Posts

Showing posts from May, 2017
Image
                  ஹிந்து-हिंद                    பொதுவாக நம்மிடையே ஹிந்து எனும் சொல் அந்நியர் வைத்த பெயர். அது மதத்தை குறிக்காது சிந்துவெளியில் வாழ்ந்த மக்களைமட்டுமே குறிக்கும் எனும் கருத்துக்கள் நிலவுகிறது. ஆனால் இது உண்மையல்ல.           வராலாற்று ரீதியாக சிந்து நதிக்கு அப்பால் இருந்த பிரதேசத்தையும் அங்கு வாழும் மக்களையும், அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் குறிக்க, அந்த பூகோளப் பிரதேசத்திற்கு வெளியே இருந்த பண்டைய சுமேரியர், பாரசீகர், கிரேக்கர் ஆகிய மக்களால் தான் ஹிந்து என்ற பதம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது அவர்கள் உருவாக்கிய பதமல்ல.       ரிக்வேத ரிஷிகள் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஸப்த ஸிந்து என்றே அழைத்தனர். அந்தச் சொல்லே ஹப்த ஹிந்து என்று பாரசீக மொழியில் உருமாற்றம் அடைந்தது.  சரஸ்வதி = ஹரஹ்வதி, அஸுர் = அஹுர் என்று பல சம்ஸ்கிருதச் சொற்கள் இதே ரீதியில் பண்டைய பாரசீக மொழியில் உருமாற்றம் பெற்றுள்ளன. இந்த சொல் உருமாற்றத்திற்கான அகச்சான்றுகள் நமது புராணங்களிலும், ஆகமங்களிலும் உள்ளன.      சம்ஸ்கிருத பாஷை அன்னிய பிரதேசங்களில் அங்கு வாழ்வோரையும் இன்புறச்
Image
வர்ணாஷ்ரமம்தர்மமா? அதர்மமா? - பகுதி-2 ------------------------------------------------------------------- வழங்கியவர்-கம்பவாரிதி இ.ஜெயராஜ் ------------------------------------------------------------------- சாதி என்றாலே மகா அநியாயமான ஏற்பாடு என்று, இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் என, எல்லோரும் கரித்துக் கொட்டுவதற்கு யார் காரணம்? ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விடுவதற்கு யார் பொறுப்பாளி? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன். வர்ணாச்சிரம தர்மத்தைப் பற்றி, தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்கு பிராமணன்தான் காரணம். காலாகாலமாக உயிர் வளர்ச்சியும் தேச, உலக நலன்களும் காத்;து வந்த தர்மம், குலைந்து போனதற்கு பிராமணன்தான் பொறுப்பாளி. ஆதிகாலத்திலிருந்து வர்ணாச்சிரம தர்மத்தைச் சரியாகக் கடைப்பிடித்துவந்த பிராமணன், பிற்காலத்தில் தன் கடமையாகிய வேதம் ஓதுதலையும் வேத கர்மங்களை அனுஷ்டிப்பதையும் விட்டுவிட்டு, தாம் கூடி வாழ்ந்த ஊர்களை விட்டுப் பட்டணத்திற்கு வந்தான். வந்ததுமே தனக்குரிய ஆசாரங்களையும் அடையாளங்களையும் விட்டுவிட்டான். குடுமியை அறுத்து ‘
Image
வர்ணாஷரமம் தர்மமா? அதர்மமா?    பகுதி-1 #வர்ணாஷரமம்தர்மமா? #அதர்மமா? -பகுதி-1 -------------------------------------------------------------------- வழங்கியவர்- கம்பவாரிதி இ. ஜெயராஜ் ------------------------------------------------------------------ இந்துமதத்தின் குறுகியகொள்கை!  சாதி பாகுபாட்டின் வேர்!   சமூகபேதங்களின் வித்து!   மானுடசமூகத்தைப் பிளக்க இறுக்கப்பட்ட ஆப்பு!   ஆரியர்கள் இட்ட அழிவின் அத்திவாரம்!  இப்படி எத்தனையோ பழிச்சொற்கள் இத்தத்துவத்தின்மேல். தர்மம் என்ற பெயரோடு நம் மூதாதையர் நிலைநாட்டிய ஒரு விடயம், இத்தனை இழிவுகளையும் உட்கொண்டிருக்கிறதா? உட்கொண்டது உண்மையாயின், நம் மூதாதையர் அத்தனைபேரும் மூடரா? இவ்வுலகெல்லாம் பரவிய நம் இந்துமதம். ஒரு விஷவித்தின் வேரில் முளைத்ததா? வருணாச்சிரமதர்மமே நம்இந்துமதத்தின் அடிப்படை என்கின்றனர் ஆன்றோர். நம் அறங்களின் அடிப்படையும் அதுவே என்கின்றனர் தமிழ் அறநூல் ஆசிரியர்கள். அப்படியாயின், இந்துமதத்தின் கருவிலேயே களங்கமா? தமிழர்தம் தர்மத்தின் வேரிலேயே விஷமா? கருவே களங்கமாயின், வேரே விஷமாயின், இந்துமதமும் நம் தமிழும் காலங