடுத்து சிவனுக்கு உயிர்பிச்சை அளித்தார் எம்பிரான்
      அந்தநன்றி சைவர்களுக்கு இல்லையே

      வைதிகர்களான திரிபுராஸுரர்களை சிவன் அழிக்கமுடியாத சங்கடத்தில் தவித்த போது புத்தனாக மாறி மோகனநூல் செய்து அவர்களை அவைதிகர்களாக மாற்றி சிவனுக்கு அந்தர்மியாய் இருந்து திரிபுராஸுரர்களை அழித்து சிவனுக்கு திரிபுராந்தகன் என்கிற பெயரை பிக்ஷயிட்டது எம்பிரான் என் வேதமும் சங்க இலக்கியமும் விளம்புவதை அறிந்துகொள்ளும்

      அழிக்கும் தொழில் செய்யும் ருத்ரனுக்கு அசுரவதம் ஒன்றும் அரிதல்ல அதனாலவன் பெரியோனா? இதர புளுகெல்லாம் தாமஸகதைகளன்றி வேறென்ன? ஆலகாலத்தை ஹரிநாமம் சொல்லி கேசவனை பாத்திரமாக கொண்டல்லவோ சிவன் விஷத்தை அருந்தினான் வேதமும் இதை சொல்லும் மேலும்.பிரம்ம புத்திரனான சிவன் தன் தந்தை தலை கிள்ளி தோஷம்பீடித்து பிச்சாடனராக எம்பெருமானிடம் தோஷம் போக்கிகொண்டதாலும் எம்பெருமானின் பரத்துவமறிக.


      1910 ம் வருஷம் கும்பகோணம் வைதிகவர்த்தின் முத்ராக்ஷரசாலையில்
      பதிப்பிக்கப்பெற்ற மஹாபாரத க்ரந்தலிபிப் பதிப்பில் அநுஸாஸன பர்வத்தில் 252அத்தியாயங்களை அச்சிட்டு முடித்தபின் 'ப்ரக்ஷிப்தமான அத்தியாயம்' என்கிற தலைப்பில் 576வது பக்கம் முதல் 642வது பக்கம் வரை ஈறாக 22அத்தியாயங்கள் அச்சிடப்பட்டுள்ளன
      அதில்தான் இக்கைலாச யாத்திரை,சிவசஹஸ்ர நாமங்கள் இடம்பெறுகின்றன.576வது பக்கத்தில் அடிக்குறிப்பில் இவை ப்ரக்ஷிப்த (இடைச்செருகல்) அத்தியாயங்கள் என்பதை நிலைநாட்ட பின்வரும் காரணங்கள் கொடுக்கப்படுகின்றன.

      1.பெரும்பாலான ஓலைச்சுவடிகளில் இவ்வத்தியாயங்கள் இல்லை.

      2.சிவசஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் இயற்றிய முன்னோர்கள் அது லிங்கபுராணம்; ஆதித்ய புராணங்களிலிருப்பதாகவே சொல்லி பாஷ்யம் இயற்றினார்களே தவிற பாரதத்திலிருப்பதாக சொல்லவில்லை.

      3.மஹாபாரதத்தின் கதைகளை ஒன்றுவிடாமல் சுருக்கி 'மஹாபாரதஸங்ரஹம்' என்கிற க்ரந்தத்தை எழுதிய வித்யாரண்யரும் இவ்வத்தியாயங்களை தொடவில்லை.

      4.பாரதத்தை தெலுங்கு பாஷையில் எழுதிய திக்கநஸோமயாஜியும் இவ்வர்த்தங்களை வர்ணிக்கவில்லை.

      5.அநுஸாஸன பர்வத்துக்கு வியாக்யானம் செய்த அர்ஜுநமிஸ்ரர் முதலானவரும் 'உபமன்யூபாக்யானம் பல ஓலைச்சுவடிகளில் காணப்படாமையால் ப்ரக்ஷிப்தமே என்ற போதிலும் வியாக்யானம் செய்கிறோம்' என்று தொடங்கி வியாக்யானம் செய்கிறார்.ஆகவே
      மஹாபாரதத்தின்‌ பலபகுதிகள் சைவர்களின் கற்பிதமே.

      வஞ்சனை செய்தல் பொய்மை எல்லாம் தாமஸ குணமெனில் தான் கொடுத்த வரத்தின்படி சிவன் கிருஷ்ணனிடம் போரிட்டு தோல்விகண்டு வரத்தை நிறைவேற்றாமல் தோற்றது போல நடிப்பதை எந்த கணக்கில் சேர்ப்பது? மேலே கூறப்பட்டதன் படி "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
      நன்மை பயக்கும் எனின்" என்கிற அதே திருக்குறளே கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தியதற்கு விடை.



      மேற்காட்டிய வான்மீக வசனம் எந்த காண்டமென குறிப்பிடவில்லை.
      போகட்டும்.யமனை வணங்கிய ராமன் யமனுக்கு கீழ் எனில் அவ்ராமர் தாய்தந்தை ரிஷிகளை வணங்கியதால் அவர்கள் ராமருக்கு மேல்பட்டவரோ?
      எனில் அதே வான்மீகத்தில் "ததோ தேவர்ஷிகந்தர்வா: ஸருத்ர ஸாப்ஸாரோஹன| ஸ்துபிதிர் திவ்யரூபாபிஸ் துஷ்டுவுர் மதுஸுதநம்
      (15_31) தேவரிஷிகளும் கந்தர்வனும் ருத்தரனுடன் அப்ஸரஸுக்களுடன் சேர்ந்து வேதமந்திரத்தால் மதுஸுதனனை துதித்தனர்

      புஷ்கராக்ஷ மஹாபஹோ மஹாவக்ஷ:பரந்தப| திஷ்ட்யா க்ருதமிதம் கர்மத்வயமஸத்ரப்ருதாம் வர|| திஷ்ட்யாஸர்வஸ்யலோகஸ்ய ப்ரவ்ருத்தம் தாருணம் தம| அபாவ்ருத்தம் த்வயா ஸங்க்யே ராம ராவணஜம் பயம்|| (யுத்த_122_2;3) ராவணவதம் முடிந்ததும் ருத்ரன் ராமனை துதித்தை மேல்காட்டிய‌ அடிகள் விளக்கும் மேலும் "ததா து ஜ்ரும்பிதம் ஸைவம் தநுர் பீமபாராக்ரமம்|ஹுங்காரணே மஹாதேவன் ஸ்தம்பிதோத........." என்று வரும் வரிகளால் சிவதநுஸை பகவான் தன் ஹுங்காரத்தால் முறிக்க முக்கண்ணன் மயக்கமுற்ற‌ செய்தியும் ராமன் சிவனை காட்டிலும் மேலானவன் என்பதை செப்பும்


      யமனை உதைத்து மார்கண்டேயனை மரணத்திருந்து சிவன் பரமான்மா எனில்
      மஹாபாரதத்தில் பரமவிஷ்ணு பக்தராகவும் (நைமித்திக) ப்ரளயகாலத்தில் பகவான் வயிற்றுக்குள் புகுந்து உலகனைத்தையும் அவர் வயிற்றில் கண்டவராகவும் தம்மைக்கூறிக்கொண்டுள்ளார்‌ மார்க்கண்டேயர்.
      ' முதலில் சிவபக்தனாயிருந்து சிவனை மோக்ஷம் கேட்க; சிவனும் 'அது என்னால் தரமுடியாது; நாராயணரே தரவேணும்; என்று கூறி நாராயணிடத்தழைத்து சொன்று மோக்ஷமளிக்கும்படி சிபார்சு செய்து நாராயணனும் மோக்ஷமளித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

      Delete
    2. ருத்ரன் ராமனைத் துதித்தார் என்று சொல்வது சதுர்த்த ருத்ரராகிய சிவபிரானல்ல .ருத்ரர்கள் பலரிருக்கின்றனர்.அவர்களுள் விஷ்ணுவிற்கு கீழ்ப்பட்ட ருத்ரர்களுமுள்ளனர். அந்த ஸ்லோகத்தில் குறித்த ருத்ர பதம் சிவபிரானைக் குறிக்காது .ஏனெனில்

      "ஸ்ரீமதோ நீலகண்டஸ்ய க்ருத்யம்ஹி துரதிக்ரமம் அத்ரபூர்வம் மஹாதேவம் ப்ரஸாத மகரோத் ப்ரபு" ( ஸ்ரீ மத் நீலகண்டர் சிறியவனான எனக்கருளினார்.குற்றமற்ற பிரபு அவரே).இது ராம வாக்கியம்.

      இதில் குறிக்கப்பட்ட மஹாதேவ பதத்தை வருணன் என்று தவறாக அர்த்தம் சொல்வது உண்டு.மஹாதேவ பதம் சதருத்ரீயத்தில் சிவபிரானுக்கே சொல்லப்பட்டுள்ளதால் மஹாதேவ பதம் சிவபிரானையே சுட்டும்.

      இதிலுள்ள "ஸ்ரீமதோ நீலகண்டஸ்ய க்ருத்யம்ஹி துரதிக்ரமம்" என்னும் வரிகளை மறைத்து வைணவர்கள் வஞ்சகமாகப் பொருள் சொல்வதுண்டு.

      அவர்கள் வஞ்சகம் எங்கே நிலைக்கப்போகிறது.

      கேட்டால் சைவர்கள் அந்த பதத்தை திணித்துவிட்டனர் என்று சிறிதும் வெட்கமின்றிப் பிதற்றுவர்.

      Delete
    3. சிவபிரான் பிரமதேவர் தலையைக் கிள்ளியதால் பிரம்மஹத்தி வந்தது என்று வேதங்களும் சொல்லவில்லை.
      உண்மையில் பிரமதேவரின் தலையைக் கிள்ளியது பைரவமூர்த்தியே.அவரை சிவபிரான் என்று வேதங்கள் உபசரித்துக் கூறும்.

      பிரம்மஹத்தி பிராமணக்கொலை செய்தால் தான் வரும். அங்ஙனமாக
      சிவபிரான் பிரமனைக் கொல்லவுமில்லை .அவரின் தலையை மட்டுமே கிள்ளினார்.அதுவும் பிரமதேவர் தேவர்களில் வைசியர்.பிராமணனைக் கொன்றால் தான் பிரம்மஹத்தி வரும். வைசியரைக் கொன்றாலுமா பிரம்மஹத்தி வரும் ? சரி நீங்கள் சொல்வது படி பார்த்தால் பிரமதேவர் தலைகிள்ளிய சிவபிரானுக்கு தோஷநிவர்த்தி செய்த விஷ்ணு ஏன் கிள்ளப்பட்ட தலைக்கு பதிலாக இன்னொரு தலையைப் படைக்கவில்லை?
      பிரமதேவனிடத்தில் இல்லாத பிரியம் சிவபிரானிடத்தில் மட்டும் இருக்கிறதா விஷ்ணுவிற்கு?
      இன்னமும் சிவபிரான் பிரமகபாலத்தைக் கையில் ஏந்தியேயிருக்கிறார்.அதனால் விஷ்ணு சாபத்தைப் போக்கினாரென்னும் நம்மாழ்வார் பாட்டு அவைதிகமாய் முடிந்தது.

      மார்க்கண்டேயர் சிவதத்வஞானத்தால் தான் சிரஞ்சீவத்துவம் அடைந்தார் என்று தக்ஷிணாமூர்த்தி உபநிடதம் கூறுகிறது.அவர் சிரஞ்சீவத்துவம் அடைந்ததற்கும் விஷ்ணுவிற்கும் சம்பந்தமிருப்பதாக எந்த வேத இதிகாச புராணங்களிலுமில்லை.

      வான்மீகி ராமாயணத்தில் எடுத்துக் காட்டப்பட்ட ஸ்லோகம் இல்லையென்றால் அதற்கு காரணம் நீங்கள் வணங்கும் இராமானுசரின் வழிவந்த பூமான்களாகத் தான் இருப்பார்கள்.அவர்கள் தான் அது இராமனின் இழிவைக் கூறுகிறது என்று அதனை நீக்கியிருப்பார்கள்

      அதனைப் போல அனுசாஸன பர்வத்தில் பீஷ்மர் விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கூறுகிறாரே அதனை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அங்கே சொல்லப்பட்டுள்ள சிவபரமான செய்திகளை விலக்குவது ஏனோ?
      ஏற்றால் இரண்டையுமேற்க வேண்டும்.அதுவே வைதிகம்.இல்லையெனில் அது பாஷாண்டமாகும்.

      திரிபுரத்தவர்களை எரிக்க சிவபிரான் விஷ்ணுவைப் பிராத்தித்தார் என்பது பாரதத்திலும் இல்லை புராணங்களிலுமில்லை.

      Delete
    4. அறிவுடையோர் சத்தியம் தவறமாட்டார்கள் கற்றவர்ககு அழகு சொல் தவறாது இருப்பது என்று அவ்வை கூற சொன்ன சொல் தவறிய கண்ணனை திருக்குறளைக் கொண்டு அவர் செயலை நியாயப்படுத்துவது சால அழகியது.

      கண்ணனுக்கு முக்காலமும் தெரியும் அவருக்கு தான் ஆயுதம் ஏந்தும் அவசியமிருப்பதைத் தெரிந்தும் போரில் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று ஏன் சத்தியம் செய்ய வேண்டும்? இது அவர் அறியாமையை வெளிப்படுத்துகிறது

      Delete
    5. யமனை இராமன் வணங்கிய செய்தியாக நான் காட்டிய சுலோகம் இராமணயத்தில் இல்லை.மகாபாரதத்தில் ஸபா பர்வத்தில் எட்டாவது அத்தியாயத்தில் உள்ளது.அங்கு கண்டு கொள்க

      Delete
    6. இராமாயணத்தில் துரியசிவ கற்பனை எடுபடாது."ஸ்ரீமதோ நீலகண்டஸ்ய க்ருத்யம்ஹி துரதிக்ரமம்" என்றுவரும் வரிகள் வைணவர்கள் மறைத்தார்கள்‌ எனில் பூர்வாச்சார்யார்கள் அவ்வாக்யத்தை இராமாயணத்தில் உள்ளதாக காட்டினாலோ அல்லது பழைய பதிப்பில் அவ்வசனம் உள்ளதை காட்டினால் அதுபற்றி விவாதிக்கலாம்.ஆனால் மொட்டையாக ஒரு பொய்யைக்கட்டிவிட்டு அது இராமாயணத்துள் புகுத்த என்னுதல் சைவர்களின் குறுக்குபுத்தியையே காட்டிநிற்கும். நிற்க! மஹேஷ்வர தீர்த்தர் எனும் அத்வைத உரைகாரரும் 'மஹத்'என்கிற ஸப்தம் ஜலத்தை‌ குறிக்கும் என்று வைஜயந்தி நிகண்டிலிருந்து ப்ரமாணம் காட்டி அர்த்தநிர்ணயம் செய்துள்ளார்.இதில் அனர்த்த நிர்ணயம் செய்யத்துடிக்கிற சைவவாதம் எக்காலத்திலும் எடுபடாது

      Delete
    7. சிவனுக்கு ப்ரஹ்ம்மஹத்தி வந்ததாக வேதங்கள் சொல்லவில்லையாம்.எனில் ராமருக்கு வந்தது என்றுமட்டும் சொன்னதுபோலும். சிவன் தலையை கிள்ளியது முக்கண்ணனான ருத்ரனே என்பது புராணப்பரஸித்தம். பிராமணனை கொன்றால் மட்டுமன்றி அவனைத்துன்புறுத்தினால் கூட பிரம்மஹத்தி தோஷம் பீடிக்குமென்பது சாஸ்திர ப்ரஸித்தம்.அதை அநுஸாஸன பர்வத்து 24ம் அத்யாயத்தில் கண்டுகொள்ள.

      சதுர்வேத பாராயண பிரம்மதேவரை வைசியனென்பது விலவறசிரிக்கதக்கது.
      புளுகினாலும் பொருந்தப்புளுக வேண்டுமென்றில்லாமல் பொருந்தாமல் புளுகியகின்றீரே? என்னை.பிரம்மன் வைசியனெனில் அவன்புதல்வன் புலஸ்தியர் பிராமணனாவது எங்கனம்? புலஸ்தியரின் பேரன் இராவணன் பிராமணன் என்பது எங்கனம் ? அவனையழித்த இராமருக்கு ஹத்திபீடித்தது யாங்கணம்? அப்பப்ப..!

      பிரம்மனுக்கு இன்னோர் தலையை உண்டாக்கித் தரவில்லையே.
      அது‌ஏனெனில் சதுர்முகனென்று பிரம்மனுக்கு பெயருண்டாகையால் அப்பெயரை சாஸ்வதஞ் செய்வதற்கேயாம்.இன்னும் அத்தலையோடு‌ இருக்கிறாரே யேனேனில் 'கபாளி' என்கிற முத்திரைக் குத்தப்பட்டவராகையாலாம்.இவற்றால் '
      பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும், உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனுக்கே உய்யவேண்டுமென்பது கூர்மதிகொண்டோர்க்க.

      Delete
    8. ஸ்ரீமத் ராமாயணத்தை கொண்டு பல வைதிகர்கள் பகவத்நிர்யணயஞ் செய்துள்ளனர்.ஆகலினால் அங்கெங்குமே இராமருடைய இழிவுமுதலிய தாமஸகதைகளுக்கு இடமில்லை.இராமேசுவர கதைக்கும் அங்கு ஸூசகமில்லை.அதைபொறுக்காத சைவவெறியர்கள் இராமானுசர் மீது போடும் பழிகள் யாவும் அநாதரணியமே.


      அதே பாரதத்துள்‌ பற்பலவிடம் விஷ்ணுபரத்துவமும் பேசப்படுகிறதே.பாரதப்பிரஸித்த பகவத்கீதையும் பரந்தாமனே
      தியானிக்க தக்கவன் என்று பகிர்கிறதே..வேதவைதிக சாஸ்திரத்தை தழுவி பரம்பொருள் இவனேயென பஹுமுகமாய் சொல்லுகிற அவ்விருத்தாந்தங்களை கொள்ளுவதும் ஏனையவற்றைத் தள்ளுவதும் வைதிக வைணவர்கொள்கை.

      ருத்ரன் தானே பசுபதியாகிற வரத்தை தேவர்களிடம் பெற்றானென்பது 'ஸோப்ரவீத் வரம்வ்ருணா அஹமேவ பஸூநாமதி பதிரஸாநீதி| தஸ்மாத் ருத்ர பஸூநா மதிபதி| ( இதைக்கேட்ட ருத்ரன்
      தேவர்களே! நான் உங்களிடம் ஒருவரத்தை கேட்கிறேன்.நானே பசுக்களுக்கு அதிபதியாக வேண்டும்" என்று உரைத்தனன்.தேவர்களும் அவ்வரத்தை அருளினர்.) என்னும் கிருஷ்ணயஜுர் வேதத்து (6:2) வாக்யத்தால் வெளி.

      'விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமிததேஜஸ| தஸ்மாத்தநுர்ஜ்யா ஸம்ஸர்க்கம்ஸ விஷேஹே மஹேஸ்வர||

      அளவற்ற தேஜஸ்ஸையுடையவரான பகவான் சிவனுக்கு விஷ்ணுவானவர் ஆத்மாவாயிருந்ததனாலேயே வில்லை நாணேற்றுவதை மஹேஸ்வரரான அவருக்கு பொறுக்கமுடிந்தது என்னும் கர்ணபர்வத்து (35-50) வசனமும் திரிபுரசம்ஹாரம் திகிரியானாளேயே ருத்ரனுக்கு சாத்யமானதென்பதை சாதித்தவழி காண்க.

      இவ்வர்தத்தை உணர்ந்த சங்கச்சான்றோரும் '....பணிவில் சீர்ச்
      செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
      கல் உயர் வென்னி இமயவில் நாணாகித்
      தொல் புகழ் தந்தாரும் தாம் (பரிபாடல்) என்று பாடிவைத்தனரே.இவர்களும் இராமானுசர் வழிவந்த பூமான்கள் போலும்...

      Delete
    9. மந்நிமித்தம் க்ருதம் பாபமபி புண்யாய கல்பதே' எனக்காகவும் என்னடியார்காகவும் செய்யப்படும் பாவமும் புண்ணியமே என்று கீதையிலும் கூறப்பட்ட தர்மத்தை கீதாசார்யனும் செய்துகாட்டினானே.அவன் சத்தியம் தவறினவன் என்று கூற யோக்யதை யாருக்குமில்லை.இவ்விதம் செய்யத்தவறிருப்பின் தர்மமும் தலை சாய்ந்திருக்கும்.ஆகையால் சத்தியஸ்வரூபமான எம்பிரான் செய்தது அவனது லீலாவிநோதமேயாம்.

      Delete
    10. திருமாலடியார் திசைப்பக்கமும் யமன் தலைவைக்கமாட்டானென விஷ்ணுபுராணத்திற் பிரஸித்தம்.யமன்,சிவன்;இந்திரன் முதலிய சகல தேவதாந்தரங்களை
      படைத்த நாராயணன் எமனை வணங்கியதாற் அவனிலும் கீழானவன்‌ என்பது குறுமதிகொண்டோர் கூற்றே.

      Delete
  11. சைவர்களுக்கும் வைணவர்கள் போல கருடோத்தரம்,விஷ்ணுத்தரம்,
    பாகவதோத்தரம் என்று கற்பிதமாக இயற்றி வைத்துக் கொள்ள சக்தியுண்டு .ஆனால் அவர்கள் புருஷோத்தமர்கள்.அவர்களுக்கு தன்னுடைய பத்து புராணங்களின் திக்விஜயமே போதுமானது.சைவபுராணங்கள் பத்து என்பது அனைவருக்கும் முடிந்த முடிபாகும் .பத்ம புராணத்தில் சிவ புராணங்கள் 6 என்று சொல்லப்பட்டிருந்தால் கண்டிப்பாக அது வைணவர்களின் இடைச்செருகல் வேளையாகத் தான் இருக்கும்.ஏனெனில் அப்புராணத்தில் தான் இராமானுசன் பல மாறுதல்கள் செய்தான் அதனால் அவை நம்பத்தகுந்தவை அல்ல.
    வைணவர்கள் தான் வணங்கும் விஷ்ணுவைப் போலவே வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.அவர்களிடத்து சாமானியர்கள் மயங்கலாம் ஆனால் தெளிந்த அறிவுடைய நல்லோர் மயங்கார்

    ReplyDelete
    Replies
    1. இராமானுசர் பத்ம புராணத்தில் பல மாறுதல்கள் செய்தார் என்று ஆதாரமில்லாமல் நீர் சொல்லும் பொய் வாதத்திற்குதவாது

      Delete
    2. சைவ சமய சரபம் என்னும் நூல் தெளிவாக வைணவர்களின் பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது.
      சைவ பூஷண சந்திரிகை என்னும் நூல் விபூதி ருத்ராட்சமே வைதிகம் என்பதை வேதப் பிராமணங்கொண்டே நிரூபித்தது

      Delete
    3. சைவசமயசரபம்';'நாலாயிர திவ்ய பிரபந்தம் விசாரம்' ஆகிய குத்ருஷ்டி நூல்கள் 'ஸ்ரீ மதித்யாதி அழகிய மணவாள இராமானுஜ ஏகாங்கி ஸ்வாமிகள் அருளிய ' நாலாயிர திவ்யபிரபந்த விசார ஆபாசம்' இன்னும் சில நூல்களுள் தக்கவாறு பதிலுரைத்து கண்டிக்கப்பட்டன. 'வேத வேதாந்த புண்டரவிசார தீபம்' என்கிற நூலில் சைவர்களுடைய புண்டர புட்டுரைக்கெல்லாம் கண்டன மறுப்புரை வழங்கி வாயடக்கியது‌.ஆகவே செத்தபாம்பை காட்டி பயமுறுத்தும் சிறார்விளையாட்டெல்லாம் பித்துக்குளிகள் நிறுத்திக்கொள்ளல் வேண்டும்.

