ஊர்த்தவபுண்டர மஹிமை

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி
ந தைவம் கேசவாத் பரம்



வைதீகர்கள் அனைவரும் தங்கள் நெற்றி முதலான பாகங்களில் தரிக்கும் சின்னமே புண்டரம் எனப்படும். இவை பலவகையாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றில் முக்கியமாக மேலே நோக்கி நெற்றிக்கு நிலைகுத்தாக இடப்படும் ஊர்தவபுண்டரமும் கிடையாக இடப்படும் திரியகபுண்டரம் என்பவையே இரண்டு வகைப்பட்ட அதிகாரிகளுக்கும் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுருக்கிறது.
                 மனிதன் பகுத்தறிவு உள்ளவன்.
உயர்கதிக்கு செல்லவேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவன். அதனாலேயே ஸர்வேஷ்வரன் அவனை உயரவளரும்படி படைத்துள்ளான். ஆனாலும் அநாதிவாஸனையால் பல மனிதர்கள் உயர்கதிக்கு செல்ல வேண்டுமெனும் நினைவே இல்லாமிலிருக்கிறது. இப்படிபட்டவர்களின் தரத்திற்கேற்ப இம்மை பலனைகொடுக்க பல தேவர்களை படைத்தார் பரந்தாமன்.
மனிதனாயிருந்தும் திரியக்குகளைப்போல் (ஜந்து) திர்யகதிகளிலேயே உழலும் இவர்களுக்கு திரியகபுண்டரத்தை சாஸ்திரங்களில் சொல்லிவைத்திருக்கிறான். உயர்கதிக்கு
செல்லவேண்டும் என எண்ணுபவர்களுக்கு ஊர்த்தவபுண்டரத்தை விதித்திருக்கிறான் வாஸுதேவன்.
                   இப்படி யாம்எழுதியிருப்பதால்
திரியகபுண்டரம் தரித்த நண்பர்கள் எம்மில் கோபங்கொள்ளகூடும். திரியகபுண்டரம் தரித்தவர்களெல்லாம் அதனாலேயே தாழ்ந்து போவார்கள் என்றோ, ஊர்த்தவ புண்டரம் தரித்தவர்களெல்லாம் அதனாலேயே உயர்ந்தகதி அடைவார்கள் என்றோ யாம்
கூறவரவில்லை. திரியகபுண்டரத்தை தரித்தவர்களிலும் படிப்படியாக உயர்கதிக்கு செல்லவல்ல உத்தமர்கள் சிலரிருப்பதையும் ஊர்த்தவபுண்டரம் தரித்தவர்களிலும் கொடியநரகம் புகவேண்டிய பாவிகள் சிலரிருப்பதை யாம் மறுக்கவில்லை.
   
                   உயர்கதிக்கு செல்ல நினைப்பவர்கள் தரிக்கதக்கது ஊர்த்தவபுண்டரம் என்றும் திர்யககதிக்க செல்ல நினைப்பவர்கள் தரிக்கதக்கது திரியகபுண்டரம் என்பதுமே எம் கருத்து. இக்கருத்துக்கு சாஸ்திரங்களில் பல்வேறு வசனங்களுண்டு. முக்தியளிக்கும் முகுந்தனை மனமெய்மொழியால் வழிபடும் பக்தர்கள் தரிப்பது ஊர்த்தவபுண்டரமேயாகும்.இனி ஊர்த்தவபுண்டரம் உயர்கதியளிக்கும் உபாயவிதி என்பதை உபநிஷதுக்கள் மூலம் உறைப்போம்.

                  "த்ருதோர்த்வ புண்டர
                          பரமேஸிதாரம்
                    நாராயணம்
                         ஸாங்கயோகாதிகமயம்
                  ஜ்ஞாதவா விமுசயேத    நரஸ
                        ஸம்ஸதை
                  ஸமஸாரபாஸைரிஹ சைவம்
                        விஷ்ணும்"  என்பதால் ஊர்த்தவ புண்டரத்தை  தரித்த யோகி பரமேஸ்வரனும் காமஜ்ஞான யோகங்களால் அடையத்தக்கவனும், ஸர்வவியாபியுமான நாராயணனை அறிந்து ஸம்ஹாரத்திலுள்ள ஸகல பாபங்களிலிருந்து விடுபட்டு, இந்த ஜன்மமுடிவில் மோக்ஷத்தை அடைகின்றனர் என்று
உணர்த்தப்படுகிறது.

