புராண பேத தாத்பர்ய விளக்கம்
வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம். மகாபுராணங்கள் பதினெட்டு. அவை ஸாத்வீகம், ராஜஸம், தாமஸம் எனும் மூன்று வகைப்படுகிறது. அவ்ஸாத்வீக புராணங்களோடு விரோதிக்கும் புராணங்கள் தள்ளதக்கவை என்பதே தாத்பர்யம். அவ்ஸாத்வீக புராணங்களுணர்த்தும் பரதெய்வம் நாராயணன் ஒருவனே என்பது ப்ரத்யக்ஷம். அதற்கு அவைதீகமாய் சில சைவர்களின் பாஷாண்டவாதத்தை பரப்பி தம்புராணங்களை சிறப்பிக்க முயல்கின்றனர். அவை பகற்கனவே என்பதையும் ஸாத்வீகதேவதை நாராயணன் ஒருவனே என்பதையும் அவர் மஹிமை கூறும் பகுதிகளையே அறிவுடையோர் அனுஸரித்து மற்றையவற்றை புறந்தள்ளளல் வேண்டும் என்பதையும் நிலைநாட்டும் நீண்ட பதிவே இது. [குறிப்பு- * இப்பதில் சமஸ்கிருத ஸ்லோகங்களில் எழுத்துப்பிழைகள் இருப்பின் பெரியோர் திருத்திகொள்க. * சில புராண வசனங்கள் நீண்டதாக இருப்பதால் அவை பட வடிவில் தரப்படுகிறது. *இக்கட்டுரைக்கு கையாண்ட நூல்கள் *வைஷ்ணவ ஸுதர்சனம் *விஷ்ணுசித்த விஜயம் *பத்ம புராணம்-பூனாஆநந்தாஸ்ரமபதிப்பு * 108 உபநிஷத் ஸாரம்-ராமகிருஷ்ண மடம் *கம்பராமாயணம் *ஆழ்வார் பாசுரங்கள் *பரஹ்பிரம்ம விவேகம் *H...