      Delete
  12. சிவபுராணங்கள் பத்து விஷ்ணு புராணம் நான்கு பிரம்ம புராணம் இரண்டு ,அக்னி புராணம், பிரம்மகைவர்த்தம் இரண்டு மொத்தம் பதினெட்டு புராணங்களென
    ஸ்ரீ ஸ்கந்த புராணத்து ஸூத ஸம்ஹிதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

    சிவபுராணம் பத்தும் சாத்துவிகங்களாம் சத்துவ
    குணம் வெண்ணிறமுடையதும் சுகத்துக்கும்
    ஞானத்துக்கும் இடமுமாம், யோகிகளுக்கு ஞானம்
    உபதேசிக்கும் சிவபெருமான் தெளிபளிங்கு வடிவி
    னராய் எங்குமுறங்காது பிராமணாதிபதியாயிருப்பர்’,

    ‘விட்டுணு புராணம் நான்கும் தாமசங்களாம், தமோ
    குணம் கருநிறமுடையதும் உதாசீனரூபமும், கூட கிருத்
    திய சமர்த்தமுமாம். நித்திரை, சோம்பு, பிரமாதம், வஞ்ச
    னம் முதலியவைகள் தாமசங்கள். விட்டுணு கரியரும்,
    சேஷசயனம் செய்வோரும் பக்தரை மோகிப்பிப்பவருமாயிருப்பர்,

    ‘பிரமபுராணம் இரண்டும் இராசசங்களாம். இரசோ
    குணம் சிவந்த நிறமுடையதும் துக்கத்துக்கிடமும்
    சஞ்சல ரூபமுமாம். பிரமாச் செந்நிறமுடையராய்ச்
    சஞ்சல ரூபியாயிருப்பர்.

    ‘அக்கினி புராணமும் சூரிய புராணமும் திரிகுணயுத்த
    மாம். அக்கினியுஞ் சூரியனும் முக்குண வடிவினராயிருப்பர்.
    ஆதலால், இப்பதினெட்டினுள்ளுஞ் சிவபுராணங்கள்
    பத்துமே உயர்ந்தனவாம்.

    இதனை ஆறுமுக நாவலர் கந்த புராண ஸூதஸம்ஹிதையிலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்.


    விஷ்ணு புராணங்கள் தாமஸமென எதிலும் கூறப்படவில்லை என்று பிதற்றுவது சிரிப்பு தான் வருகிறது

    ஸுத ஸம்ஹிதையே புராணங்களை தெளிவாகப் பிரித்து விட்டு அதன் சுபாவம் என்ன என்பதையும் சொல்லியிருக்கிறது அதனால்
    வைணவர்கள் இதைக் கண்டாவது இனிமேல் அடங்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஸ்கந்த புராணமே தாமஸங்களை கொண்டது என்பதால் அது அநாதரணியம்.உபநிஷத் வாக்யங்களும் மஹாபாரத ராமாயண வசனங்களாலும் விஷ்ணுவே பரமஸாத்வீகி எனவும் விஷ்ணு தாமஸி எனவும் பறைசாற்றியிருப்பதல் நீர்கூறிய ஸுதசம்ஹிதை வாக்கியங்கள் அதன் முன் நீர்த்துப் போகும்.நிற அடிப்படையில் பிரித்து நாராயணனை தாமஸி என சொல்லவொண்ணாதபடி மேலே கட்டுரையில் அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டும் மறுக்கவழியில்லாத வெறும் கையில் முழம் போடுவது முட்டாள்தனம்.

      Delete
    2. உருத்திர மூர்த்தி செய்யும் தொழிலைப் பற்றியே தாமஸம் என வேதங்கள் கூறும். அவர் சகஜ சாத்வகி என்பதால் தான் கிருஷ்ணோபநிடதம் அவரை ஸாத்வகி எனக் கூறியது.

      இப்படிபட்ட முரணான வேத வாக்கியங்களை ஸூத ஸம்ஹிதை தெளிவாக எடுத்துரைத்தது.ஸூத ஸம்ஹிதை வாக்கியம் வைணவர்களுக்கு நஞ்சு போன்றுள்ளதால் அதனை அது நிராகரித்து தாமஸமென நிந்திப்பர்.

      பல புராணங்களிலும் உருத்திர மூர்த்தியை தாமஸி எனக் கூறுவது
      செய்யும் தொழில் பற்றியாகும்

      Delete
    3. தாமஸமானது செய்யும் தொழில் பற்றியன்று; கொள்ளும் குணம் பற்றியேயாம்.அல்லேல் அசுரவதங்கள் செய்யும் யாவரும் தாமஸியாக அர்த்தமாகும். ருத்ரனானவன் பிறக்கும்போது தாமஸம் நீக்கிப்பெறாதவனாய் இருந்தானென்பது
      மேற்பதிவில் காட்டிய சதபதப்பரஹ்மாணத்தில் தெளிவு.

      ஜாயமாநம ஹி புருஷம் யம பஸ்யேன மதுஸூதன;ஸாத்விக ஸ து விஜஞேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக பஸ்யத்யேநம ஜாயமாநம ப்ரஹ்மா ருத்ரோத்வா புந;ரஜஸா தமஸா சாஸ்ய மாநஸம் ஸம்பிபலுதம் '(சாந்தி பர்வம் 358-73, 77)

      பிறக்கும்போது ஒரு குழந்தையை மதுஸூதனன் கடாக்ஷித்தானினால் அவனே ஸாத்வீகனானான். அவனே மோக்ஷபுருஷார்தத்தைப் பற்றி சிந்திப்பான்;பிறக்கும் போது இவனை பிரமனாவது உருத்திரனாவது பார்த்தாராகில் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் இவன் மனம் கலங்கி நிற்கும் என்கிற பாரதவாக்கியமும் ருத்ரனுடைய பார்வை பட்டாலே அக்குழந்தைக்கு தாமஸமாகிறது என்றல்லவோ கூறிற்று.

      ஆகவே உபநிஷத்துக்கள் ஓதியவழி சிவனே தாமஸி என்பது ப்ரஸித்தம்.அக்கிருஷ்ணோபநிஷத்து கற்பிதம்.ஸுதசம்ஹிதை வாக்யத்தின் பொருந்தாந்தன்மை மேலேயே எடுத்துகாட்டியதாயிற்று.

      Delete
  13. விஷ்ணுவைத் சகஜ தாமஸி என்று ஸூத ஸம்ஹிதை கூறுவதாலேயே அவர் தாமஸிதான் என்றும் அவரை ஸாத்வகி என்று உபநிடதங்கள் கூறியிருந்தால் அது அதிஷ்டானம் பற்றியேயாம்.
    அவன் முக்குணத்திற்கு அப்பாற்பட்டவனென்று எங்கும் சொல்லப்படாததால் சுலோக பஞ்சக விஷயமிற்றிய ஈசுரமூர்த்தியாருக்கு கண் கோளாறா இல்லை உனக்குத் தான் கண்கோளாறா என்பது நன்கு விளங்கும்.வடமொழிப் புலமையில் நீ சூனியமா இல்லை
    ஈசுரமூர்த்தியார் சூனியமா என்பதை அறிவுடைய நல்லோர் நன்கறிவர்.

    பல இடங்களில் மாபாரதத்திற்கு தவறு தவறாக மொழிப்பெயர்ப்பு
    செய்தும் உபநிடதங்களுக்கு தவறாக பாஷ்யம் எழுதிய இலக்கண அறிவில்லாதவனும் நீலகண்டரின் பாஷ்யத்தை அப்படியே பார்த்து எழுதியவனுமான இராமானுசனின் வழிவந்தவனல்லவா நீ! உனக்கு
    வடமொழிப் புலமை சூனியம் என்பதில் ஐயமில்லை

    ReplyDelete
    Replies
    1. ஈஸ்வர் மூர்த்தி தோல்விகாணும்படி உபநிஷத் விஷயங்களில் எவையெல்லாம் பழமையானவை எவை எல்லாம் கல்பிதம் என்று வைஷ்ணவஸுதர்சன ஆசிரியர் நிர்தாரணம் செய்வதனால் பரமாச்சார்யார்களால் கைகொள்ளப்படாத உபநிஷத் வாக்யங்கள் சில சிவனை ஸாத்வீகி என்று சொல்வது கற்பிதமென விளங்கும் மஹாபாரததிலும் ஆத்திசூடி முதலிய இலக்கியங்களிலும் புராண உபநிஷத்திலும் காலங்காலமாக கலப்படம் செய்த சைவர்கள் ஸ்ரீ பாஷ்யத்தை காப்பிடியத்து எழுதிய நீலகண்ட பாஷ்யத்தை இயற்றி பின் இராமானுசர் மேல் பழிபோடுவதால் உத்தமர்கள் ஆக மாட்டார்கள் இலக்கண அறிவற்ற சைவர்கள் எழுதிய பாஷ்யங்களும் விளக்கங்களும் கற்றோர் ஏற்பாரொ? ச்சீ காரி உமிழ்வர்

      Delete
    2. சைவர்கள் அறிவற்றவர்கள் என்றால் அவர்களுக்கே உரிய சிவாகமங்களை ஏன் பரிமேழலகர் மேற்கோள் காட்ட வேண்டும்? இதிலிருந்தே சைவர்கள் பரமென வந்திக்கும் சிவபிரானே மேன்மையானவர் என்பது தெரியவில்லையா?

      அவருக்குரிய குணங்கள் எட்டு என்பதும் அவருக்கு ஸத்வராஜசதாமஸ குணங்களில்லை என்பதும் தெளிவாகிறது.

      இதற்கும் நீங்கள் வெட்கமின்றி பரிமேழலகருரையில் சைவர்கள் இடைச்செருகல் செய்தனர் என்று நாக்கு கூசாமல் பொய் சொன்னாலும் வியப்பில்லை

      யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா |
      தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே |
      அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் |
      ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: |
      ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே |
      ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே: \
      என்ற மச்சபுராண வாக்கியத்தை ஆதரவாகக் கொண்டு சாத்துவிக முதலியனவாகப் பிரித்துப் பேசுகின்றது. எந்தப் புராணம் எந்தக் கற்பத்திற் சொல்லப்பட்டதோ அந்தப் புராணம் அந்தக் கற்பத்துக்குரிய குணத்தை விஸ்தரித்து, அவ்விஸ்தாரத்தோடு அப்புராணக் கடவுளின் மகிமையைக் கூறுகிறது என்பதே அதன் தாற்பரியம். பிரமன் அவ்வக்குணமிகுந்தவனாயிருந்து அவ்வப் புராணத்தைச் சொன்னான் என்பதற்கு அதில் பதப்பிரயோகமில்லை.
      தாமச கற்பத்துச் சீவகோடிகளின் தோஷ நிவர்த்துக்குச் சிவ மாஹாத்மிய படனமே பரம ஒளஷதம். அங்ஙனமாயின் மற்றைக் குணங்கள் மிகுந்த கற்பங்களிலுள்ள சீவ கோடிகளின் உய்தி அப்படனத்தால் விரைவில் சித்திக்கும் என்பதில் ஐயமும் உண்டோ? மற்றைப் புராணங்களின் படனங்களால் தாமச கற்பத்தின் தோஷத்தைப் போக்க முடியாது.
      வரதன் எனத் திருமாலைச் சொல்வதுண்டு. ஆனால் கலியுகத்தார்க்கு அவனால் வரங்கொடுக்க முடியாது. அவ்யுகம் அவ்வளவு தீயது. கலியுக வரதன் என்பது முருகனது திருநாமம். அவனை வழிபடின் கலிதோஷம் விரைவில் நிவர்த்தியாகும். அவன் வரங்கொடுப்பதும் நிச்சயம், அவ்வழிபாடு மற்றை யுகங்களுக்கு அந்நலஞ் செய்யாமற் போமோ? அப்படியே புராணங்களைக் குணம் பற்றிப் பிரிப்பதாலும் சிவபுராணங்களிலுள்ள சிவமாஹாத்மியம் முக்குண கற்பத்து மக்களுக்கும் பரம ஒளஷதமாகும் என்க.

      Delete
    3. ஈஸ்வர மூர்த்தியார் தோல்வியை அடைந்தார் என்று சொல்வது அடிபட்ட நாய் குரைப்பதைப் போன்றது. சிவபிரான் முக்குணங்களற்றவர் என்பதற்கு அவருக்கு நிர்க்குணர் என்னும் பெயருண்டு. விஷ்ணுவைப் பரமசாத்வகி என்று கூறினால் அவருக்கு மாயை இல்லாமலிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு மாயை உண்டு என்பது சலந்தரன் மனைவியை கற்பழித்ததும், திரிபுரத்தவர்களின் மனைவியைக் கற்பழித்தும்,மாயாசீதையையும் மாயாவாசுதேவனையும் மாயமானைக் கண்டு மயங்கிய காரணத்தாலும் பிரம்மாஸ்திரமும் நாகாஸ்திரமும் இராம இலட்சுமணர்களை மயக்கியதில் இருந்தும் புலனாகிறது. இவை அனைத்தும் தூய அறிவுடைய இறைவனாகிய சங்கரருக்கில்லை

      Delete
    4. சைவர்கள் ஆத்திசூடி,கொன்றை வேந்தன் முதலாதனவற்றில் கலப்படம் செய்திருந்தால் அவ்வைப் பிராட்டி கூறும் "திருமாலுக்கு அடிமை செய் " என்னும் வாக்கியத்தையும் நீக்கி ஆறுமுக நாவலர் பாலபாடத்தில் பதிப்பித்து இருக்கவேண்டுமே? அதனை ஏன் அவர் பதிப்பித்தார்? இந்த ஒன்றே சைவர்கள் பாரபட்சமற்றவர்கள் என்பதற்கு சான்றாகும்

      Delete
    5. சிவபிரானுடைய பெருமைகளக் கூறும் உபநிடதங்களனைத்தும் கற்பிதமெனின் இராமபிரான் கூறும் 108 உபநிடதங்கள் என்னும் கணக்கு தப்பாய் முடியும்.இல்லையெனில் அந்த உபநிடதங்களுக்கு பதில் வேறு உபநிடதங்களிருக்கிறதா என்பதையாவது கூறவேண்டும். அப்படிக் கூறாமல் உபநிடதங்களைக் கற்பிதமென்பது பாஷாண்ட வாதமாகும்.



      சிவபிரானது ஐந்து முகங்களும் ஈசானம் தத்புருஷம் அகோரம் வாமதேவம் ஸத்யோஜாதம் எனப் பெயர்பெறும். இவ்வைந்தும் பஞ்சப்ரஹ்மங்களெனப்படும். நாராயண உபதிடதம் 'ஸத்யோ ஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜச்¡தாயவை நமோநம: பவேபவே நாதி பவே பவஸ்வமாம் பவோத் பவாய நம: வாமதேவாயா நமோ ஜ்யேஷ்டாய நம: ச்ரேஷ்டாய நமோ ருத்ராய நம: காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ பலாய நமோ பலப்ரமதநாய நம: ஸர்வபூததமநாய நமோ மநோந்மநாய நம: அகோரே ப்யோத கோரேப்யோ கோரகோரதரேப்ய: ஸர்வேப்ய: ஸர்வசர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய: தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தந்நோருத்ர: ப்ரச்சோதயாத் ஈசாந: ஸர்வ வித்யாநாமீச்வர: ஸர்வபூதாநாம் ப்ரஹ்மாதி பதிர் ப்ரஹ்மணோதி பதிர் ப்ரஹ்மாசிவோமே அஸ்து ஸதாசிவோம்' என்று அவ்வைந்து முகங்களையும் ஸ்துத்யஞ் செய்கின்றது

      இப்படி நாராயணமே சிவபிரான் சிரசுகளை வாயாரத் துதிப்பதால் அவற்றையும் கற்பிதமே என்று கூறலாகுமோ?

      Delete
    6. நாராயணம் கற்பிதமென்றால் "நாராயணப் பரப்பிரஹ்மம் " என்று அது கூறுவதும் கற்பிதமாகுமே.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. பரிமேலழகர் உரையை‌ வைத்து சிவனை பரமாக்குவது மலையை மடுவுக்கொப்பிடுவதாம்.என்னை? சகல சங்க இலக்கியங்களிலும் திருமாலே பரமென ஐயந்திரிபட உரைத்துள்ளது.
      உபநிஷத் வாக்யங்களுக்கு விரோதமாயமைந்த சிவாகமங்களும் வேதவிருத்தமே.

      Delete
    9. ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரேதேஷவேவ யோக ஸம்ஸிததா கமிக்ஷயந்தி பராம கதிம்' என்றுவருதலினால் ஸாத்வீக கல்பத்தில் சொல்லப்பட்ட புராணங்களே பரமபதத்தையளிக்குமென சொல்லாமல் விளங்கும்போது மற்றுரைகள் எல்லாம் வெற்றுரைகளே.

      Delete
    10. எந்த நாய் அடிப்பட்ட நாய் என்பது பத்திரிகையுலகு நன்கறியும்.
      ஸத்வம் ரஜஸ தம இதிபரக்ருதோ குண" என்றபடியே ஸத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம் எனும் முக்குணமும் ப்ரக்ருதிக்கும் அதன் காயமான அசேதன பொருள்களுக்கு உள்ளதே தவிற
      பரமாத்மாவுக்கோ ஜீவனுக்கோ
      ஸ்வரூபத்தில் கிடையாது என்றல்லவோ சாஸ்திரம் கூறுகிறது.அவர்
      தமஸ்ஸாகிற மாயையை தூண்டுபவராக
      உள்ளாரே அன்றி நாராயணர்
      அதற்கடிமைப்பட்டவரல்லர். அவதாராதிகளில் ஏதுமறியாதவர் போல் நடிப்பது நாடகமே.ஜலந்தரனுடைய சக்கரகதை தாமஸமேயாகையால் அதை தாமஸிகள் நம்பலாம்.திரிபுரத்தவர்கள் மனைவியை கற்பழித்தாரெனவும் அப்புராணங்களே கூறும்.நிற்க! அப்புராணம் அதை மட்டுமா கூறியது?
      ரிஷிபத்தினிகளை மோகித்த சிவனுடைய லிங்கம் அறுந்துவிழுந்தென கூர்மபுராணமும் (2.38) தானே அறுத்துக்கொண்டு
      விளையாடியதாக சிவபுராணத்தின் கோடிருத்ரசம்ஹிதையும் (12) ஸ்காந்தபுராணத்தின் கேதாரகாண்டமும் இன்னும் பலவும் கூறிற்று.

      இரகுவீரன் மாயமானை கண்டு மயங்காவிடில் சிவபக்த ராவண உயிரை ராமபானம் குடித்திருக்க வேண்டியேற்படாது.இராமவாதார அவசியமும் இல்லை.எதிர்காலத்தை உணர்நது நடந்த செயல் அறியாமையன்று.விதிப்படியே விளைந்தது. தேவர்களை படைத்தருளிய
      எம்பிரான் அத்தேவாஸ்திரங்களுக்கு கண்டுண்டு கிடந்தது அவ்வஸ்திரத்தின் சக்தியை மெய்பிக்கவே. சிவதனுஸை முறித்து சிவனை மயக்கமுற செய்த கோதண்ட பாணிக்கு மயக்கமேது? கலக்கமேது? யாவும் மனுஷ்யசுபாவ நாடகமே.

      Delete
    11. இலக்கணப்புலி என்று போற்றப்படும் ஆறுமுகநாவலர் தன்பெயருக்கு இழுக்கு வந்துவிடுமோ என்றெண்ணி மனச்சான்றுக்கு பயந்து உள்ளபாடத்தை அப்படியே பதித்தமை வரவேற்கதக்கதே!அன்றியும் அவருடைய வில்லிபாரத பதிப்பிலும் நல்வழிபதிப்பிலும் ஆய்தறியாமல் பதிப்பித்தமை அவருடைய சைவாபிமானத்தை காட்டுகிறதா? அல்லது தேடலறிவை காட்டுகிறதா? வில்லிபாரதத்தில் சைவர்கள் செய்த சேட்டைகள் ஏறாளம் என்பது மேலே காட்டினோம்.இன்னும் நளவெண்பா முதலிய பல்வேறுபட்ட நூற்களில் சைவர்களின் கைவரிசையை காட்டமுடியும். வில்லிபாரத; கம்பராமாயண உண்மைபாடத்தை கோமாளபுரம்.இராசகோபாளபிள்ளை பதிப்பித்தமை கண்டு வயிறெரிந்த பாம்பனும் வேலாயுத முதலியாரும் வசவு வார்த்தைகளால் வசனம் பேசினார்களேயன்றி அவரை ஏதிர்க்கச்சரக்கு இல்லாமையே உண்மை.
      இருப்பினும் அவ்வைணவப்பெரியார் 'திருநீலகண்ட நாயனார் விலாசம்' எனும் சைவநூலை பதிப்பித்தமை அவர் நேர்மைக்கு சான்றாம்.

      Delete
    12. அச்சுருதி உண்மேயாயினும் ஆகுக.அதில் சிவகபாலங்கள் துதிக்கப்படினும் படுக. எனினும் அவ்வாக்யம் பரமாத்மா
      நிரூபணத்துக்கு பரிஹாரஞ்செய்ய போதாவாம்..நாராயணனால் படைக்கப்பட்ட ஐந்தலையுடைய சிவனுக்கு அத்துதிகள் பாடப்பட்டது அந்தராத்மாவான விஷ்ணுவுக்குப் பொருந்தும்.'ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும், மடங்கலும் நீ!....'என்கிற பரிபாடலிருக்க சுருதிப்பரமாணமும் வேண்டுமோ? கைப்புண்ணுக்கு கண்ணாடி கோடலுங்கூடுமோ?

      Delete
  14. பாகவதம் தேவி பாகவதம் தான் அன்றி கிருஷ்ண பாகவதமில்லை. ஏனெனில் அது வியாசரால் எழுதப்படவில்லை.அது போபதேவனால் சிவநிந்தையாக எழுதப்பட்ட ஒன்று .கிருஷ்ண பாகவதத்தில் சொல்லப்ட்ட கதைகளில் பாதிகூட வேதோபநிடதங்களில் சொல்லப்படவில்லை.

    அப்புராணம் சிவபிரானை விஷ்ணுவிற்கு அடியவரென கூறுகிறது.

    ஆனால் சரபோபநிடதமோ "பக்த்யாநாம் விஷ்ணு ப்ரஸாத மகரோச்சிவ" (பக்தி நிறைந்தவர் விஷ்ணு பிரஸாதிக்கிறவர் சிவபிரான்) என்னும் வாக்கியத்தோடு முரணுகிறது.

    இதிலிருந்தே அந்த
    பாகவதம் பொய்யாக எழுதப்பட்டது எனலாம்

    ReplyDelete
    Replies
    1. புராணங்களில் உள்ள யாவும் உபநிஷதங்களில் இடம்பெற வேண்டிய அவசியமில்லை.எம்பெருமானுடைய அவதார வைபவம் பலவும் வேதத்தின் பூர்வபாகத்திலே அமைந்திருப்பதும் ஹரியுடைய அவதாரத்தை பங்கப்படுத்தும் சிவனுடைய அவதாரங்கள் அவற்றில் இடம்பெறாததிலிருந்தும் பின்னாளில் வந்து சைவ லகடபாண்டிகள் பாஷாண்ட உபநிஷததங்களை இயற்றி அதில் புகுத்தி இருப்பினும் காலத்தால் அவை காற்கடை கொள்ளப்படும். ஆகவே வைஷ்ணவ பாகவதமே பதிணென் புராணங்களுள் ஒன்றே தவிர தேவி பாகவதம் இராவணகாவியம் போன்ற பொய்நுலே என நல்லோர் துணிக.

      Delete
    2. மூடனே பிறகு எதற்கு கிருஷ்ணன் ஜராசந்தனிடம் தோற்று ஓடியதற்கு மட்டும் உபநிடதப் பிராமணம் கேட்கிறாய்? அதனை ஏற்கவேண்டியது தானே?

      Delete
    3. வேதவேதாங்களிலும் ராமாயண மஹாபாரதங்களினாலும் ஒப்புயர்வற்று ஓதப்பட்ட பரமபுருஷனான பரந்தாமன்; பாணாசுர யுத்தத்தில் சிவனுட்பட்ட சிவகணங்களை பின்னங்கால் பிடணியடிபட ஓடவைத்த மாதவன்,சிவதனுசையுடைத்து சிவனின் கர்வத்தையடக்கிய கோதண்டர
      ஸ்ரீராமனோ? ஜராசந்தனிடம் தோற்றோடுவோர் பதிகம்! பதிதம்! இத்தாமஸகதை முற்காட்டிய விருத்தாந்களுக்கு‌ முரணுமாகையால்
      மூடர்க்கு பொருந்துமிக்கதை.