                 "த்தோர்த்வ புண்டர
                    கருதசகரதாரீ
                   விஷ்ணும் பரமதயாயதி
                      யோ மஹாத்மா
                  ஸவரேண மந்தரேண ஸதா
                       ஹ்ருதி ஸதிதம
                  பராத பரம யநமஹதோ
                       மஹாத்தம" என்பது கடசாகையில் காணப்படும்வாக்யமாகும்.
ஊர்த்தவ புண்டரத்தை தரித்தவனாய் சக்கரத்தை அணிந்தவனாய் எந்தச்சேதனன், உயர்வர உயர்ந்தவனாய் ஒப்பாருமில்லாதவனாய்  எப்போதும் ஹ்ருதயகமலத்தில் எழுந்தருளியிருப்பவனான மஹாவிஷ்ணுவை ஓங்காரமாகிற மந்திரத்தை இடைவிடாது சிந்திக்கிறானோ அவனே மஹாத்மா என் உரைக்கிறது.
                      "ஹரே பாதாகருதிம
                            ஆத்மநோ ஹிதாய
                       மதேயே சிதரம் ஊர்தவ
                          புண்டரம் யோ தாரயதி
                       ஸ பரஸ்ய பரியோ பவதி
                          ஸ புண்யவாந பவதி ஸ
                        முகதிபாக பவதி" எனும் வாக்யம் அதர்வண வேதத்தால் அறையப்பட்டது. ஹரியினுடைய பாதங்களைப்போன்ற ரூபத்தை உடையதும் நடுவில்
இடை வெளியுடையதுமான ஊர்த்வபுண்டரத்தை எவனொருவன் தன் நன்மையை கருதி தரிக்கின்றானோ அவன் பரமபுருஷனுடைய பரீதிக்குப் பாதாரபூதனாகிறான்,அவன் புண்யவானாகிறான், மோக்ஷத்தை அடைகிறான் என்பது அவ்வாக்ய கருத்தாகும்.
                          "அர்ச்சநாதெள
யஜ்ஞமூர்ததேரூார்த்வபுண்டரம் குலம் தாரயதே ஸபத ஸ கசசேத வைஷ்ணவம் பதம்" என்பதால் யக்ஞஸ்வரூபியான பகவானுடைய அர்ச்சனம் முதலியவைகளுள் ஊர்த்தவ புண்டரத்தை தரித்தானாகில் ஏழு தலைமுறைகளும் தாண்டுவிக்கிறான். அவனும் விஷ்ணுபதத்தை அடைகிறான் என்பது பல சாகையிலும் காணக்கூடியதே
   "ஸதம சைகா ச ஹ்ருதஸ்ய
     நாடயஸ தாஸாம மூர்த்தாநமபிநிஸஸருதைகா
     தயோர்த்வ மாயந்நமருததவமேதி
       விஷ்வங்ஙநயா உத்கரமணே பவநதி"
என்றுகடசாகையில்(2-6-16)
ஓதப்பட்டுள்ளது. இருதயத்தின் நாடிகளுள் முக்கியமானவை நூறொன்றாகும். அவற்றுள் ஒரு நாடி தலையைநோக்கி உயரச்செல்கிறது.அந்த நாடிகளால் உயரச்செல்பவன் மோக்ஷமடைகிறான். மற்றைய பக்கங்களில் செல்லும் திர்யக்க நாடிகள் திர்யக ஸம்ஹாரகதிகளுக்கு செல்லும் வழிகளாகும் என்கிறது. இதன்மூலம் ஊர்த்வ புண்டரம் என்பது உயரச்செல்லும் மோக்ஷத்திற்கு உரியது என்றும் த்ரியக புண்டரம் ஸம்ஹாரகதிகளுக்கு உரியது என்பதும் சொல்லாமலே புரியும். இவைகளை விடவும் பல ப்ரமாணங்களை காட்டமுடியும் எனினும் ஊர்த்தவபுண்டரமே முக்திக்குவழி என்பதற்கு இவையே போதுமானதாகும். எனவே மானிடபதர்கள் யாவரும் ஸம்சாரபந்தத்தை விட்டு மோக்ஷத்தை அடைய ஊர்த்தவபுண்டரத்தை உடலிலும்
நாராயண நாமத்தை நாவிலும் தரிப்பதே கதியாம்.


குண்டிகைக் கையர்கள் சாக்கியர் கூட்டங்கள்
கூடா ஒழுக்கமே கொண்ட பேர்க்கும்
கண்திகைப் பிப்பது திருமண் காப்பு
கண்டகனன் பெற்றது திருமண் காப்பு
எண்டிசைக் கொடியணி திருமண் காப்பு
எதிராசன் வளர்த்தது திருமண் காப்புத்
திண்டிறல் சேர்வில்லித் திருநகர்ஆலிலை
திருப்பள்ளியானடித் திருமண் திருகாப்பே



                           
                         
 
                 

                 

Comments

  1. Namaste. Please see related article in my blog:

    http://narayanastra.blogspot.com/p/on-symbols-and-practices-of-vaishnavism.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

புராண பேத தாத்பர்ய விளக்கம்

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்