வைஷ்ணவ ஆகார லக்ஷனம்

    வைஷ்ணவர்கள் சதாசாபரர்களாக ஒழுக வேண்டியஆசாரம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய  ஞானேந்திரியங்கள் ஐந்தும்
வாக், பாத, பாணி, பாயு , உபஸ்தம் ஆகிய காமேந்திரியங்கள் ஐந்தும் மனம் ஒன்றுமாகிற பதினொரு
இந்திரியங்களின் சுத்தியையும் சரீர, ஆத்ம சுத்தியையும் அனுஷ்டித்தலேயாம்.

இவ்வனுஷ்டானம் முற்றிலும் சீர்குழைந்து கிடப்பதுஆகாரத்தில்தான்.  வைஷ்ணவ அந்தணர்களில் கூட இன்று அதை கடைபிடிக்க தவறுகின்றனர். பகவானுக்கு படைக்காமல் உண்ணுகிற உணவு மலத்திற்கு சமம் என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன. இன்று சந்தையில் விற்கும் கண்ட கண்ட பண்டங்களை புசிக்கின்றனர். அவை அசைவ பதார்தங்கள் என அறிந்தபோதிலும் அலட்சியம். அதிலும் இன்று பிறந்தநாள் என்றால் கேக் வெட்டியும் உண்கின்றனர். இவையெல்லாவற்றையும் செய்துகொண்டு வைஷ்ணவன் என கூறிக்கொள்வது அபசாரத்திலும் அபசாரம். ஆகவே ஆகாரநியதிகளை வலியுறுத்தவே இப்பதிவாம்.

 பதார்தங்களின் ஒவ்வொரு பதார்த்தமும் ஒவ்வொரு குணமுண்டு என வைத்ய சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு சாத்வீக, ராஜஸ, தாமஸமெனும் மூவகை உணவுகளுள் தாமஸஉணவை தவிர்த்து
ராஜஸஉணவை சுருக்கி, சாத்வீக உணவை வைஷ்ணவம் புசிக்க வேண்டும். மற்றும் உணவு மூன்று வகையான தோஷங்களை உடையது. அவை ஜாதிதுஷ்டம்(உருவாக்கத்திலேயே குற்றமுடையவை), ஆசரய துஷ்டம்(பிறருடைய சம்பந்தத்தில் குற்றமுடையவை), நிமித்த துஷ்டம் ஆகிய மூன்றுமாம்(ஏதேனும் காரணத்தால் வந்த குற்றமுடையவை)
                           
மாம்சவகைகள், மதுபானம், வெங்காயம்,வெள்ளைபூண்டு, முருங்கை போன்ற உணவுகள் ஜாதிதுஷ்டம். அவை தாமஸமாகையால் அறவே நீக்கபட வேண்டியவை.  சண்டாளர், மிலேச்சர், துர்போக்கினர் இலவசமாக தந்த உணவு ஆசர்யதுஷ்டம்.
இவையும் தாமஸமே ஆகையால் நீக்கப்படவேண்டியவை. பிணசோறு, சிரார்த்த சோறு போன்றவையும் மயிர், புழு, எச்சில் பட்டவையும் நிமித்ததுஷ்டம். இவையும் தாமஸமே;அரவே ஒழிக்கபடவேண்டியவை.

 புளி,மிளகாய்,புழுங்கரிசி,
எருமையின் பால், தயிர், நெய் முதலிய ராஜஸ உணவுகள். இவற்றை இயன்றவரை குறைக்க வேண்டும்.
சாத்விமமும், ராஜஸமும் கலந்த உணவான பாகல், வெண்டை, சுண்டை, அவரை, மா, பலா, நல்லகத்தரி, பரங்கி, பூசணி, கொத்தவரை முதலான காய்களும், வாழையின் காய், பூ, தண்டும், சேம்பு, கருணைக்கிழங்கு, கீரைத்தண்டு, அகத்தி, தூதுவளை, பொன்னாங்கண்ணி
அறுகீரை, முளைக்கீரை முதலிய கீரைகளும் புசிக்கதக்கவை.

 
இனிமை கண்டு வயிறு புடைக்க தின்னாமல் பகவத் ப்ரசாதம் என்ற ப்ரதிபத்யோடு மிதமாக புசித்தல் உசிதம்.
முக்கியமாக பகவானுக்கு படைப்பது அவசியம். அவை பல தோஷங்கள் இருப்பதால் அதை நீங்கபன்ன போஜனத்துக்கு முன் நாராயணபூஜை செய்வது சாலபொருந்ததக்கதாம். முடியாதவர்கள் "சர்வம் கிருஷ்ணார்பனம்" போன்ற நாமத்தை கூறி மனத்தாலே பகவானுக்கு படைத்து
உண்ணுதல் வேண்டும்.இவ்வாசாரத்தை ஒழுகி உண்ணலே போஜனமாம். இதை கடைபிடிப்பவனே வைஷ்ணவனாம்

     

            சர்வம் கிருஷ்ணார்பணம்

Comments

Popular posts from this blog

புராண பேத தாத்பர்ய விளக்கம்

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்