      Delete
  15. நீ கூறினாய் பிரமத்தை வேதம் என மொழிபெயர்த்தது சரி என்று.
    சாந்தி பர்வம் 52 "அந்த மாதவர் தியான நிஷ்டையில் இருந்து அறிய வேண்டியவற்றையெல்லாம் அறிந்த பின் ஸநாதனமான பிரம்மத்தை தியானம் செய்தார்".இவ்விடத்தில் பிரமத்தை வேதம் என்று ஏன் மொழிபெயர்க்கவில்லை?
    பிரமத்திற்கு வேதமோ வேறு எதுவும் சமமாக முடியாது.
    "தனக்குவமை இல்லாதான் "என்னும் குறளை நோக்குகபிரமம் யார் என்று விளக்க வந்ததே வேதம். அதனையே பிரமம் எனக் கூறுவது தவறாகும்.
    கிருஷ்ணனையும் பிரமத்தையும் தனியாகக் கூறிய பாரதம் அது யார் என்பதை பின்னால் விளக்கியது.
    ஆச்சாரியார் பாரதத்தை மொழிபெயரத்துப் பதிப்பித்தது பாராட்டத்தக்கது ஆயினும் அவர் முக்கியமான இடங்களில் இவ்வாறு மொழிபெயர்த்தது தவறேயாகும்.

    ReplyDelete
    Replies
    1. தூங்குபவனை எழுப்பலாமே ஒழிய தூங்குவது போல் நடிப்பவனை ஒருகாலும் எழுப்பமுடியாது.பிரஹ்ம பதம் நீர் காட்டிய இடங்களில் பரம்பொருளுக்கு மட்டுமே உரியதாகலாம் ஆனால் அதை வேகமாக மொழிபெயர்க்கவே கூடாதென்பதுதான் இலக்கணறிவற்ற பேச்சு.உனக்கு இலக்கண அறிவே இல்லை என்று ஒத்துக்கொண்டு விட்டு மறுபடி அதைப்பேச எப்படி தகுதி வந்தது?

      இதே பாரதத்தில் 'பிரம்மதேயனாகிறான்' என்ற வரியை மேலேயே காட்டினான்.அதற்கு பிரம்மத்தை கொடுத்தவன் என்று மொழிபெயர்த்தால் கடவுளை கொடுத்தவன் என்பது பொருந்ததாது..ஆகவே பிரம்மஞானம் - வேத்ததை கொடுத்தவன் என்று கூறலே பொருந்தும்...

      உண்மையிங்கனமிருக்க இலக்கண அறிவற்ற நீரும் உனது ஈஸ்வரமூர்த்தி பிள்ளையும் இதிஹாசத்தை மொழிபெயர்த்த இராமானுஜாசார்யாரை குறைசொல்ல வந்துவிட்டீர்கள்?

      Delete
  16. சிவபிரான் கிருஷ்ணருக்கு அருளியதைத் தெரிவிக்கும் அனுசாஸனத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.அதனை அறியாது நீ
    அவை கற்பிதம் என்று கூறுகிறாய்.
    உண்மையில் அவை கற்பிதமாயின் உனது ஆச்சாரியார் அதனை நீக்கியிருக்கலாம்.
    நிற்க கண்ணபிரான் சிவபிரானை நோக்கி தவம் செய்ததை குறிக்கும் அப்பர்வம் பொய் என்று சொன்னாய் .
    அப்படி எனில்,
    சாந்தி பர்வம் 110 ஆவது அத்தியாயம்
    "இந்திரனும் விஷ்ணுவும் ருத்திரரும் உலகத்தின் பிதாமஹரான பிரமதேவரும் தேவர்களின் தேவரான எந்த மஸேஸ்வரரை பலவித ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ"என்றது.

    துரோணம் 81 ஆவது அத்தியாயம்:
    "கிருஷ்ணரும் பார்த்தனும்.....ஆசமனம் செய்து கைகளைக் குவித்துக் கொண்டு .......ருத்ரரை நமஸ்கரித்து" என்றது

    துரோணம் 84 ஆவது அத்தியாயம்:
    "பாணடவர்களும் அவர்களின் நண்பர்களாகிய எல்லாரும் .....சிரசினால் பூமியைத் தொட்டு ....பரமசிவனுக்கு வந்தனம் பண்ணி" என்று கூறியது. பாண்டவ நண்பர்களுள் கிருஷ்ணன் முக்கியமானவர் என்பதால் அவரும் உடனிருந்து நமஸ்காரம் செய்தார் என்பது பெறப்பட்டது.

    அப்பரவம் 202 ஆவது அத்தியாயம்:
    "நாராயணர், ஜபமாலைகளை அணிந்தவரும் தேஜஸூகளுக்கெல்லாம் உத்தமமான நிதியாய் இருப்பவரும் உலக சிருஷ்டிக்கு காரணருமான ருத்ரரைக் கண்டு நமஸ்கரித்தார்"
    "முக்கணணரான ருத்ரரை புண்டரீகாஷர் பக்தியுடன் நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்யலானார்....... தேவரீரே அவமதிக்க முடியாத பரம்பொருள்.....என்னால் ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவரான தேவரீர் யாராலும் கிடைத்தற்கரிய வரங்களைக் கொடுத்தருள வேண்டும் கபடம் புரிதல் கூடாது என வேண்டினார்.
    பின் பினாமென்கின்ற வில்லைத் தரித்தவரும் நினைத்தற்கரிய உருவமுள்ளவரும் ரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்படுவருமான தேவதேவர் ஸ்தோத்திரம் செய்யப்பட்டு தேவதைகளுள் தலைவராயிருக்கிற விஷ்ணுவின் பொருட்டு வரங்களைக் கொடுத்தார்" என்றது .வாஸூதேவர் சிவபிரானையே அவமதிக்கமுடியாத பரம்பொருள் எனக் கூறினமையால் அந்த பிரம்ம பதம் சங்கரனையே குறிக்கும் என்பதாயிற்று. கிருஷ்ணர் தியானித்த ஸநாதனமான பிரம்மமும் அவரே.

    கர்ணம் 21 அத்: "அர்ஜூனனும் கேசவரும் பகலில் செய்ய வேண்டிய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு முறைப்படி பிரபுவான ருத்ரரைப் பூஜித்து" என்று கூறுவதால் இருவரும் சிவபூசை செல்வர்கள் என்பது பெறப்பட்டது.அதே பருவம் 28: "பரசுராமர்......கடுந்தவம் புரிந்து உருத்திரரைப் பிரஸன்னராகும்படி செய்தார் " எனக் கூறியது.
    வனம் 82 ஆம் அத்தியாயமும் "விஷ்ணு.....ருத்ரரை ஆராதித்தார்" எனக் கூறியது.
    இப்படிக் கூறியதால் இப்பர்வங்களும் கற்பிதமகுமோ?
    ஆகாதெனின் அனுசாஸனமும் கற்பிதமாகாது.இவையெல்லாம் உனது ஆச்சாரியாரின் மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டவையே

    சிவபுராணங்களில் வரும் அந்தகாசூர வதம்,காம வதம்,யம வதை,தக்கன் யாகத்தை துவம்சம் செய்தல் ,கிருஷ்ணர் சிவபூசை,விஷபானம் செய்தல், திரிபுர ஸம்ஹாரம்,போன்றவை சிவபிரானுக்கு எந்த இழிவுமின்றியே பாரதத்தில் காட்டப்பட்டது.அதனால் அவை தாமஸமாகாது என்பதை உணர்வாயாக.

    ReplyDelete
    Replies
    1. அனுஸாஸன பர்வத்தின் அவ்வத்தியாயங்களை பிரதிபக்ஷ அத்யாயங்களாகவே அவர் மொழிபெயரத்து கொடுத்துள்ளார்.மேலும் நான் எனது சொந்தகருத்தை கூறவும் இல்லை.அதன் மொழிபெயர்ப்பாளர்கள்
      அதற்கான காரணங்களையும் விளக்கி கொடுத்துள்ளனர்..அதை மறுக்க திறானி இல்லாமல் வெறும் வாய்சொல்லை காட்டி வாதித்துவிடலாம் என்று உளறித்திரிகிறீர்.


      மேலே காட்டிய பகுதிகளால் விஷ்ணு ருத்திரனை வணங்குவதாக கூறிற்று.அதனால் நாராயணரை காட்டிலும் சிவன் உயர்ந்தவனென்னபது அர்த்தமாகாது.
      என்னவெனில்

      அந்யம் தேவ வரம் தேஹி ப்ரஸித்தம் ஸர்வஜந்துஷு |
      மூர்த்தோ பூத்வா பவாந் ஏவ மாம் ஆராதய கேஶவ ||-73-41
      மாம் வஹஸ்வ ச தேவேஶ வரம் மத்தோ க்ருஹாண ச |
      யேந த்வம் ஸர்வ தேவாநாம் பூஜ்யாத் பூஜ்யதரோபவ ||-73-42

      தேவதேவனான கேஶவனே ! அனைத்து ஜீவர்களிடமும் ப்ரஸித்தமான மற்றொரு வரத்தினை எனக்குக் கொடுப்பாய். அதாவது நீ மனிதனாகி என்னை ஆராதிக்கவேண்டும். என்னை சுமக்கவும் வேண்டும். தேவதேவனே என்னை குறித்து தபஸ் செய்து நீ என்னிடமிருந்து வரமும் வாங்கிக் கொள்ளவேண்டும். நீ இப்படியெல்லாம் செய்தால் தான் அனைத்து ஜீவர்களாலும் பூஜிக்கத்தக்கவனான உன்னைக் காட்டிலும் நான் பூஜிக்கத்தக்கவனாக ஆவேன்.
      இதற்கு திருமாலும் சம்மதித்து வரமளித்தார்

      என்று வராஹபுராணத்தாலும் கூறப்பட்டிருப்பதால் சிவனுடைய வரப்பராப்தியினாலேயே எம்பிரான் அவரை வணங்கி சிவனுக்குயர்வளித்துள்ளதாக பெறப்பட்டது..ஆகலினால் எம்பிரானே. பரம்பொருள். இதுவும் வைணவர் எழுதிவைத்தது என்று வாய்கூசாமல் பொய்யிரைப்பீராயின்

      அணுஸாஸன பர்வத்தின் 251 அத்யாயத்தில் சிவன் நாராயணருடைய பெருமையை ரிஷிகளுக்கு எடுத்தோதுங்கால்


      திவி ஸ்ரேஷ்ட ஹி பகவான் ஹரிர்னாராயண ப்ரபு। வந்திதோ ஹி ஸ வந்தேத மானிதோ மானயீத ச। அர்ஹிதஶ்சார்ஹயேன்னித்யம் பூஜித: ப்ரதிபூஜயேத்॥.............மஹாவராஹம் தம் தேவம் ஸர்வலோகபிதாமஹம்। அஹம் சைவ நமஸ்யாமி நித்யமேவ ஜகத்பதிம்॥

      பிராமணோத்தமர்களே! அந்த பகவான் தன்னை நமஸ்கரிப்பவரை நமஸ்கரிப்பவர் ,கொளரவித்தவரை கொளரவிப்பவர், கொண்டாடினவரை கொண்டாடுவர், பூஜித்தவரை பூஜிப்பவர் .......................
      மஹாவராஹரூபியும் எல்லா உலகங்களுக்கும் கர்த்தாவும் மஹாத்மாவுமான அந்த பகவானை நானும் நாள்தோறும் நமஸ்கரிக்கிறேன்

      என்று பாரதத்திலும் இவ்விஷயம் முழங்கப்பட்டது.ஆக தன்னை வணங்கி தனக்கு அடிமைப்பட்ட சிவனுக்கும் பெருமையுண்டாகும் வண்ணம் அவரை சிலவிடங்களில் வணங்குகிறார் என்பது சிவனது கூற்றிலேயே தெரியவந்தது. முடிந்தால் இதற்கு பதில் கூறும்.

      திரிபுராசம்ஹாரம்,விஷபாஷானம் முதலியவை சாத்வீக புராணங்களிலேயே பேசப்பட்டிருப்பதாலும் வேதமே இதை முழங்கியிருப்பதாலும் அவை ஒப்புக்கொள்ள படதக்கவையே .மேலும் அச்செயல்களுக்கு எம்பிரானே அந்தர்மியாய் இருந்தாரென்பதும் அங்கேயே காட்டப்பட்டது....மேலும் வேதம் மற்றும் சாத்வீக புராணங்களில் பேசப்பட்ட எம்பிரானுடைய அவதாரவைபவங்களும் பாரதத்தில் பேசப்பட்டுள்ளதே ஒழிய அவருக்கிழிவு கற்பிக்கும் அடிமுடி கதை,அவதார பங்க‌ கதைகள் முதலிய தாயஸபுராணகதைகளை பாரதம் தொடவுமில்லை என்பதே உண்மை

      Delete
  17. பாத்மோத்தரம்,காந்தோத்தரம்,பாகவத புராணம் போன்றவற்றில் விஷ்ணு சிவனை விடவும் மேலானவர் எனப் பேசப்படுகிறது. ஆயின் விஷ்ணுவின் பெருமை கூறும் அக்கதைகள் பாரதத்தில் விஷ்ணுபெருமை கூறவந்த இடத்து இடம்பெறமால் போனது ஏன்?

    விஷ்ணு பெருமை கூறவந்த இடத்தில் சிவனினும் அவர் மேல் எனின் அக்கதைகளை கூறாமல் விட்டது ஏன்?
    உண்மையெனின் வியாஸர் அதனை பாரதத்தில் எழுதியிருப்பார்.அது பொய் என்பதாலேயே அவைகளில் ஒன்றையும் அவர் பிரஸ்தாபிக்கவில்லை.சிவபிரான் பரம வைஷ்ணவர் என்றது பாகவதம். ஆனால் பாரதமோ சிவனின் பெருமை கூற வந்த இடத்திலோ இல்லை விஷ்ணுவின் பெருமை கூற வந்த இடத்திலோ அப்படி ஒருவாத்தையும் பிரஸ்தாபிக்காமல் போனது.

    சரபமோ "பக்தி நிறைந்தவர் விஷ்ணு பிராஸாதிக்கிறவர் சிவபிரான் "என்றது.
    இந்த பிரஸ்தாபத்திற்கு பாரதத்தில் மேலே காட்டப்பட்ட வியாஸ வசனங்கள் துணை நின்றது.
    ஆனால் பாகவத பிஸ்தாபத்திற்கு துணை நிற்காமல் போனது. அதனால் சரபம் கற்பிதமல்ல என்பதை நுட்பமதியுடையோர் புரிந்து கொள்வர்.

    சிவன் வைஷ்ணவராயின் நீ கூறும் ஊர்த்தவ புண்டரத்தை அல்லவா தரித்திருப்பார் ஏன் பஸ்மத்தைத் தரிக்கிறார்?திருநீறந்தவர்களைக் கண்டாலே இகழும் பூர்வபட்சம் அதனை அணியும் சிவபிரானை வைஷ்ணவன் எனக் கூறுவது மதியுடைமையாகுமோ?

    இந்த வேதவிராதமான பாகவதத்தை வியாஸரே இயற்றினார் என்று அவருக்கும் களங்கம் கற்பித்தது பூர்வபட்சம்.

    ஆனால் சைவர்கள் வியாஸரை அவமதித்ததாக கூறும் பூர்வபட்சம்.அதுவும் தவறேயாம்
    ஏனெனில் வியாச முனி விநாயகரின் திருவருள் கொண்டு பாரதமியற்றினார்.
    அவர் தந்தை பராசரர்"சங்கரர்,பராசர! என்னிடத்தில் வைத்த பக்தியின் பலனாக உனக்குக் கிருஷ்ணத்வைபாயனன் பிறக்கப்போகிறான்....என்று சொன்னார்....." என்றது அனுசாஸனம் 45 ஆவது அத்தியாயம். இதனை நீ ஏற்கமாட்டாய் என்பதை நானறிவேன்.ஆனால்
    சாந்தி பர்வம் 331 ஆவது அத்தியாயம் "அவர்(வியாஸர்) வீர்யமுள்ள புத்திரன் எனக்கு உண்டாக வேண்டுமென்கின்ற ஸங்கற்பத்தோடும்.....
    மஹாதேவரைப் பிரார்த்தித்தார்","முக்கண்ணர்.....அவரை நோக்கி" த்வைபாயனரே! உமக்குப் புத்திரன் உண்டாகப்போகிறான்"....என்று சொன்னார் என்றும் 341 ஆவது அத்தியாயம்"மஹாதேவர்.....
    வ்யாஸரை நோக்கி முன் காலத்தில் நீர்....புத்திரனை என்னிடம் வரித்தீர்...அப்புத்திரன் என் அனுக்கிரகத்தினாலும்.....
    சுசியுள்ளவனுமானான்" என்றது.

    இதனால் வியாஸர் சிவபக்தரென்பதும் அவர் சுகமுனிவரை வேண்டி தவஞ்செய்தார் என்பதால் அவர் தந்தை பராசரர் வியாஸரைப் பெற்வதற்கு சங்கரரை ஆராதித்ததும் உண்மையே என்க.

    அந்த வியாஸரே ஜனார்த்தனர் ருத்ரரிடமிருந்து அவதரித்ததாகவும் மாயவருக்கு உற்பத்திஸ்தானம் சிவபிரானே என்றும் துரோணம் 202 இல் கூறியதைக் காண்க.

    இபபடிப்பட்டவர் காசியில் விசுவநாதர் சந்நிதியின் முன் நாரணனே பரம் என்று பொய் கூறியது குற்றமேயாகும். இதனை அறியாது பொய்யர் இயற்றிய நூலும் மெய்யோ எனக் கேட்பது மதியாகாது.வேதங்கள் சிவபிரானால் தோற்றிவிக்கப்பட்டன.இதனை சங்க பாடல்களும் கூறும்
    "நன்றாய்ந்த நீணிமிர்சடை
    முதுமுதல்வன் வாய்போகா
    தொன்றுபுரிந்த வீரிரண்டின்
    ஆறுணர்ந்த வொருமுதுநூல்
    இகல்கண்டோர் மிகல்சாய்மார்
    மெய்யன்ன பொய்யுணர்ந்து
    பொய்யோராது மெய்கொளீஇ
    மூவேழ் துறையு முட்டின்று போகிய
    உரைசால் சிறப்பி னுரவோர் மருக" என்றது புறநானூறு
    இப்பாடலில் சிவபிரானின் நாவில் வேதங்களும் ஆறுஅங்கங்களும் நீங்காதிருப்பதைக் கூறினார்

    "ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து" என்றது கலித்தொகை.

    துரோணம் 80 ஆவது அத்தியாயம் "வேதங்களை ஸ்வரூபமாக உடையவர் சிவபிரான்" என்றது .
    வில்லியாரும் அருச்சுனன் சிவபிரானை அடித்த போது வேதங்களும் அடிபட்டன என்பதால் வேதம் சிவபிரானின் திருவாக்கேயாம். அதனால் அதனை அனுசரிப்பதற்கும் வியாசர் தண்டிக்கப்பட்டதற்கும் ஒருசம்பந்தமுமில்லை.

    பிருகு சாப விருத்தாந்தத்தையாவது சிவன் மோகன சாஸ்திரம் செய்தார் என்பதையாவது கூட பாரதம் சொல்லாமல் போனது.

    நீ லிங்கமானது பிருகு சாப வசம் எனக் கூறினாய்.அப்படி எனில் அதனைப் பூசித்துத் தானே அருச்சுனன் மரணப்பரியந்தம் வாழ்ந்தான்.துரோணம் 202 உனது சிவநிந்தனைக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் "எவன் எல்லாப் பிராணிகளுக்கும் உத்பத்திஸ்தானமென்று கருதி லிங்கத்தைப் பூசிக்கிறானோ அப்பக்தன்மீது அதிகமான ப்ரீதியை வ்ருஷபத்வஜர் பாராட்டுகிறார் என்று கூறினார்" என்றது இதனால் அனுசாஸனத்தில் முன்னர் காட்டப்பட்ட சிவலிங்க மகிமை உண்மையே என்றும்
    அதுவே அனைத்திற்கும் உற்பத்திஸ்தானம் என்பதையும் உணர்வாயாக.


    ReplyDelete
    Replies
    1. விஷ்ணுவை சிவன் பணிந்தததாக வரும்
      இடங்கள் எல்லாமே பாரதத்துள் வந்துள்ளது...ஆனால் அவருக்கிழிவு கூறும் கதைகள் வரவேயில்லை.எனில் பாரதத்தில் கூறப்படாத அடிமுடிகதை, பெருமாள் அவதாரங்களை பங்கப்படுத்தும் கதைகளை கூட வியாஸர் பாரதத்தில் பிரஸ்தாபிக்கவில்லை.ஆக சிவலிங்க புராணாதிகளும் பொய்யென்று ஆகிவிடுமே. சிவன் தாமஸ குணம் மேலிட்டகால் எம்பிரானுக்கு எதிரம்பு கோர்த்தவராயினும் மற்றைய நேரங்களில் பகவத்பக்தியால் அவர் எம்பிரானுக்கு வேண்டியவராக வைஷ்ணவர் என்று பாகவதம் கூறிற்று.
      அதை அப்படியே பாரதத்தில் பிரஸ்தாபிக்க வேண்டியதில்லை என்ற போதிலும்...............

      மஹாவராஹம் தம் தேவம் ஸர்வலோகபிதாமஹம்। அஹம் சைவ நமஸ்யாமி நித்யமேவ ஜகத்பதிம்॥

      மஹாவராஹரூபியும் எல்லா உலகங்களுக்கும் கர்த்தாவும் மஹாத்மாவுமான அந்த பகவானை நானும் நாள்தோறும் நமஸ்கரிக்கிறேன்
      ( அணு- 251)


      இத்யுக்த்வா வாஸுதேவோ(அ)த தம் பாலம் பரதர்ஷப। பாதேந கமலாபேந ப்ரஹ்மருத்ரார்சிதேன ச। பஸ்பர்ஶ புண்டரீகாக்ஷ ஆபாத தலமஸ்தகம்

      தாமரை மலர்போன்ற பிரகாசிப்பதும் பிரம்மாவாலும் ருத்ரனாலும் பூஜிக்கப்பட்டதான பாதத்தால் அந்த குழந்தையை கால்முதல் தவைவரை தடவினார் ( ஆஸ்வமேதிக - 69)

      என்று சிவன் நாராயணருக்கு அடிமைப்பட்டவர் என்று காட்டத்தவறவில்லை.
      மேற்காட்டிய சரப உபநிஷத்துக்கள் முதலிய சைவர்கள் எழுதிய பொய்யுபநிஷத்துக்கள் பரசைவர்கள் காலத்திலிருந்தே இல்லையாகலினால் அது ப்ரமாணத்துக்குதவாது என்று அசைக்கவொண்ணாதபடி நிலைநாட்டியாயிற்று.

      Delete
    2. பாகவத்தை‌ வியாசர் செய்யவில்லை,சைவ புராணங்கள் மகாபாரதம் வேதங்கள் ஆகியவற்றை தொகுத்த வியாசர் சைவர்கள் கூற்றுப்படி சிவபரத்வம் பிரஸ்தாபஞ்செய்த தெய்வமுனி நாராயணரே பரமென கூறி கைவிளங்காமல் போனதாக கதை கட்டியது முன்னுக்குபின் முரண் வியாசருக்கும் இழிவேயாம்...
      .
      அவை லிங்கத்தின் பெருமையை கூறும் வந்ததேயன்றி பிருகுசாப விருத்த்தை மறுக்கவில்லையே.

      Delete
    3. வைஷ்ணவர்களுக்கு ஊர்த்தவபுண்டரம் அவஸ்மாயிருந்தபோதிலும் வைஷ்ணவசின்னங்கள் அணிபவரை மட்டுமே வைஷ்ணவரென கருதல் பொருந்தாது.கஜேந்திரனுடைய கூக்குரலை கேட்ட ஓடிவந்த எம்பிரான் அந்தயானை ஊர்தவபுண்டரம் அணியாமலிருந்தும் அதை ரக்ஷித்தருளினாரன்றோ ,
      அக்கஜேந்திராழ்வர் ஊர்த்தவபுண்டரம் தரிக்காத வைணவர்.சிவனும் சாம்பல் பூசிய வைணவர் எனக்கொள்ள தகும். (இதற்கு பாரதத்தில் பிரமாணமுள்ளதை பின்வரும் பின்னூட்டங்களால் காணலாம்.)

      ஈஸ்வரோ உவாச
      “ஸ்ரீ ராம ராம ராமேதி
      ரமே ராமே மனோ ரமே
      சஹஸ்ர நாம தத்துல்யம்
      ராம நாம வரானனே” என்கிற மஹாபாரத பலஸ்ருதியும் சிவன் ராமநாம தாரகர் என்பதை உறுதிசெய்தது

      பாகவத்தை‌ வியாசர் செய்யவில்லை,சைவ புராணங்கள் மகாபாரதம் வேதங்கள் ஆகியவற்றை தொகுத்த வியாசர் சைவர்கள் கூற்றுப்படி சிவபரத்வம் பிரஸ்தாபஞ்செய்த தெய்வமுனி நாராயணரே பரமென கூறி கைவிளங்காமல் போனதாக கதை கட்டியது முன்னுக்குபின் முரண் வியாசருக்கும் இழிவேயாம்...
      .

      Delete
  18. பரமாத்மாவிற்கு பிறப்புண்டென்று கூறினாய்.காரண காரியங்களை அறியாதவரே பரமாத்மாவிற்கும்
    பிறப்புண்டென்பர்.

    திருவள்ளுவர் "பிறவிப்பெருங்கடல்" எனக் கூறினார்.

    இருவினை வயத்தாலன்றி பிறப்புண்டாகாது என்பது அனைவருக்கும் ஒப்ப முடிந்தமுடிபு.

    "பிறப்பென்னும் பேதமை நீங்கிச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு" என்றது திருக்குறள்

    "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை" என்றது அது.

    "ஆவாஎன்ப எல்லாஉயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து"

    "பொருளலல்லாதவற்றைப் பொருளென்றென்னும் மருளானாம் மாணாப் பிறப்பு"

    "ஓர்த்துள்ளம் உள்ளதுணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு"

    இப்படிக் கூறித் திருவள்ளுவர் ஆசையும் அறியாமையுமே பிறப்பிற்குக் காரணமாகக் கூறினார்.

    இப்படிப் பட்ட இழிவான பிறப்பை பரமாத்மா மேற்கொள்வாரென்பது பொருந்தாது.

    அப்படியே பிறக்கவேண்டுமெனினும் யோனிவாய்பட்டுப் பிறக்க அவசியமில்லை.
    நால்வகையோனியில் ஒருயோனிவாய் பட்டு பிறப்பனவெல்லாம் கர்மவசத்தால் கட்டப்பட்ட உயிர்களே ஆவர்.

    பரசுராமன்,தாசரதி,வாசுதேவன்,பலராமன்,வாமனன், போன்ற அவதாரங்களில் யோனி வாய்பட்டுப் பிறந்தது கர்மவசமே அன்றி இச்சைவசம் எனக் கூறவியலாது.

    இச்சைவசமாயின் அதற்கு ஆலமர நிழலிலோ இல்லை தீர்த்தக் கரையிலோ இல்லை கோயிலிலோ குழந்தையாகத் தவழ்ந்து இருக்கலாம்.யோனிவாய்ப்பட்டு பிறக்க அவசியமில்லை.
    "பரமாத்மாவிற்குக் கர்ப்பவாசம் வீண்காலம்" கர்ப்பவாசம் அவசியமில்லை. உயிர்களுக்கே கர்ப்பவாசமுண்டாகும்.
    விஷ்ணு உடல் தந்தைதாயினுடைய சோணித பரிணாமங்களே ஆகும்.அது பிராகிருதமேயாம்.

    திருமாலானவர் ஒன்று வெண்மையும் மற்றொன்று கருமையுமான இரு கேசங்களைத் தலையிலிருந்து எடுத்தார் என்றது பாரதம் ஆதி 214 ஆவது அத்தியாயம் இதனால் அவர் மேனி நரைதிரையாதிகளுள்ள பிராகிருதமேயாம்.

    ஆலால விஷத்தின் வேகத்தால்
    அவர் மேனி கருமையை அடைந்ததாக பூர்வபட்சமே கூறியது.

    "விடமெலாம் உண்டதால் எம்விண்டு மேனி கருமையானான்" என்றது கூரேச விஜயம்.

    அவர் "தன்னுடைய கர்ணமலத்திலிருந்து உண்டான.......மதுவென்கிற மஹாசூரனையும் ......கொன்றார் "என்றது பீஷ்மம் 67 ஆவது அத்தியாயம். இதனால் அவருக்கு காது அழுக்கு இருப்பதும் தெரியவருகிறது.
    இதனால் அவருடம்பு பிராகிருதமேயாம்.

    பார்வதீநாதனுக்கு விஷமுண்டதால் கழுத்து கருமையானது இழிவாகாதோ எனின் ஆகாது ஏனெனில் அவர் மேனி ஞானமயம்.அவர் விஷமுண்டபோது பளிங்க போன்ற அவரது மேனி விஷத்தின் நிறத்தைத் தன்னளவில் வெளிக்காட்டியது.அவ்வளவே ஆகும்.

    முருகனோ சிவபிரான் நெற்றிக்கண்ணிலுத்து அக்னியாலும் வாயுவாலும் சரவணபொய்கையில் சேர்க்கப்பட்டவன் அவனுடம்பு தனது தந்தையார் போன்றே ஞானமயமாகும்.இதனையே திருமுருகாற்றுப்படையும் உரைக்கும்.

    விஷ்ணு கர்மவசத்தவர் என்பதற்கு முன் வாலியை மறைந்திருந்து கொன்ற வினையானது அடுத்த பிறவியில்
    வேடனாகத் தோன்றி அவர் உயிரைப் பறித்ததே சான்றாகும்.காந்தாரி அவருக்கிட்ட சாபமும் நடந்தேறியது.அதுமட்டுமின்றி தனது தாயைக் கொன்ற பாவம் பரசுராமனைப் பற்றியதும் இதற்கு சான்றாகும்

    இதனால் பரமாத்ம பதம் சிவபிரானையே சுட்டுமென்பதும் அவரே பிறப்பில்லாதவர் என்று வேதங்களாலும் பாரதத்தாலும் புகழப்பட்ட காரணத்தாலும் ஹிரண்யகேசி, ஊர்த்துவ கேசி, வ்யாமகேசி எனப் புகழப்பட்டதாலும் உறுதியானது.

    மற்றவருக்கு அப்பரமாத்ம பதம் சுட்டுவது வெறும் உபசாரமேயென விடுக்க.

    ReplyDelete
    Replies
    1. வள்ளுவர் கர்மசம்பந்தத்தால் உள்ள பிறப்பை கூறினாரே ஒழிய வேத்ததிற்கு முரணாக கூறியிருக்கமாட்டார.
      பிதா புத்ரணே பித்ருமாந்
      யோநியோநௌ நாவே
      தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்"
      [யஜூர் வேதம் - காடகசம்ஹிதை -3-9-55]
      (அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

      "ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந"
      [யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
      (அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

      "தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்"
      [புருஷ ஸூக்தம்]
      (அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

      "அஜாயமாநோ பஹுதா விஜாயதே"
      [புருஷஸூக்தம் 2-3]
      (பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

      முதலிய பிரமாணங்களால் தன்னிஷ்டபடியே பரமாத்மா பிறப்பெடுப்பதாக கூறுகிறது அதன்படி நாராயணரே இப்பரமான்மா என்பது சொல்லாமலேயே விளங்கும்.


      வெண்மை , செம்மை, கருமை ஆகிய நிறங்கள் ஸத்வ, ராஜஸ, தாமஸ குணங்களை காட்டுமென்பதெல்லாம் ப்ராக்ருதமான சரீரரங்களுக்கல்லவா? சொல்லப்படும். 

      ந தஸ்ய ப்ராக்ருதா  மூர்த்திர் மாம்ஸமேதாஸ்தி ஸம்பவா (வராஹபுராணம்:14-41, வாயு புராணம் 34-40)

      ந பூத ஸங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந
      (பாரதம்-சாந்தி பர்வம் 206-60)

      இந்த பரமாத்மாவின் தேஹம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அமைந்ததன்று. 

      எனவே பரமபுருஷனின் அப்ராக்ருத திருமேனிக்கு இந்த நிற நியமம் ஏது? ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்திலே ஐந்தாமத்யாயத்தில் இருபதாம் ஸ்லோகத்தில்

      க்ருதம் த்ரேதோ த்வாபரம் ச கலிரிதயேக்ஷ கேஸவ|
      நாநாவாணபிதாகார நாநைவ விதிநேஜயதே ||

      க்ரதம், த்ரேதா, துவாபாரம், கலி எனும் நான்கு யுகத்தில் பலவர்ணங்கள், நாமங்கள், உருவங்கள் ஆகியவற்றை உடையவனாய், பலவிதமான விதிகளால் உபாஸிக்கப்படுபவன் கேசவன் என்று கூறப்படுகிறது. 

      பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்ப சும்புறம்
      போலுநீர்மை பொற்புடைத்த டத்துவண்டு விண்டுலாம்
      நீலநீர்மை யென்றிவைநி றைந்தகாலம் நான்குமாய்
      மாலினீர்மை வையகம்ம றைத்ததென்ன நீர்மையே.

      பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
      சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
      அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
      என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
      இவ்வுலகத்திலுள்ளவர்கள் திரஸ்கரித்தது என்ன ஸ்வபாவம்!

      என்ற திருச்சந்த விருத்தத்திலும்(44)

      நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்
      நான்கும்.... 

      வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும்டையனாய்க் கொண்டு (நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய். 

      என்ற நான்முக அந்தாதி(24) பாடலும் மாறிமாறி வரும் வர்ணங்களுடையவை பகவானின் திருமேனி என்றதே. 

      மேலும் சிவன் பார்வதியை நூறுதேவ ஆண்டுகள் புணர்ந்து அவ்விந்தில் முருகன் பிறந்ததால் மனிதர்கள் போல ப்ராகிருத பிறப்பு பிராகிருத சேர்க்கை இவர்கட்கும் உண்டு என்பதும் உண்மையே

      ஆகவே பிராக்ருத சம்பந்தமில்லாமல் பிறந்த தன்னிஷ்டபடி அவதாரம் செய்த விஷ்ணுவே பரமாத்மா என்பதும் சர்வநிச்சயம்

      Delete
  19. அது மட்டுமின்றி விஷ்ணுவிற்கு ஹரி நாமம் ஏற்பட்டதற்கு காரணம் தாமஸ மனுவந்தரத்தில்
    ஹரியை என்பவளுடைய வயிற்றிலிருந்து அவர் பிறந்ததால் ஏற்பட்டது என்று விஷ்ணு புராணம் அமிசம் 3 அத்தியாயம் 1 கூறியது அதனால் அவருக்குப் பிறப்புண்டென்பது நிச்சமாயிற்று

    ReplyDelete
  20. பூர்வ பட்சமானது சைவாகம நூலை தாமஸ சாஸ்திரமென்றும்
    பஸ்மத்தை பிணச்சாம்பல் என்றும் கதறி அழுவதை சிறிது விசாரிப்போம்.

    அம்ருதநாத உபநிஷத் 'ஆகமஸ்யா விரோதேந ஊஹநம் தர்க உச்யதே' (ஆகமத்துக்கு விரோதமில்லாமல் ஊகிப்பதே தர்க்கம் எனப்படும்) என்றும், தேஜோபிந்து உபநிஷத் 'ஸகலாகம கோசர:' (எல்லா ஆகமங்களிலும் விஷயமாயிருப்பவன்), 'ஸர்வாகமாந்தார்த்த விபாவிதோஸி' (எல்லாவாகமங்களின் உட்பொருளென்று சொல்லப்பட்டிருக்கிறது) என்றும், நாரதபரிவ்ராஜக உபநிஷத்து 'ஸ்ர்வாகமமய: சிவ:' (சருவாகம மயன் சிவன்), 'ஸர்வாகமாந்தார்த்த விசேஷ வேத்யம்....சர்வேச்வரம்.....சிவாச்யுதாம் போருஹ கர்ப பூருஹம்....சிவம்' (எல்லாவாகமங்களி னர்த்தத்தாலே விசேடமா யறியப்படுபவனும் சருவேசுவரனும் உருத்திரனும் விஷ்ணுபிரமனென்னும் மூவரையும் கருப்பத்துள் வைத்தவனுமான சிவபிரான்) என்றும், அந்நபூர்ண உபநிடதம் 'சிவ: சைவகாமஸ்தாநாம்' (சைவாகமஸ்தானங்களிற் சிவபிரான்) என்றும், கடருத்ர உபநிடதம் 'ஸர்வ வேதாந்த சித்தாந்தஸாரம்' (சருவவுபநிஷத்துக்கள் ஆகமங்கள் இவற்றின் சாரம்) என்றுங் கூறி அவ்விருபத்தெட்டுச் சிவாகமங்களையும் பூஷிப்பதை அவர் அறியாமற் போனது பரிதாபம். உபநிஷத்துக்களே சிவாகமங்களை அங்ஙனம் வந்திப்பதாற் சைவாகமங்கள் மோகன சாத்திர மென்பது அடிப்பட்டது.

    இங்கே எடுத்துக்காட்டப்பட்ட உபநிடதங்கள் கற்பிதம் என்று வாய் கூசாமல் நீ கூறுவாய்

    ஆனால் அதற்கு பதிலடியாக பரிமேலழகர் தனது உரையில் அதனைக் காட்டிவிட்டார்.அதனைப்போன்று
    பஞ்சராத்திர மாயாவாத ஆகமங்கள் வேதங்களால் வந்திக்கப்படாமையானும் மற்ற பெரியவர்களால் காட்டப்படாமையானும் அவைகள்
    பொய் என்பது உறுதியானது.











    ReplyDelete
  21. மேலும் திருநீற்றை பிணச்சாம்பல் என்று கதறி அழுதனர்.அதற்கும் பதிலடியாக பாரதம் சாந்திபர்வம்
    "தர்மபுத்திரரே! தீர்க்காயுளை விரும்புகிறவனும் மோக்ஷத்தை அபேக்ஷிக்கிறவனும் அயிசுவரியம் விரும்புகிறவனும் தினந்தோறும் பஸ்மத்தை அணியவேண்டும்"

    வனம் 82 ஆவது அத்தியாயம்.
    "வ்ருஷபத்வஜரை வணங்கி பஸ்மத்தினால் ஸ்நாநம் செய்யவேண்டும்.அப்படி(பஸ்மஸ்நாநம் செய்த பிராமணனால் பன்னிரண்டு வருஷ காலங்களில் நிறைவேறும் விரதமானது நன்கு அனுஷ்டிக்கப்பட்டதாகும்"

    இதுமட்டுமல்ல சிவபிரானைத் திருநீறந்தவன் என்று கலித்தொகையும் "மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து" என்று போற்றியது

    கம்பரும் "நீறணிந்த கடவுள் நிறத்த வான்" என்று போற்றினார்

    வில்லியார் அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில்
    "ஆசினான் மறைப்படியும் எண்ணிலாகமத்தின் படியும் பூசினான் விபூதியினைப் பூதியினால்"என்று அருச்சுனன் திருநீறணிந்து தவம் செய்ததைப் பற்றி விவரித்துப் பேசினார். இவற்றில் அவர் மறைப்படியும் என்று கூறியதால் வேதவிதிப்படி
    அவன் பஸ்மமணிந்தான் என்பது
    பெறப்பட்டது . பஸ்மத்தைப் பற்றி
    பல உபநிடதங்கள் பேசிடினும், முக்கியமாக அதனைத் தரிக்கும் விதிகளை பஸ்மசாபாலமும் பிருஹஜ்ஜாபாலமும் பேசும்.

    அதனால் அந்த உபநிடதங்கள் யுகந்தோறும் இருந்துவந்ததும் அவை கற்பிதமல்ல என்பதும் ஹரதத்தர் காலத்திற்கு முந்தியே அவை இருந்திருக்கிறதென்பதும் உறுதியானது.
    அவற்றிற்கு இயைபாக சிவாகமங்களும் திருநீற்றைத் தரிக்கவேண்டுமென்று கூறியதையும் வில்லியார் கூறியிருக்கிறார்.
    அதனால் வேதங்களோடு இயைபுடையன சிவாகமங்களே என்பது பெறப்பட்டது.

    மேலும் சிவபிரானை கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில் "நீற்றணி நிமலன் அன்ன" புகழ்ந்தே இருக்கிறார் அவர்.
    அதனை பூர்வபட்சம் தவிர்த்து வேறு யாரும் பிணச்சாம்பல் என்றோ அமங்கலம் என்றோ கூறவில்லை

    அது மட்டுமின்றி அவர் அருச்சுனன் "நீறுபட்டிலங்கு மெய்ந்நிலவொளியால் நெஞ்சினில் இருளையகற்றி" என்று விபூதி பூசினால் மனவிருள் அகலும் எனக் கூறினார்.

    அதுமட்டுமின்றி சிவபிரானின் திருமேனியைச் சிறப்பித்த காலத்து "வலப்பாகம் செழும்பவளச் சோதியன்ன வாணீலச்சோதியென்ன மற்றபாகங் கலப்பான திருமேனி
    அணிந்த நீற்றால் கதிர்முத்தின் சோதியென மேனை ஈன்ற" என்றார்

    அதாவது பார்வதிபரமேஸ்வரர் அணிந்த திருநீறற்றின் பிரகாசம் முத்தின் பிராகசத்தை ஒத்ததாகக் கூறினார்.

    இது போதாதென்று வியாசரும் திருநீற்றை அணிந்ததாக சம்பவச் சருக்கத்தில் கூறுகிறார்.
    "தொழுது நெற்றி விபூதியால் அன்னை தன்துணையடித்துகணீக்கி " என்று வியாசமுனி பஸ்மமணிந்த சிவனடியார் என்பதையும் குறிப்பாகக் காட்டினார் .

    பாலபாரதமும்
    "ப்ராணமலக்நேந லலாட பஸ்மநா-ப்ருசம் ப்ரவிரீக்ருத பாத பங்கஜா" என்றது

    இதனையே ஸ்கந்த புராணமும்
    "க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் ஜடாமகுட குண்டிதம்। பஸ்மோத் தூளித ஸர்வாங்கம் பஸ்மதிர்யக் த்ரிபுண்டரம்॥" எனக் கூறியது மேலே காட்டிய வில்லிபாரதச் செய்யுளால் ஸ்கந்தபுராண ஸ்லோகமும்
    உண்மை என்பது உறுதியானது.

    இதுமட்டுமல்லாமல் அருச்சுனன் சிவபிரானை அடித்த காலத்தில்
    வேதங்களும் அதனோடு கூட சிவாகமங்களும் அடி பட்டதையும்
    அரிப்பிரம்மாதி தேவர்களும் அடிபட்டதையும் கூறி இதற்கெல்லாம் கிரீடம் வைத்தாற் போன்று "வேதமடியுண்டன "எனத் தொடங்கும் அப்பாடலில் சிவபிரானைப் "பிறப்பிலி இறப்பிலி" என்று கூறிவிட்டார் அவர்.

    "அனந்தவேதமும் இறைவன் ஏவலினால்
    ஞாளிகளாயின "என்றும்
    அதே நேரத்தில் அந்த வேதங்கள்
    சிவபிரானைப் பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறினார்
    "தெய்வமுறை ஞாளிகள் தொடர்ந்து வரவந்து பொருசெய்ய சிவவேடன் முடிமேல்" என்றார்

    இதனால் வேதமுதல்வன் சிவபிரானே என்பதும் மற்றவரை
    வேதமுதல்வன் எனக் கூறுவது உபசாரமேயென விடுக்க .
    பஞ்சராத்திரத்தைப் பற்றி வாயே எடுக்கவில்லை.
    இதுமட்டுமல்லாமல் அப்பாடலில்
    "வேதமடியுண்டன விர்ந்தபல ஆகம விதங்களடியுண்டன" என்றார்

    அதாவது வேதம் மிக நுட்பமானது அதன் பொருளைப் பாமரரால் புரிந்துகொள்ள வியலாது.அதனை விளக்கவே சிவனின் தத்புருஷ,அகோர ,வாமதேவ,சத்தியோசாத, முகத்தினின்றும் சிவாகமங்கள்
    தோன்றியது . இக்கருத்தை அப்படியே வில்லியார் எடுத்துக் கொண்டு" விரிந்தபல ஆகம விதங்கள் "என்றதால் வேதங்களோடு இயைபுடையன சைவகாமங்களே உண்மை என்பதும் மேலே காட்டப்பட்ட உபநிஷத் வாக்கியங்களும் உண்மையே என்பதும் பெறப்பட்டது.

    திருநீற்றை அணியும் போது நாராயண உபநிஷத்திலுள்ள
    "ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி" எனத் தொடங்கும் ஸ்லோகத்தை கூறி அணியவேண்டும் என விதி இருப்பதால் அதனை வைணவர்கள் மதிக்கவே வேண்டும்.காமிக ஆகமமும் அந்த உபநிஷத்திலுள்ள பஞ்சப் ப்ரஹ்ம மந்திரங்களையே உச்சரித்துத் தரிக்க வேண்டுமென்றது.

    இதனால் அண்ணங்கராசாரியார்" கூத்தன் பொடியாடி" என்பதற்கு உரை எழுதக் கூச வேண்டிய அவசியமில்லை

    ReplyDelete
  22. சிவாகமங்களுங்கு மேலும் சிறப்பினைக் கூறும் பொருட்டு

    அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்தில்:

    "ஐயானனியல்வாணனை" எனத் தொடங்கும் பாடலில் "மெய்யாகமவதிகைத் திருவீரட்டமும் நேமிக் கையாளனகீந்திரபுரமுங் கண்டுகை தொழுதான் " என்றது.

    சைவாகமவிதிப் படி அக்காலத்தில் திருவதிகை வீரட்டானத்தில் பூசைகள் நடைபெற்றதைத் தெரிவிக்கும் அப்பாடலில்
    "மெய்யாகமவதிகை "
    என்று சிவாகமங்களே உண்மை என்பதை கூறினார் வில்லியார்.

    ReplyDelete
  23. பழைய கதவைதிறடியென்பது போல சமீபகாலமாக கற்பிக்கப்பட்ட சைவாபிமான உபநிஷத்து ப்ரமாணக்கடைகோடியிலும் வராதாகையால் சைவாகமங்களை வைதிகமாக்கது வாந்திபேதி சம்பவிக்கும். 108 உபநிஷத்தும் வைதிகமே வித்யாரண்யர் அதை பாஷ்யமிட்டார் என்று வாய்கூசாமல் பிதற்றும் சைவர்கள் வைணவர்களின் சாவலை ஜெயிக்கமுடியாததால் இவ்விதம் புலம்பதான் செய்வர்.....
    ஜைன பொளத்த ஆகமங்களில் புலாலுண்ணாமை கோற்பாட்டை வைதிகசாஸ்திரங்களும் சம்மதிப்பதால் அவ்வவைதீக சாஸ்திரங்கள் முழுவதும் வைதிகர் ஏற்பாரென்பதில்லை
    .அதுபோலவே அக்கருத்தும்.மட்டுமன்றி வைணவாகமங்களின் கூறப்பட்ட வாஸூதேவனுடைய வியூகங்களை பரிபாடல் கூறுகிறது தவிற சைவர்களின் துரிய சிவகற்பனையை அங்கெங்கும் காட்டமுடியாது.அதனாலும் வாயடங்குக

    வைணவர்களும் ஓமபஸ்மத்தை அணிந்துகொள்வேண்டுமென்பது வைணவாகம சம்மதமே.ஆகவே பார்தத்தில் கூறப்பட்ட பஸ்மம் சைவசின்றமான திருநீறண்று.அன்றியும் அதர்வசிகோபநிஷத்தில் கூறப்பட்ட பஸ்மம் பசுபதிவிரதத்துக்குமட்டுமன்றி சர்வ வைதிககார்யங்களுக்குமல்ல

    ஹரத்ததர் காலத்தில் இருந்திருந்தால் அவர் அவ்வுபநிஷத்தை கையாண்டு எப்போதோ வைணவர்கள் வாயடைத்திருக்கலாமே? அன்றியும் தடுமாறியதேன்?.

    சுடுகாட்டு சாம்பலையே அமங்கலமென்றேன தவிற திருநீறை அவ்விதம் சொல்லவில்லை.மேலும் வில்லிபாரத்ததில் பல மாறுதல்கள் செய்தார் சைவர்கள் இதையும் மாற்றியிருப்பர் என்பது கையிலங்கு கனி


    ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி...என்று கூறி விபூதி அணியவேண்டுமென்ற எந்தவிதி சொன்னதோ?

    அண்ணங்கராசாரியார் பிணச்சாம்பலை கண்டுகூசியும் பஸ்மத்தை அப்படியே எழுதியும் வைத்திருக்கிறார்

    ReplyDelete
  24. 'முற்காலத்தில் தண்டகாரண்யத்தில் வஸித்த .... ரகுராமனால் ..... க்ஷரத்தினால் ...... ராக்ஷஸனுடைய தலையானது அறுக்கப்பட்டது .... அந்த தலையானது .... மகோதர ரிஷியினுடைய கணுக்கால் எலும்பைப் பிளந்து பற்றிக்கொண்டு ..... பிரகாசித்தது ........ அந்தத் தலையினால் உண்டான வேதனையினால் பீடிக்கப்பட்ட அந்த மகரிஷியானவர் .... எல்லாத் தீர்த்தங்களுக்கும் போனார் .... எல்லாத் தீர்த்தங்களிலும் ஸ்தானஞ் செய்தும் விடுபட்டவராகவில்லை. ...... அவர் ஸரஸ்வதீ நதியிலுள்ள ஒளசனஸ தீர்த்தத்தை யடைந்து ஸ்நானஞ் செய்தார். பிறகு, ஒளசனஸ தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்கின்ற அந்த மகரிஷியினுடைய காலை விட்டு விட்டு அப்பொழுது அந்த ராக்ஷஸனுடைய தலையானது ஜலத்தினுள் விழுந்தது. அவர் அந்தத் தலையினால் விடப்பட்டு அதிக ஸூகத்தை அடைந்தார்.....பிறகு அந்த.... ரிஷி .... ஆச்ரமத்தை வந்தடைந்தார் ...... அந்த மகோதரர் ..... ரிஷிகளுக்கு அவை எல்லாவற்றையும் உரைத்தார் ..... அந்த ரிஷிகள் .... அந்தத் தீர்த்தத்திற்குக் கபாலமோசனமென்று பெயரிட்டார்கள்' என்பது சல்யம் 40வது அத்யாயம். மோசனமென்பதும் மோக்கமென்பதும் ஒன்றே. விடுதலை யென்பது அவற்றினருத்தம். அக்கபால மோசனத்தைத் தானே கபாலமோக்கமென வைத்துக்கொண்டு அப்பாரதக் கதையை மறைத்துச்சிவநிந்தையை அப்பாடகர் கற்பித்துவிட்டால் அவரை அறிவுடையவர்கள் மதிப்பார்களா?

    ஒரு தந்தை தனது மகனை அவனுடைய நன்மைக்காகத் தண்டிப்பான்.
    சிவன் பிரமனின் தந்தை என்பதை சாந்தி 58 ஆவது அத்தியாயத்தில் கண்டுகொள்க
    சிவன் பிரமன் தலையைக் கிள்ளியது அவன் ஆணவத்தை அடக்குவதற்கு. சிவபிரான் பிரமனைத் தண்டிப்பதால் பாவம் சிவபிரானை ஒருநாளும் பற்றாது.
    சதுர்முகன் என்னும் பெயரும் தலைகிள்ளிய பிறகு தான் வந்தது.
    அவன் ஐந்துதலையோடு இருந்த காலத்து அவனுக்கு சதுர்முகப் பெயர் இருந்ததாகக் கூறுவது மூடர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.

    அந்த தலையை விஷ்ணு தோற்றிவித்து அவனை ஐம்முகனாக்கி இருக்கலாம்.கிள்ளப்படாதவரை அவனுக்கு சதுர்முகப் பெயரில்லையே . பிறகு சதுர்முகப் பெயர் நிலைக்கவேண்டும் என்பதற்காக
    அவனுக்கு விஷ்ணு அருளவில்லை என்றால் அவர் கருணாசாலியாதல் எப்படி?

    சிவபிரான் இன்றல்ல நேற்றல்ல முக்காலமும் காபாலி என்றே அழைக்கப்படுவர் அவரின் காபாலித்துவத்தை விஷ்ணு நீக்கினார் என்று கூறுவது விருதாகோஷமாகும்.

    விஷ்ணுவாகிய க்ஷத்திரியனிடமிருந்து பிரமனாகிய வைசியன் தோன்றுவதில் தடையில்லை. அதனைப் போல வைசியனிடமிருந்து பிராமணன் தோன்றுவதற்கும் தடையில்லை.
    கற்பபேதங் காரணமாக ஒருவரிடமிருந்து ஒருவர் தோன்றுவது இயற்கையே இதனை அறியாது புலஸ்தியர் எதற்கு பிரமனிடமிருந்து தோன்றினார் ? என்று கேட்பாயாகில் பிரமனிடமிருந்து அனைத்து வருணத்தவரும் பிறந்தனர் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

    "விப்ராணாம் தைவதம் சம்பும்
    க்ஷத்ரியாணாந்து மாதவ வைச்யாரந்து பவேத் ப்ரஹ்மா சூத்ராணாம் கணநாயக॥" என்ற மனுஸ்மிருதியால் சிவபிரான் பிராமணன் என்பதும்
    சத்திரியர் விஷ்ணு என்பதும் பிரமன் வைசியன் இந்திரன் சூத்தரர்களால் வழிபடப்படுவன் என்பதும் வெளி.

    அதனால் தான் ஆழ்வாரும் "திருவுடை மன்னனைக் காணும்போதெல்லாம் திருமாலைக் கண்டேனே" என்றார்.

    நிற்க, அப்படி பிரமன் இடைவிடாது வேதங்களை ஓதுவதால் வேண்டுமாயின் அவன் பிராமணன் என்றழைக்கப்படலாம். அப்படியும் சிவபிரான் அவன் தலையை மட்டுமல்லவோ கிள்ளினார்? பிறகு பிரம்மஹத்தி
    எப்படி ஏற்படும்? அவனைக் கொல்லவில்லையே .


    இராமன் பிராமணனின் மகனான இராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி ஏற்பட்டது உண்மையே .அதனை வான்மீகம் சொல்லவில்லையெனில் அதனை அடுத்துவந்த பல நூல்களும் அதனைக் கூறிய காரணத்தால் அதனை பொய் என்று ஒதுக்கிவிட முடியாது.இராகவனின் இழிவைக் கருதி முனிவர் அதனை சொல்லாமல் விட்டார்.
    இராமாயணம் இராகவனின் பெருமையைப் பேசவல்லது. அதனில் அவருடைய இழிவையும் கூறுவது சம்பிரதாயமாகாது.
    முனிவர் ஆதிகாவியமான இராமாயணத்தில் காவியச்சுவைக்காக அதனைக் கூறாமல் விட்டது தவறன்று.

    இராமன் இராவணன் என்னும் அரக்கபிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி வராது என்று கூறுவாயானால் அது ஒருக்காலும் பொருந்தாது.
    ஏனெனில் இராவணன் வேதமோதி சிவபூசை செய்பவன் அவன் தீயவனானாலும் இந்த வைதீகக் கிரியைகளை விடவில்லை. அதனால் அவனைக் கொன்ற பாவம் இராமனைத் தப்பாமல் பற்றும்.

    கபாலமோக்ஷக் கதையை மாற்றி
    தவறாகச் சொல்லி மற்றவரை ஏமாற்றும் முயற்சி எப்படி நடக்கும்?அதனால் அதனைத் தெரிவிக்கும் ஆழ்வார் பாடல்கள் அவைதீகமானது உண்மையே என்க




    ReplyDelete
    Replies
    1. முன்னர் நடந்த விவாதங்களிலெல்லாம் படுதோல்வி கண்டு அங்கே எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதில் கூறமுடியாது விவாதிக்க விரும்பவில்லை என்றோடி ஒளிந்துகொண்டு இப்போது கபாலநன்மோக கதைக்கு வந்துவிட்டு சிவபரம் சாதிக்க பார்கிறீர்

      கபாலநன்மோக்க கதையை முன்னரே நீரே ஒப்புக்கொண்டபின் அதை
      கற்பிதம் எனக்கதறுவது உமது முன்னுக்குப்பின் முரணான வாதங்களை காட்டுகிறது. "விரூபாக்ஷய தந்தாஞ்ஜயே ப்ரஹ்மண : புத்ராய நம:" என்று ஸாமவேதம் முக்கண்ணன் பிரமனின் புத்ரன் என்றது. இதை அனுஸந்தித்த பாரத அணுஸாஸன பர்வமும் (251) பிரம்மதேவர் அவர் நாபியிலிருந்து உண்டானவர் ,நான் அவருடைய நெற்றியிலிருந்து உண்டானவர் என்று பிரம்மனுக்கு புத்ரன் சிவனே என்பது ஸுப்பிரசித்த வாக்யங்களால் ஸ்பஷ்டம்.

      பிரம்மனை சிவன் தண்டித்ததால் பிரம்மஹத்தி பற்றாதெனில் இராவணனை வதைத்த ராமருக்கு மாத்திரம் பிரம்மஹத்தி வருமோ? இராவணன் சிவபூசை செய்ததால் அவனுடைய ப்ராஹ்மணத்துவம் நிலைபெற்று இராமருக்கு பிரம்மஹத்தி தாக்குமெனில் சதுர்வேத பாராயணரும் அநேகவிடங்களில் பலதேவதைகளிடம் வரம்பெற்ற பிரம்மனரை இமிசித்காலும் பிரஹ்மஹத்தி தப்பாது


      வேதங்களில் சதுர்முகன் என்கிற பெயர் பின்னாளில் பிரம்மனுக்குரியதாகலினையறிந்த சுருதி முன்னாலிலேயே அவனை சதுர்முகனென அழைக்க தட்டில்லை.என்னை? ருத்ரனுக்கு பிறக்கும் போதே பசுபதி என்கிற பெயர் வந்துவிட்டதை சதபதப்பிரஹ்மாணத்தில் சொல்லி வைத்த வேதம் பின்னாளில் தானே அவன் திரிபுரசம்ஹாரஞ்செய்து பசுபதி என்கிற பதவியை அடைந்ததாக வேதங்கூறியது.ஆகலினால் தட்டில்லை. இச்சமாதானமுமே கபாலி என்கிற பெயர் சிவனுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கும் போருக்கும்.

      நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று கீதாசார்யானும் பிரம்மத்திடமிருந்து நான்கு வண்ணங்களும் தோன்றின என்று புருஷஸூக்தமும் கூறியிருக்கு அதை தோற்றுவித்த இறைவனே அவ்வர்ணத்துக்குள் ஒருவராவான் என்பது பொருந்தாது.சிவன் பிராமணன் என்றதிலிருந்தே அவனும் ஜீவகோடிகளில் ஒருவன் என்பது தெள்ளிது.
      கற்பபேதங்காரணமாக ஒருவரிடத்தில் இன்னொருவர் தோன்றியிருப்பதற்கும் வைசியனான பிரம்மனிடத்தே பிரமாண ரிஷிகள் தோன்றுவதற்கும் யாதொரு சம்மந்தமுமில்லை.

      மேலும் மேற்காட்டிய மணுஸ்மிருதி எந்த இடத்தில் என்று காட்டாமல் பொத்தாம்பொதுவாக ஒருவசனத்தை கீறி மனுஸ்மிருதியிலிருப்பதாக சொல்வது பொருந்ததாது.பூர்வத்தில் அடிமுடிகதை ரிக்கில் உள்ளதாக பொய்பகன்றபோதே இதை அறிவுறுத்தினோம்.நிற்க ! அம்மனுஸ்மிருதியே ஸ்ருதிக்கு ஸ்மிருதி விரோதமாகையில் ஸ்மிருதியை ஒதுக்கிவிட கூறியிருப்பதால்

      'ப்ராஹ்மன்யோ தேவகீ புத்ரோ ப்ராஹ்மண்யோ மதுஸுதநாம்' என்கிற நாராயணோபநிஷத்தும்
      பிராமணர்களால் பூஜிக்கதக்கவன் தேவகிபுத்ரனாக அவதாரம் பண்ணிய நாராயணனே என்று கூறுவதால்
      அப்பொய்யாய் புனைந்த மனுஸ்மிருதியும் நிரஸிக்கப்பட்டது. அதை முரணில்லாமல் பொருள் கொண்டாள் பிராமணனன சிவனால் பூஜிக்கதகுந்தவன் நாராயணன் என்றே பொருள்தேறும்.

      ஆழ்வார் திருவுடைய மன்னன் தன்னாட்டை கட்டி ஆழ்வதுபோல திருமகள் கேள்வனான எம்பிரான் சிவன் முதலிய தேவதாந்தரங்களை படைத்து அனைத்துக்கும் கர்த்தாவாக இருப்பதால் உவமித்துகூறினாரே அன்றி அவரை ஷத்ரியர் என்பதற்கல்ல.


      பிராமணனை கொன்றால் மட்டுமன்றி அவனைத்துன்புறுத்தினால் கூட பிரம்மஹத்தி தோஷம் பீடிக்குமென்பது அநுஸாஸன பர்வத்து 24ம் அத்யாயத்தில் விஸ்தாரமாக உள்ளதை மேலேயே காட்டினோம் அதை கண்ணுறாது திரும்ப திரும்பி கூறியது கூறல் வாதத்திற்கு வலுவல்ல. இராமாயணமே மூலநூல் ஆகையாலும் அக்காலத்தில் வாழ்ந்த வால்மீகி அனைத்தையும் ஒன்றுவிடாமல் இராமாயணத்தில் சொல்லி வைத்தார்.இராம புகழை கூறவந்த வால்மீகி அவருக்கிழுவு தரும் பிரம்மஹத்தியை கூறவில்லையாயின் சைவ புராணங்களில் சிவனுக்கிவுதரும் பிரஸ்தாபங்களும் கூறப்படவில்லை‌‌.வேறுநூல்களில் உள்ளதால் அதை சைவர்கள் ஏற்பார்களோ?.மேலே பல காரணங்களை காட்டி லிங்கபூஜை ராமர் செய்யவில்லை என்று காட்டினோம்.மேலும் மஹாதேவ பதம் சிவனை குறிக்கும் ஆகவே ராமர் சிவபூஜை செய்தது வான்மீத்தில் உண்டு என கதறிவிட்டு இப்போது வால்மீகி சொல்லாமல் விட்டாரென கூச்சலிடுவது உமது குருட்டு வாதத்தை காட்டிற்று.

      Delete
  25. இராமன் சிவதனுஸை முரித்தகாலத்து சிவனுக்கு மயக்கம் ஏற்பட்டது என்று நீ கதறி அழுவதை சிறிது விசாரிப்போம்

    இராவணன் ஆணவத்தால் கயிலாய மலை எடுத்த காலத்து
    அவனைக் கால்விரலால் அடர்த்து அவனது இருபது தோள்களும் பத்து தலைகளையும் நெரிந்து போகுமாறு செய்து அவனை கதறி பல ஆண்டுகள் அழவைத்துப் பின் அவனுக்கு வாள் கொடுத்து அருள் புரிந்தார் நீலகண்டர்.

    இது புராணங்களிலும் சங்கப் பாடல்களிலும் பிரசித்தம்
    "இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
    உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
    ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
    தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை
    எடுக்கை செல்லாது உழப்பவன் போல" என்றது கலித்தொகை 38.

    இப்படி தனது கால் விரலாலேயே அவன் ஆணவமடக்கினார் சிவபிரான்.

    ஆனால் இராமனோ இருமுறை அவன் புத்திரனால் மயக்கமடைந்துப் பின் தசக்கிரிவனோடு போரிட்டுக் களைப்படைந்து சிந்தாகுல வயத்தராய் நிற்க போரைக் காண வந்த முனிவர்களுள் ஒருவரும் பிரம்ம,விஷ்ணு,இந்திரர்களால் வணங்கப்படுவருமான சிவபக்த
    சிரேஷ்டராகிய அகத்தியமுனிவரால் ஆதித்ய ஹ்ருதய உபதேஞ் செய்யப்பட்டு
    அந்த வலிமையால் இராவணனை அழித்தார்.

    இப்படி இவ்விருவருடைய வலிமையின் தாரதம்மியத்தைக் கணக்கில் கொண்ட எவனும் இராமன் சிவதனுஸை முரிக்கும்போது சிவனுக்கு மயக்கமேற்பட்டது என்னும் அவச்சொல்லை ஒருநாளும் சொல்லமாட்டான்.

    இராவணன் கயிலைமலையை எடுத்தபோதே சிவபிரானால் கொல்லப்பட்டிருப்பான். ஆனால்
    கொடுப்பது ஒருகையிலும் அழிப்பது ஒருகையிலும் செய்வது தகாது என்பதால் சிவபிரான் அப்போது அவன் மேல் இரக்கம் கொண்டு அருள்புரிந்தார்

    மேலும் சத்ருக்கனன் இலவணாசூரனை அழிக்க இராமன் நாராயண அஸ்திரத்தை அவனுக்கு அளித்த காலத்து சிவபிரானால் அசுரனுக்கு அருளிச் செய்யப்பட்ட திரிசூலம் கையில் இல்லாத போதே அவ்வஸ்திரத்தைப் பிரயோகிக்க வேண்டுமென்றார்.

    இதனால் நாராயண அஸ்திரத்தின் வலி சிவசூலத்தின் முன் அடங்கி நிற்பதைப் பிரத்யக்ஷமாய்க் காணலாம்.

    சிவசங்கரர் ஞானமே வடிவானவர்.முற்காலத்தில் சனகாதி முனிவர்களுக்கு அறங்களை அருளிச் செய்தவர்.அப்படிப்பட்டவருக்கு கர்வம் ஏற்பட்டதாக எந்த புராணமும் சொல்லவில்லையே.

    இல்லாத கர்வத்தை இராமன் அடக்கினார் என்று நீ கூறுவது விருதாகோஷமாகும் .விஷ்ணுவின் ஒருகூறாகிய பரசுராமனுக்குத் தான் ஆணவம் ஏற்பட்டது. அந்த இழிவுக்கு அஞ்சி சங்கரருக்கு ஆணவமேற்பட்டதாக பூர்வபட்சம் கதைகட்டி பொய்யான ஒரு ஸ்லோகத்தைக் காட்டினால் அதனை அறிவுடையவர்கள் மதிக்கமாட்டார்கள்.

    இராமனுக்கு சிவபிரான் மீது மிகுந்த மிரியாதையும் பக்தியும் இருந்தது என்பதையும் விளக்குவாம்.

    இராவணவதம் நடந்தேறிய காலத்து இராமனுக்கு இந்திரன்,பிரமதேவன்,வருணன்,சங்கரர் முதலானோர் வரங் கொடுத்தனர். அப்போது பிரமதேவர் இராமனை எங்கள் காரியம் முடிந்தது அதனால் இப்போதே வைகுண்டம் புகவேண்டும் என்றார்.

    சிவபிரானோ இராமனை அயோத்தியை அரசாண்டு அஸ்வமேத யாகம் செய்து பின் வைகுண்டமடைவாயாக எனக் கூறினார்

    இவற்றில் இராமன் சிவபிரான் சொன்னதையே சிரமேற்கொண்டும் தனது சகோதரனுக்குக் கொடுத்த வாக்கை நினைவில் கொண்டும்
    அயோத்தியை அரசாண்டார்.

    இது மட்டுமின்றி இராமன் அசுவமேத யாகஞ் செய்யநினைத்த காலத்து அஸ்வமேத யாகத்தில் விஷ்ணுமூர்த்தியே பூசிக்கத்தக்கவர் முன்னோர்களால் அவரே பூசிக்கப்பட்டார் என்று இலக்குவன் சொல்ல அதற்கு மாறாய் இராமன் சிவபிரானையே பூசிக்கவேண்டுமென்றும் அவரே யாவருக்கும் கதியென்றும் கூற ருத்விக்குகளும் அவ்வாறே செய்தனர்.

    மேலே எடுத்துக்காட்டப்பட்ட சரிதைகளின் முன் உனது
    சிவதனுஸை முரித்த விவகாரம் எப்படித் தலைகாட்ட முடியும்?

    கொஞ்சமும் பகுத்தறிவின்றி
    நீ கூறிய பிருகுசாப விருத்தாந்தமும் அந்த சிவபிரானுக்கு ஹத்தி பிடித்த கதையும் இந்த பொய்க் கதையோடு சேர்ந்து எரிகின்ற நெருப்பில் பஞ்சுபோன்ற நிலைமையை அடைந்தது.

    மேலும் அருச்சுனன் கிருஷ்ணனுக்கு சமானன் என்று துரோணம் 202 ஆவது அத்யாயம் தெரிவிக்கும். அந்த அருச்சுனனும் சாதாரணமான மனிதனல்ல அவனும் முற்பிறப்பில் நாராயணனோடு பல தவங்கள் செய்ததாக அப்பர்வம் 202 கூறும்.

    அவன் சங்கரபகவானின் சிவதனுஸை சங்கரரை நினைந்து அத்தனுஸை வலம் வந்து பின் நாணேற்றியதாக
    பாரதம் கூறும்.

    இப்படியே இராமனும் செய்திருப்பார் என்பதில் ஐயமில்லை.அதனை மேலே காட்டிய சரிதைகளால் யூகித்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. இராமர் சிவதனுஸை முறித்து சிவனை மயக்கமடைய செய்தவிஷயம் இராமாயணத்தில் இருக்க அதற்கு சமாதானம் சொல்லாமல் அதை கடந்து இராமரது பலவீனத்தை பேசுதல் உமது அறியாமையை காட்டிற்று‌. இராமர் ஷத்ரிய அவதாரஞ்செய்து இராவணனை போர்முறைப்படக கொல்லுதலை தேர்ந்தெடுத்தே அவனோடு போரிட்டார்‌. தேவர்களுடைய வரப்பிராப்தியால் அருளப்பெற்ற அஸ்திர சக்திகளை சாஸ்வதப்படுத்தவே அஸ்திரங்களுக்கு கண்டுண்டாரே அன்றி பலவீனத்தால் அல்ல என்பது சகல இராமயணவாசகர்களுக்கும் வெளி.

      மேலும் இத்திரிசூல நாராயணஸ்திரகதை இராமாயணத்தில் எந்த இடத்தில் வருகிறது என்று கூறின் அப்பொய்மைக்கும் பதில் சொல்வோம். மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்து 352 அத்யாயத்தில் தக்ஷ யாகத்தில் சிவன் நாராயணரை தாக்கும் பொருட்டு திரிசூலத்தை ஏவ அது பகவானுடைய மார்பில் வேகமாக குத்தியும் அவரை ஏதுஞ்செய்ய வலிமையற்று அவருடைய கேசத்தின் நிறத்தை மட்டும் மாற்ற,பகவான் அதை ஹுங்காரத்தால் சிவனிடமே மறுபடி திருப்பியணுப்பியதால் ஐயமுற்ற சிவன் ரிஷிகளிடம் தப்பியோடிய விஷயம் பேசப்பட்டுள்ளது.இத்திரிசூலமோ ராமபானத்தை காட்டிலும் உயர்வாகும்.வெட்கம்


      சிவனுக்கு கர்வம் தாமஸம் யாவும் இருப்பதை அநேக புராணங்கள் கூறும் வேதமே அவனை தாமஸி என்றது.அப்படியிருக்க அதை விருத்தாகோஷமென்று சொல்வதால் பொய்யாகிவிடாது.

      ஆச்சரிதம் உத்தரகாண்டத்தில் வருவது .ஷாந்திபர்வம் 346 அஸ்வமேத ஸ்வரூபர் என்று நாராயணரை கூறியிருப்பதோடு இந்திரன் அஸ்வமேதத்தால் விஷ்ணுவை துதித்ததையும் அறியலாம்.மேலும் அநுஸாஸன பர்வத்து 171வது அத்யாயத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் ப்ன்னிரண்டு நாமம் சொல்லி தன்னை வணங்குபவன் சகலயாகங்களையும் செய்த‌ பலனையடைவதாக கூறுகிறான்.ஆகவே இவனே சகலயாக அதிபதியாக இருந்தபோதிலும்

      அந்யம் தேவ வரம் தேஹி ப்ரஸித்தம் ஸர்வஜந்துஷு |
      மூர்த்தோ பூத்வா பவாந் ஏவ மாம் ஆராதய கேஶவ ||-73-41
      மாம் வஹஸ்வ ச தேவேஶ வரம் மத்தோ க்ருஹாண ச |
      யேந த்வம் ஸர்வ தேவாநாம் பூஜ்யாத் பூஜ்யதரோபவ ||-73-42

      தேவதேவனான கேஶவனே ! அனைத்து ஜீவர்களிடமும் ப்ரஸித்தமான மற்றொரு வரத்தினை எனக்குக் கொடுப்பாய். அதாவது நீ மனிதனாகி என்னை ஆராதிக்கவேண்டும். என்னை சுமக்கவும் வேண்டும். தேவதேவனே என்னை குறித்து தபஸ் செய்து நீ என்னிடமிருந்து வரமும் வாங்கிக் கொள்ளவேண்டும். நீ இப்படியெல்லாம் செய்தால் தான் அனைத்து ஜீவர்களாலும் பூஜிக்கத்தக்கவனான உன்னைக் காட்டிலும் நான் பூஜிக்கத்தக்கவனாக ஆவேன்.
      இதற்கு திருமாலும் சம்மதித்து வரமளித்தார்.
      என்கிற வரத்தினால் தன் பக்தனான பரமேஸ்வரனை குறித்து யாகஞ்செய்யக்கூறத தட்டில்லை.


      ஆக இச்சரிதம் இருக்கும் அதே இராமாயணத்தில்தான் சிவதனுஸை முறித்தகதையும் இருப்பதால் இரண்டையுமே ஏற்று பொருள் கொள்ளலே தகும்.ஆகவே இராமன் சிவனை காட்டிலும் உயர்வானவனென்பது அசைக்கவியலாது. இந்தகதைக்கும் பிருகுசாபவிருத்த கதைக்கும் தொடர்பே இல்லாததால் எரிக்கப்பட்டது அக்கதையல்ல சிவபரத்துவஸ்தாபனஞ்செய்யும் உன்மனக்கோட்டையே

      Delete
  26. பாரதம் கர்ணபருவம் 25 ஆவது அத்தியாயம்
    "ஈசுவரர், 'நீங்களெல்லோரும் என்னுடைய தேஜஸ் பலம் இவைகளுடைய ஒரு பாதியினாலே பகைவர்களை நாசஞ் செய்யுங்கள்' என்று நியமித்தார். தேவர்கள், 'ஸ¤ரேச்வரரே! தேவரீருடையதேஜஸின் பாதிப்பாகத்தைத் தரிப்பதற்கு நீங்கள் சக்தியற்றவர்களா யிருக்கிறோம்....' என்று பிரார்த்தித்தார்கள்.... ஈசுவரர், 'என்னுஐய தேஜஸைத் தரிப்பதற்கு நீங்கள் சக்தியற்றவர்களா யிருப்பீர்களேயாகில், நானே உங்களுடைய தேஜஸிற் பாதியோடு கூடியவனாக இந்தச் சத்துருக்களைக் கொல்வேன்...... எல்லாத் தேவர்களும் தனித் தனியாகப் பலத்தில் பப்பாதி எனக்குக் கொடுங்கள். துன்பத்தையடைவிக்கப்பட்டவர்களான எல்லாப் பிராணிகளும் எனக்குப் பசுவாயிருக்கும் தன்மையை ஏற்படுத்திக்கொள்ளட்டும். தேவர்களே! பசுக்களுக்குப் பதியாயிருக்குந் தன்மையானது இப்பொழுது எனக்கு உண்டாகுக...'என்று கூறினார்.......ஈசுவரருடைய இவ்விதமான வார்த்தையைக் கேட்டுத் தேவர்களெல்லோரும் பசுத் தன்மையைப் பற்றி ஸந்தேகங் கொண்டவர்களாக வியசன மடைந்தார்கள். அவர்களுடைய மனோபாவத்தைத் தேவரான ருத்திரர் அறிந்து அவர்களைக் குறித்து... 'தேவச்ரேஷ்டர்களே! உங்களுக்கு இந்தப் பசுத்தன்மை விஷயத்தில் பயம் வேண்டாம். பசுத்தன்மைக்கு விமோசனத்தைக் கேளுங்கள். அதனைச் செய்ய வேண்டும். உங்களுள் எவன், பசுபதியான என் விஷயமான விரதத்தை அநுஷ்டிக்கிறானோ அவன் பசுத்தன்மையினின்று விடுபடுவான்...இன்னும் மற்ற எவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அவர்களும் விடுபடுவார்கள்....' என்று கூறினார். தேவதேவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரும் பிரபுவும் தலைவருமான அந்தச் சங்கரரைப் பார்த்து தேவர்கள், 'அவ்வாறே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு எங்களுடைய தேஜஸைச் சேர்ந்த இந்த அர்த்தாம்சத்தையும் தேவரீர் பெற்றுக்கொள்ளவேண்டு மென்று விண்ணப்பஞ் செய்தார்கள்.....சங்கரர் 'அவ்வாறே ஆகட்டும்' என்று மறுமொழி கூறினார். பிறகு, தேவர்களனைவர்கலும் மஹாத்மாவான பசுபதியின் பொருட்டுத் தேஜஸினுடைய பாதியையும் பெற்றுக்கொண்டு தேஜஸினாலே அதிகரித்தவராகி மீண்டும் அதிக பலசாலியானார். அதுமுதல் அவர் தேவர்களுள் தேவதேவரானார்; அப்பொழுது, பசுஸ்வரூபிகளான எல்லாப் பிராணிகளுக்கும் பதியாயிருத்தலால் பசுபதி யென்று...சொல்லப்படுகிறார்......." என்பது கர்ணம் 25-வது அத்தியாயம். இப்பகுதியை 'வரம் வ்ருணை' என்ற சுருதிக்கு உபப் பிரமாணமாகக் கொள்ளலாம்.

    சிவபிரான் ஒருவரே. அத்தனை கோடிப்பேரும் அவ்வொருவரின் தேஜஸிற் பாதியைத் தானும் தாங்க வலியற்றார். அதனை அவர்களுக்கு உணர்த்திய பிறகே அத்தனை கோடிபேரின் தேஜஸின் பாதியை அவரொருவரே தாங்கினார். சிவ தேஜஸைத் தாங்கமுடியாமையாலும் தங்கள் தேஜஸைச் சமர்பித்துவிட்டமையாலும் தேவர்கள் பசுக்களானார்கள். தம் தேஜஸை யிழவாமையாலும் தேவர்களின் தேஜஸைத் தாம் அங்கீகரித்தமையாலும் சிவபிரான் பசுபதியானார். இதனால் தேவர்களுக்குப் பசுத்துவமும் சிவபிரானுக்குப் பசுபதித்துவமும் ஸஹஜமாயின. பெரும் பான்மையோராலுஞ் சகிக்கமுடியாத தேஜஸையுடைய ஒருவருக்கு அப்பெரும்பாலோரின் தேஜஸூம் வந்து பலமதிகரித்த தென்பது வெறும் உபசாரமன்றி யாதாம்? இன்னும் தேவர்கள் தங்களுக்குப் பசுத்துவம் சம்பவித்ததைக் குறித்துக் கவன்றதும் அதற்குப் பரிகாரம் பாசுபதவிரதாநுஷ்டானமே யானதும் அதிற் பிரசித்தம். மேலும் அதிற்கண்ட சிவவசனமனைத்துங் கமபீர நடையிலும் தேவவசன மனைத்தும் தாஸ நடையிலு மிருக்கின்றன. ஆகவே இத்தனையும் அவ்வுபப் பிரும்மணத்திற் கொள்ளக் கிடப்பதால் 'வரம்வ்ருணை' என்ற சுருதிக்குப் 'பின்வருமாறு பொருள்கோடலே அமைவுடைத்து.

    பசுக்கள் தமது அகங்காரவடிவமாகிய ஸ்வதந்திர மொழிந்து தாம் பரதந்திரர்களென்று அங்கீகரித்துக்கொண்டமையே அவர்கள் பசுபதித்துவம் ஆகிய வரத்தைச் சிவனாருக்களித்ததாம். எனவே, சிவனே சுதந்திரரெனத் தெளிந்து அவருக்கு யாவரு மொரே காலத்தில் ஊழியர்களாக நின்று அடங்கினமையே முடியாயிற்று. பசுவை நோக்கப் பாசத்துக்கு இயக்கமின்மையும், பதியை நோக்கப் பாசத்துக்கும் பசுவுக்கும் இயக்கமின்மையும் ஸித்தமாகையால், சிவசந்நிதியில் விஷ்ணுவாதி சேதங்களும், பூம்யாதி அசேதநங்களும் இயங்கப்பெற்று முறையே பசுவும் பாசமுமாக வெளிப்பட்டன. சிவன் அவற்றை இயக்குந் தலைவராகிப் பசுபதி என வெளிப்பட்
    டனர்.



    ReplyDelete
    Replies
    1. ருத்ரன் தானே பசுபதியாகிற வரத்தை தேவர்களிடம் பெற்றானென்பது 'ஸோப்ரவீத் வரம்வ்ருணா அஹமேவ பஸூநாமதி பதிரஸாநீதி| தஸ்மாத் ருத்ர பஸூநா மதிபதி| ( இதைக்கேட்ட ருத்ரன்
      தேவர்களே! நான் உங்களிடம் ஒருவரத்தை கேட்கிறேன்.நானே பசுக்களுக்கு அதிபதியாக வேண்டும்" என்று உரைத்தனன்.தேவர்களும் அவ்வரத்தை அருளினர்.) என்னும் கிருஷ்ணயஜுர் வேதத்து (6:2) வாக்யத்தால் வெளி.

      'விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமிததேஜஸ| தஸ்மாத்தநுர்ஜ்யா ஸம்ஸர்க்கம்ஸ விஷேஹே மஹேஸ்வர||

      அளவற்ற தேஜஸ்ஸையுடையவரான பகவான் சிவனுக்கு விஷ்ணுவானவர் ஆத்மாவாயிருந்ததனாலேயே வில்லை நாணேற்றுவதை மஹேஸ்வரரான அவருக்கு பொறுக்கமுடிந்தது என்னும் கர்ணபர்வத்து (35-50) வசனமும் திரிபுரசம்ஹாரம் திகிரியானாளேயே ருத்ரனுக்கு சாத்யமானதென்பதை சாதித்தவழி காண்க.

      இவ்வர்தத்தை உணர்ந்த சங்கச்சான்றோரும் '....பணிவில் சீர்ச்
      செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
      கல் உயர் வென்னி இமயவில் நாணாகித்
      தொல் புகழ் தந்தாரும் தாம் (பரிபாடல்) என்று பாடிவைத்தனர்.இத்தனை அசைக்கவியலா வாதங்களில் ஒன்றுக்கும் பதில் கூறாமல் சைவமத பாஷ்யத்தை எடுத்துகாட்டுவதிலிருந்தே உமது இயலாமை தெரியவில்லையா?.

      Delete
  27. தேவர்கள் சிவனுக்கு வரமளித்தால் எதற்கு அவர்கள் சிவபிரானை நோக்கி பலவருடங்கள் தவமிருந்ததாக கர்ணம்24 ஆவது அத்தியாயம் ஏன் கூறவேண்டும்?

    சங்கரனுக்கு மற்றதேவர்களின் தேஜஸ் வந்து பலம் அதிகரித்ததாகக் கூறுவது வெறும் உபசாரமாகவே கொள்ளவேண்டும்.ஏனெனில் அவருடைய தேஜஸில் பாதியைக் கூட அவர்களால் தாங்கமுடியவில்லை.
    அவர்களின் தேஜஸ் சிவனின் தேஜஸில் பாதிக்கும் நிகராகாது.
    தேவர்கள் வரமளித்ததாக சிவன் கூறியது உபசார வழக்கேயாகும்

    ஒரு பிதா தனது பிள்ளையைப் பார்த்து நான் உனது பிதா என்னும் வரத்தை எனக்குக் கொடு என்று கோரியதாக நாம் ஒப்புவோம். இதற்குப் பொருளென்னை? என்னிடத்தில் பிதா என்கிற மரியாதையும் அச்சமுமின்றி இதுகாறும் நீ கெட்டலைந்தது போல் இனியும் கெடாமல் பிதா என்னும் உரிமையை என்னிடம் பாராட்டி எனது கட்டளையினின்று சுகிக்கக்க்டவாய் என்று இதங் கூறினதாகவேயன்றோ முடியும்? இதனால் பிதாவுக்கு கெளவரவங் குறைந்துவிடுமா? பிள்ளை க்ஷமப்படுவதேயன்றோ பிதாவுக்கு முக்கியம். இப்படியே பசுபதியாகிய சிவன் பசுக்களை இதரூபத்தால் தமது வசப்படுத்திக் கொண்டாரென வறிக.

    .

    ReplyDelete
  28. துரியசிவம் கற்பனை என்று நீ கதறி அழுகிறாய்.
    பாரதம் சாந்தி 110 :
    "இந்திரனும் விஷ்ணுவும் ருத்திரரும்...பிரமனும் தேவர்களின் தேவரான
    எந்த மஹேஸ்வரரை பலவித ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ "என்றது.
    இங்கே குறிக்கப்பட்ட ருத்ரபதம்
    குணருத்ரரையும் மஹேஸ்வர பதம் துரியசிவமாகிய சங்கரரையும் குறிக்கும்.

    வனம் 876,877 : "பார்வதியோடு இருப்பவரும் பிரபுவுமான பரமசிவன் பத்திரவடத்தைக் குறித்துச் சென்றார்.அநேக தேவர்கள்.. உருத்திரர்களோடும் சேர்ந்து அவருடைய வலப்பக்கத்தில் சென்றனர். .இவைகளுக்குப் பின்புறத்தில் ருத்திரர்...சென்றார் "என்று கூறின. இதனால் மும்மூர்த்திகளுக்கு மேலான ருத்திரரும் அம்மூவருள் அடங்கிய ஒரு உருத்திரரும் உள்ளனர் என்பது தெளிவாம்.

    சாந்தி 58: "ஆதியும் அந்தமுமில்லாத சிவபெருமான்...
    வித்தையைப் பிரமதேவருக்கு
    அளித்துப் பிரமாண்டத்தை உண்டு பண்ணின பிரபுவாய் இருந்தும் பிரமதேவரின் சந்தோஷநிமித்தமாகத் தம் புத்திரரான அவரைப் பிதாவாக வைத்துப் பிதாவான தாம் அவருக்குப் புத்திரராக அவர் நெற்றியிலிருந்து குழந்தை வடிவமாய்க்...கூச்சலிட்டார்"
    என்றது.இதனால் சிவபெருமானின் ஒரு அம்சம் பிரமனின் தியானஸ்தானத்தில் தோன்றிக் கூச்சலிட்டபோதுஅந்த பிரமன் அவருக்கு சிவனின் அஷ்டநாமங்களையும் வைத்தார் என்பது தெரிகிறது. சில மூடர்கள் சிவன் பிரமனிடமிருந்து தோன்றி
    அஷ்டநாமங்களையும் பெற்றதாகப் பிதற்றுவர். பிரமன் தோன்றுவதற்கு முன்னமே சங்கரனுக்கு அந்த அஷ்டநாமங்களும் உண்டு.அதனைத் தான் அமிசருத்ரருக்கு பிரமன் இட்டார்.
    வீண்பிதற்றல் செய்பவருக்கு இது பெருத்த இடியாக முடிந்தது.
    இந்த அம்சமே விஷ்ணுவுக்கும் சிலசமயங்களில் பிள்ளையாய்த் தோன்றும்.இந்த அமிசருத்ரருக்கு
    ஸ்தாணு,விசாலாக்ஷர் என்றும் சிவநாமங்கள் உண்டு.மேலும் அவ்வத்தியாயம் "ஆயிரக்கணக்கான ருத்ரர்களுக்கு...இடமான...
    சிவபிரான்"என்றது.

    சாந்தி 122 : "சூலத்தை ஆயுதமாகக் கொண்ட அந்தப் பகவான்...விசாலாக்ஷரை ....ருத்ரர்களுக்கு ஈசரும் ரக்ஷாருமாகச் செய்தார்" என்றது.

    இதனைக் கருத்தில் கொண்டே அனுசாஸனமும் "ப்ரம்மதேவரை வலப்பக்கத்திலிருந்தும்.....
    விஷ்ணுவை இடப்பக்கதினின்றும் இந்த ஈசுவரர் படைத்தார்....ஈசுவரர் ருத்திரரைப் படைத்தார் "என்றும்
    "அந்த விருஷபவாகனரை ஆயிரத்துநூறு ருத்ரர்கள் துதித்தனர் "என்றும் கூறியது.
    துரோணம் 202 : "ருத்ரரிடமிருந்து
    ஜனார்த்தனர் அவதரித்தார்.கேசவரின் உற்பத்திஸ்தானம் சங்கரரே என்றது."

    பஸ்மசாபாலமும் "சிவம்....ஹரிஹரஹிரண்யகர்ப ஸ்ருஷ்டாரம்"(பிரமவிஷ்ணுருத்ரர்களைச் சிருஷ்டித்தவன் சிவன்) என்றது.

    மேல்காட்டிய பாரதவசனங்கள் பஸ்மசாபாலக் கூற்றுக்கு எவ்வளவு ஒத்துப்போகின்றன என்பதைக் நன்றாகப் பார்.

    இதனால் உனது உலறல்களை இதனோடு நிறுத்திவிட்டு வேறு வேலை இருந்தால் போய்ப் பார்.

    ReplyDelete
    Replies
    1. அச்சாந்திபர்வ அதே அத்யாயத்தில் 'எவர் எல்லா பிராணிகளுக்கும் ஈஸ்வரரோ உலக உற்பத்திக்கு காரணமுமான ஸ்ரீ நாராயணரின் பக்தர்களோ அவர்கள் எல்லா துன்பத்தையும் தாண்டுகிறார்கள்' என்று கூறியது.அதனை தொடர்ந்து வந்த இவ்வாக்யமும் அந்நாராயணரையே குறிக்கும்.

      'மஹாவராஹரூபியும் எல்லா உலகங்களுக்கும் கர்த்தாவும் மஹாத்மாவுமான அந்த பகவானை நானும் நாள்தோறும் நமஸ்கரிக்கிறேன்' என்கிற அணுஸாஸனத்தை அணுஸரித்து பீஷ்ம பர்வ 66 அத்யாயத்தில் 'ஸர்வலோக மஹேஸ்வரனான வாசுதேவர் உங்களால் அர்சிக்கதக்கவர்' என்று மஹேஸ்வர சப்தத்தை வாஸுதேவன் பொருட்டு கூறியிருப்பதால் இங்கும் அதே நாராயணனரையே குறித்து நின்றது.


      நீர் காட்டிய வனபர்வ வசனங்களில்
      துரியசிவத்தை பற்றி பேசவில்லை.பலகோடி ருத்ரர்க்ள இருக்கிறார்கள் அதில் மும்மூர்த்திகளுக்குள் ஒருவனான பார்வதியின் கணவனான பரமசிவனைதான் சொன்னதே அன்றி மும்மூர்த்திகுட்படாத துரியசிவத்துக்கு அங்கு பதப்பிரயோகமே இல்லை.


      மேற்காட்டிய சாந்திபர்வ வசனம் பிரம்மனிடமிருந்து நெற்றியில்
      உண்டானதை பேசிற்று. இப்படி பிறக்கமுன்னரே சிவனுக்கு அஷ்டநாமங்கள் இருப்பது உண்மையே.ஆனால் அது சிவனுடைய பூர்வ கல்ப பிறப்பை பேசிற்று.ஏனெனில் பிரம்மன் உஷையிடம் வீர்யத்தை விட்டு அதனால் பிறந்த குழந்தைக்கு பிரம்மன் பெயரிட்டதாகவே சதபதப்பிரஹ்மானமும் இன்னபிற புராணங்களும் கூறிற்று. ஆக சிவனும் பிரம்மனும் மாறி மாறி ஒருவரிடமிருந்து ஒருவர் பிறப்பவர்களே‌ என்பது தெளிவு.இவர்களுடைய பிறப்பின் காரணகர்த்தா நாராயணர் என்பதும் சர்வநிச்சயமானது


      மேற்காட்டிய அணுஸாஸன பர்வமும் துரோணமும்
      விஷ்ணுவுக்கு சிவன் உற்ப்த்தி ஸ்தானம் எனக்கூறகாரணம்
      'ப்ரஜாபதிம் ச ருத்ரம் சாப் யஹம்-ஏவ ஸ்ருஜாமி வை தௌ ஹி மாம் ந விஜானிதோ மம மாயா விமோஹிதௌ

      பிரஜாபதிகள், சிவன் உட்பட அனைவரும் என்னால் படைக்கப்பட்டவர்களே, எனது மாயசக்தியினால் கவரப்பட்டிருப்பதினால், அவர்களைப் படைத்தவன் நானே என்பதை அவர்கள் அறியாமலிருக்கிறார்கள்." என்ற மோக்ஷதர்ம வசனத்தாலும் என்னுடைய அருளினால் உண்டான பிரம்மனும் கோபத்தில் உண்டான ருத்ரனும் ..... என்கிற சாந்திபர்வமும்
      நாராயணவாக்காலேயே சிவாதிகளின் உற்பத்தி ஸ்தானம் தானே என்பது வெளியானது.
      .மேற்காட்டிய உபநிஷத் அவ்வளவு பொருத்தமாக இருக்க காரணம் சைவபுராணங்களின் புழுகலை பாத்து உபநிஷத்தை எழுதியதால் அப்படி பொருத்தலாம்.
      பொய்யாய் கற்பித்த உபநிஷதங்களையும் பொய்யாய் எழுதிய க்ரந்தங்களையும் படித்து அறிவற்ற நீ ( இதை நீயே ஒப்புக்கொண்டாய்) நுனிப்புல் மேய்ந்து விவாதிக்க வராதே.

      Delete
  29. "ஸர்வமிதம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த் ராஸ்தே ஸம்ப்ரஸயந்தே| ஸர்வாணி சேந்த்ரியாணி ஸஹபூதைர் ந காரணம் காரணானம் தாதாத்யாதா காரணந்துத்யேயஸ் ஸர்வைச்வர்ய ஸம்பந்நஸ் ஸர்வேச்வரச் சம்புராகாச மத்யே..... சிவ ஏகோத்யேயச் சிவம் கரஸ் ஸர்வ மந்யத் பரித்யஜ்ய ஸமாப்தாதர்வ சிகா' (அந்தப் பிரம்ம விஷ்ணு ருத்ரேந்திரர் முதலியவர்களெல்லாம் உற்பத்தியாகின்றனர். எல்லா இந்திரியங்களும் பூதங்களுடனே கூட உற்பத்தியாகின்றன. காரணமும், காரணங்களைப் படைத்தோரும் கருதினோருமாகியவர் உற்பவித்தலின்று. காரணமும் சர்வைசுவரிய சம்பந்நரும் சர்வேசுவரரும் சம்புவுமாகியவரே ஆகாயமத்தியில் தியானிக்கற் பாலர் .... மற்றெல்லாம் விடுத்து இன்பஞ் செய்பவராகிய சிவபிரானொருவரே தியானிக்கற்பாலர். அதர்வசிகை முற்றிற்று) என்றது அதர்வசிகை

    இங்கே பாரத்திற்கு ஏற்றவாறு ருத்ரபதம் குணருத்ரரையும் ஸர்வேஸ்வர சிவ பதங்கள் துரியசிவனையும் குறிக்கும் என்பதே முடிவு. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் குறிக்கப்பட்ட சிவருத்ர பதங்கள் அனைத்தும் அவருக்கு உபசாரப் பெயரே அன்றி உண்மைப் பெயரல்ல.நெடுநாள் சிவயோகத்தில் நின்று எம்பெருமானிடம் பலவரங்களை விஷ்ணு பெற்றதாக துரோணம் 202 தெரிவித்தது. அதனால் கேசவரின் இருதயகமலத்தில் மகாதேவர் உறைகின்ற காரணத்தால் முக்கண்ணரின் பெயர்கள் கண்ணனுக்குக் காரணப்பெயராய்
    உபசாரமாகச் சொல்லப்பட்டன.
    அது இடுகுறியாய் நின்று சிவனையே உணர்த்தும்.
    காரணப்பெயரினும் இடுகுறியே வலிமையானது. அங்கே விஷ்ணுவை உற்பத்தி ஆகின்றார் என்று பிரமருத்ரரகளோடு சேர்த்துச்
    சொல்லிவிட்டது. பின்னும் அந்த துரியசிவபதம் விஷ்ணுவைக் குறிக்கும் எனக் கூறுவது அபிமானப் பிரசங்கமே ஆகும்.விஷ்ணுவுக்குப் பன்னிரு சிறப்புப் பெயர்கள் இருக்க அதனைக் கொண்டு அதர்வசிகை பரத்துவம் சாதிக்காது உபசாரப் பெயரைக் கொண்டு பரத்துவம் சாதித்தது ஏன்?அப்படி உண்மையில் அச்சிவபதம் விஷ்ணுவைக் குறிக்குமானால் பிரமருத்ரர்களோடு சேர்த்து அவரை உற்பத்தி ஆவதாகச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? அப்படி சிவபதம் உண்மையில் விஷ்ணுவைக் குறிக்குமானால் இரண்டு விஷ்ணுக்கள் இருக்கவேண்டும்.
    அப்பிரஸ்தாபம் வேதபுராணங்களில் இல்லை.
    எல்லாவிடங்களிலும் வேதம் துரிய வஸ்துவைச் சிவமாகவே பிரஸ்தாபித்தது.துரியவிஷ்ணுப்
    பிரஸ்தாபம் யாண்டுமில்லை.

    நீ இதனை ஏற்காது அச்சிவபதம் விஷ்ணுவுக்கே உரியது எனக் கூத்தாடினால்ஆதிபருவம் கருடஜனனத்தின் போது தேவர்கள் அவனை " நீ ருத்ரன் நீ சூர்யன் நீ இந்திரன் நீ விஷ்ணு நீ ஈஸ்வரன் " என்று துதித்ததாகக் கூறியது. அதனால் வேதங்களில் இந்திரவிஷ்ணுருத்ரர்களைக் குறிக்குமிடங்களில் எல்லாம் கருடன் எனப் பொருள் கொள்வாயோ?

    இந்த முட்டுப்பாடுகளையெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காது சதுர்த்தம் சிவம் என்பதற்கும் நான்காம் மூர்த்தியை விஷ்ணுவாகப் பொருள் கொள்ளும் உங்கள் மடமையை
    என்னவென்று சொல்வது?
    பஞ்சராத்திரத்திலும் நான்காம் மூர்த்திப்பிரஸ்தாபத்தைக் காணமுடியாது.

    ஆனால் வேதம் நான்காம் மூர்த்தியைச் சிவனாகச் சொல்லி அவனே ஓங்காரத்தின் உட்பொருள் என்றும் சொல்லியது. ஸர்வேஸ்வரபதம் அவனுக்கே வாஸ்தவம்.மற்றவருக்கு அது உபசாரம் .அதனால் வேதத்திற்கு முரணும் பஞ்சராத்திரமே அவைதிகமாகுமே அன்றி சிவாகமங்கள் ஒருபோதும் அவைதிகமாகாது.

    ReplyDelete
    Replies
    1. Copy/ paste மட்டுமே பண்ணி உண்மையான சாஸ்திர அறிவில்லாத உன்னோட எல்லாம் விவாதிக்க வேண்டிய தலையெழுத்து என்னை?
      அந்த copy/pasteஇல் 'அதர்வசிகை முற்றிற்று' என்பதை கூட அப்படியே ஒப்பித்திருக்கும் உன் அறிவை என்ன என்பது?.

      மேற்காட்டிய அதர்வசிகோபநிஷத்தில் சிவன் சம்பு ஆகிய சொல்லை பார்வதிபார்த்தாவுக்கு உரியதாகல் பொருந்தாது என்று அசைக்கவியலாதபடி நிலைநாட்டியுள்ளோம்.

      அதர்வஸிரஸா சைவ நித்யமாதர்வணா த்விஜா:|ஸ்துவந்தி ஸததம் யே மாம் தேபி பாகவதா:ஸ்ம்ருதா||

      எந்த அதர்வணத்விஜர்கள் தினந்தோறும் இடைவிடாமல் என்னை அதர்வசிரஸ்ஸால் துதிக்கிறார்களோ அவர்களும் பாகவதர்கள் என்றே எண்ணத்தகுந்தவர்கள் என்னும் மஹாபாரத ஆஸ்வமேதிகபர்வ 118 ம் அத்யாயம்
      இவ்வதர்வசிகோ உபநிஷத் பகவானுக்குரியதே என்று நிச்சயித்திருப்பதாலும்

      ' ந து நாராயணாதீதாம் நாம்நாமந்யத்ர ஸம்பவ|
      அந்யநாம்நாம் கதிர் விஷ்ணுரேக ஏவ ப்ரகீர்த்தித|
      ருதே நாராயணாதீநீ நாமிநி புருஷோத்தம:| ப்ராதாததந்யத்ர பகவான்...‌.....‌.

      நாராயணன் முதலிய பெயர்கள் மற்ற தெய்வங்களை குறிக்கமாட்டா,மற்ற தெய்வங்களினன் பெயருக்கு விஷ்ணு ஒருவனே சேருமிடமாக கீர்த்திபெற்றிருக்கிறான்.நாராயண நாமத்தை தவிற பிறபெயர்களை அவனே பிறதேவதைகளுக்கு கொடுத்தான் என்கிற வாமனபுராண வசனமும் அதை வழிகொண்டதாலும் விஷ்ணுவுக்கு சம்பு சிவ நாமங்கள் சஹ்ஸர்நாமங்களில் படிக்கப்பட்டிருப்பதாலும் இங்கு கூறப்படுவது பரவாஸுதேவனேயாம்..
      இப்படி பலப்ரமாணங்கள் இருக்க சிவனுடைய நாமம் உபசாரமாக விஷ்ணுவுக்கு வழங்கப்பட்டதாக கூறுவது அபசார பேச்சேயாம்.
      மேலும் அதர்வசிகையிலும் மாண்டூக்யத்திலும் கூறப்படும் பதங்களும் பரவாஸுதேவனையே குறிக்கும். பாரத்திலும் விஷ்ணுவுடைய வியூகங்களை கூறுகிறதே அன்றி ஒருஇடத்திலும் குணருத்ர நீலருத்ர முதலிய சைவாகம புளுகலை பேசவேயில்லையாதலால் துரிய சிவம் இங்கும் எடுபடவில்லை என்றாகியது.

      விஷ்ணுவையும் சேர்த்து பிரம்மவிஷ்ணு .... என்று படித்திருப்பது அவதார விஷ்ணுவே என்பதை ஒன்றுக்கு பலமுறை மேலே காட்டியும் ஏன் ஏன் என்று கேள்விகேட்பது முட்டாள்தனமே.

      'நான் ஸ்ருஷ்டியையும் பரிபாலனத்தையும் பிரயத்தையும் பிரம்மா விஷ்ணு சிவன் என்று பெயருள்ளவராக நடத்துகிறேன்'என்ற ஆஸ்வமேதிக பர்வத்து 54வது அத்யாயத்தில் சிவ சப்தத்தையும் சேர்த்து படித்தற்கு இதுவே காரணம் கருடனை நீ இந்திரன்,நீ விஷ்ணு, நீ சூர்யன் என்று
      போற்றியதால இந்திர விஷ்ணுக்கள் கருடனாகார்.ஏனெனில் அவை கருடனுக்குரிய பெயர்கள் அல்ல.ஆனால் சிவ ருத்ர முதலிய நாமங்கள் விஷ்ணுவுக்கே உரியதாகலினாலும் அந்நாமங்களே பார்வதிபார்த்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதே வாதம்.
      ஓங்கார உட்பொருள் நாராயணனே என்பதை உன்னால் மறுக்கமுடியாதபடி மேலே நிலைநாட்டினோம்.அப்படியிருக்க மறுபடி சிவனை சொல்வதாக புலம்புவது சிரிக்கதக்கது‌.வேதம் எங்குமே துரியசிவத்தை பேசவில்லையென்பதாலும் பாரதமமும் பேசவில்லையென்பதாலும் சங்கசான்றோர்கூட பேசவில்லையென்பதாலும் ஆனால் பாஞ்சாராத்ராகமத்தை பாரதம் பலவிடம் பேசவதாலும் அதுவே வைதிகம்

      Delete
  30. பஞ்சராத்திரச் சுவடிகள் அற்ப பரிபாகிகளை உத்தேசித்துப் பிறந்தவை. அதனை எவனொருவன் படிக்கிறானோ அவனும் அவனது கூட்டமும் சிவநிந்தை செய்த பாவத்திற்கு நரகத்தை அனுபவிப்பது நிச்சயம்.

    தக்ஷன் சிவபிரானை அவமதித்துத் தலை இழந்தான். அவனோடு கூட மற்றதேவர்களும் அடிபட்டு தப்பிப் பிழைத்து ஓடினர். அப்படி ஓடியும் அவர்களின் பாவத்தால் மேலும் விஷ்ணுவாதி தேவர்கள் சூரபன்மனிடம் பயந்து ஓடியதை
    யாவரும் நன்கு அறிவர். அவர்கள் பலகாலங்கள் துன்பத்தை அனுபவித்தது புராணங்களில் பிரசித்தம்.

    பின்விளைவுகளை அறியாது சிவநிந்தை செய்யும் நோக்கத்துடன் நீ கெட்டதோடு அல்லாமல் மற்றவர்களையும் கெடுப்பதற்காக இந்த வலைதளத்தை உருவாக்கியிருக்கிறாய்.

    விஷ்ணுபுராணங்களையும் விஷ்ணுசகஸ்ரநாமமும் உயர்ந்தது என்பதற்காக மற்றதேவர்களின் ஸ்தோத்திரங்களையும் அவர்களின் சரிதையையும் கற்பிதம் தாமஸம் என இகழ்வது எனது தாய் உத்தமி என்பதற்காக மற்ற தாய்மார்களை மலடி என்று கூறும் மதிகெட்டவனின் செய்கையை அது ஒக்கும்.

    மூடனே !திருநீற்றை முக்திக்காக யாரும் அணியமாட்டார்கள் எனப் பிதற்றினாயே அப்படி எனில் வியாச முனி ஏன் அணிய வேண்டும்? மோக்ஷ சாதனம் திருநீறு என்று பாரதம் சாந்தி பருவுமும் சொன்னதே.
    வியாசமுனி பரமஞானி முக்தியை விரும்புபவர். அவரே திருநீற்றை அணியும் போது மற்றவரும் அதனை அணியவேண்டும் என்பது தானே பொருள்.

    உனக்கு ஒரு சவால் விடுக்கிறேன்
    "பரமஹம்ஸாநாமஸம்வர்த்த காருணி ச்வேதகேது தூர்வாஸ எஇபுநிதாக ஜடபரததத்தாத்ரேய ரை வதகபுஸ¤ண்டப்ரப்ருதயோவிபூதிதாரணாதேவமுக்தா: ஸ்யு: ஸஏஷ பஸ்மஜ்யோதி ரிதிவை யாஜ்ஞ்வல்க்ய:|' (பரமஹம்ஸ ஸந்நியாஸிகளான சம்வர்த்தகாருணி, ச்வேதகேது, துர்வாஸர், ரிபு, நிதாகர், ஜடபாதர், தத்தாத்ரேயர், ரைவதகர், புஸூண்டர் முதலானோர் விபூதியைத் தரித்தலாலேயே மோக்ஷத்தை யடைந்தவர்களானார்கள். அப்படிப்பட்ட இந்த யாக்ஞவல்கியரும் பஸ்மஜ்ஜோதியென்று பெயர் பெற்றார்) என்ற ப்ருஹஜ்ஜாபாலம் கூறியது

    இங்கே குறிக்கப்பட்ட அனைத்து முனிவர்களும் திருமண்ணோ சூர்ணமோ அணிந்து முக்தி அடைந்தனர் என்று நீ கொண்டாடும் உபநிடதங்களில் இருந்து ஆதாரம் காட்டுவாயாயின் பிருஹஜ்ஜாபாலம் பொய் என்று ஒதுக்கிவிடலாம் அதுவே உன்னால் முடியாதாயின் அது உனக்கும் உனது கூட்டத்திற்கும் தோல்வியே ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. தரிகெட்ட தாமஸபுராணங்களில் விஷ்ணு தக்கயாகத்தில் பயந்தோடியதாக இருக்கலாம்.ஆனால் ஸத்ஸம்பிரதாய நூல்களில் அவ்வாறில்லை. மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்து
      352வது அத்யாயத்தில் தக்கயாகத்தை அழிக்கவந்த சிவன் தன்திரிசூலத்தை திருமாலை நோக்கி ஏவ அது திருமாலை யாதுஞ்செய்யமுடியாது வெறும் கேசத்தை முஞ்சநிறமாக்கியதும் எம்பிரான் தன்னுடைய ஹுங்காரத்தால் அத்திரிசூலத்தை சிவனிடைய கரங்களுக்கே திருப்பியனுப்பி ஐயங்கொண்ட சிவன் ரிஷிகளிடம் தப்பியோட, எம்பிரான் சிவனுடைய கழுத்தைப்பிடித்து சிதிகண்டத்தையுண்டுபண்ணினார்,
      பின்பு நரனுடைய பரசை சிவன்உடைத்ததும்
      பிரம்மதேவன் பயந்து ருத்ரனை தடுத்து எம்பிரானை பணியச்செய்ய ருத்ரனும்
      ஹரியை சரணடைந்தார்,ஹரியும் சிவனுக்கு அறிவுரை கூறி அவனுக்கு அருள் செய்தமையை ஐந்தாம் வேதமுங்கூற அதற்கெதிராய் விஷ்ணுவை இழிவுபடுத்தும் வண்ணம் எழுதிய சைவபுராணங்கள் எடுபடுமோ? இதுவே சைவபுராணங்கள் தாமஸமென்பதற்கு தக்க உதாரணம்


      சதாசர்வகாலமும் விஷ்ணுவை தாழ்வுபடுத்தி அவரது அவதாரங்களை எல்லாம் சிவன் அடித்தார் கிழித்தார் உரித்தார் என கர்ணகொடூர கதைகளை எழுதிவைத்து திருமாலுக்கிழிவு கற்பிக்கும் சைவர்களுடைய பொய்மையை உடைத்து எம்பிரானுடைய பரத்வம் ஸ்தாபிக்கும் நோக்கத்தில் உருவாக்கியதே இத்தளம்.அதிலும்
      வைஷ்ணைவ சைவ சண்டைக்கு இது நேரமில்லையாதலால் இத்தளத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன்.ஆனால் மறுபடி பின்னூட்டம் என்கிற பெயரில்விஷ்ணுத்வேஷம் செய்வது நீ

      எனது தாயாயை தவிற பிறதாயை பத்தினியில்லை எனக்கூறும் கொள்கை வைணவர்களுக்கில்லை.ஆனால் சைவர்கள் எனது தாய் பத்தினியா? உனது தாய் பத்தினியா என்னும் விதத்தில் பிரசாரம் செய்கையில் எனது தாயே பத்தினி என்று வாதித்து அவர்களின் தாயை அசிங்கப்படுத்தி கொள்கிறார்.அது சைவர்கள் வாயைகுடுத்து எதையோ புண்ணாக்கி கொண்ட கதை.

      பஸ்மம் என்பதற்கு சாம்பல் என்றே பொருள்.அது கோமேய சாம்பலாக (திருநீறு)மட்டுமே இருக்கவேண்டுமென அவஸ்யமில்லை. வைஷ்ணவர்களும் யாகபஸ்மத்தை அணிய சொல்லி ஆகமங்கள் கூறுவதால் வியாசமுனி அணிய தட்டில்லை.வியாசமுணி திருநீறணிந்ததாக பாரதத்தில் ஸுசகமுமில்லை.நிற்க கோமேய பஸ்மமும் சிவனுக்கு அந்தர்மியாயிருக்கும் விஷ்ணுவைக்குறித்து அணியவேண்டுமென்பது
      ஆஸ்வமேதிக பர்வத்தில் அத்யாயம்104ல்
      கோமேயத்தை மூன்றாக ஜெய்து ஜலத்திலிருந்து பூசிக்கொண்டு வியாஹ்ருதியுடன் பிரணவத்துடன் கூடிய காயத்ரியை ஜபித்து மறுபடி என்னை அடைந்த சித்தத்துடன் ஆசமனம் செய்து 'ஆபோஹிஷ்டா'எனும் மூன்று ரிக்குகளால்
      பரிசுத்தமான ஜலத்தால் 'தரத்ஸமந்தீ' எனும் நான்கு மந்திரங்களால் கிரமமாக ப்ரோக்ஷித்துகொள்ளவேண்டும் என்று காட்டப்பட்டது



      எனக்கு சவாலா? மேலே 21 கேள்விகள் உன்னுடைய வாதத்தின் இயலாமையை எடுத்துக்காட்டி அதை ஒப்புக்கொள்ளமுடியாமல் அதை விட்டு விட்டு ஒன்றிரண்டுக்கு‌ மட்டும் அதுவும் சுயமாக படிக்காமல் உனது ஆச்சார்யர்கள் எழுதிய கிரந்தங்களை copy/ paste செய்து உளறும் நீ எல்லாம் எனக்கு சவால் விடுகிறாய்.

      பிருஜ்மாஜாபலம் பஜ்பாஜாபலம் முதலிய அநேக உபநிஷத்துக்கள் காலத்தால் பிற்பட்டவை என்பதை சைவர்கள் மறுக்கமுடியாதபடி நிரூபித்தாயிற்று அப்படியிருக்க இஜ்ஜாபலவசனமும் ஜ்வாலையில் இட்டெரிக்கப்பட்டதுவே. மேலும் வராஹ உபநிஷத்திலும் காத்யாயனோபனிஷத்திலும் ஊர்த்தவபுண்டரபெருமை பேசப்பட்டிருக்கிறது.அது வேண்டும் பக்கத்தில் விளக்கிகூறுவோம்

      Delete
  31. இனி உனது வலைதளத்தின் பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டேன் ச்சீ ச்சீ
    இவ்வளவு மோசமாக சிவாகமங்களை இகழும் பாவியான உன்னிடம் போய் வாதம் செய்தது என்னுடைய குற்றமே.

    நீ இவ்வுலகம் விட்டு சென்ற பிறகு சிவாகமங்கள் உண்மையா இல்லை பஞ்சராத்திரம் உண்மையா என்பதை நரகத்தில் சிந்தித்து தெளிவடைவாய்

    நன்றி நன்றி இனி நரகம் உனக்காக காத்திருக்கும் சென்று வருக.

    ReplyDelete
    Replies
    1. சாஸ்திர அறிவற்ற ஒரு copy/ paste செய்யும் ஒரு சிற்றரிவு ஜீவியிடம் வாதம் செய்வது எனக்கு காலவிரயமே.வரமேட்டேன் என்று கூறிவிட்டு சிலநாள் கழித்து வந்து பின்னூட்டம் இட்டுவிட்டு பதில்கூறிவிட்டதாக பெயர்பண்ணுகிற உன் கயமைதனத்தை அறிவோம்.இனி எத்தனை தடவை பின்னூட்டம் இடினும் உனக்கு தகுந்த பதிலடி தருவோம். விஷ்ணுவை பேடியென இகழ்ந்து வைஷ்ணவ சாஸ்திரங்களையும் பழித்தும் விஷ்ணுத்வேஷம் செய்த நீ இறந்தபின்பு அந்த பரமசிவனே உன்னை தூக்கிப்போட்டு மிதித்து நரகத்தில் தள்ளுவார்.


      பாஞ்சாராத்ர மஹிமையை பாரதம் பலவிடங்களில் பேசுகிறது. பாரத சாந்தி பர்வத்தில் 343 இல்

      ' ஓ அரசனே! அவன் காம்யங்களும் நைமித்தங்களும் யக்ஜகார்யங்களையும் அணுஸரித்தே செய்தான், .
      ......சித்ர சிகண்டிகளென்ற பிரஸித்தமானஏழு முனிவர்களால் ஒரேவித அபிப்ராயத்தால் சொல்லப்பட்டதும் உத்தமமும் நான்கு வேதத்தை ஒத்ததுமான அச்சாஸ்திரம் மேருவென்கிற மகாபர்வத்தில் செய்யப்பட்டது.....ஸத்தியம்,தர்மம் ஆகியவற்றை முக்கியதர்மங்களாக கொண்ட அம்முனிசிரேஷ்டர்கள் இந்தஸ்ரேயஸையும், பிரம்மத்தையும் மனத்தால் ஸங்கல்பித்து பிறகு சாஸ்திரத்தை செய்தனர்,அதில் தர்மார்த்தகாமங்களும் மோக்ஷமும் தேவலோகத்திலும் பூலோகத்திலும் நிலைத்திருக்கின்ற அநேகமரியாதைகளும் சொல்லப்பட்டுள்ளன.......... உபநிஷத்துக்களோடு கூடிய சாஸ்திரத்தை ஸ்தாபனஞ்செய்துவிட்டு தவத்தில் உறுதியும் இஷ்டமான தேசத்திற்கு சென்றனர் என்றும் அதே பர்வத்தின் 348ம் அத்யாயத்தில்

      'நான்கு வேதங்களுடன் கூடியதும் சாங்கியயோகங்களுடன் செய்யப்பட்டதும் அதனால் பாஞ்சாராத்ரமென சொல்லப்பட்டதும் நரநாராயணர்களுடைய வாக்காலேயே வெளிப்பட்டதுமான இந்த மஹோபநிஷத்தை நாரதர் மறுபடியும் பிரம்மாவின் க்ரஹத்தில் கேட்டுணர்நது உபதேசித்தார் என்றும் ஆஸ்வமேதிக பர்வத்தில் 104ம் அத்யாயத்தில் யுதிஷ்டருடைய கேள்விக்கு கிருஷ்ணர்

      வைகாஸனத்தையறிந்த ஜனங்கள் என்னைப் புருஷனென்றும், ஸத்யனென்றும், அச்சுதனென்றும்,அநிருத்ரென்றும் நான்கு மூர்த்திகளாக என்னையறிகின்றனர்.
      மற்றவர்களான பாஞ்சாராத்ரிகளோ என்னை வாஸுதேவன்,ஸங்கர்ஷன்,பிரத்யும்னன்,
      அநிருத்ரன் ஆகிய நான்கு மூர்திகளுள்ளவர்களாக அறிகின்றனர்

      (அனிருத்தம் ச மாம் ப்ராஹுர் வைகாநஸவிதோ ஜனா। அன்யே த்வேவம் விஜானந்தி மாம் ராஜன்பாஞ்சராத்ரிகா:।
      வாஸுதேவம் ச ராஜேந்த்ர ஸங்கர்ஷணமதாபி வா। ப்ரத்யும்னம்ʼ சானிருத்தம் ச சதுர்மூர்திம் ப்ரசக்ஷதே)

      என்றும் பாஞ்சாராத்ர மற்றும் வைகாஸனாகத்தை வேதவியாசர் பாரதத்துள் பஹுமுகமாய் பதித்து வைத்திருக்கிறார்.
      மட்டுமன்றி வைஷ்ணவாகங்களை கூறப்பட்டுள்ள பகவத் ஆராதனை பல அத்யாயங்களில் வைஷ்வணதர்மமென்கிற பெயரில் ஆஸ்மேதித்தில் உள்ளது. இப்பாரதத்துள் எங்குமே சிவாகங்களை பற்றியே பேச்சேயில்லை. பாஞ்சாராத்ரம் அவைதிகமெனில் அது பற்றி பாரதத்தில் பிரசங்கிப்பாரோ வியாஸர்? இதிலிருந்தே வைஷ்ணவாகமங்களின் உயர்வை அறியலாம்‌‌. மேலும் பரவாஸுதேவனை பலவிடம் பேசும் பாரதமும் சங்க இலக்கியமும் ஒரு இடத்திலும் துரியசிவத்தை பேசவேயில்லை என்பதும் இதனால் வெளி.

      Delete
  32. சிவனை நிந்தித்து பல்வேறு பாவங்களை சம்பாதித்தவனே கேள்

    புராணங்கள் மும்மூர்த்திகளுக்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு காரணம் கற்ப பேதமே என்றது அன்றி
    வேறன்று என்பதற்கு நீ காட்டிய மச்சபுராண வாக்கியமே தெளிவுபடுத்தியது
    இவ்வாறிருக்க சிவபுராணங்களுக்கு மட்டும் நீ அப்பிராமணம் கூறுவது எதன் காரணம் பொருட்டு?

    அதனை தாமதம் என்று கூறினாய் . சிவபிரான் எக்காரணத்தால் தாமஸியானார்
    அழித்தல் தொழிலை மேற்கொள்ளுதல் பொருட்டா?
    அழித்தல் தொழிலை மேற்கொள்வதால் தாமஸி என்றே கூர்மபுராணம் சாற்றியது

    தொழிலால் அவன் தாமஸி என்பதை மறுத்தாய் பின் எதனால் அவன் தாமஸி?

    கங்கையைத் தலையில் தரித்ததாலா ? மங்கையை பாகத்து அடக்கியதாலா ?இல்லை
    விடத்தை அருந்தியதாலா ?
    இல்லை எப்போதும் ஆனந்த நிருத்தம் செய்வதாலா?

    இவற்றில் ஒருகாரணம் நீ கூறுவாயாக

    முட்டாளே! அவர் பாம்பை தலையிலும் உடம்பிலும் வைத்திருப்பதாலா?

    சுடுகாட்டு சாம்பலை பூசியதால் தாமஸி என்றால் அது பொருந்தாதென்க

    அனைத்து சீவராசிகளும் அழிந்த பின்னர் சிவபிரானே ஏவகேவலமாக நின்ற காலத்து மயானத்தை தவிர வேறு என்ன இருக்கும் ?

    எலும்பு கபாலம் போன்றவற்றை அவர் தரித்ததால் தாமஸி எனில்
    உனது தாமோதரன் பஞ்சசன்னியத்தை எப்படிப் பெற்றான் ? அசுரனைக் கொன்று பெற்ற அது அவனுக்கு தோஷம் உண்டாக்காதா?

    பின் பிரமகபாலத்தைக் கையில் ஏந்தியதால் எனின் அப்பிரமகபாலம் பிரமனும் பரமன்று என்பதைக் காட்டவும் அதில் பலி வாங்கியது ஏனெனின் மற்ற தேவர்களும் நித்தமன்று என்பதைக் காட்டவேயாம்

    திருமால் தனது ரத்தம் முழுமையும் கபாலத்தில் தந்தும் கபாலம் நிறையாது மயங்கி விழ பின் இலக்குமி அம்மையார் வேண்ட பயிரவமூர்த்தி அவனுக்கு உயிர் தந்ததை சிவபுராணங்கள் தெளிவாகப் பேசின.

    எங்கள் நாராயணனே கபால மோக்கம் தந்தானென்று பீத்திக் கொள்வது வெறும் சமயாபிமானமே என்க

    சரி உங்கள் நாரணன் சிவனை காபாலத்திலிருந்து விடுவித்த விசித்திர கதையை எங்கே கண்டுபிடித்தாய்? விஷ்ணு புராணத்திலா பாகவதத்திலா இல்லை காருடத்திலா?

    இந்த மூடர்கள் பிரமனிடமிருந்து சிவன் தோன்றினான் என்பதை பிராமணமாகக் கொண்டதால் சிவன் எப்படி பிரமனின் தலையைப் பறிக்க முடியும் ? என்று சற்றும் சிந்திக்காத பேதையர் ஆயினர்.இக்காரணத்தால் தந்தையை விட மகனுக்கு ஆதிக்கம் இருப்பதால் விஷ்ணுவை விட அவன் பிள்ளையான பிரமனுக்கு ஆதிக்கம் அதிகம் போலும்.

    பிரமனிடமிருந்து சிவபிரான் தோன்றியது அவன் சிவபிரானை நோக்கி தவம் செய்த காரணத்தால்.

    இது அறியாமல் "நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் "என்பதை பிராமணமாகக் கொண்டு இங்கு பேச வந்தது எடுபடாது.

    சங்கராச்சாரியார் சிவகீதைக்கு உரை எழுதவில்லை என்று முன் வாதிட்ட அன்பனிடம் கூறினாய்
    வேதியர் ஓதுவதால் வேதத்திற்குப் பெருமையா? இல்லை வேதம் ஓதுவதால் வேதியர்க்குப் பெருமையா?

    சங்கரர் சிவகீதைக்குப் பாடியம் எழுதாமல் போனது அதன் கருத்து மிகத் தெளிவாக இருப்பதாலும் படித்தவுடன் புரிந்து கொள்ள முடிவதாலும் அதற்கு உரை எழுதாமல் போயினர். ஸ்ரீகிருஷ்ணன் கூறிய கீதையோ எனின் அதனைக் கேட்ட விசயனுக்கே அதனில் மிகுந்த குழப்பமுண்டாயிற்று.அதனில் விஷ்ணுவை உயர்த்தி சிவனைத் தாழ்த்தியோ இல்லை சிவனை உயர்த்தி விஷ்ணுவைத் தாழ்த்தியோ வரும் சொற்கள் ஒன்றுமில்லை. தான் ருத்ரர்களில் சங்கரனென்றது ஏகாதச ருத்ரர்களில் ஒருவனான சங்கரனைக் குறிக்குமன்றி உமாபதியைக் குறிக்காது.தானே அனைத்தும் என்று கண்ணன் விசுவரூபம் காட்டியதோ எனின் வீரவாகுவும் அனுமனும் கூட விசுவருபம் காட்டினர் தானே அனைத்தும் என்று கண்ணன் கூறியதோ எனின் "வாமதேவரிஷியும் நான் எல்லாமாயினேன் "என்று கூறியதை வேதம் நன்குரைக்கும் .
    அவர் அதற்குப் பாடியம் செய்யவில்லை என்பதற்காக அது அப்பிராமணமாகாது.

    பாலில் ஒருதுளி விடமிருப்பினும் அதனை ஒதுக்குவரே அன்றி யாரும் கொள்ளார்.அதனைப் போல மற்ற புராணங்களை நீ இராஜச தாமஸம் என்று கூறிவிட்டு பின் அதன் வாக்கியங்களையே காட்டிபின்
    விஷ்ணுபரமாக இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்வது எப்படிப் பொருந்தும்?

    அப்புராணங்களில் கூறிய அனைத்தையும் ஒதுக்குவதே நடுவுநிலையாகுமன்றி அவற்றில் சிலவாக்கியங்களை
    ஏற்றுக்கொள்வது யுக்தமன்று.

    ReplyDelete
  33. முக்கண்ணரே பரம்பொருள் மற்றவர் அவரின் விபூதிகளே என்று கைவல்லியம் உரைத்தும் உன் போன்ற மரமண்டைகளுக்கு அது ஏறாதது வருத்தமளிக்கிறது.

    உமாஸஹாயம் நீலகண்டம் பிரசாந்தம் எனத் தொடங்கும் சுலோகம் சிவபிரானைத் தவிர வேறு ஒருவரைக் குறிக்குமோ ?

    மாயோன்,ருத்ரன்,பிரமன் முதலோர் அவரின் விபூதிகள் என கூறியது அறியாத மூடர்களே துரிய சிவம் பொய் என்று கூறுவர்

    ஸபிரம்ம ஸசிவ ஸ இந்த்ர ஸவிஷ்ணு என்று பிரும்மவிஷ்ணுருத்ரேந்திரர்கள்
    சிவனின் விபூதிகள் என்று கைவல்லியம் உரைத்ததை சிறிதும் அறியாது அதருவசிகைக்கு கண்டவாறு பொருள் கூறியது குற்றமன்றோ?

    திக்விசயம் எம்பாவையங்கான் அதர்வசிகைக்கு கண்டவாறு பொருள் கூறி அவமானப்பட்டுப்போன கதை தெரியாதோ?

    நாரணனை பரம்பொருள் என்று மகாநாராயணம் கூறியதாகக் கூறி மக்களை மயக்குகின்றனர்
    நாராயண பரோத்யாதா என்பதற்கு பதில் என்ன?
    பரமாத்மாவை இடைவிடாது தியானித்த விசேடத்தால் மாயோன் பரப்பிரமம் என்றுபசரிக்கப்பட்டான்.

    அந்த நாராயணரின் இருதய அக்கினியின் சிகாமத்தியில் பரமாத்மா பிரகாசிப்பதாக அதே உபநிடதம் கூறியதற்கு பதிலென்ன?

    பிருகு சாபத்தால் சிவனின் லிங்கம் கீழே விழுந்தது என்று பொய் உரைத்து திரிகின்றனர்
    இந்த கதை எந்த புராணத்தில் உள்ளதோ ? நாமறியோம்.
    அந்தப்பிருகு தக்கயாகத்தில் வீரபத்திரரிடம் புண்பட்ட கதை தெரியாது போலும். தேவர்களில்
    விசுவாதிகன் என்றும் மகாஇருடி என்றும் போற்றப்படும் சிவபிரானை கேவலம் ஒரு அற்ப இருடிக்கு சபிக்கும் வல்லமை உண்டோ?

    சாபவயப்பட்ட இலிங்கத்தைத் தான் பார்ததனும் கண்ணனும் பூசித்ததாக துரோணபருவமும் சாந்திபருவமும் கூறின போலும்.

    சத்தியோசாதம் பிரபத்யாமி எனத் தொடங்கும் சுலோகத்திற்கு முன் சிவலிங்கத்தை போற்றும் சுலோகம் அங்கிருப்பதை ஓதியுணராத நீ அதனைக் கற்பனை என்பது சிரிப்பை விளைக்கிறது.

    சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி என்று விநாயகரகவல் கூறுவதை நன்கு படித்தால் சதாசிவமூர்த்தியின் வடிவம் இலிங்கவடிவமே என்பது புரியும்

    இன்னும் ஒருவிசித்திரம் பகர்ந்தனர் கலியுகத்தில் தாமஸர்கள் மிகுந்து இருப்பதால் சிவவழிபாடு இருப்பதாகக் கூறினர்.

    மார்க்கண்டேய முனிவர் முக்திக்காக நாரணனையும் சிரஞ்சீவித்துவத்துக்காக சிவனையும் வழிபட்டதாக கூறியது முட்டாள்தனத்தின் உச்சி என்றே கூறலாம்

    முக்தியை விஷ்ணுவால் தர முடியும் எனின் அதே விஷ்ணுவால் சிரஞ்சீவித்துவம் கிடைக்காமல் போன காரணமென்ன?

    கூர்ம புராணம் பின்வருமாறு கூறுகின்றது
    "கண்ணனே நீயேன் சங்கரனைப் பூசிக்கிறாய் நீயன்றோ பரம்பொருளென்று மாரக்கண்டேய முனிவர் கேட்க
    கண்ணன் "முனிவரே ! எமக்கு அனாதியான ஒருபொருள் இருக்கிறது அதுவே என்னை இடப்பக்கத்தினின்றும் பிரமனை வலப்பக்கித்தினின்றும் படைத்தது. அதுவே சிவபரம்பொருள் என்று கூறியதை அறிக.

    சாபால உபநிடதம் சிவபுராணங்களில் ஆங்காங்கு குறிக்கப்பட்டுள்ளதால் அவை உண்மையே என்க .சிவபுராணங்களை ஓதி உணராத மடவோரே சாபாலத்திற்கு அப்பிராமணம் கூறுவர்

    இன்னும் ஒரு புளுகினை பேசி சிவநிந்தை சம்பாதித்துக் கொண்டனர் அதுவே அனுசாஸனம் கற்பனை என்று.
    சாந்திபருவம் மோக்கதருமபருவத்தில்
    எனது அனாதி ஸ்வரூபமான ருத்ரரை பிள்ளைப்பேறு வேண்டி நான் பூசித்தேன் என்று கூறி என்னை நானே பூசிக்கிறேன் எனக் கூறுவதால் அனுசாஸனத்தில் கண்ணன் உபமன்னியரிடம் சிவதீக்கை பெற்று உய்ந்தது வெள்ளிடைமலைபோல் விளங்குமென்க.இக்காரணத்தால் சிவபிரானை கண்ணன் உபாசித்து வரம் பெற்றது உண்மையென்க.

    வில்லிபாரதத்தில் நீ கூறிய இடைச்செருகல்களை இராசகோபாலசாரி என்னும் பஞ்சமனே செய்தான் அன்றி சைவர்கள் செய்ய இடமில்லை என்பதை நீ கிருஷ்ணமாச்சாரியாரின் பதிப்பில் கண்டுணர்க

    ஓரேனந் தனைத் தேட என்பதற்கு நீ கூறிய விசித்திரபாடம் அவர் பதிப்பில் இல்லை.
    யாரேனுந் தனைத் தேடி என நீ கூறும் பொய்ப்பாடம் வேறு எவர் பதிப்பிலும் காணமுடியவில்லை.
    இதனால் நீ கொண்டாடும் இராசகோபாலசாரி எவ்வளவு துஷ்டத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்.

    ஆறுமுக நாவலரவர்கள் பலபிரதிகளை சோதித்து தான் பதிப்பிப்பாரே அன்றி உடனே பதிப்பிக்க மாட்டார். அரனை மறவேல் என்று மாற்றியதாகக் கூறினாய். என்னிடமும் பால பாடப் புத்தகமொன்றிருக்கிறது
    அதில் நீ சொன்ன மாற்றமெதுவுமில்லை அறனை மறவேல் என்று தான் நாவலர் பதிப்பில் காணப்படுகிறது.

    சினத்தைப் பேணில் தனத்திற்கு அழிவு என்று பொய்ப்பாடம் சொன்னாய் இது பொய்யென்பதற்கு எங்கும் இப்படி பதிப்பிக்கவில்லை என்பதே சான்றாம்.

    ஔவையார் சுத்த சைவரென்பதற்கு அவரியற்றிய நூல்களின் பெயரிலிருந்தே தெரிகிறது.இதனால் உனது கருத்து நிரஸ்தம்.

    திருமாலின் திருவடிகளைக் காப்பாக தரிப்பதாகக் கூறினாய் பின் அதனை உனது நாரணன் நெற்றியில் போடுவது என்ன விசித்திரமோ அறியோம்?.
    அவன் திருவடி அவனுக்கே காப்பு போலும்.

    திருமாலுக்கே திரிபுண்டரதாரணம் தானன்றி ஊர்த்துவபுண்டரதாரணம் யாண்டுமில்லை.இதனை விஷ்ணுபுராணம் மூன்றாம் அம்சத்திலும் சிவபுராணங்களிலும் கண்டுணர்க

    ReplyDelete
  34. விசுவம் நாராயணம் என்றால் விசுவாதிகனும் விசுவேசுவரனும்
    சிவபிரானாவர்.
    யாகமே திருமாலெனின் யாகபதி
    சிவபிரான்

    தியானம் விஷ்ணுவடிவமெனில்
    தியேயன் சங்கரனாவன்

    திருமால் வசுதேவனிடத்தே பிறந்தபடியால் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறான்.

    தேவர்களுக்கெல்லாம் தேவன் என்னும்படி மகாதேவன் என்னும்
    ரூடிப்பெயரால் சிவபிரான் போற்றப்படுகிறான்.

    ஆதிபருவத்திலும் கண்ணனையும் பிரமத்தையும் தனியாகக் கூறியதை பார்க்க.

    இந்த தாரதம்மியங்களால் சிவபிரான் பரம்பொருள் என்பது வெளிப்பட்டதென்க.

    பஞ்சராத்திரம் வாசுதேவனால் சொல்லப்பட்டதெனின் பாசுபதம் சிவபிரானால் சொல்லப்பட்டது.

    பாசுபதத்தில் வாமபாசுபதம் அவைதிகம் என்க.
    வைதிகபாசுபதமாகிய திருநீறு உருத்திராக்கந் தரித்தல் போன்றவை கண்டிக்கப்படவில்லை என்க.

    அதர்வசிரசு போன்ற உபநிடதங்கள் முத்திநிலை பற்றிக் கூறுவன.அவற்றில் சொல்லப்பட்ட பாசுபதம் முத்தியைத் தரும் என்பதில் ஐயமில்லை.

    சுபாலம் நாராயணம் போன்ற உபநிடதங்கள் தோற்ற ஒடுக்கங்கள் கூறுவன எனவே அதற்கு அதர்வசிகை,அதர்வசிரசு போன்ற உபநிடதங்களுக்குப் பொருள் கொண்டவழியே பொருள்கொள்ளுதல் சிறந்ததாம்.

    யாம் விஷ்ணுபுராணங்களை மதிக்கிறோம் எமக்கு அதில் விரோதமில்லை ஏனெனில் அதில் அபகர்ஷம் பேசுபட்ட உருத்திரர் சிவபிரானின் விபூதியாவர். அந்த அபகர்ஷம் சிவபிரானை ஒருநாளும் பற்றாது. அஷ்டாதச புராணங்களும் ஒருவன் ஓதிவர வேண்டும்.நிற்க
    சிவபுராணங்களில் சிவபிரான் மூவரையும் படைத்தார் என்று சொல்வதாலும் அநுசாஸனம்,ஆதிபருவம் போன்றவையும் அவ்வாறே உரைப்பதாலும் சிவசங்கரர் பரம்பொருளென்பதில் ஜயமில்லை.

    சிவபுராணங்களுக்கு அப்பிராமணம் கூறுவது அதனை இயற்றிய வியாத முனிவரை அவமதிப்பதாகும்.
    அவைகள் கட்டுக்கதைகள் அல்ல என்பதற்கு திருமூலர் போன்ற காலத்தால் முந்தையோர் அதனை எடுத்தாண்டிருப்பது சான்றாம்.

    கற்பபேதங் காரணமாக ஒருவரிடம் ஒருவர் தோன்றுகிறபடியால் அதனைக் கண்டு ஞானமுள்ள ஒருவன் மயக்கமடையான் என்னும் சிவபுராணவாக்கியம் எந்த அளவிற்கு உண்மை என்பதை உணர்க.

    ReplyDelete
  35. ஈசுவரன் சிவபிரானன்று விஷ்ணுவுக்கே உரியது எனக் கூத்தாடினாய்.

    நீ கூறுவது எப்படி பொருந்தும்?

    சூடாமணி நிகண்டில் "பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்" என்று பகவன் என்பது சிவன்,விஷ்ணு முதலியோரைக் குறிக்குமெனக் கூறியதில் ஈசஸ் சப்தம் சிவபிரானையன்றோ இடுகுறியாகக் குறித்தது.

    குருபிரம்மா எனத் தொடங்கும் குருசுலோகத்தில் சிவபிரானையன்றோ மகேசுவர சப்தம் குறித்தது.

    பிள்ளைப் பெருமாளையங்காரும் "மாலைமதிக்குஞ்சி ஈசனும்" என்று திருவேங்கடத்து அந்தாதியில் குறிப்பிட்டிருத்தல் காண்க.

    ஒருவேளை ஆழ்வார்பெருமக்கள்
    ஈசஸ் சப்தத்தை நாரணருக்கு உரியனவாகப் பாடியிருக்கலாம்.ஆயினும் அது இடுகுறியாக சிவபிரானையே குறிக்கும் என்க

    "இந்திரனும் திருமாலும் உருத்திரரும் உலகப் பிதாமகராம் பிரமதேவரும் தேவர்களின் தேவரான எந்த மகேசுவரரைப் பல விதத் தோத்திரங்களால் துதிக்கிறார்களோ" என்று சாந்தி பருவம் 110 ஆவது அத்தியாயம் கூறியிருப்பதை நோக்குக.

    இங்கு மகேசுவர சப்தம் நீலகண்டரையே குறிக்கும் என்பதற்கு அவ்வத்தியாயம் முழுமையும் வாசித்தால் புரியும்.

    சிவாலயங்களை ஈஸ்வரன் கோவிலெனவும் விட்டுணு ஆலயங்களை பெருமாள் கோயிலெனவும் அழைக்கப்படுதல் காண்க. அங்கே எழுந்தருளியுள்ள சிவனுக்கு புஸ்பவனேசுவரர்,அருணாசலேசுவரர்,போன்ற நாமங்கள் ஈசுவரசப்தத்தோடு பொருந்திவருவதும் திருமாலுக்கு வரதராசப்பெருமாள்,
    கோவிந்தராசப்பெருமாள் என்று ஈசுவரசப்தம் இல்லாமலும் வருகிறது

    திருஉருத்திரத்திலும் சிவபிரானை "விசுவேசுவராய மகாதேவாய திரியம்பகாய திரிபுராந்தகாய...... நீலகண்டாய மிருத்யுஞ்சயாய சர்வேசுவராய சதாசிவாய" என்று வருவதில் சர்வேசுவரன் சிவனே என்பது தெளிவு

    இக்காரணங்களால் சிவபிரானே ஈஸ்வரன் என அழைக்கப்படுவான் என்க

    ReplyDelete
  36. ஈசுவரன் சிவபிரானன்று விஷ்ணுவுக்கே உரியது எனக் கூத்தாடினாய்.

    நீ கூறுவது எப்படி பொருந்தும்?

    சூடாமணி நிகண்டில் "பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்" என்று பகவன் என்பது சிவன்,விஷ்ணு முதலியோரைக் குறிக்குமெனக் கூறியதில் ஈசஸ் சப்தம் சிவபிரானையன்றோ இடுகுறியாகக் குறித்தது.

    குருபிரம்மா எனத் தொடங்கும் குருசுலோகத்தில் சிவபிரானையன்றோ மகேசுவர சப்தம் குறித்தது.

    பிள்ளைப் பெருமாளையங்காரும் "மாலைமதிக்குஞ்சி ஈசனும்" என்று திருவேங்கடத்து அந்தாதியில் குறிப்பிட்டிருத்தல் காண்க.

    ஒருவேளை ஆழ்வார்பெருமக்கள்
    ஈசஸ் சப்தத்தை நாரணருக்கு உரியனவாகப் பாடியிருக்கலாம்.ஆயினும் அது இடுகுறியாக சிவபிரானையே குறிக்கும் என்க

    "இந்திரனும் திருமாலும் உருத்திரரும் உலகப் பிதாமகராம் பிரமதேவரும் தேவர்களின் தேவரான எந்த மகேசுவரரைப் பல விதத் தோத்திரங்களால் துதிக்கிறார்களோ" என்று சாந்தி பருவம் 110 ஆவது அத்தியாயம் கூறியிருப்பதை நோக்குக.

    இங்கு மகேசுவர சப்தம் நீலகண்டரையே குறிக்கும் என்பதற்கு அவ்வத்தியாயம் முழுமையும் வாசித்தால் புரியும்.

    சிவாலயங்களை ஈஸ்வரன் கோவிலெனவும் விட்டுணு ஆலயங்களை பெருமாள் கோயிலெனவும் அழைக்கப்படுதல் காண்க. அங்கே எழுந்தருளியுள்ள சிவனுக்கு புஸ்பவனேசுவரர்,அருணாசலேசுவரர்,போன்ற நாமங்கள் ஈசுவரசப்தத்தோடு பொருந்திவருவதும் திருமாலுக்கு வரதராசப்பெருமாள்,
    கோவிந்தராசப்பெருமாள் என்று ஈசுவரசப்தம் இல்லாமலும் வருகிறது

    திருஉருத்திரத்திலும் சிவபிரானை "விசுவேசுவராய மகாதேவாய திரியம்பகாய திரிபுராந்தகாய...... நீலகண்டாய மிருத்யுஞ்சயாய சர்வேசுவராய சதாசிவாய" என்று வருவதில் சர்வேசுவரன் சிவனே என்பது தெளிவு

    இக்காரணங்களால் சிவபிரானே ஈஸ்வரன் என அழைக்கப்படுவான் என்க

    ReplyDelete
  37. இன்னும் ஒரு விசித்திரம் பகர்ந்தாய் ஆகமங்கள் மோகனம் என்று.

    ஆகமங்கள் மோகனமா இல்லை வேதம் போல் பிராமணமா என்பதை நாரதபரிவ்ராசக உபநிடதத்தில் காண்க
    இல்லை வைணவர்
    கொண்டாடும் வில்லிபாரதம் விசயன் தவநிலைச் சருக்கத்திற் காண்க.

    உபநிடதங்களில் சரபம்,பஸ்மசாபாலம் போன்றவற்றை நீ அப்பிராமணம் என ஒதுக்கினாய் அதனைப் போன்று நாரதபரிவ்ராசக உபநிடதமும் அப்பிராமணமாகக் கருத வேண்டா. அது சிவபரத்துவம் பேசுவது அன்று அது சாமானிய உபநிடதமே என்பதை அதனை வாசித்துத் தெரிந்து கொள்.

    தனக்கு அனுகூலமான ஒன்றைக் கொள்வதும் பிறவற்றை விலக்குவதும் உன் போன்றவர்களுக்கு அழகன்று.

    எதனையும் தீர விசாரித்துத் தெரிந்துகொள் ஆகமங்கள் மிகப்பழைமையானது
    யுகந்தோறும் இருப்பது அதற்கு விசயன் செய்த சிவபூசையே சான்றாம்.சிவபூசை செய்யாது உணவருந்தக்கூடாதென்பது சிவாகமவிதி.அதனை அவன் பின்பற்றியிருக்கிறான்.



    "யாம் வேதசிவாகமங்களுக்கு பேதம் காண்கின்றிலம் வேதமும் ஆகமமே" என்று நீலகண்ட சிவாச்சாரியார் தனது பாடியத்தில் குறிப்பிட்டிருத்தல் காண்க.

    ஆகமங்களை ஓதிவரும் பிராமணர்களாக மிகவும் பழைமையானவர்களாக சிவாச்சாரியார்கள் இன்னும் இருந்து வருகின்றனர். அவர்கள்
    குலம் மிகப் பழைமையானது

    "அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் "என்று திருமூலரும் தனது திருமந்திரத்தில் ஆகமச்சிறப்பில் கூறியுள்ளமை காண்க

    ReplyDelete
  38. அற்புதம் ஸ்வாமி. விஸிஷ்டாத்வைதம் சார்ந்தவரால் ஏடுபடுத்தப்பட்ட ஸாத்விக புராணங்கள் எங்கே கிடைக்கும் ஸ்வாமி. வாங்க நீண்ட நாட்களாய் முயன்று வருகிறேன்.

    ReplyDelete
  39. முக்கண்ணரே பரம்பொருள் இதில் சம்சயமில்லை. தைரியமிருந்தால் வாதத்திற்கு வருக

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்